Wednesday, March 02, 2016

Independance

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்




ஒருவர்தான் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வைத்தவர்.
அவருக்கு சுதந்திரம் பிடிக்கும். அதனால் என் சுதந்திரத்தை மதித்தார்.

மற்றவர்கள் பாதுகாப்பு என்ற  அன்பின்
வட்டத்தில்   என்னை வைத்துவிட்டார்கள்.

நான் அவர்கள் இஷ்டம் போல்
இருக்க விட்ட நாட்கள்
நினைவுக்கு வருகிறது. தடை விதித்ததில்லை.

அவர்கள் பொறுப்புகளைச் சுமந்து
பாதிப்புகளையும் தாங்கிக் கொண்டார்கள்.
எங்களுக்கும் ஆதரவு தந்தார்கள்.

இப்பவும் சுதந்திரம் வேண்டும்.
தங்கக் கூடு பாதுகாப்பு தான்.
என் மாமரமும் மகிழமரமும்,
பாரிஜாதப் பூக்களும் ,செம்பருத்தியும் இல்லையே .

ஒரு நன்றி இல்லாத   அம்மாவின் புலம்பல்.

Tuesday, March 01, 2016

தலை தப்பியது....3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஒரு வழியாக உமாவைத் தயார் செய்து. கொண்டையலங்காரத்துடன் அவளைப் பார்த்தால் எனக்கே பிரமிப்பாக இருந்தது. இத்தனை அழகையும்  எப்படி சின்னாளப்பட்டிப் புடவையில்

அடக்கி   வாசிக்கிறாய் என்று கேட்டேன்.
சு போடி. என்று அலுத்துக் கொண்டாள்.
கொஞ்சம் சிரி.முகத்தை  இனிமையா வச்சுக்கோ.
 ராஜியோடு கலகலப்பா பேசு. சுந்தரம் பக்கத்தை விட்டு
நகராதே. இன்னும் இது போல 24 வயதுப் பெரிய மனுஷி
32  வயது அக்காவுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அன்றைக்கு இன்னோரு விருந்தாளியும் வந்தார். அவரும் ஒரு மார்க்கெடிங்க்  மேனஜர். பெயர் குப்புசாமி. மஹீந்த்ரா அண்ட் மஹீந்த்ராவிலிருந்து வந்திருந்தார்.
எல்லோரும் அவரவர்  வண்டியில் கிளம்பினோம்.
இவர் அப்போ ஒரு புல்லட் வண்டி வைத்திருந்தார்.
குழந்தைகள் மூவரும் + நாங்கள் ...ஐந்து பேரும் அதில் போன நாட்கள் பசுமை நிறைந்தவை.
சுந்தரம் வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்ய அலுங்காமல் நலுங்காம்ல் தேவதை போல உமா ஏறிக் கொண்டாள். பெண் அம்மா முன்னாலும் ,பிள்ளை அப்பாவுக்கு முன்னால் நின்று கொண்டும்   கௌரிஷங்கர்   ஹோட்டலுக்கு விரைந்தோம்.
எங்கள்   பின்னால் பெரிய வேனில் சந்திரன் குடும்பமும் குப்புசாமியும் வந்தார்கள்.
      சிங்கம் முதலில் போய்  14  நபர்கள் உட்கார இடம் சொல்லிவிட்டு வந்தார்..

 சின்னவனை நான் மடியில் வைத்துக் கொள்ள எனகள் இருவருக்கு நடுவில் பெண்ணும்,பையனும் அமர்ந்தனர்.
எதிர்புறம் சுந்தரம் உமா அமர இருபக்கமும் அவர்கள் பெண்ணும் பையனும் உட்கார் மற்ற இடங்கள் சந்திரன் குப்புசாமி ராஜி அவள் குழந்தைகள் அனைவரும் உட்கார
மெனு பார்த்து ஆர்டர் செய்யத் தொடங்கினோம். எல்லோரையும் கவர்ந்தது உமாவின் கச்சிதமான அழகும் கம்பீரமும் தான்.
சந்திரன்,முதலில் காம்ப்ளிமெண்ட் கொடுத்தார். குப்புசாமி பின்பாட்டு பாட சுந்தரம்
கண்டு கொள்ளவில்லை.
சிங்கம் டேய் ,என்னடா கண்ணைத் திறந்து பாரேண்டா. என் பொண்டாட்டி எத்தனை கஷ்டப் பட்டு
இந்த  ஹேர்டூ  செய்து இருக்கிறாள்.
என்று சொல்லவும்
தாங்க் யூ ரேவதி என்று சாப்பிட ஆரம்பித்தார்.
 எல்லோரும் அப்போது வெளிவந்திருந்த ஆராதனா,மெக்கனாஸ் கோல்ட்
படங்கள் பற்றிப் பேச ஆரம்பிததும் கொஞ்சம் கலகலப்பு களை கூடியது.
 போகிறவர் வருகிறவர்கள் அபனைவரும் உமாவை இரண்டு தடவை
பார்த்துவிட்டுப் போனார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது.
   சாப்பாடும் முடிவுக்கு வந்தது.
பீடாவெல்லாம் போட்டுக் கொண்டதும் நான் சின்னவனைச் சுத்தம் செய்ய
 வெளியே வந்தேன். பின்னால் யாரோ வருவதைப் பார்த்துத் திரும்பினேன். ராஜி
விரைவாக வந்தாள். ரேவதி நீயா இத்தனை அழகாக் கொண்டை போட்டுவிட்டாய் என்று கேட்டதும், நானும் ஃபெமினாவில்  வந்த படங்களைப் பார்த்துப் போட்டுப் பழகினேன். சுலபம் தானே என்றேன்.
சுந்தரத்துக்கு உமா பட்டிக்காடாக  இருப்பதாக  நினைப்பு என்று சிரித்தாள்.
இல்லையே அடுத்த தடவை நீங்கள் அவளுடைய  நல்ல குணங்களை எடுத்து சொல்லுங்கள். பெண்களுக்குப் பெண்கள்  தானே  சப்போர்ட் என்றேன்.
    சொன்னால் போச்சு. நாமும் கணவர்களை  சகித்து வழிக்குக் கொண்டு வரணும் என்றாள்..
 எனக்கு அது ஏற்கவில்லை. போலாமா என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு
நகர  மற்ற எல்லோரும் வெளியே  வருவதைப் பார்த்தோம்.
  உமாஎன்னிடம் வரவும், இவரும் வந்தார்,ரேவ்  நாம் எல்லோரும்  மலம்புழா போய் வரலாமா
என்று  கேட்டபடி  வந்தார்.
Add caption

Sunday, February 28, 2016

தலை அலங்காரம் புறப்பட்டதே...2


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
           அன்றிரவு கொஞ்சம் சமாதானத்தோடு முடிந்தது. புடவை சமாசாரத்தைக் காலையில் கேட்கலாம். இப்ப அவரை சமாதானத்தோடு தூங்க வை என்று அனுப்பினேன்.

சிங்கத்தோடு குறும்பு,   ...நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம். இன்னிக்கு ராத்திரிக்கு.... என்றபடி   குளிக்கப் போனார்.

ஓகே. அடுத்த நாள் நானும் சின்னவனும் மாடியை  நோக்கிப் படையெடுத்தோம்.
அப்போதுதான் பூஜையை முடித்து வெளியே வந்த உமா என்னைப் பார்த்துக் கையிலிருந்த கல்கண்டு,தேன் எல்லாம் கொடுத்தாள்.
விஷயத்தைச் சொன்னேன். சரி உன்னிஷ்டம். இது என் வழியில் நடக்கவில்லை என்றால் உன் வழியில் போகலாம் என்றாள். மூவரும் பஜார் அதாவது ஆர்.எஸ் புரம் சென்று.
  மேக் அப் கிட்,மூன்று ஃப்ரென்ச் ரோல் பன்ஸ், எல்லாம் வாங்கி வந்தோம்.
மை க்யா கரூன் ராம் முஜெ புட்டா மில்கயா பாடிக்கொண்டே அவளுக்கு
அந்தக் கொண்டை போட்டுப் பழகினேன்.
உண்மையிலியே அழகாகத் தெரிந்தாள்.

   ஏய் இது விழாமல்  இருக்குமா என்று சந்தேகப் பட்டாள். ஒண்ணும் ஆகாது 12 ஹேர்பின்
 போட்டு  அழுத்திவைக்கப் போகிறேன். நீ காஷுவலா இரு என்றபடி என் வேலையைப் பார்க்கப் போனென்.
ஞாயிறும் வந்தது.  குழந்தைகளுக்கு  வெளியே போகும் உத்சாகம்.  மாடிக்குப் போனேன். சுந்தரம் எழுந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கையசைத்துவிட்டு உமாவைத் தேடினேன்.

அவளும் தெளிவோடு குழந்தைகளைத் தயார் செய்து கொண்டிருந்தாள்.
ரெடியா, நீலப் புடவை, நீல மாலை,நீலக் காதணி, நீல வளையல்கள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டியா என்றபடி கண்களை ஓட்டினேன்.
சுரத்திலாமல் உம் என்றாள்.

சியர் அப் மா. அர்ச்சனா,பிரகாஷ் ரெண்டு பேரும் கீழே  போங்கப்பா என்று அனுப்பிவிட்டு சுந்தரத்தை எட்டிப் பார்த்தேன்.
 நீங்களும் குளீச்சுட்டு வாங்கோ.  10 மணிக்குக் கிளம்பி விடலாம் என்றேன். மனசில்லாமல் எழுந்தூ  போனார். ஞாயிற்றுக்கிழமை நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தால் முடியாது போல இருக்கே    என்ற முணுமுணுப்பு கேட்டது. அண்ணா இன்னிக்கு என் பிறந்த நாள் நீங்க சந்தோஷமா வரணும் என்றேன்.
Brasso  print saree.

Saturday, February 27, 2016

வந்ததே தலையலங்காரம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
1970s  hairstyle
ஆனந்தம்    1972   கோவையில் குடும்பம் இருந்த நேரம் . மாடியும் கீழுமாக  இருந்த வீட்டில் நாங்கள் இருந்தோம். மூன்று குழந்தைகளுக்கும் விளையாடும் இடம் நிறைய இருந்தது.

தண்ணீர் பிரச்சினையும் இருந்தது. சிறுவாணித்தண்ணீர்  இரு நாட்களுக்கு ஒரு முறை  அடிநிலைத் தொட்டியில் பத்து   லி ட்டர் வரை வரும். மற்றத் தேவைகளுக்கு   வண்டியில்
 ஒரு    பெரிய தரம் நிறைய  இருந்தால் 5 ரூபாய்க்குக் கிடைக்கும். ஏதோ விவசாய  கிணற்றிலிருந்து கொண்டு வருவார்கள்.

 காற்றும் அன்பான  அடுத்த வீட்டுக்காரர்களுமாகப் பொழுது கழிந்தது.
அப்போது அந்தக் காலனிக்கு ப  புதிதாக வட  நாட்டிலிருந்து
 ஒரு குடும்பம் வந்தது.  தமிழ் நாட்டிலிருந்து  மும்பை சென்று
இருந்தவர்கள் வேலைமாற்றத்தில் இங்கே வந்திருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரிடம் பழக ஆசைப்பட்டாலும் எங்கள் வீட்டு  மாடியில் இருந்த  உமாவுக்கு அவர்களை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. காரணம் அவள் கணவனும் அதே கம்பெனியில் அவருக்குக் கீழே  வேலைக்கு இருந்ததுதான்.

ரேவதி   அவள் இந்த மாதிரி இருக்கிறாள். அவர்கள் குழந்தைகள்   இது போல உடை உடுத்துகிறார்கள். பெரிய வண்டி வேற வைத்திருக்கிறார்கள். இந்தப் பெருமையில் எனக்கு வேண்டியே இருக்கவில்லை.கேட்டியா., என்று புலம்புவாள்.

உன்னைப் பாதிக்கவில்லை.அமைதியா இரு என்று சொன்னாலும் கேட்கவில்லை.
இத்தனைக்கும் பூஜை,புனஸ்காரம் என்றிருப்பவள். சிக்கனமாகக் குடும்பம் நடத்துபவள். இரண்டு குழந்தைகளும் வளர்ந்தவர்கள். செக்கச்செவேல் உடம்பு. மெட்டிகள் ,கொலுசுகள் என்று அவள் படிகளில் இறங்கி வரும்போது   ஏதோ  தரிசனம் போல் இருக்கும்.

அவள் கணவர் சுந்தரம்  கொஞ்சம் நாகரீகம் பார்ப்பவர். பல ஊர்களுக்கு  டூர்
போகிறவர்..விதவிதமான பொருட்களை வாங்கி வரும்போதுப் பெருமையாகக்
காண்பிப்பாள்  உமா,.
என்னைவிட 5.6 வயது அதிகமானவள் என்றாலும் குழந்தை போலப் பழகுவாள். ஒரு நாள்  இவர்கள் வீட்டிற்கு  வந்திருந்த  புது மானேஜர்  சந்திரன்,ராஜி  குடும்பம்
 உமா செய்த கேசரி,போண்டா எல்லாம் ரசித்துச் சாப்பிட்டார்கள்.

நானும் உதவிக்குப் போயிருந்தேன். எல்லாக் குழந்தைகளும் கலகலப்பாக
விளையாட இவள் மட்டும்  அமைதியற்று இருந்தாள் .


அந்த ராஜி புது நாகரீகமாகக் கொண்டை  எல்லாம் போட்டு, அப்போது வந்திருந்த
ப்ராசோ  ஜக்கார்ட்  புடவை  அணிந்து ,காதில் புதுவிதமான  அணி எல்லாம் போட்டுக் கொண்டிருந்தாள். சுந்தரம் வேறு அவளோடு அதிகமாகப் பேசி நிலைமையைச்  சரி செய்ய  முயன்று கொண்டிருந்தார்.

அவர்கள் கிளம்பிப் போனபோது வெடித்தது  பூகம்பம்.
நான் குழந்தைகளைக் கீழே   அழைத்து வந்துவிட்டேன்.

அடுத்த நாள்   வீட்டுக்காரர்கள் வேலைக்குக் கிளம்பிப   போன பிறகு
உமா கீழே இறங்கி  வரும் சப்தம் கேட்டதும்  சின்னவனைத்
தூக்கி வைத்துக் கொண்டேன்.
 கைகளில் நீல  நிற புது ப்ராஸ்ஸோ  புடவையும் ,அதை வாங்கின பில்லும் இருந்தது.


என்ன விஷயம்  பா. என்று கேட்டதும் அழ ஆரம்பித்தவிட்டால் .

பாரு இந்த பில்லை  என்று என்னிடம் காட்டினாள். இரண்டு புடவைகளுக்கான.. 300 ரூபாய்க்கான பில் அது.  என்ன  இதுக்கு என்றதும்  அவ நேத்திக்கு கட்டிண்டு
இருந்தது   இவர்  வாங்கிய புடவை.  எனக்கும் தங்கைக்குமாக\
 இரண்டு கேட்டிருந்தேன். ஒன்று எப்படி அவ கைக்குப் போச்சு என்றுதான் எனக்கு வருத்தம்.

இதோ நான் கிளம்பிண்டே இருக்கேன்.   கரூருக்கு. அப்பா அம்மாவை அழைச்சிண்டு வரப் போறேன்.
என்றவளைப் பயத்தோடு பார்த்தேன். ஏதாவது காரணம் இருக்கும் பா .
நீ சுந்தரத்தைச் சந்தேகப் படாதே என்றேன். மனசுக்குள் அந்த மனுஷனைத் திட்டியபடி .

சரியாப் பதில் சொல்லத் தெரியாத மனுஷனோட சங்காத்தமே வேண்டாம்  பொரிந்தாள்..

அவசரப் படாதே மா.இவர் வரட்டும் என்ன விஷயம்னு கேட்கிறேன் சந்திரன் இவருக்கும் நண்பன்  தானே, இங்கயே  இன்னிக்கு சாப்பிடு.தூங்கு.சாயந்திரம் இருவரையும் வைத்துக் கொண்டு பேசலாம்.
ம்க்கும்ம் இப்போ பியர்   பழக்கம் வேற வந்திருக்கு என்றால் . எனக்கு அடிவயிற்றைக் கலக்கியது.

இது எத்தனை நாள்  ஆக நடக்கிறது. என்றேன். அவர்கள் வந்ததிலிருந்துதான்.
தினம் அங்க போய் போட்டுண்டுதான் வரார்.

கிணறு பூதம் எல்லாம் எனக்குத் தோன்றியது .இந்த சுந்தரம   ஏன்
  இப்படி மாறினார்.என்னதான் பாஸ் என்றாலும்  அவரைப் பின் பற்றி இதெல்லாம்  செய்ய வேண்டாமே  என்ற வருத்தம் மேலிட்டது. சாயந்திரமும் வந்தது.  இவர் முதலில் வந்துவிட்டார். 7 மணி அளவில் சுந்தரமும் வந்தார்.
இவர்  பெரிய குரல் கொடுத்து உள்ளே வரச் சொன்னார்.
இங்கே   வாடா எல்லாரும் இங்கதான் இருக்கோம் என்றார்..

தயங்கியவாறு உள்ளே   வந்தவரைப் பார்க்காமல் உமா  உள்ளே இருந்த  என்னிடம் வந்து காப்பி வேணுமான்னு  கேளு  என்றாள் . நானும் போய் காப்பி சாப்பிடலாமா என்று கேட்க அவர் வேண்டாம்  என்று தலை மட்டும் அசைத்தார்.
ஏற்கனவே ஆகிட்டதோ என்னவோ   நீ   ஏன்  கேட்கிறாய் என்றபடி வெளியே வந்தவளைப் பார்த்து விழித்தார் சுந்தரம்.

கண்கள் சிவந்திருந்தன.......தொடரும்.
பிகு ....... நடந்த கதையில் பெயர்களும் இடமும்   வேறு.


Monday, February 01, 2016

1966 லிருந்து 2016 வரை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 வணக்கத்துக்குரிய மாமியார்  மாமனார் 


ஜனவரி 31ஆம் தேதி புடவைகள் வாங்க நாள்.
புரசவாக்கத்துக்கும்  மணிசங்கர் புடவைக் கடைக்கும்
இரண்டு  ட்ரிப் போய் பட்டுப் புடவைகளும், ரேவதி ஸ்டோர்ஸில்
கடாவ் புடைவைகளும் வாங்கி  பெட்டிகளில் அடுக்கப்பட்டன,.

ஸ்ரீராம் நாயுடு  அழகாக  எல்லா  ஜாக்கெட்டுகளையும் தைத்துக் கொடுத்தார்.
 புது செருப்பு வாங்கியாச்சு.
வாசலில் வாழை  மரங்கள் மாமா கொண்டுவந்து கட்டிவிட்டார்.

 வைரத்தோடுகள் ,தயார் என்று தொலைபேசி வந்தது. பாரிஜாதம் போய்
 காதில்  |வலிக்க வலிக்கப்} போட்டுக் கொண்டு திரும்பி வந்தோம்.
அடுத்த நாள்  எங்களுக்கு  அங்கே சாப்பாடு.
கல்யாண அழைப்பிதழை  அங்கே கொடுத்துவிட்டு
ஏழு  நாத்தனார்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு

  அந்த வீட்டைப் பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சித்தேன்.
ஒரே சிரிப்பும் உல்லாசமும் தான்.
 இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் ஒரு   இரண்டுங்கெட்டான் நிலை.

அத்தை டில்லியிலிருந்து வந்துவிட்டார் அழகாக மருதாணி வைக்க.
கங்காதீஸ்வரர்  கோவில் கடையில் கண்ணாடி வளையல்களும்,
நான் மிக விரும்பும் குடை ஜிமிக்கிகளும்  வாங்கிக் கொண்டேன்.
இரவெல்லாம் பேச்சு பேச்சுதான்.
   மாமாக்கள் மாமிகள் அனைவருக்கும் நான் புடவை தடுக்காமல்
மேடை ஏறி இறங்கவேணுமே என்கிற கவலை.


பிப்ரவரி 3 ஆம் தேதி  பந்தக்கால்  நட்டு சத்திரத்தை அடைந்தோம்.
சாயந்திரம்  நிச்சயதார்த்தம்  விசேஷமாக நடந்தது.
 அடுத்த நாள் 4 ஆம் தேதி  காலை இரண்டுமணிக்கே நாதஸ்வரம்  மேளம் என்னை எழுப்பின.

கால்களுக்கு நலங்கு இட்டு  புனித ஸ்னானம் செய்வித்தார்கள்.
ஊஞ்சல் புடவையாக  ஸ்கார்லெட்  புடவை, மாலையுடன்
நான் தயாராகவும் மாப்பிள்ளை வீட்டார் வரவும் சரியாக இருந்தது.
 நான் காப்பி கூடக் குடிக்கவில்லை என்பதே எல்லோரும் மறந்துவிட்டனர்.

சரியாக  காலை 9 மணி10  நிமிடத்திற்கு சிங்கம் என்னை மனைவியாக்கிக்
கொண்டார்.
அதன் பிறகு  நலங்கு அது இது என்று 12 மணி வரை புகை மண்டலத்தில் இருவரும்
அல்லாடிய பிறகு .ஒருவழியாகத் திருமணம்  பூர்த்தியானது.

அருமையான  மனிதரின் மனைவி என்ற பெருமையுடன் புகுந்த வீட்டுப் பிரவேசமும்
நடந்தேறியது.  இதோ 50
வருடங்களும் ஓடிவிட்டன. அனைவருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ வணக்கம்.


Thursday, January 21, 2016

ஒரு குளிர்காலச் சிந்தனைகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
புத்தாண்டு வந்து ,பொங்கலும் வந்துவிட்டுப்  போகிறது..
எத்தனையோ  எழுதி இருக்கலாம்.  தினம் தினம்   வேறு வேறு நிகழ்வுகள். நடக்கும் வேகத்தில் பதியத்தான்   வலு இல்லை.
 மகிழ்ச்சியான புத்தாண்டு நிகழ்வுகள் தோழமைகள் வருகைக்கு நடுவே ,  ஒருவர்  அதிக  மது மயக்கத்தில்   நான் எப்போதும் ரசிக்கும் ஏரிக்குள்   தன வண்டியைச் செலுத்திவிட்டார்.
 நாலைந்து அடிகள் இருக்கும் இந்த ஏரி  என்று நான் நினைத்திருந்தது 15 அடிகள் ஆழமாம்.

இனி அது வழியாக யாரும் நடை பழக    நாட்கள் ஆகும்.
இப்போது அடிக்கும் பனி யில் ஏரி உறைந்தே விட்டது.  படங்களில் பார்ப்பது போலக் குழந்தைகள் வந்து பனிமழையில் நனைந்து ஒருவர் மேல் பனிப் பந்தை விட்டெறிந்து விளையாடுவதில்லை. வீட்டுக்குள்ளேயே தோழர்களை வரவழைத்து  விளையாடுகின்றனர்.
மீண்டும் பார்க்கலாம்.

Friday, January 01, 2016

இனிய புத்தாண்டு 2016க்கான வாழ்த்துகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பசுமையான நினைவுகள் மகிழ்விக்க,  புது நினைவுகளை வரவேற்று
இன்று எல்லோரையும் வாழ்த்தி  புது வருடத்தை ஆரம்பிக்கிறேன்.

தொலைந்த கனவுகளைப் பத்திரப் படுத்தி. எதிரில் இருக்கும் இளம் தளிர்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் இனிய 2016க்கான   ஆசிகளும்  வாழ்த்துகளும்.

ஶ்ரீனிவாசா கோவிந்தா ஶ்ரீ வேங்கடேசா கோவிந்தா.

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக நலமாக வாழ வேண்டும். பெருமாளுக்கு நாராயணன், வெங்கடேஷ்வரா, பாலாஜி, ஸ்ரீஹரி என எத்தனையோ திருநாமங்கள் இருந்தாலும் ...