எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
புத்தாண்டு வந்து ,பொங்கலும் வந்துவிட்டுப் போகிறது.. எத்தனையோ எழுதி இருக்கலாம். தினம் தினம் வேறு வேறு நிகழ்வுகள். நடக்கும் வேகத்தில் பதியத்தான் வலு இல்லை. மகிழ்ச்சியான புத்தாண்டு நிகழ்வுகள் தோழமைகள் வருகைக்கு நடுவே , ஒருவர் அதிக மது மயக்கத்தில் நான் எப்போதும் ரசிக்கும் ஏரிக்குள் தன வண்டியைச் செலுத்திவிட்டார். நாலைந்து அடிகள் இருக்கும் இந்த ஏரி என்று நான் நினைத்திருந்தது 15 அடிகள் ஆழமாம்.
இனி அது வழியாக யாரும் நடை பழக நாட்கள் ஆகும். இப்போது அடிக்கும் பனி யில் ஏரி உறைந்தே விட்டது. படங்களில் பார்ப்பது போலக் குழந்தைகள் வந்து பனிமழையில் நனைந்து ஒருவர் மேல் பனிப் பந்தை விட்டெறிந்து விளையாடுவதில்லை. வீட்டுக்குள்ளேயே தோழர்களை வரவழைத்து விளையாடுகின்றனர். மீண்டும் பார்க்கலாம்.
|
11 comments:
மது அரக்கனின் விளையாட்டு அங்கும் இருக்கிறது போலும்! நலமா அம்மா?
தொடருங்கள் அம்மா...
மது எங்குதானில்லை
நிறையவே இருக்கிறது ஸ்ரீராம். மாப்ப்ள்ளையும் பெண்ணும் அவ்வளவு அதி ஜாக்கிரதையாக் ஓட்டுவார்கள் தம்தம் வண்டிகளை. நம் இந்தியப் பெண் ஒன்று 18 வயது இருக்கும். அது வண்டியை சாலையின் இரு பக்கத்திலும் ஓட்டி எங்களை முன்னேற விடாமல் தடுத்தாள் அருகே சென்ற பிறகே தெரிந்தது. போதையில் இருந்தது. எப்படியோ தாண்டி வந்துவிட்டோம். அந்தப் பெண்ணின் பெற்றோர்களை நினைத்தே வருத்தனமாக இருந்தது. I am fine ma.
மது தரும் கலக்கம்....
எங்கும் இருக்கிறதே....
உங்களுக்கும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள் வல்லிம்மா....
படிக்கவே வருத்தமாக இருக்கிறது. கவனமாகச் செல்லுங்கள்.
கட்டாயம் தொடரலாம். இந்தக் குளிர் உடலைக் குறுக்கிவிடுகிறது.
மிக நன்றி மா. தனபாலன்.
ஆமாம் ஜெயக்குமார். நலமாப்பா. தொலைக் காட்சியைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அவ்வளவு வயலன்ஸ்.
அன்பு வெங்கட். மிக நன்றி மா. ஆதி,நீங்கள் ,குழந்தை ரோஷ்ணி அனைவரும் சுகமே இருக்க என் ஆசிகள்.
நான் வெளியே செல்வதில்லை கீதா.
கீழே பேஸ்மெண்டில் தான் நடை எல்லாம்.. நலமாக இருங்கள்.
வேதனை...
கவனமாக பயணம் செய்யுங்கள்.
Post a Comment