Saturday, March 05, 2016
Friday, March 04, 2016
எண்ணங்கள் இணைந்தால் இருத்தல் சுகம்.
![]() |
| எண்ணங்கள் இணைந்தால் |
![]() |
| Add caption |
Wednesday, March 02, 2016
Independance
ஒருவர்தான் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வைத்தவர்.
அவருக்கு சுதந்திரம் பிடிக்கும். அதனால் என் சுதந்திரத்தை மதித்தார்.
மற்றவர்கள் பாதுகாப்பு என்ற அன்பின்
வட்டத்தில் என்னை வைத்துவிட்டார்கள்.
நான் அவர்கள் இஷ்டம் போல்
இருக்க விட்ட நாட்கள்
நினைவுக்கு வருகிறது. தடை விதித்ததில்லை.
அவர்கள் பொறுப்புகளைச் சுமந்து
பாதிப்புகளையும் தாங்கிக் கொண்டார்கள்.
எங்களுக்கும் ஆதரவு தந்தார்கள்.
இப்பவும் சுதந்திரம் வேண்டும்.
தங்கக் கூடு பாதுகாப்பு தான்.
என் மாமரமும் மகிழமரமும்,
பாரிஜாதப் பூக்களும் ,செம்பருத்தியும் இல்லையே .
ஒரு நன்றி இல்லாத அம்மாவின் புலம்பல்.
Tuesday, March 01, 2016
தலை தப்பியது....3
ஒரு வழியாக உமாவைத் தயார் செய்து. கொண்டையலங்காரத்துடன் அவளைப் பார்த்தால் எனக்கே பிரமிப்பாக இருந்தது. இத்தனை அழகையும் எப்படி சின்னாளப்பட்டிப் புடவையில்
அடக்கி வாசிக்கிறாய் என்று கேட்டேன்.
சு போடி. என்று அலுத்துக் கொண்டாள்.
கொஞ்சம் சிரி.முகத்தை இனிமையா வச்சுக்கோ.
ராஜியோடு கலகலப்பா பேசு. சுந்தரம் பக்கத்தை விட்டு
நகராதே. இன்னும் இது போல 24 வயதுப் பெரிய மனுஷி
32 வயது அக்காவுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அன்றைக்கு இன்னோரு விருந்தாளியும் வந்தார். அவரும் ஒரு மார்க்கெடிங்க் மேனஜர். பெயர் குப்புசாமி. மஹீந்த்ரா அண்ட் மஹீந்த்ராவிலிருந்து வந்திருந்தார்.
எல்லோரும் அவரவர் வண்டியில் கிளம்பினோம்.
இவர் அப்போ ஒரு புல்லட் வண்டி வைத்திருந்தார்.
குழந்தைகள் மூவரும் + நாங்கள் ...ஐந்து பேரும் அதில் போன நாட்கள் பசுமை நிறைந்தவை.
சுந்தரம் வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்ய அலுங்காமல் நலுங்காம்ல் தேவதை போல உமா ஏறிக் கொண்டாள். பெண் அம்மா முன்னாலும் ,பிள்ளை அப்பாவுக்கு முன்னால் நின்று கொண்டும் கௌரிஷங்கர் ஹோட்டலுக்கு விரைந்தோம்.
எங்கள் பின்னால் பெரிய வேனில் சந்திரன் குடும்பமும் குப்புசாமியும் வந்தார்கள்.
சிங்கம் முதலில் போய் 14 நபர்கள் உட்கார இடம் சொல்லிவிட்டு வந்தார்..
சின்னவனை நான் மடியில் வைத்துக் கொள்ள எனகள் இருவருக்கு நடுவில் பெண்ணும்,பையனும் அமர்ந்தனர்.
எதிர்புறம் சுந்தரம் உமா அமர இருபக்கமும் அவர்கள் பெண்ணும் பையனும் உட்கார் மற்ற இடங்கள் சந்திரன் குப்புசாமி ராஜி அவள் குழந்தைகள் அனைவரும் உட்கார
மெனு பார்த்து ஆர்டர் செய்யத் தொடங்கினோம். எல்லோரையும் கவர்ந்தது உமாவின் கச்சிதமான அழகும் கம்பீரமும் தான்.
சந்திரன்,முதலில் காம்ப்ளிமெண்ட் கொடுத்தார். குப்புசாமி பின்பாட்டு பாட சுந்தரம்
கண்டு கொள்ளவில்லை.
சிங்கம் டேய் ,என்னடா கண்ணைத் திறந்து பாரேண்டா. என் பொண்டாட்டி எத்தனை கஷ்டப் பட்டு
இந்த ஹேர்டூ செய்து இருக்கிறாள்.
என்று சொல்லவும்
தாங்க் யூ ரேவதி என்று சாப்பிட ஆரம்பித்தார்.
எல்லோரும் அப்போது வெளிவந்திருந்த ஆராதனா,மெக்கனாஸ் கோல்ட்
படங்கள் பற்றிப் பேச ஆரம்பிததும் கொஞ்சம் கலகலப்பு களை கூடியது.
போகிறவர் வருகிறவர்கள் அபனைவரும் உமாவை இரண்டு தடவை
பார்த்துவிட்டுப் போனார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது.
சாப்பாடும் முடிவுக்கு வந்தது.
பீடாவெல்லாம் போட்டுக் கொண்டதும் நான் சின்னவனைச் சுத்தம் செய்ய
வெளியே வந்தேன். பின்னால் யாரோ வருவதைப் பார்த்துத் திரும்பினேன். ராஜி
விரைவாக வந்தாள். ரேவதி நீயா இத்தனை அழகாக் கொண்டை போட்டுவிட்டாய் என்று கேட்டதும், நானும் ஃபெமினாவில் வந்த படங்களைப் பார்த்துப் போட்டுப் பழகினேன். சுலபம் தானே என்றேன்.
சுந்தரத்துக்கு உமா பட்டிக்காடாக இருப்பதாக நினைப்பு என்று சிரித்தாள்.
இல்லையே அடுத்த தடவை நீங்கள் அவளுடைய நல்ல குணங்களை எடுத்து சொல்லுங்கள். பெண்களுக்குப் பெண்கள் தானே சப்போர்ட் என்றேன்.
சொன்னால் போச்சு. நாமும் கணவர்களை சகித்து வழிக்குக் கொண்டு வரணும் என்றாள்..
எனக்கு அது ஏற்கவில்லை. போலாமா என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு
நகர மற்ற எல்லோரும் வெளியே வருவதைப் பார்த்தோம்.
உமாஎன்னிடம் வரவும், இவரும் வந்தார்,ரேவ் நாம் எல்லோரும் மலம்புழா போய் வரலாமா
என்று கேட்டபடி வந்தார்.
| Add caption |
Sunday, February 28, 2016
தலை அலங்காரம் புறப்பட்டதே...2
அன்றிரவு கொஞ்சம் சமாதானத்தோடு முடிந்தது. புடவை சமாசாரத்தைக் காலையில் கேட்கலாம். இப்ப அவரை சமாதானத்தோடு தூங்க வை என்று அனுப்பினேன்.
சிங்கத்தோடு குறும்பு, ...நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம். இன்னிக்கு ராத்திரிக்கு.... என்றபடி குளிக்கப் போனார்.
ஓகே. அடுத்த நாள் நானும் சின்னவனும் மாடியை நோக்கிப் படையெடுத்தோம்.
அப்போதுதான் பூஜையை முடித்து வெளியே வந்த உமா என்னைப் பார்த்துக் கையிலிருந்த கல்கண்டு,தேன் எல்லாம் கொடுத்தாள்.
விஷயத்தைச் சொன்னேன். சரி உன்னிஷ்டம். இது என் வழியில் நடக்கவில்லை என்றால் உன் வழியில் போகலாம் என்றாள். மூவரும் பஜார் அதாவது ஆர்.எஸ் புரம் சென்று.
மேக் அப் கிட்,மூன்று ஃப்ரென்ச் ரோல் பன்ஸ், எல்லாம் வாங்கி வந்தோம்.
மை க்யா கரூன் ராம் முஜெ புட்டா மில்கயா பாடிக்கொண்டே அவளுக்கு
அந்தக் கொண்டை போட்டுப் பழகினேன்.
உண்மையிலியே அழகாகத் தெரிந்தாள்.
ஏய் இது விழாமல் இருக்குமா என்று சந்தேகப் பட்டாள். ஒண்ணும் ஆகாது 12 ஹேர்பின்
போட்டு அழுத்திவைக்கப் போகிறேன். நீ காஷுவலா இரு என்றபடி என் வேலையைப் பார்க்கப் போனென்.
ஞாயிறும் வந்தது. குழந்தைகளுக்கு வெளியே போகும் உத்சாகம். மாடிக்குப் போனேன். சுந்தரம் எழுந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கையசைத்துவிட்டு உமாவைத் தேடினேன்.
அவளும் தெளிவோடு குழந்தைகளைத் தயார் செய்து கொண்டிருந்தாள்.
ரெடியா, நீலப் புடவை, நீல மாலை,நீலக் காதணி, நீல வளையல்கள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டியா என்றபடி கண்களை ஓட்டினேன்.
சுரத்திலாமல் உம் என்றாள்.
சியர் அப் மா. அர்ச்சனா,பிரகாஷ் ரெண்டு பேரும் கீழே போங்கப்பா என்று அனுப்பிவிட்டு சுந்தரத்தை எட்டிப் பார்த்தேன்.
நீங்களும் குளீச்சுட்டு வாங்கோ. 10 மணிக்குக் கிளம்பி விடலாம் என்றேன். மனசில்லாமல் எழுந்தூ போனார். ஞாயிற்றுக்கிழமை நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தால் முடியாது போல இருக்கே என்ற முணுமுணுப்பு கேட்டது. அண்ணா இன்னிக்கு என் பிறந்த நாள் நீங்க சந்தோஷமா வரணும் என்றேன்.
![]() |
| Brasso print saree. |
Saturday, February 27, 2016
வந்ததே தலையலங்காரம்.
![]() |
| 1970s hairstyle |
Monday, February 01, 2016
1966 லிருந்து 2016 வரை
| வணக்கத்துக்குரிய மாமியார் மாமனார் |
ஜனவரி 31ஆம் தேதி புடவைகள் வாங்க நாள்.
புரசவாக்கத்துக்கும் மணிசங்கர் புடவைக் கடைக்கும்
இரண்டு ட்ரிப் போய் பட்டுப் புடவைகளும், ரேவதி ஸ்டோர்ஸில்
கடாவ் புடைவைகளும் வாங்கி பெட்டிகளில் அடுக்கப்பட்டன,.
ஸ்ரீராம் நாயுடு அழகாக எல்லா ஜாக்கெட்டுகளையும் தைத்துக் கொடுத்தார்.
புது செருப்பு வாங்கியாச்சு.
வாசலில் வாழை மரங்கள் மாமா கொண்டுவந்து கட்டிவிட்டார்.
வைரத்தோடுகள் ,தயார் என்று தொலைபேசி வந்தது. பாரிஜாதம் போய்
காதில் |வலிக்க வலிக்கப்} போட்டுக் கொண்டு திரும்பி வந்தோம்.
அடுத்த நாள் எங்களுக்கு அங்கே சாப்பாடு.
கல்யாண அழைப்பிதழை அங்கே கொடுத்துவிட்டு
ஏழு நாத்தனார்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு
அந்த வீட்டைப் பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சித்தேன்.
ஒரே சிரிப்பும் உல்லாசமும் தான்.
இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் ஒரு இரண்டுங்கெட்டான் நிலை.
அத்தை டில்லியிலிருந்து வந்துவிட்டார் அழகாக மருதாணி வைக்க.
கங்காதீஸ்வரர் கோவில் கடையில் கண்ணாடி வளையல்களும்,
நான் மிக விரும்பும் குடை ஜிமிக்கிகளும் வாங்கிக் கொண்டேன்.
இரவெல்லாம் பேச்சு பேச்சுதான்.
மாமாக்கள் மாமிகள் அனைவருக்கும் நான் புடவை தடுக்காமல்
மேடை ஏறி இறங்கவேணுமே என்கிற கவலை.
பிப்ரவரி 3 ஆம் தேதி பந்தக்கால் நட்டு சத்திரத்தை அடைந்தோம்.
சாயந்திரம் நிச்சயதார்த்தம் விசேஷமாக நடந்தது.
அடுத்த நாள் 4 ஆம் தேதி காலை இரண்டுமணிக்கே நாதஸ்வரம் மேளம் என்னை எழுப்பின.
கால்களுக்கு நலங்கு இட்டு புனித ஸ்னானம் செய்வித்தார்கள்.
ஊஞ்சல் புடவையாக ஸ்கார்லெட் புடவை, மாலையுடன்
நான் தயாராகவும் மாப்பிள்ளை வீட்டார் வரவும் சரியாக இருந்தது.
நான் காப்பி கூடக் குடிக்கவில்லை என்பதே எல்லோரும் மறந்துவிட்டனர்.
சரியாக காலை 9 மணி10 நிமிடத்திற்கு சிங்கம் என்னை மனைவியாக்கிக்
கொண்டார்.
அதன் பிறகு நலங்கு அது இது என்று 12 மணி வரை புகை மண்டலத்தில் இருவரும்
அல்லாடிய பிறகு .ஒருவழியாகத் திருமணம் பூர்த்தியானது.
அருமையான மனிதரின் மனைவி என்ற பெருமையுடன் புகுந்த வீட்டுப் பிரவேசமும்
நடந்தேறியது. இதோ 50
வருடங்களும் ஓடிவிட்டன. அனைவருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ வணக்கம்.
Subscribe to:
Posts (Atom)
கோவிந்தா கோவிந்தா சரணம்.
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...






