பக்தப் பிரஹ்லாதனை ஒரு பாதையாக வைத்து
உலகம் உய்ய வந்த அழகிய சிங்கமே
நீ வந்த வைகாசி சதுர்த்தசி நாள் இன்று.
உதைத்த ஹிரண்யனின் காலுக்குத்தான் எத்தனை புண்ணியம்.
நம் ஸ்வாமியின் காருண்யத்துக்கு ஏது அளவு.
கண்ணில் கண்ணீர் வழியும் பிரஹ்லாதனை அணைத்து அரசனாக்கிய
வள்ளல்.
ஜன்மம் முழுவதும் தன்னை வைரியாகப் பாவித்த
அசுரன் புனிதனாக அவனைத் தன் மடியில் கிடத்திக்
குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு அவன் வயிற்றினில் ,இதயத்தில்
தடவிப் பார்த்ததாம் நம் சிங்கம். ஏதாவது ஒருமூலையில் நாராயண நாமம் கேட்டால்
அவனை உயிர்ப்பித்துவிடலாமே என்று.
பயனில்லை. அதனால் என்ன அவனுக்குக் கிடைத்ததோ
மோக்ஷபதவி.
நம் உயிர்களிலும் அவன் நாமம் அணுவெங்கும் நிறைந்திருக்க வேண்டும்.
எல்லோரும் இன்புற்று இருக்க அவனே வழி செய்வான்.
![]() |
Add caption |
3 comments:
நரசிம்மருக்கு நமஸ்காரங்கள்.
நிச்சயமாக வழி கிடைக்கும். ஸ்ரீராம்.
நல்லதொரு பகிர்வு. அவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....
Post a Comment