Blog Archive

Thursday, November 16, 2017

திண்டுக்கல் 1960 ஜூன். 1964 ஜூன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வண்டியூர்   தெப்பக்குளம்.
4.50  மாலை 15 நவம்பர்.
திண்டுக்கல் 1960 ....1964 ஜூன்.
+++++++++++++++++++++++++++++++++++
 1960 ஆம் வருடம், ஏப்ரில் மாதம் ,  அப்பாவுக்கு
திண்டுக்கல் நகரத்துக்குத் தலைமை தபால் அலுவலகத்தில்
சேரும்படி ஆர்டர் வந்தது. பதவி உயர்வோடு...
ஆளாளுக்கு திருமங்கலத்தையும் தோழர் தோழிகளை விட்டுக் கிளம்ப வருத்தம்.
முரளிக்கு அக்கி வந்த போது அதற்கான செம்மண் கொண்டு வந்து கொடுத்த
துணிதோய்ப்பவர், ரங்கனுக்கு ,அம்மை ஊசி குத்தி செப்டிக் ஆனபோது மருந்து கொண்டு வந்து
கொடுத்த நாகம்மா,  பூக்காராம்மா, தயிர்,வெண்ணெய் கொண்டு வருபவர்கள் அனைவருக்கும் மிக வருத்தம். நிறைய பேசாத அம்மாவுக்கு இவ்வளவு நட்புகளா என்று
கொஞ்சம் யோசனை வந்தது.
பாப்பா உனக்கு வயசாகுது. அம்மா சொல்படி நடந்துக்க என்று வீட்டு வேலை செய்யும் நாகம்மா என் கைகளைப் பிடித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது.
ம்ம்ம் என்னடா அப்படி அடாவடி செய்தோம் என்று யோசித்தேன்.
வெய்யில் வீணாகாமல் பத்மா,மாதவி,ரஜினி, சந்த்ரலேகா மற்றும்  தீக்குச்சி அடுக்கி
குடிசைத்தொழில் செய்த மாரி, பக்கத்துவீட்டுக் கல்யாணராமன் மாமா,மாமியோடு அரட்டை
இதெல்லாம் தான் காரணமாக இருக்கணும் என்று நினைத்துக் கொண்டு ,அந்த அம்மாவிடம் தலையாட்டினேன்.

 அந்த அங்குவிலாஸ் என்று எழுதிய வீடு இன்னும் கண்ணில் நிற்கிறது.
///////1993இல் ஒரு தடவை மதுரை போய் வந்தோம். முருகனையும் , மீனாட்சியையும்,அழகர் மலைப் பெருமாளைத் தரிசிக்கவும்  மூன்று நாட்கள்
சிங்கத்தின் தோழர் வீட்டில்  தங்கி, ஒரு நாள் திருமங்கலம் வரை
 போய் வந்தோம். நான் மிகப் பெரிய வீதி என்று நினைத்த இடம்
எல்லாம் சிறியதாக, நெரிசல் மிகுந்த இடமாகக் காட்சி அளித்தது,
நம் உருவம் பெரிதானால், காட்சி சிறிதாகிவிட்டது என்றே தோன்றியது.
 அங்குவிலாஸ் என்று எழுதிய மாடி கண்ணில் பட்டது.
வண்டியை நிறுத்த சொல்ல ஆசைதான். மாலை வண்டியைப் பிடிக்க வேண்டியதால்
திரும்பினோம். மனம் சங்கடப்பட்டது.
 பை பாஸ் என்று வண்டி ஓட்டி அழைத்துப் போனார்.
பசுமலை,பழங்கா நத்தம் எல்லாம் கண்ணில் படவே இல்லை.
5ஆம் நம்பர் பஸ்ஸாவது கண்ணில் படுமோ என்று
தேடினேன்.
  இறந்த காலமாகிவிட்டது எல்லாமே. ஹாஜி மூசாவில் போய் பெண்ணுக்கு
ஒரு கோரா பட்டுப் புடவை மட்டும் எடுத்துக் கொண்டோம்.
புது மண்டபம்  அழகு மாறி   கூட்ட நெரிசிலில் கடைகளில்  என்ன விற்கிறது
என்ன என்று புரிவதே
கஷ்டமாக இருந்தது. தாழம்பூ குங்குமம் மட்டும்
வாங்கிக் கொண்டேன்.அதுவும் மதுரை மல்லியும் மாறவில்லை./////
திண்டுக்கல் கிளம்புவதற்கு முன் மதுரைக்குப் போய்விட்டேன்.
மீண்டும் தொடர்கிறேன்.

16 comments:

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள்..... தொடரட்டும்.

நெல்லைத் தமிழன் said...

"நான் மிகப் பெரிய வீதி என்று நினைத்த இடம் எல்லாம் சிறியதாக, நெரிசல் மிகுந்த இடமாகக் காட்சி அளித்தது,"

இது எதனால் என்று புரிவதில்லை. அப்போ சிறிய வயதில், நாம் இருந்த இடமே பெரிய உலகமாகத் தெரிந்ததா? பிறகு பல்வேறு இடங்களுக்குப் பயணித்து நம் கண்கள் பிரம்மாண்டமான பல கட்டிடங்களையும் இடங்களையும் பார்த்துப் பழகிக்கொண்டதால், நாம் சிறிய வயதில் இருந்த இடங்கள் மிகச் சிறியதாகத் தெரிகிறதா என்பது புரியவில்லை. எனக்கும் கீழநத்தம் வீட்டைப் பார்க்கும்போது அப்படித் தோன்றியது (இந்த உள் திண்ணையிலா, 7 பசங்களும் 2 பெரியவர்களும் படுத்துக்கொண்டிருந்தோம் என்று).

எத்தனையோ நினைவுகளைக் கிளறுகிறது உங்கள் இடுகை. தொடர்கிறேன்.

பூ விழி said...

நினைவுகளே ஒரு கதைவடிவதில் இருக்கிறது அம்மா உண்மை பெரிதாய் இருந்த சாலைகள் எல்லாம் கால போக்கில் மனிதர்களின் கைவண்ணத்தில் சுருங்கிவிட்டது அந்த கால படம்களையும் இணைத்துவிட்டிர்கள் மகிழ்ச்சி

Geetha Sambasivam said...

நமக்குப் பிடிச்ச இடம், ஊர், பின்னர் நம் வாழ்வில் அந்நியமாக ஆகி விடுகிறது. இப்போ மதுரை எனக்கு அந்நியமாய் ஆகிவிட்டாற்போல! :(

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் , வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்.
நம் நினைவுகளில் இருந்து அகலாத அந்த இடங்கள் மாறி இருக்கச் சந்தர்ப்பம் இல்லை.
நாம் தான் மாறி இருக்கிறோம். ஏழெட்டு வயதுக் கண்களுக்கும் ,பின் நாட்களில் பார்த்த 45 வயதுக் கண்களுக்கும்தான் வித்தியாசம்.
நம் மனசுக்குத்தான் தெரிவதில்லை.
அம்மா வழிப் பாட்டி வீடும் கீழ நத்தத்தில் தான் இருந்தது. இப்போ இருக்கான்னு தெரியாது.
வைகாசித் திருவிழா நடக்கும் இல்லையா. அதில்
எந்த நாளுக்கான பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்களோ,அந்த நாள் வீடாக
அகம் அறியப்படும். நீங்கள் சொல்வது போலச் சென்னையில்
பாட்டிவீடு சின்னதுதான். அதில் கல்யாணம் நடத்தும் அளவுக்கு மனம் இருந்தது. அக்கம் பக்கம் எல்லாம் அத்தனை அன்யோன்யம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூவிழி,
நம் வாழ்வே பெரிய கதைதான். அதற்காகத்தான் கிடைத்த சித்திரங்களைப் போடுகிறேன்.
அக்கறையுடன் படித்துக் கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அதுவேதான். ஒரே இடத்தில் இருக்கும்படி வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
மாறீ வந்துவிட்டதால்,நாம் பல அடையாளங்களை

விட்டு விடுகிறோம். நானே யோசிக்கிறேன். இந்தப் பற்றை விட்டு விட வேண்டியதுதான் என்று.

நெல்லைத் தமிழன் said...

வல்லிசிம்ஹன் அம்மா... இது பற்று இல்லை. நாம் வாழ்ந்த இடங்கள் நம் மனதில் பதிந்ததைத்தான் காட்டுகிறது. என் அப்பா அரசு உத்தியோகம் (பள்ளிக் கல்வித்துறை ). அதனால நான் பரமக்குடி, தாளவாடி போன்று பல இடங்களில் வசித்திருக்கிறேன், ஒவ்வொரு இடமும் வாழ்வின் ஒவ்வொரு பகுதியாக்க் கழிந்நிருக்கிறது. பாடங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. என் ஹஸ்பண்டோட அந்த இடங்களுக்கெல்லாம் போய்வரவேண்டும் என்று ஆசை. எங்கெல்லாம் இருந்த நான் இப்போ எங்கெங்கெல்லாம் இருக்கிறேன் என நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நெல்லைத்தமிழன். அந்த வயதில் இல்லாத அனுபவங்களா.
நிறையக் கற்றிருக்கிறோம்.

அம்மா என்னிடம் சொல்வார். ஊரெல்லாம் தேடித் தோழிகள். உன்னோடு இருப்பவர்களைக் கவனிக்கணும் நீ.///
நீங்களும் உங்கள் பாஸை அழைத்துக் கொண்டு கட்டாயம் சென்று வரவேண்டும்.
பகிர்ந்து கொள்ள ஒருவர் வரும்போது எல்லாம் சிறப்பாக அமையும்

Johnkennday said...

தாழம்பூ குங்குமம், புது மண்டபத்தில் எந்த கடையில் வாங்கேனீங்க? எனக்கு நயமான தாழம்பூ குங்குமம வேண்டும் ! Madurai பிறந்து , அடுத்த மாதம் மீண்டும் மதுரை வருகிறேன். Thanks.

கோமதி அரசு said...

ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு போகும் பொது பழைய ஊரின் நட்புகளை இழக்க நேரிடும் சில் பேரோடு நட்பு தொடர்ந்து கொண்டு இருந்தது கல்யாண்ம, குழந்தை என்று ஆனவுடன் விட்டு போனது.
உங்கள் பகிர்வுகள் எத்தனை முறை படித்தாலும் அலுக்காது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, ஆனால் எனக்கு ஒரு அன்பு நட்பு மதுரையில் இருக்கிறது. என் தங்கை கோமதி.
வேகமாகச் சென்று விட்ட பள்ளி நாட்கள்.
எதையும் எளிதில் ஏற்றுக் கொள்ளும் இள வயது.
இப்போதான் இயலாமை வருகிறது இந்த வயதில்.
வாழ்க வளமுடன் கோமதி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, ஆனால் எனக்கு ஒரு அன்பு நட்பு மதுரையில் இருக்கிறது. என் தங்கை கோமதி.
வேகமாகச் சென்று விட்ட பள்ளி நாட்கள்.
எதையும் எளிதில் ஏற்றுக் கொள்ளும் இள வயது.
இப்போதான் இயலாமை வருகிறது இந்த வயதில்.
வாழ்க வளமுடன் கோமதி.

Thulasidharan V Thillaiakathu said...

நாம் அப்போது கண்டவை எல்லாம் இறந்த காலம் தான்...அதுவும் அந்தச் சுவடுகள் மனதில் மட்டுமே நிற்கும். இப்போது எல்லாம் மாறிவிட்டதால்...நம் ஊரே நமக்கு அடையாளம் தெரியாத வகையில் மாற்றியிருக்கும் நிலை..

துளசிதரன், கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன் ,கீதா,
உண்மைதான் அப்பா, நாம் பார்த்த இறந்த காலம் மறைந்தே விட்டது.
எங்காவது வயல் வரப்பில் மட்டும் தேங்கி இருக்கும் என்று நம்புகிறேன். நல்ல வளம் அடைந்தால் நல்லதுதான். நன்றி அம்மா.