Add caption |
Add caption |
திண்டுக்கல்லில் இருக்கும் ராஜாமணி மாமாவுக்கு அப்பா
தந்தி அனுப்பி, அவசரமாக வீடு ஒன்று பார்த்துக் கொடுக்கணும்.
வேலையில் மே கடைசியில் சேர வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
ஓ , சொல்ல மறந்துவிட்டேனே. அப்பா, தாத்தா கூட
தபாலாபீஸ் , தந்தி வழியாகச் செய்திகள் அனுப்பிக் கொள்வார்கள்.
கட்டுக் கட கட.கட்டுக் கட்டு கட கட நானும் கொஞ்ச நாட்கள் கற்றுக் கொண்டேன்.
மோர்ஸ் கோட்.
ராஜாமணி மாமா பார்த்த வீடு செயிண்ட் ஜோசஃப் பள்ளியிலிருந்து
மணி அடிக்கும் சத்தம் வீட்டில் கேட்கும் என்று சொல்லி அப்பா
எங்களை அழைத்துப் போனார்.
ரெஜினா விலாஸ் என்ற பெயர் அந்த வீட்டுக்கு. சுற்றுப்புறம் தான் சரியாக இல்லை.
சித்தப்பாவின் ஜீப்பில் மதுரையிலிருந்து
வந்த நாங்கள் முதலில் பார்க்க விரைந்தது கிணற்றைத்தான்.
தண்ணீர் நிறைய இருந்தது. குடிக்கத்தான் நன்றாக இல்லை.
குளித்தாலும் சோப் நுரை வராது போல இருந்தது.
வீட்டு சொந்தக்காரர் பெரிய வீட்டை இரண்டாகப் பிரித்திருந்தார். எங்களுக்கு அடுத்த
வீடு முயல் வீடு. ஏகப்பட்ட முயல்கள் இருந்தன. வாயில் கதவைத் திறந்தால் உள்ளே
வந்துவிடும். பின்னால் குட்டிப் பெண் ஒன்றும் வரும். கை நிறைய முயல்களை
அள்ளிக் கொண்டு சின்னச் சிரிப்பை உதிர்த்து விட்டு ஓடி விடும்.
வாசலில் trellis work இருக்கும்.
அதற்கப்புறம் ஒரு அறை பீரோ ,மேஜை, rack, எல்லாம் கொண்டு ,சாப்பிட, படுக்க அறையாக
அது உபயோகப் பட்டது. கிணற்றுக்குப் பக்கத்தில் சமையல் அறை. ஓடு போட்டு புகைபோக்கி
எல்லாம் வைத்திருந்தது. கீழே அடுப்புகள் அமைக்கப் பட்டு சுத்தமாக இருந்தது.
பாவம் அம்மா, நாங்கள் இங்கே உட்கார்ந்திருக்க ,மழையோ,வெய்யிலோ
அங்கேயே இருப்பார். சமையல் முடிந்ததும்
எல்லா பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு இங்கே வந்து விடுவார்.
இங்கே எங்களைப் பார்க்க தாத்தாவும் பாட்டியும் வந்தார்கள்.
நல்ல தண்ணீர் எடுத்து வரும் வேலை எனக்கு. அந்தக் கிணறு
இருக்கும் இடம் கொஞ்சம் தள்ளி இருந்தது. என் உயரத்தில் பாதி இருக்கும்
குடம்.
அதைப் பார்த்துப் பாட்டிக்கு மனசாகவில்லை.
நாராயணா சீக்கிரம் வேற வீடு பாருடா. குழந்தைக்கு உடம்புக்கு வந்துவிடும்
என்று சொல்லிவிட்டு இரண்டு நாட்களிலேயே கிளம்பி விட்டார்கள்.
அதற்குள் அப்பா என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாச்சு.
முதல் தடவை கன்யா ஸ்திரிகளைப் பார்த்துக் கொஞ்சம்
பயம் தான்.
எட்டாம் வகுப்பில் சேர்க்கப் பரிட்சை வைக்க வேண்டுமே
என்று ஸிஸ்டர் வணக்கத்துக்குரிய ரெடெம்ப்டா மேரி சொல்ல,
நானும் ஒத்துக் கொண்டேன். படிக்க, எழுத, ஆங்கிலம், கணக்கு, தமிழில்
டெஸ்ட் வைத்தார்கள்.
என்ன எழுதினேனோ. சேர்த்துக் கொண்டார்கள்.
அப்பா, ஸிஸ்டர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏதாவது தப்பு செய்தால் தனக்குக் கடிதம் எழுத வேண்டும்
ஏகத்துக்கு அப்பாவி😐😐😐 என்றேல்லாம் சொல்லி
விட்டு விட்டுப் போனார்.
ஐயோப் பாவமே இந்த அப்பா என்றிருந்தது.
முதல் மாடியிலிருந்த எட்டாம் வகுப்புக்கு
அழைத்துச் செல்லப்பட்டேன். என் மிக மகிழ்ச்சியான நாட்கள் துவங்கின.
ஆறு மாதத்தில் பல மாற்றங்கள். அடுத்துப் பார்க்கலாமா.
Add caption |
. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
. |
20 comments:
ஒவ்வொரு ஊர் மாறும்போதும் ஒவ்வொரு அனுபவம். தொடர்கிறேன் அம்மா. நான் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் படிக்கவில்லை. ஸ்ட்ரெயிட்டா மூன்றாம் வகுப்புதான். சேர்த்த முதல் நாள் நான் வகுப்பில் இருந்தபோது அப்பா கனகாரியமாக
என் வகுப்புக்குப் பக்கத்து வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த டீச்சரைப் பார்க்க வருவது போல வந்திருந்தார். நான் அந்த நேரம் ஒரு சோதனையில் இருந்தேன்!!! 'ஞ' எப்படிப் போடுவது என்று மறந்து விட்டிருந்தேன்! இவரைப் பார்த்ததும் எங்கள் வகுப்பு ஆசிரியையிடம் அனுமாகி பெறாமல் எழுந்து வெளியே வந்து கெட்டப் போனது இன்னும் என் நினைவில். அப்பாவின் அப்போதைய அந்த வருகைக்கான காரணம் என் மகனைப் பள்ளியில் சேர்த்தபோது எனக்கு நினைவு வந்து "புரிந்தது"!
உங்களுடைய மகிழ்ச்சியான அனுபவங்களை தொடர்ந்து வாசிக்கிறேன்.
நினைவுகளை துரத்தி கொண்டு நீங்கள் அதை படிக்க துரத்தி கொண்டு நாங்கள் மாற்றத்தை படிக்கச் காத்திருக்கிறேன்
தொடர்கிறேன் அம்மா...
அனுபவங்கள் என்றும் சுவராஸ்யமானவையே....
You are narrating very interestingly. Following.
Thank you Banumathi Venkateswaran. MARAKKA mudiyaatha ninaivukal. appreciate your words.
அசராமல் படிக்கும் அன்பு குமார். இந்த அருமைக்கு என்ன
பதில் சொல்வது. நன்றி அப்பா. Parivai Kumar.
ஆமாம் பூவிழி, 12 வயது நினைவுகள் இனிமையானவையே.
தோழமைகள் அப்படிக் களங்கம் இல்லாத நட்பு.
எங்களுக்கு எல்லாம் நிஜ வாழ்க்கையையும், பத்திரிக்கை,சினிமா வாழ்க்கையையும் பிரிக்கத் தெரியாது. எல்லோருக்காகவும் அழுவோம் ,எல்லொருக்காகவும் சிரிப்போம்.
தவறாமல் வருகை தரும் திரு ஜம்புலிங்கம் ஐயா. வணக்கம்.
செந்தமிழில் எழுதவில்லை. இருந்தாலும் பொறுமை காத்து படிக்கிறீர்கள். மிக நன்றி.
ஸ்ரீராம்............ மூன்றாவதாஆஆஆஆஆஆ. அப்பா கண்காணிக்க வந்தாரா.
சமத்தாய் அவரிடமே ஞ போடக் கற்றுக் கொண்டீர்களா.
மஹா சுவை. கற்பனை செய்து பார்க்கிறேன்.
என் நினைவுகள் தின வாரியாக வாழ்க்கை நினைவில் இருக்கு.
அத்தனையும் எழுதி உமங்களை எல்லாம் கஷ்டப் படுத்த மாட்டேன்.]]]]]]]]]]]]]
பள்ளி பருவம் மிக மகிழ்ச்சியான காலங்கள்.
நீங்கள் பள்ளி பருவ நினைவுகளை எழுத தொடர் பதிவுக்கு அழைத்து எழுதியதை நினைத்துப் பார்க்கிறேன்.
என் அப்பாவுடன் ஊர் ஊராய் போய் படித்த காலங்களை நானும் நினைத்துப் பார்க்க வைத்த பதிவு.
அன்பு கோமதி, அப்படியொரு பதிவு எழுதியது நினைவுக்கு வந்தது.
தேட முடியாமல் புதிதாக எழுதி விட்டேன்.
பலப்பல இடங்களில் கூடாரம் போடும் வாழ்க்கையில் நிலைத்த தோழிகள் சிலரே.
இப்பொழுது வலை உலகம் தரும்
நட்புகள் வாழ்வாங்கு வாழ்ந்து நலமாக இருக்க வேண்டும்.
புதிய ஊர், புதிய வீடு, புதிய பள்ளி இப்படி இருப்பது ஒரு அனுபவம். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. கல்லூரி வரை நெய்வேலியில் - கல்லூரி முடிந்த பத்தாம் நாள் தலைநகர் தில்லி!
தொடர்கிறேன் அம்மா...
இதை அப்போதே படித்துவிட்டேன். கருத்திட மறந்துவிட்டேன் போலிருக்கு.
நம் பெற்றோர், அதிலும் அப்பா, நம் கல்வி வளர்ச்சிக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். ஆனா, அதன் அருமை நமக்கு அப்போது புரிபடுவதில்லை. எங்க அப்பா, நான் வேலைக்குச் சேரப்போகும் வயதிலும், நான் டிரெயினிங் எடுத்த ஆபீசில், Bossஐ மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பார்த்து, என் வளர்ச்சி எப்படி என்றெல்லாம் கேட்டுக்கொள்வார்.
படிக்கச் சுவையாகத்தான் இருக்கு.
எனக்குப் பள்ளிகள் மாறவே இல்லை. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பொன்னு ஐயங்கார். பிறகு ஓசிபிஎம். என் தம்பியை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தப்போ "அ"தவிர்த்து எல்லாவற்றையும் போடுவான். அதென்னமோ அவனுக்கு அரைப் பரிக்ஷை வரை அ,ஆ இரண்டும் வரவே இல்லை! :)
இதை இப்போ ரெண்டு நாட்கள் முன்னாடி எழுதினேன் நெல்லை தமிழன். இதே
எண்ணங்களை முன்பு எழுதி இருப்பேன்.
அதனால பரவாயில்லை.
அப்பாக்கள் அனேகர் இப்படித்தான். இந்தப் பாதுகாப்பு இல்லாமல் நாம் எப்படி
வளர்ந்திருக்க முடியும்.
உங்கள் அப்பாவை நினைத்து நெகிழ்ச்சியாக இருக்கு மா.
அச்சோ கீதா. ஹாஹாஹா. அ,ஆ எழுதாமலியே அரை வகுப்புத் தாண்டிவிட்டாரா,.
ஒரே ஊரில் படிப்பது எவ்வளவு அதிர்ஷ்டம். தோழிகள் நினைவில் வைத்திப்பார்கள்.
என் சித்தப்பா பெண்களும் OCPM தான். 1961 அங்கே சேர்ந்தார்கள்.
அன்பு வெங்கட்,
இது ஒரு அதிர்ஷ்டம் மா. நெய்வேலியும் அழகான ஊர். வடிவாகக் கட்டமைக்கப் பட்டது.
அங்கிருந்து தில்லி சென்றதும் ,வாழ்க்கையின் நிச்சயத்தை உறுதி செய்யும்.
எப்பொழுதும் மாறா மகிழ்ச்சியுடனும்,குறைவில்லா ஆரோக்கியத்துடனும் இருக்கணும் மா.
வல்லிம்மா ஊர்கள் மாறி மாறி பல புதிய அனுபவங்கள் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் அப்போதெல்லாம் பள்ளி மாற்றம் அவ்வளவு கடினமாக இருந்திருக்காது இல்லையா? ஒரே பாடத்திட்டப் பள்ளிகள் தானே இருந்திருக்கும். இப்போது என்னடா நா ஸ்டேட் சிலபஸ், சென்ட்ரல் சிலபஸ், ஆங்கிலோ இண்டியன், மெட்ரிக்குலேஷன், ஐசிஎஸ்ஸி...என்று ஊர் மாறுவது கொஞ்சம் கடினமாகிவிட்டது. என் மகனுக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. மொழி மாற்றம் வேறு...எனக்கு எல்லாம் முதல் 3 வகுப்பு அப்புறம் 6 ஆம் வகுப்பு வரை கொஞ்சம் மாற்றம் அப்புறம் ஒரே ஊர் தான் கல்லூரிப்படிப்பு முடியும் வரை...
கீதா
துளசிதரன்: எத்தனை அனுபவங்கள் தங்கள் வாழ்க்கையில் அத்தனையும் நன்றாக நினைவுவைத்து சுவையாக எழுதி வருகிறீர்கள். நான் எனது பள்ளிப்படிப்பு வரை கிராமத்திலும் கல்லூரிப்பு மதுரை, பட்டமேற்படிப்பு நாகர்கோவில் அதன் பின் எல்லாம் கேரளா என்று ஆகிவிட்டது.
தொடர்கிறோம் அம்மா
அன்பிற்குரிய, துளசிதரன், கீதா
தொடர்ந்த வருகைக்கு மிக நன்றி.
உண்மைதான் உங்கள் மகன் படிப்பு மாறும் போது
கஷ்டப் பட்டிருப்பார். எனக்கும் படிப்பில் தொந்தரவு வந்ததே இல்லை.
அப்பாவுக்கு நேரத்துக்கு எல்லாம் நடக்கணும்.
பெரிய தம்பி செய்தியின் போது சாப்பிட்டு எட்டே கால்
மணிக்குத் தூங்கி விடுவான். சின்னவனும் நானும்
ஒன்பது மணி.
ஓஹோ மீண்டும் கதை அளக்க ஆரம்பித்துவிட்டேன். நீங்கள்
இருவரும் ,தங்கள் மகனும் இனிதே வாழ என் ஆசிகள் .
Post a Comment