Blog Archive

Tuesday, May 24, 2016

#அமெரிக்கானுபவம் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


இங்கே  16 வயதில் கார் ஓட்டலாம். பக்கத்து வீடுகளில் அனேகமாக எல்லாக் குழந்தைகளும் ஓட்டுகிறார்கள். பொறுப்புள்ள பெண்குழந்தைகளும் உண்டு.

45 மைல்களுக்கு மேல் வேகம் எடுக்காது.
சில புலிக்குட்டிகள்  சீறிப் பாய்ந்து போலிஸில் டிக்கெட் வாங்குவதும் உண்டு.
நம்ம வீட்டுப் பெரியவனுக்கு  இன்னும் 50 மணி நேரப் பயிற்சி முடியவில்லை.

இருந்தும் பிரமாதமாக ஓட்டுகிறான்.
லைசென்ஸ் அடுத்த மாதம் வந்துவிடும்.
ஆனால் வண்டி எல்லாம் வாங்கப் போவதில்லை.

கோடைகால  அவசரங்கள் கல்லூரி விடுமுறை நாட்களில் வரும் சீனியர் தோழர்கள்.
அடிக்கடி காதில் விழும்  விபத்துகள்.
இன்னும் 5 நாட்களே பள்ளிவருடம் முடியப் போகும் நிலையில்
நேற்று ஒரு அவசர அழைப்பு  ஒரு  அம்மாவிடமிருந்து.
உங்க வீட்ல இருக்கானா. 
படிடான்னு சொன்னதுக்குக் கோபித்துக் கொண்டு பிஎம் டபிள்யுவை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.
எங்கே போனான்னே தெரியவில்லை.

உன் மகனை அவனுக்கு  டெக்ஸ்ட் செய்யச் சொல்லு. நான் கூப்பிட்டால் எடுக்க மாட்டேன்        என்கிறான்.
ஒரே படபடப்பு அந்த அம்மா குரலில். இத்தனைக்கும் அந்தப் பையனுக்கு 17 வயதுதான் ஆகிறது
 நம்ம வீட்டுப் பெரியவர் அவனை செல்ஃபோனில் அழைத்தால் முதலில் எடுக்கவில்லை. பிறகு எடுத்து
பதில் சொன்னார். இவன் தனக்கு ஒன்றும் தெரியாதது போல
பாஸ்கெட் பால் விளையாட வரியான்னு கேட்டால்,நான் வெளியே இருக்கிறேன். என்னால் வரமுடியாது என்று வைத்துவிட்டான்.
இது உடனே அந்த அம்மாவுக்குச் சொல்லப்பட்டது.
ஒரு மணி நேரத்தில்  அவன் வந்துவிட்டான்.
என் மனம் தான்  அவதிப் பட்டது.. வேகமாக ஓட்டி ஏதாவது ஆகிடுமோன்னு.
 மகள்   அலட்டிக் கொள்ளவில்லை. எங்கம்மா போவான். வந்துடுவான் பாரு  என்று சொன்னதுதான்  நடந்தது. 

2 comments:

Geetha said...

உண்மைதான்மா ..குழந்தைகள் விசயத்தில் பயப்படாமல் இருக்க முடியவில்லை.ஆனால் அவர்கள் புத்திசாலிகளாக செயல்படுகிறார்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

இங்கே குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை விட வேகம் நிறைய இருக்கிறது கீதா மா.அந்த வயசு அப்படி.
இந்தப் பையனின் அம்மா ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு எழுந்தவர்.
மனசுக்கு சங்கடமாக இருந்தது. அதுதான் எழுதினேன்.