எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அன்றிரவு கொஞ்சம் சமாதானத்தோடு முடிந்தது. புடவை சமாசாரத்தைக் காலையில் கேட்கலாம். இப்ப அவரை சமாதானத்தோடு தூங்க வை என்று அனுப்பினேன்.
சிங்கத்தோடு குறும்பு, ...நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம். இன்னிக்கு ராத்திரிக்கு.... என்றபடி குளிக்கப் போனார்.
ஓகே. அடுத்த நாள் நானும் சின்னவனும் மாடியை நோக்கிப் படையெடுத்தோம்.
அப்போதுதான் பூஜையை முடித்து வெளியே வந்த உமா என்னைப் பார்த்துக் கையிலிருந்த கல்கண்டு,தேன் எல்லாம் கொடுத்தாள்.
விஷயத்தைச் சொன்னேன். சரி உன்னிஷ்டம். இது என் வழியில் நடக்கவில்லை என்றால் உன் வழியில் போகலாம் என்றாள். மூவரும் பஜார் அதாவது ஆர்.எஸ் புரம் சென்று.
மேக் அப் கிட்,மூன்று ஃப்ரென்ச் ரோல் பன்ஸ், எல்லாம் வாங்கி வந்தோம்.
மை க்யா கரூன் ராம் முஜெ புட்டா மில்கயா பாடிக்கொண்டே அவளுக்கு
அந்தக் கொண்டை போட்டுப் பழகினேன்.
உண்மையிலியே அழகாகத் தெரிந்தாள்.
ஏய் இது விழாமல் இருக்குமா என்று சந்தேகப் பட்டாள். ஒண்ணும் ஆகாது 12 ஹேர்பின்
போட்டு அழுத்திவைக்கப் போகிறேன். நீ காஷுவலா இரு என்றபடி என் வேலையைப் பார்க்கப் போனென்.
ஞாயிறும் வந்தது. குழந்தைகளுக்கு வெளியே போகும் உத்சாகம். மாடிக்குப் போனேன். சுந்தரம் எழுந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கையசைத்துவிட்டு உமாவைத் தேடினேன்.
அவளும் தெளிவோடு குழந்தைகளைத் தயார் செய்து கொண்டிருந்தாள்.
ரெடியா, நீலப் புடவை, நீல மாலை,நீலக் காதணி, நீல வளையல்கள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டியா என்றபடி கண்களை ஓட்டினேன்.
சுரத்திலாமல் உம் என்றாள்.
சியர் அப் மா. அர்ச்சனா,பிரகாஷ் ரெண்டு பேரும் கீழே போங்கப்பா என்று அனுப்பிவிட்டு சுந்தரத்தை எட்டிப் பார்த்தேன்.
நீங்களும் குளீச்சுட்டு வாங்கோ. 10 மணிக்குக் கிளம்பி விடலாம் என்றேன். மனசில்லாமல் எழுந்தூ போனார். ஞாயிற்றுக்கிழமை நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தால் முடியாது போல இருக்கே என்ற முணுமுணுப்பு கேட்டது. அண்ணா இன்னிக்கு என் பிறந்த நாள் நீங்க சந்தோஷமா வரணும் என்றேன்.
Brasso print saree. |
6 comments:
வாவ் !இன்ரஸ்டிங்கா செல்கிறது !வல்லிம்மா
இதுதான் ப்ராசோ பிரிண்ட் ஸாரியா !!ரொம்ப அழகா இருக்கு ..ஸ்கை ப்ளூ கலரில் எங்கம்மா கட்டியிருந்த ஞாபகம் இருக்கு ..அந்த காலத்தில் இது famous என்று நினைக்கிறேன்
ஆமாம். என்னிடம் கூட பிங்க் கலரில் ஒன்று இருந்தது.
லவ்லி சாரி.அப்படியே வழுக்கிகொண்டே போகும். பின் போட்டுக் கொண்டால் கிழிந்துவிடும்.
நன்றி ஏஞ்சல்.நிறைய எழுத முடியவில்லை.
தொடர்கிறேன். அவரை எப்படிக் கையாண்டீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல். சிங்கத்தின் டைம்லி ஜோக் (பாட்டு) ரசிக்க வைத்தது.
இரண்டு பகுதிகளையும் ஒரு சேர படித்து முடித்தேன்..... மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் தொடர்கிறேன்....
ஸ்ரீராம் நான் மட்டும் இல்ல.சிங்கமும் சேர்ந்து
முயன்றோம். ஏதோ பித்துன்னு வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி வெங்கட். நிஜ வாழ்க்கை கதையை விட விசித்திரமானது.
படித்துக் கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.
Post a Comment