 |
எண்ணங்கள் இணைந்தால் |
 |
Add caption |

எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
 |
APRIL 1972 மலம்புழா வாஆஆ. குழந்தைகளுக்கு ஹோம்வொர்க் இருக்கு என்று ஆரம்பித்தாள். நான் அவள் கைகளைப் பிடித்து இன்னிக்கு ஒரு நாள் அந்தக் கவலையவிட்டு விட்டு சுந்தரத்தைக் கவனி.
கல்யாணமாகிப் பதினைந்து வருஷத்துக்குள் இதென்ன பெரிய மாற்றம்.
அவர் மனம் மாறாமல் நீ நிதானமாக இரு என்றேன்.
சரிஎன்றதும் ஏற்பாடுகள் விரைந்து நடந்தன.
சிங்கம் தன் நண்பரிடமிருந்து ஷெவி இம்பாலா ஒன்றை எடுத்துவந்தார். கப்பல் போல அந்த வண்டியைப் பார்த்ததும் குழந்தைகள் சந்தோஷக் கூச்சலிட்டன.
சந்திரன் ,ராஜி,குப்புசாமி அனைவரும் தாங்கள் பின்னால் வருவதாகச் சொல்ல எங்கள் ஒன்பது பேரை ஏற்றிக்கொண்டு படு ஜோராய் ,பாட்டுகள் ஒலிக்க வண்டி கிளம்பியது. கொஞ்ச தூரம் போனதும் ஏம்பா சிம்மு, நாம் ஒரு க்ரேட் CRATE பியர் வாங்கிக் கொண்டு போலாமே. இட் ஷுட் பி நைஸ் என்றார் சுந்தரம்.
நம்ம வீட்டு ராக்கம்மா வண்டியை விட்டு இறங்கிடுவாங்கப்பா,அதெல்லாம் நாம் தனியா வச்சுக்கலாம் என்றதும் உமா முகம் தெளிந்தது.
முன்சீட்டில் நாங்கள் இருவரும் சிரித்துக் கொண்டோம்.
அப்போது பிரபலமாக இருந்த என்னடி ராக்கம்மா,மற்றும்குழந்தைகளுக்குப் பிடித்த பாடல்களை
வண்டியில் இருந்த ரெகார்டரில் போட கைகளைக் கொட்டிப் பாடியபடி பயணம் தொடர்ந்தது,
உமா,சுந்தரத்துடன் ஏதோ பாடியபடி வந்தாள்.
ஹேனா போலோ போலோ பாடல் வந்ததும் ஒரே கூச்சல்.சுந்தரமும் சிரிப்பார் என்பதை அப்போதுதான் பார்த்தேன். ஏதோ பாரம் இறங்கியது போல இருந்தது.
பின்னால் அவர்கள் வருகிறார்களா என்று பார்த்தபோது அந்த நீல வண்டியைக் காணோம்.
சிறிது நேரத்தில் மலம்புழா அணைக்கட்டும் வந்தது. உடனே இறங்கிய
குழந்தைகள் அங்கே தோட்டத்தில் விளையாட ஆரம்பித்தார்கள்.
நாங்கள் நால்வரும் சந்திரன் குடும்பத்தை எதிர்பார்த்து வண்டியிலியே இருந்தோம்.
அவர்கள் வந்ததும் அவர்ஜகள் தாமததுக்கான காரணம் தெரிந்தது.
சந்திரனும் குப்புசாமியும் ஆளுக்கொரு க்ரேட் பியர் பாட்டிகளுடன் இறங்கினார்கள்.
ஒபவ்வொன்றிலும் ஆறு பாட்டில்கள் இருந்தன. இதுவரை சந்தோஷமாக இருந்த உமாவின் முகம் கறுத்தது.
ராஜியும் சந்திரனும் தரை விரிப்புகளை விரித்து ,நொறுக்குத் தீனிகளையும்,மற்ற மதுவகைகளையும் வைத்து இவரையும் சுந்தரத்தையும் அழைக்க., டேய் நீ நாளைக்கு தலைச்சேரி போகணும்னு சொன்னயே. டிலே இல்லாமல் நாம் திரும்ப வேண்டும் என்று அவனைத் தடுத்தார் சிங்கம்.
கம் ஆன். திஸ் வோண்ட் டு எனி ஹார்ம்.மிஸஸ் சுந்தரம் நீங்கள் யெஸ் சொல்லுங்கள் என்றார் சந்திரன்,
ராஜியும் சேர்ந்து கொண்டாள். பம்பாயில் வார இறுதி மிக சந்தோஷமாகக் கழிவது இந்த ட்ரிங்க்ஸ் மூலமாகத்தான் என்றாள்.
யூ பீப்பிள் காரி ஆன் ,நாங்கள் குழந்தைகளைப் பார்க்கப் போகிறோம் என்று நடையைக் கட்டினார் இவர். நானும் ராஜியும் தொடர்ந்தோம்.
நாளைக்கு மேனேஜிங்க் டிரக்டர் வருகிறார்ப்பா.
இந்த வாய்வாசனையோடு அவர் அருகே போக முடியாது என்று இவரும்
விளக்கினார்.
பேசியபடியே படகுத்துறைக்கு வந்துவிட்டோம். வரிசையில் நின்று
படகில் ஏறியதும் கும்மாளம் அதிகரைக்க ரோ ரோ ரோ அ போட்,மற்றும் பல பாடல்கள் குழந்தைகள் ரசித்துப் பாட நாங்களும் சேர்ந்து கொண்டோம். இப்ப மட்டும் நிலா இருந்தால் ஆஹா இன்ப நிலாவினிலே பாடலாம் என்ற உமாவைப் பார்த்து சுந்தரம் சிரித்தார், வளர்ந்துட்டியே தவிர ,குழந்தைதான் நீ என்று அவர் சொல்ல சிணுங்கிக் கொண்டாள்.
ஒரு பெரிய ரவுண்ட் முடிந்து கரையை நெருங்கிய போது இருள் கவியத்தொடங்கியது.
மற்றவர்கள் இருந்த இடத்தை நெருங்கிய போது அவர்களின் சத்தமான சிரிப்புச் சத்தம் கேட்டது. என்னப்பா , எல்லாம் ஓவரா என்றபடி இவரும் சுந்தரமும் அவர்களை நெருங்க. வி கான் கோ ஒன் மோர் ரவுண்ட். ராஜி ,அந்த பெரிசை எடுத்துக் கொண்டுவா என்றதும் அவளும் விரைந்தாள்,
சுந்தரம் முகம் அருவருப்பில் சுருங்குவதை நான் பார்த்தேன்.
இப்பவே மணி ஏழுப்பா. போய்ச் சேர்ந்து பசங்களுக்குச் சாப்பாடு வேற கொடுக்கணும் . நாம் போகலாம் என்றார்.
சந்திரன், கடிந்து கொள்ளாத குறையாக,இங்க இருக்கிற கோயம்பத்தூருக்குக் கவலைப் படுகிறாயே.
நான் ரொம்ப ஸ்டெடியா ஓட்டுவேன். என்றார்.
எங்கள் பக்கத்தில் வந்த ராஜி ,என்னைப் பார்த்து ஒரு கொண்டை போட்டு
சுந்தரத்தை உமா பக்கம் இழுத்துவிட்டாயே என்று சிரித்தாள்.
எனக்குப் பிடிக்கவில்லை. அவள் ஏற்கனவே அழகிதானே. இது வேறும் மேல் அலங்காரம். மனசு சரியாக இருந்தால் தம்பதிகளுக்குள்,சலிப்பு வரக் காரணமே இல்லையே என்றேன்.
மெட்ராஸ் வாசிகளின் மனப்போக்கே வினோதம் என்று அந்த இடத்தைவிட்டுக் கணவனை நோக்கி நகர்ந்தாள்.
சுந்தரமும் இவரும் கிளம்பினார்கள்,.
சட்டென்று எதோ தோன்ற ஹேய் சந்திரா இந்த நிலமையில் வண்டி ஓட்டவேண்டாம். நான் உன் வேனை எடுக்கிறேன் வா,. சுந்தரம் இம்பாலாவைக் கொண்டுவரட்டும் என்று கேட்டார். நைட் இஸ் ஸ்டில் யங்க் ,ஐ டோண்ட் நோ ஒய் யு ஆர் மேகிங்க் சச் ஃபஸ் என்றவன் தள்ளாடியபடியே எழுந்தான். இப்பொழுது ராஜியும் குழந்தைகளும் பயப்படுவது கண்கூடாகத் தெரிந்தது.
ராஜி ஒரு பக்கம் சந்திரனைப் பிடிக்க,சுந்தரம் குப்புசாமியைப் பிடித்துக் கொண்டு அவர்கள் வண்டியில் ஏற உதவினார்கள்.
உமா ,கோமதிக்கு எழுதௌகிறேன் பாருங்கள் குப்புசாமி. இதுதான் நீங்கள் வேலைபார்க்கும் அழகா. பாவம் எங்க ஊர்ப் பெண்கள் ஒண்ணும் தெரியாதவர்கள் என்று நினைக்காதீர்கள்.
பிழைக்கத் தெரிந்தவர்கள் தான் நாங்களும் என்று கொட்டித் தீர்த்தாள்.
கோமதி,குப்புசாமியின் மனைவி. இவளுக்கு அவளைத் தெரியும் என்பதே அதிசயம்.
சைடில் சுந்தரத்துக்கும் வார்னிங்க் கொடுக்கிறாளோ என்ற சந்தேகத்தில் அவள் முகத்தைப் பார்த்தேன். சின்னச் சிரிப்போடு குழந்தைகளை அழைத்தாள்.
எல்லோரும் கிளம்பிக் கோவை வந்து சேர்ந்தோம்.
சிங்கம் ராஜி சந்திரன் குப்புசாமியை அவரவர் இடத்தில் இறக்கிவிட்டு வந்து சேரும் வரை எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.
நான் தான் ஓட்டுகிறேன் என்ற தைரியத்தில் அவன் மிச்சமிருந்ததையும் குடித்துவிட்டான்மா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உமா வரும் சப்தம் கேட்டரது.
கையில் ஒரு பெரிய தட்டில் பத்து பதினைந்து தோசைகள் வார்த்து எடுத்து வந்திருந்தாள்.
இந்த ஞாயிறு இப்படியாச்சு. அடுத்த வாரம் எப்படியோ என்றாள் என்னைப் பார்த்து.
இல்லை மிஸஸ் சுந்தரம். அவனைப் பற்றிக் கவலை வேண்டாம்.
அந்தப் புடவை கூட அவனக வாங்கவில்லை.
சந்திரன் தான் தன் மனைவிக்காக ஒரு புடவையை எடுத்துகொண்டிருக்கிறான். பில் இவன் தலயில்.
இனி மனம் விட்டுப் பேசுங்கள். அவன் மேலிருக்கும் நம்பிக்கையை விடவேண்டாம்.
அதற்குப் பின் எல்லாம் சுமுகமானது. இரண்டு விஷயங்கள் காரணம்.
ஒன்று சந்திரன் குடும்பம் மீண்டும் பம்பாய் போனது.
இரண்டு சுந்தரத்துக்கு மஸ்கட்டில் வேலை கிடைத்தது.
பிறகென்ன ராம் நகர் ஆஞ்சனேயர் வடை மாலைகள் சூட்டிக் கொண்டார்.
சுபம்,.
|
4 comments:
நைட் இஸ் ஸ்டில் யங் .
நைட் கழிந்து மார்னிங் வந்தாலும்
நைட்டில் நடந்தது மார்னிங்கிலும்
நினைவுக்கு வருகிறது. நிம்மதியைத் தொலைக்கிறது.
கடந்த காலமும் நைட் தான்.
கனவு நினைவு இருப்பது போல .
யாதோன் கி பாராத் .
சுப்பு தாத்தா.
உண்மைதான் அண்ணா. ஆனால், இப்ப கதையையே காணொம். பெஸ்ட் ஜோக். நன்றி மா.
வல்லிம்மா ரெண்டு படம் மட்டும்தான் இருக்கு ..கதை எங்கே ??
Kathai kaanom daa. namba mudiyavillai. thamizh manaththil kooda inaiththEn dear.
miindum ezhuthaNum. I toiled two hours to write that post kanna.>(((
Post a Comment