Friday, May 20, 2016

உலகம் உய்ய வந்த சிங்கப்பிரான்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  பக்தப் பிரஹ்லாதனை ஒரு  பாதையாக வைத்து
  உலகம் உய்ய வந்த அழகிய சிங்கமே
நீ வந்த  வைகாசி சதுர்த்தசி நாள் இன்று.

உதைத்த ஹிரண்யனின் காலுக்குத்தான் எத்தனை புண்ணியம்.
நம் ஸ்வாமியின் காருண்யத்துக்கு  ஏது அளவு.
 கண்ணில் கண்ணீர் வழியும் பிரஹ்லாதனை அணைத்து அரசனாக்கிய
வள்ளல்.
 ஜன்மம் முழுவதும் தன்னை வைரியாகப் பாவித்த
அசுரன்  புனிதனாக  அவனைத் தன் மடியில் கிடத்திக்
குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு அவன் வயிற்றினில் ,இதயத்தில்
தடவிப் பார்த்ததாம் நம் சிங்கம். ஏதாவது ஒருமூலையில் நாராயண நாமம் கேட்டால்
அவனை உயிர்ப்பித்துவிடலாமே என்று.
பயனில்லை. அதனால் என்ன அவனுக்குக் கிடைத்ததோ
மோக்ஷபதவி.

 நம் உயிர்களிலும் அவன் நாமம் அணுவெங்கும் நிறைந்திருக்க வேண்டும்.

எல்லோரும் இன்புற்று இருக்க அவனே வழி செய்வான்.
Add caption

Wednesday, May 18, 2016

அம்மா என்னும் உலக மஹா அதிசயம்

 June 2003
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மகிழ்வான நிகழ்வுகள். பல புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய் வரும்
நன்மை  கிடைத்தது.
மகனுக்குத் திருமணம் நிச்சயம் ஆனது. மற்றவனுக்கும்  நிச்சயம் நடக்க வேண்டும்
பெருமாளே என்று  வேண்டிக் கொண்டே இருந்தேன்.

அடுத்தவாரம் ஒரு புதன்கிழமை காலை அவசர தொலைபேசி
அழைப்பு தம்பி மனைவியிடமிருந்து.
அம்மாவுக்கு  மார்பு வலி. உங்களைப் பார்க்கவேண்டும் என்கிறார்
என்றதும் நானும் சிங்கமும் விரைந்தோம்.
அப்போதைய தேவகிக்கு அழைத்துவந்து சிகித்சை பயன் பெறாது, ஆஞ்சியோ செய்ய மலருக்கு விரையுங்கள் என்று ஆம்புலன்ஸும் கொடுத்தார்கள்.

ஒன்றுமே  மனதில் ஓடவில்லை.
அம்மா என் கையைத் தன்முகத்தில் வைத்துக் கொண்டார்.
காது,கைகள்,கழுத்தில் இருப்பதை எடுத்துவிடு என்று சைகை.
நான் பேச வேண்டாம் என்று சொல்லிமுடிப்பதற்குள்
மலர் வந்தது. அங்கே அவசர ஆஞ்சியோ செய்து

மியாட் செல்ல  முடிவு செய்யப் பட்டது.
எல்லா நாட்கள் இரவும் சின்னத் தம்பியும்,அவன் மனைவியும் மாறி மாறி
அம்மா இருந்த அறைக்கு வெளியே கொசுக்கடியில் படுத்துக் கொண்டு அவதியைப் பொருட்படுத்தாமல்  நாட்கள் கடத்தினார்கள்.
பகல்வேளையில் நான் இருந்தேன்.
அம்மாவுக்கு  இருதய அறுவைச் சிகித்சை பரிந்துரைக்கப்பட்டது.
தீர்மானமாக மறுத்துவிட்டார்.
எனக்கு இது  போதும் .நான் பத்திரமாக இருந்து கொள்கிறேன் என்று
சொல்லிவிட்டார்.
அங்கிருந்த இரண்டு வாரத்தில் நாங்கள் மூவரும் தவம் கிடந்தோம் அம்மாவைப் பார்க்க.
இண்டென்சிவ் கேர் லிருந்து தனி அறைக்கு மாறி நாங்கள் அருகில் வந்ததுதான் அம்மா முகத்தில் சிரிப்பு.
அம்மா பேரன்கள் கல்யாணம் பார்க்காமல் போகாதே என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்.
அம்மாவும் முயன்று வீட்டுக்கு வந்தார்.
அதன்பிறகு  2005 மே இருபது வரை அவள்  ஒரு துளி வார்த்தை வலி சொன்னது கிடையாது.
இளைய மகனை ஒரு நாள் தூக்கத்தில் பறி கொடுத்தாள். அதிலிருந்து
  உடல்,மனம் இரண்டும்  நொந்து திவ்ய பிரபந்தம் சேவிப்பதில் நாட்களைக் கழித்தாள்.
அமைதியாக ஒரு துவாதசி நாள் காலை நான் வந்து பார்ப்பதற்குள்
இறைவனில் அடங்கினாள்.

நானும் பெரிய தம்பியும் மௌனம் காத்து நாட்களைக் கடத்தி அவளுக்குச் செய்யவேண்டிய
கடமைகளை நிறைவேற்றினோம்.

நல்லதொரு ஆத்மா எங்கள் அன்னையாக ,நல்ல மனைவியாக ,பேரன்பு மிக்க பாட்டியாக
வாழ்ந்து மறைந்தாள்.
இறைவன் அவள் மேல் இன்னும் கொஞ்சம் கருணை வைத்திருக்கலாம்.
எங்கள் தம்பியை உயிருடன் விட்டிருக்கலாம்.
விதி வலியது.
அவள் பொறுமை எனக்கு வருமா தெரியாது. ஆனால் அவள் அன்பு என்னைக் காக்கிறது என்பது தெரியும்.


Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

Sunday, May 15, 2016

வலை அனுபவம்........

Add caption
Add caption
       வீடு மனிதர்களை விடுகிறதோ

இல்லை மனிதர்கள் வீட்டை விடுகிறார்களோ

   நினைவுகள் மட்டும் அழியாமல்

அங்கேயே தங்கி விடுகின்றன.
----------------------------------------------------
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, May 11, 2016

#அமெரிக்க அனுபவம் 3


நாளை  சின்னப் பேரன் பள்ளியில்  
உயிர்க்காட்சி  ஒன்று.  அவரவருக்குப் பிடித்த தலைவர்களின்

வாழ்க்கை  பற்றிப் பேசி அவர்கள் போலவே நடிக்க வேண்டும்.
பேரன்  அவர்கள் ஊர்த் தலைவர் ஜான் எஃப் கென்னடி  யாகப்
பேசப போகிறான்.
அதற்கான தலை முடிக் கோதல், நீல நிற சூட் ,கையில் சிறுபெட்டி
என்று வேடம் தயார்.
அவரது வாழ்க்கையை  மனப்பாடமாக   செய்து கொண்டுவிட்டான்.
அடே அப்பா என்ன என்ன தயாரிப்பு. நூலக  விசிட்கள்.

அவரைப் போலவே  நடை,பேச்சு,புன்முறுவல் எல்லாம் செய்து பார்த்துக் கொண்டுவிட்டான்.

இப்போ அதுவல்ல கதை.
இவனைப் போலவே இவன் தோழன்  ஜனாதிபதி லின்கன்  வேடம்.
அவனுக்கு உடை உதவிகள் பெண் செய்து கொடுத்தாள் .அம்மா வேலைக்குப் போகிறவர்.

இப்போது தொலைபேசியில் பேசி, தான் ,வரமுடியாது என்றும் தன பிள்ளையை அழைத்துப் போகச் சொல்லியும்    கேட்டுக் கொண்டார். மலர்விழி நீங்கள் போன தடவையே வரவில்லை. இத்தனை பையன் கள் பெண்களின் பெற்றோர் வரும்போது  நீங்கள் வரவேண்டாமா என்று உரிமையோடு கேட்டுக் கொண்டாள். என் பெண்.

அவரது அலுவலகத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் சௌகரியம் இருக்கிறது.

விடுமுறை சொல்லிவிட்டு வரலாம்.
 என்னங்க  செய்யறது பொழைப்பை விட்டுட்டுப்  பையனை கவனிக்க முடியவில்லை என்று சொன்னார்.

அந்தப் பிள்ளை மகா சுட்டி.
 தானே எல்லாவற்றையும்  படித்துக் கொண்டான்.
நாளை சாயந்திரம் எல்லாக் குழந்தைகளும்   தங்கள் பாத்திரங்களை திறமையாக 
 அழகாக  உயர்வாகச் செய்து காண்பிப்பார்கள்,.

அந்தக் குழந்தைக்காக இந்தத் தாய் வந்தால் நன்றாக இருக்கும்.  பார்க்கலாம் .



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, May 10, 2016

அமெரிக்க அனுபவம் 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


பெற்றோருக்கு அலுவலக  விஷயமாக அதிகாலையிலேயே
வெளியே  போக வேண்டும்.
பெரியவன் பஸ் ஏறிப் போய்விட்டான்.  சின்னவனை அம்மா கொண்டு விட்டே வழக்கம்.
 தன் தோழியை அழைத்து ,இவனையும் கூட்டிக் கொண்டு போகச் சொல்லி இருக்கிறாள்.
இவருக்கு அம்மா வெளியில் சென்றதும் அர்ஜண்டா டாய்லெட். போகணும்
பாட்டி மேல வந்துடாதே. நான் உடை மாற்றணும்.
சரிப்பா.
ஆனா படி பக்கத்துலயே நில்லு.
சரிப்பா.
 எனக்குப் பசிக்கவே இல்லை.
சரிப்பா.
ஒரு ஆப்பிள் போதும்
சரிப்பா.
ஹோம்வொர்க்ல மட்டும் உன் சிக்னேச்சர் போடு.

நான் உன் அம்மா மாதிரி போட முடியாதேடா.
பாட்ட்ட்ட்ட்டீ. தட்ஸ் இல்லீகல்.
நீ உன் பேரைப் போடு. உனக்கு சைன் செய்யத்தெரியுமா.
தெரியும் பா.
ஓகே. ஆல் இஸ் நாட் லாஸ்ட்.
 எனக்கு இப்போ சீரியல் சாப்பிடலாம்னு  யோசனை வரது .
செய்டா ராஜா .
  ப்ளெண்டி ஆஃப் டைம் பாட்டி .நெவர் வொரி.
இல்லைப்பா.
குட்  யூ   பி  அட் பீஸ்.
ரைட். டா.

ஹஹ்ஹஹாஹா. சாமி.
 சாண் ஆண்.


அனுபவம் பலவிதம்..அமெரிக்கா

   இன்று  படம் பார்க்க நினைத்தது  பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால்.

பாத்திரங்களைத் தேய்க்கும்
 டிஷ்வாஷர் இல்லாமல்  கைகளால் தேய்க்கும் பணியும் பிடித்துவிட்டது.
 
நம் ஊர் எவ்வளவோ  தேவலை. உடனே வராவிட்டாலும் அடுத்த நாளாவது வருவார்கள்.
இங்கே  வேலை தெரிந்தவர்கள் குறைந்துவிட்டார்களா. இல்லை அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் குறைந்து இருக்கிறதா தெரியவில்லை.
மே ஒன்றாம் தேதி உழைப்பை நிறுத்தின இயந்திரம் இன்று வரை
பழுது பார்க்கப் படாமல் இருக்கிறது.

இத்தனைக்கும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட  மெஷின்.
வாரண்டி  நாட்கள் கூட முடியவில்லை.
நாளை வருவதாக அந்தக் கம்பெனி சொல்லி இருக்கிறது.

அதுவரை பெண் கைகள் ஓயும் வரை தேய்த்து விடுகிறாள்.
மீதியை  நான் செய்கிறேன்.
சாப்பிடாமல் இருக்க முடியுமா.
பாத்திரங்கள் தான் உபயோகிக்காமல் என்ன வேலை தான் நடக்கும்.

அவள் மும்முரத்தில்  அவள் அப்பாவைத்தான் பார்க்கிறேன்.
 நாளைப் பொழுதாவது  பணி செய்பவர் வரட்டும்.
இதுவும் ஒரு அனுபவம் தான்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, May 01, 2016

செய்யும் தொழிலே தெய்வம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


ஸ்விஸ்ஸில் சிங்கம் செய்த கரடி
எனக்குத் தெரிந்த உன்னத உழைப்பாளி என் சிங்கம். அவர் நேரத்தையும்  தன்கரங்களையுமே நம்பினார். வேறு எதையும் யாரிடமும் எதிர்பார்க்கமாட்டார்.
அவர் சார்பில்  உலகின் உழைப்பாளர்களை வணங்கி வாழ்த்துகிறேன்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...