எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன்.
முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவர்களுக்குக் கொடுக்கப்படும் Prom night.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் நேவி பியர் என்னும் ஏரிக்கரையோர
பார்க் இல் நடந்த சம்பவங்கள்.
எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும் இடம்.
மாலை நேரம் காப்பி குடிக்கும் இடத்திற்குச் சென்று வேண்டும் என்ற
விருப்பத்தைச் சொல்லி அமர்ந்தோம்.
பெரிய இடம்.
திடீரென கிளுக் சிரிப்பு சப்தத்தோடு பெண்கள் வித விதமான
மாலை நேர கவுன்களில்
வந்த வண்ணம் இருந்த வந்தார்கள்.
அவர்களைத் தொடர்ந்து tuxedo and bow tie அணிந்த இளைஞர்கள் . என்ன ஏதாவது பார்ட்டியா என்று மகளிடம் கேட்டேன்.
உற்றுப் பார்க்காதேம்மா.
அவர்கள் பள்ளி முடிந்து கல்லூரி செல்லும் விழா.
பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள். இரவு வரை அவர்களுக்கு உணவு,டான்ஸ் என்று சம்பவங்கள் இருக்கும்.
அது ஏன் இந்தப் பள்ளிப் பருவ பெண்கள் இப்படி உடல் தெரிய
உடை அணிகிறார்கள்.
ஏதாவது விபரீதம் நடந்துவிடாதோ.
அதெல்லாம் ஒன்றும் நடக்காதுமா. அவரவர் தன் பாய் ப்ரண்டுடன் தான் வருவார்வார்கள்.
அப்படி இல்லாதவர்கள் இன்னொரு தோழியை அழைத்து வருவார்கள்
நான் எல்லாவற்றையும் கேட்ட படி , வண்ணத்துப் பூச்சிகள் போல்
சுற்றி வரும் வரும் பெண்களையும் ,
கறுப்பு உடையில் வாலிபனாகத் துடிக்கும் 18 வயது பையன் களையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கூட வந்திருந்த மகளின் தோழி ஒரு பெண்ணைச் சுட்டிக்காட்டி ஒரு குழந்தைக்குத் தாய் என்றார்.
அவர் பெண்ணும் அந்தப் பள்ளியில் படிப்பதால் அவருக்குத் தெரிந்திருக்கிறது..
எல்லாம் புதிதாக இருந்ததது.
எங்கள் பள்ளிக்கூடக் கடைசி நாள் அனைவரும் புடவை கட்டிக் கொண்டு போனதும் அதுவே பெரிய மகிழ்ச்சியாக இருந்ததும் நினைவில் வர புன்னகைத்துக் கொண்டேன்.
இந்தக் குழந்தைகளும் நல்ல வாழ்வு பெற வேண்டும்.

5 comments:
ஆமாம், எங்க பேத்திக்கும் இந்த ப்ராம் உண்டு. புதுசாக உடை வாங்கி இருக்காங்க. சின்னது தான் குஷியிலே இருக்கு! :)
ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு வழக்கம்.....! சுவாரஸ்யம்தான்!
இப்பதான் பிறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள எல்லாம் வளர்ந்தாச்சு.
கீதா. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. குட்டிக்கு இதைப் பார்த்து சந்தோஷமா.>\\\\\
ஆமாம். ஸ்ரீராம். பார்க்கவே அந்த நாளைக்கு நாம் போய்விடுகிறோம்.
ஊருக்கு ஊர் ஒவ்வொரு வழக்கம்..... அங்கேயும் இப்படி...
Post a Comment