Follow by Email

Saturday, February 27, 2016

வந்ததே தலையலங்காரம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
1970s  hairstyle
ஆனந்தம்    1972   கோவையில் குடும்பம் இருந்த நேரம் . மாடியும் கீழுமாக  இருந்த வீட்டில் நாங்கள் இருந்தோம். மூன்று குழந்தைகளுக்கும் விளையாடும் இடம் நிறைய இருந்தது.

தண்ணீர் பிரச்சினையும் இருந்தது. சிறுவாணித்தண்ணீர்  இரு நாட்களுக்கு ஒரு முறை  அடிநிலைத் தொட்டியில் பத்து   லி ட்டர் வரை வரும். மற்றத் தேவைகளுக்கு   வண்டியில்
 ஒரு    பெரிய தரம் நிறைய  இருந்தால் 5 ரூபாய்க்குக் கிடைக்கும். ஏதோ விவசாய  கிணற்றிலிருந்து கொண்டு வருவார்கள்.

 காற்றும் அன்பான  அடுத்த வீட்டுக்காரர்களுமாகப் பொழுது கழிந்தது.
அப்போது அந்தக் காலனிக்கு ப  புதிதாக வட  நாட்டிலிருந்து
 ஒரு குடும்பம் வந்தது.  தமிழ் நாட்டிலிருந்து  மும்பை சென்று
இருந்தவர்கள் வேலைமாற்றத்தில் இங்கே வந்திருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரிடம் பழக ஆசைப்பட்டாலும் எங்கள் வீட்டு  மாடியில் இருந்த  உமாவுக்கு அவர்களை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. காரணம் அவள் கணவனும் அதே கம்பெனியில் அவருக்குக் கீழே  வேலைக்கு இருந்ததுதான்.

ரேவதி   அவள் இந்த மாதிரி இருக்கிறாள். அவர்கள் குழந்தைகள்   இது போல உடை உடுத்துகிறார்கள். பெரிய வண்டி வேற வைத்திருக்கிறார்கள். இந்தப் பெருமையில் எனக்கு வேண்டியே இருக்கவில்லை.கேட்டியா., என்று புலம்புவாள்.

உன்னைப் பாதிக்கவில்லை.அமைதியா இரு என்று சொன்னாலும் கேட்கவில்லை.
இத்தனைக்கும் பூஜை,புனஸ்காரம் என்றிருப்பவள். சிக்கனமாகக் குடும்பம் நடத்துபவள். இரண்டு குழந்தைகளும் வளர்ந்தவர்கள். செக்கச்செவேல் உடம்பு. மெட்டிகள் ,கொலுசுகள் என்று அவள் படிகளில் இறங்கி வரும்போது   ஏதோ  தரிசனம் போல் இருக்கும்.

அவள் கணவர் சுந்தரம்  கொஞ்சம் நாகரீகம் பார்ப்பவர். பல ஊர்களுக்கு  டூர்
போகிறவர்..விதவிதமான பொருட்களை வாங்கி வரும்போதுப் பெருமையாகக்
காண்பிப்பாள்  உமா,.
என்னைவிட 5.6 வயது அதிகமானவள் என்றாலும் குழந்தை போலப் பழகுவாள். ஒரு நாள்  இவர்கள் வீட்டிற்கு  வந்திருந்த  புது மானேஜர்  சந்திரன்,ராஜி  குடும்பம்
 உமா செய்த கேசரி,போண்டா எல்லாம் ரசித்துச் சாப்பிட்டார்கள்.

நானும் உதவிக்குப் போயிருந்தேன். எல்லாக் குழந்தைகளும் கலகலப்பாக
விளையாட இவள் மட்டும்  அமைதியற்று இருந்தாள் .


அந்த ராஜி புது நாகரீகமாகக் கொண்டை  எல்லாம் போட்டு, அப்போது வந்திருந்த
ப்ராசோ  ஜக்கார்ட்  புடவை  அணிந்து ,காதில் புதுவிதமான  அணி எல்லாம் போட்டுக் கொண்டிருந்தாள். சுந்தரம் வேறு அவளோடு அதிகமாகப் பேசி நிலைமையைச்  சரி செய்ய  முயன்று கொண்டிருந்தார்.

அவர்கள் கிளம்பிப் போனபோது வெடித்தது  பூகம்பம்.
நான் குழந்தைகளைக் கீழே   அழைத்து வந்துவிட்டேன்.

அடுத்த நாள்   வீட்டுக்காரர்கள் வேலைக்குக் கிளம்பிப   போன பிறகு
உமா கீழே இறங்கி  வரும் சப்தம் கேட்டதும்  சின்னவனைத்
தூக்கி வைத்துக் கொண்டேன்.
 கைகளில் நீல  நிற புது ப்ராஸ்ஸோ  புடவையும் ,அதை வாங்கின பில்லும் இருந்தது.


என்ன விஷயம்  பா. என்று கேட்டதும் அழ ஆரம்பித்தவிட்டால் .

பாரு இந்த பில்லை  என்று என்னிடம் காட்டினாள். இரண்டு புடவைகளுக்கான.. 300 ரூபாய்க்கான பில் அது.  என்ன  இதுக்கு என்றதும்  அவ நேத்திக்கு கட்டிண்டு
இருந்தது   இவர்  வாங்கிய புடவை.  எனக்கும் தங்கைக்குமாக\
 இரண்டு கேட்டிருந்தேன். ஒன்று எப்படி அவ கைக்குப் போச்சு என்றுதான் எனக்கு வருத்தம்.

இதோ நான் கிளம்பிண்டே இருக்கேன்.   கரூருக்கு. அப்பா அம்மாவை அழைச்சிண்டு வரப் போறேன்.
என்றவளைப் பயத்தோடு பார்த்தேன். ஏதாவது காரணம் இருக்கும் பா .
நீ சுந்தரத்தைச் சந்தேகப் படாதே என்றேன். மனசுக்குள் அந்த மனுஷனைத் திட்டியபடி .

சரியாப் பதில் சொல்லத் தெரியாத மனுஷனோட சங்காத்தமே வேண்டாம்  பொரிந்தாள்..

அவசரப் படாதே மா.இவர் வரட்டும் என்ன விஷயம்னு கேட்கிறேன் சந்திரன் இவருக்கும் நண்பன்  தானே, இங்கயே  இன்னிக்கு சாப்பிடு.தூங்கு.சாயந்திரம் இருவரையும் வைத்துக் கொண்டு பேசலாம்.
ம்க்கும்ம் இப்போ பியர்   பழக்கம் வேற வந்திருக்கு என்றால் . எனக்கு அடிவயிற்றைக் கலக்கியது.

இது எத்தனை நாள்  ஆக நடக்கிறது. என்றேன். அவர்கள் வந்ததிலிருந்துதான்.
தினம் அங்க போய் போட்டுண்டுதான் வரார்.

கிணறு பூதம் எல்லாம் எனக்குத் தோன்றியது .இந்த சுந்தரம   ஏன்
  இப்படி மாறினார்.என்னதான் பாஸ் என்றாலும்  அவரைப் பின் பற்றி இதெல்லாம்  செய்ய வேண்டாமே  என்ற வருத்தம் மேலிட்டது. சாயந்திரமும் வந்தது.  இவர் முதலில் வந்துவிட்டார். 7 மணி அளவில் சுந்தரமும் வந்தார்.
இவர்  பெரிய குரல் கொடுத்து உள்ளே வரச் சொன்னார்.
இங்கே   வாடா எல்லாரும் இங்கதான் இருக்கோம் என்றார்..

தயங்கியவாறு உள்ளே   வந்தவரைப் பார்க்காமல் உமா  உள்ளே இருந்த  என்னிடம் வந்து காப்பி வேணுமான்னு  கேளு  என்றாள் . நானும் போய் காப்பி சாப்பிடலாமா என்று கேட்க அவர் வேண்டாம்  என்று தலை மட்டும் அசைத்தார்.
ஏற்கனவே ஆகிட்டதோ என்னவோ   நீ   ஏன்  கேட்கிறாய் என்றபடி வெளியே வந்தவளைப் பார்த்து விழித்தார் சுந்தரம்.

கண்கள் சிவந்திருந்தன.......தொடரும்.
பிகு ....... நடந்த கதையில் பெயர்களும் இடமும்   வேறு.


12 comments:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன். சுவாரஸ்யமாய்ப் போகிறதே... யார் மேல் தவறு என்று தெரிந்து கொள்ள ஆவல்!அவர் பியர் சாப்பிடுவதற்குக் கூட இவள்தான் காரணம் என்று கூடச் சொல்லி விடுவார்! காரணம் வேண்டுமே!

:))))

வல்லிசிம்ஹன் said...

எமர்ஜென்சி வந்து ப்ராஹிபிஷன் வரும் வரை அவரோடு
உமா போராடி வெற்றியும் கண்டாள். ஸ்ரீராம். கதையே மாறிவிட்டது. உமா மகள் அர்ச்சனாவை இங்கே பார்த்தேன். இத்தனை வருடம் கழித்து அவள் எப்படித்தான் புரிந்து கொண்டாளோ.

திண்டுக்கல் தனபாலன் said...

ஓஹோ... சுவாரஸ்யம் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். கோவையில் அப்பொழுது உயர்தர மது எல்லாம்
கிடைக்கும். நசிந்திருக்க வேண்டிய குடும்பத்தை மருதமலை முருகன் தான்
காப்பாற்றினான்.

Angel said...

அந்த இடத்துக்கே என்னை கொண்டு போயிட்டீங்க வல்லிமா !!
அப்படியே உமா நடந்து வருவது கண்ணில் தோன்றியது !
பிரச்சினைக்கு காரணம் யாராயிருக்கும் !உமாவா ?சுந்தரமா ?ரேவதியா ? அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ..
கோயம்பத்தூர் சென்னையை விட ரொம்ப forward 70 கலீல் மும்பை மாதிரிதானாம் அம்மா சொல்வாங்க

// அப்போது வந்திருந்த
ப்ராசோ ஜக்கார்ட் புடவை அணிந்து//
இந்த புடவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா இருக்கு :))

'பரிவை' சே.குமார் said...

சுவராஸ்யமாச் செல்கிறது...
தொடர்கிறேன் அம்மா...

S.P.SENTHIL KUMAR said...

அருமையாக இருக்கிறது.
தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஹை ஏஞ்சல். என்னது ரேவதி காரணமா. யோவ்...நான் அங்க பார்வையாளர்.பா. ஹஹ்ஹா. தலைவலி மிரட்டுகிறது. அதனால் ஒத்திப் போட்டு இருக்கேன். இன்று எழுதிவிடுகிறேன்.
கோவையில் அஹமதாபாத்,பாம்பேயிலிருந்து நிறைய புதுரகத் துணிமணிகள் இறக்குமதி
நல்ல அருமையாகக் கிடைக்கும். காரணகர்த்தா மிடில் ஏஜ் க்ரைசிஸ்.+மது. உமா 32 அவர் 40.

வல்லிசிம்ஹன் said...

நன்றி குமார். பழைய மனாட்களில் நடந்தது. மறக்கவில்லை.
கோர்வையாக எழுதிகிறேனான்னும் தெரியவில்லை. பரவாயில்லை இது வடிகால் மட்டுமே. மீண்டும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் செந்தில்குமார். படித்துக் கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி.

Angel said...

ஹா ஹா :) டைப்பிங் எர்ரர் வல்லிம்மா ! ராஜி என டைப் பண்றதுக்கு ரேவதின்னு டைப்பிட்டேன் அது மட்டுமில்ல கோயம்பத்தூர் தர்மபுரி அங்கிருந்த ஒரு அங்கிள் குடும்பம் அவர் பேரு கூட நரசிம்மன் அங்கிள் அதெல்லாம் நினைச்சிட்டே டைப் பண்ணேன் ..

வல்லிசிம்ஹன் said...

mmmmmmm. sari sari .oththuk kondOm. ஹிஹிஹி .ஏஞ்சல். அடுத்த பதிவோடு முடித்துவிடுகிறேன்.