Saturday, March 07, 2015

மகளிர் தினம் சிறக்க வாழ்த்துகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
வாழ்வில்  உதயம் அஸ்தமனம்  மலர்தல் விழுதல்   எல்லாம் உண்டுதான். இருக்கும் வரை தன்னைக் காத்துக் கொள்ளும் சக்தி எந்தப் பெண்ணுக்கும் வேண்டும். அது சொல்லால் அடித்தாலும் , மறைமுகமாகத் தாக்கினாலும் நான் வீழ மாட்டேன் என்ற உறுதி எப்போது வருகிறதோ அப்போதுதான்  நாம் மங்கையர் தினத்தை உரிமையோடு கொண்டாட  முடியும்.
 நிலவு எனச் சொல்லி,மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேணும் அம்மா என்றெல்லாம் முழங்குவார்கள். அடுத்த நாள் எழுந்து அலையப் போகிறவளும் அதே மங்கைதான்.     நல்ல மனிதர்களை அடையாளத்தில் நிறுத்திக் கொண்டு அல்லாதவர்களைப் புறந்தள்ளவும் உறுதி வேண்டும்.
பயப்படவேண்டிய இடத்தில் பயந்து புத்திசாலித்தனமாக இருக்கப் பழக வேண்டும் பெண்ணுக்குப் பெண்ணே சில இடங்களில் எதிரி. சாமர்த்தியம் இருந்தால மட்டுமே  பிழைத்துவருவது உறுதி.

எதிர் காலத்துக்குச் சேமியுங்கள். உடல் நலனைப் பேணுங்கள் . இணை  நலத்தையும் காத்து மனை நலத்தையும் காப்பதற்கு வேண்டிய சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள் .
இதெல்லாம்  நான் எனக்கு நேற்று இரவு சொல்லிக் கொண்ட
சுய உறுதிச் சிந்தனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
வாழ்க மங்கையர் நலம்.

Thursday, March 05, 2015

சிங்கம் 75.....




Add caption
சிங்கத்துக்கு மிகப் பிடித்த   கள்ளிமரம்  அரிசோனா யு எஸ்   எ .
இந்த  மரம்  மாதிரியே   பலம் வாய்ந்த மனிதர். உயர்ந்து உள்ளம். எந்த விதக் கடுமையான சந்தர்ப்பத்திலும் உறுதி தளராதவர்.  அவர் எனக்குக் கணவராகக் கிடைத்தது என் பாக்கியம். அவர் போலவே நிதானமான தெளிவான சிந்தனையும் மனோபலமும் கொடுக்க வேண்டி அவரது பிறந்த நாளுக்கு அன்பு வாழ்த்துகளைச் சொல்கிறேன்.
இந்த அல்பட்ராஸ்   பறவையைக் கடைசியாகச் செய்திருக்கிறார்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இனிய  75க்கு வாழ்த்துகள்

Wednesday, March 04, 2015

சிங்கத்துக்குப் பிடித்த பாடல்கள் சில.



 தீம்  லவ் ஸ்டோரி
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மிகபிடித்த   பாடல்கள்
சோ ட்டா  பீம்  படம் பார்க்கும் ரசனை !

Monday, March 02, 2015

ஃபோட்டோ எடுக்கணும் என்றால் சிரித்த முகம் தான்.

2012
Add caption
1974
2010
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
1966

சில சில் நினைவுகள் 4

 இ னிதாக வாழ வேண்டும்            1966  ஏப்ரல்  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++  
 ஏப்ரில்  மாதம்  வந்தது.  சேலத்துக்கு மாற்றல் உத்தரவு வந்தது.   சேலம்   இதுவரை போகாத ஊர்.    எப்படி இருக்குமோ தெரியாது. அதற்குள்   சென்னையிலிருந்து மாமனாருக்கு  உடல் நலம் சரியில்லை  என்றும்  இருவரையும் உடனே புறப்படச் சொல்லித் தொலைபேசி அழைப்பு வந்தது.                                                                                                                                                                                                                                                                           ரயில்   டிக்கட்கள்  வாங்கி  வந்துவிட்டோம். மாமனாருக்குக் கழுத்தில்  ஏதோ கட்டி வந்து  அறுவை சிகித்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.           அது  வேறுவிதமாகத் திரும்பலாம் என்ற ஐயத்தில்  இவரை அழைத்திருக்கிறார்கள்.                                                                                                                                                                                                                                                            நாங்கள் சென்ற அடுத்த நாள்  ஆபரேஷன்.    மாமியார் மாமனாரோடு    அடையார் கான்சர் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிச் சென்று விட்டார். கூடவே  இவரும்.   அவ்வளவு பெரிய வீட்டில்    நானும் பாட்டியும் தாத்தாவும் தான்.  மாடிப்படி வளைவில்  ஒரு பெரிய ஜன்னல் இருக்கும். அதன் உட்புறத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு   வெளியே  தொலைவில் தெரியும் சாலையைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.


                                                          நான்கு மணி நேரம் கழித்து  அழைப்பு வந்தது.   ஒரு பெரிய கிரிக்கெட்  பந்து அளவில் கட்டி எடுக்கப் பட்டதாகவும்                ஆனால் அது கான்சர் கட்டி இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள். ஆஜிப் பாட்டி பகவான் சந்நிதியில் விளக்கேற்றி    வணங்கினார். எதற்குமே அஞ்சாத  பெண்மணி. கலங்கியதை அப்போதுதான் பார்த்தேன்.  


                                                                                                                                                           ஆள்கட்டு,வண்டி என்று எதற்கும் குறைவில்லாத நாட்கள். வாழ்வில் ஏதாவது தவறு நடந்துவிடப்போகிறதே என்று பயந்த தாயாக இருந்தார்.         நீ வந்த வேளை உங்க மாமனாருக்கு இந்த உடம்பு வந்தது   என்று யாரும்  சொல்லாமல் இருக்கவேணுமே என்று பயந்தேன் என்றார்.   பாவம்.


  அடுத்த இரண்டு நாளில் இவர்     புதுக்கோட்டைக்குக் கிளம்பினார்.    பாட்டி அவள் இங்கே இருக்கட்டும். நல்ல சாப்பாடே   சாப்பிடுவது இல்லை போலிருக்கே.என்னடா பாத்துக்கறே அவளை  என்று செல்லமாக அதட்டினார்.    அவள் சாப்பிடுவதே இல்லை ஆஜி. நான் எப்ப வேலையை முடிந்து வருகிறேனோ அதுவரை  பட்டினிதான்      என்று சிரித்தவண்ணம் சொன்னவரை.,


எல்லாம் தெரியும்டா  இப்போதைக்கு ஐந்து மாதத்துக்கு உண்டான    பூச்சூட்டல்,புடவை வாங்கிச் செய்யவேண்டியதைச் செய்து அவள் பாட்டியோட அனுப்புகிறேன் என்றார்,. அடுத்த வாரம் வரட்டுமா. நானே கார் கொண்டுவந்து கூட்டிப் போகிறேன்     என்ற பதில் வந்தது.   ம்ஹூம் சொன்ன பேச்சைக் கேளு. கிளம்பற வழியைப் பாரு. அவளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். உங்க அப்பா வீட்டுக்கு  வந்துடட்டும்.  அப்புறம் பார்க்கலாம் என்றதும்  இவர்  முகம் போன போக்கைப் பார்க்கவேண்டும்.


                          மாடியில் அறையில் அவரது பெட்டியை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு இறங்குபவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.   என்னம்மா நான் இல்லாமல் இங்க தைரியமா இருப்பியா என்று கேட்டார்.     ம்ம்ம் இருப்பேன். நீங்க பத்திரம் என்றவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார். என்ன  அம்மா பாடு ஜாலி போல இருக்கே.   சமைக்க    வேண்டாம். ஊஞ்சலாடலாம். பாட்டி வீட்டுக்குப் போகலாம்னு நினைப்பா.


.....சரி சரி இரு.  நாந்தான் வருவேன். யாரோடயும் நீ கிளம்பவேண்டாம் என்று புறப்பட்டார்.  டாக்சி வந்து ஏறிச் செல்பவரைப் பார்த்து   எனக்கே கஷ்டமாக இருந்தது,. அதற்குள் தாத்தா வாசலுக்கு வந்து    புருஷா ஊருக்குப் போகும்போது கண்கலங்கக் கூடாது உள்ள போ என்று அதட்டும் குரல் கேட்டது. அவசரமாக     நகர்ந்து ஊஞ்சல்  கூடத்துக்கு வந்துவிட்டேன்.                                                                                                                                                                                                                                    
 ஒரு வாரத்தில் மாமாவும் வீட்டுக்கு வந்துவிட்டார்.  பாரிஜாதத்துக்கு என்று தனியாகத் தறி போடுபவர் முத்துச் செட்டியார். அவரிடம் சொல்லி   கறுப்புக் கலந்த நீலப்  புடவை   அழகான நட்சத்திரங்கள்   பதித்த  புடவை சொல்லி  அவரும் கொண்டு வந்து கொடுத்தார்.  ஒரு நல்ல நாள் பார்த்து  புரசவாக்கத்துக்குத் தொலைபேசிப் பாட்டியிடம் செய்தி  சொன்னார்  மாமியார்.                                                                                                                                                                          

   பாட்டியும் நல்ல திரட்டுப் பால்  கிளறி மாமாவிடம் அனுப்பினார். சுலபமாக     அந்த வீட்டுப் பெண்கள் பத்துப் பேரை அழைத்து   ஒரு நாள் சாயந்திரம்      அந்தப் புடவையைக் கட்டிக் கொண்டு    கோவிலும் போய் வந்தாச்சு,.   அதற்குள் புதுக்கோட்டையிலிருந்து நான்கு தடவை ஃபோன் வந்தாச்சு.     இன்னும் கிளம்பவில்லையா. சிநேகிதனோட திருமணம்  இந்த மாதக் கடைசியில் வருகிறது. நான் வரப் போகிறேன். என்னோட திரும்பி வந்துவிடு என்றார்.    

 நாங்கள் தனியாக இருக்கிறோம் என்ற நினைப்பில் நான் ஏதோ கேட்க அவர் ஏதோ சொல்ல , பின்னால் ம்க்கூம் என்ற மாமாவின் கனைப்புக் குரலில் நான் விழித்துக் கொண்டேன்.                                        தேவ் சாப்  பேசி முடிச்சுட்டாரா. இல்ல நீ ஃபோன்   வழியாகவே ஊருக்குப் போகிறாயா  என்றார்.    ஒரே  கூச்சமாகி விட்டது.

  ஒரு வழியாகத் தோழனின்  திருமண நாளுக்கு முதல் நாள் வந்தார்.   நாளை சாயந்திரம்   ரயில் டிக்கட் வாங்கி வந்தாச்சு.    உனக்குப் பட்டுப் புடவை கூடக் கொண்டுவந்திருக்கிறேன். என்று எங்கள் திருமணப் புடவையை எடுத்துக் காட்டினார்.                                                
  எத்தனை முன்னேற்பாடு என்று சிரிப்பே வந்தது.                         அப்புறம் அடுத்த நாள் கிளம்பி  புதுக்கோட்டை வந்து  இரண்டு வாரங்களில் சேலத்துக்குக்  கிளம்பினோம்.

Saturday, February 28, 2015

.வாழும் எழுத்துகள்....



இன்று பிபரவரி   27. எதையோ மறந்துவிட்டோமே என்று யோசித்தேன்.
அநேகமாகக் கலயாண நாட்கள்,ஆண்டுநிறைவுகள் வரும்மாதம்.
 
சட்டென்று சுஜாதா சார் ஞாபகம் வந்தது.

தன்னுடைய 70ஆவது வயதுக்கு வந்த வாழ்த்துக்களை விட, பூங்கொத்துகளை விட,
திடீரென்று மூப்பு தனக்கு வந்துவிட்டதை நினைத்ததாகச் சொன்னதும் நினைவு வந்தது.
வாரவாரம் சனிக்கிழமை காலை பதினோறு மணிக்குக் காத்திருந்து ,எந்த ஊரிலிருந்தாலும் இந்திய நேரத்துக்கு ,
கணினி முன் உட்கார்ந்த ,
அம்பலம் அரட்டைக்கு வந்த நாட்கள்.
முகம் தெரியாத பல நபர்களின் அறிமுகம்.
எல்லோருடைய கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லும் லாகவம்.
அவர் வருமுன்னே களைகட்டி விடும்.
கணேஷ் என்று ஒருவர், மதுரை சுரேஷ் என்று ஒருவர்,அதியமான், நம் தேசிகன்,உஷா,
டார்-எஸ்-சலாமிலிருந்து ஒரு பெண்.
இப்படி எத்தனையோ .
ஒவ்வொரு தடவையும் ஸ்விஸ் ஆக இருந்தால் ஊரைப் பற்றி, மக்களைப் பற்றி விசாரிப்பார்.
கூடவே தான் டாவோஸ் ஏரிக்கரையில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டதையும் சொல்லுவார்.
''ஒரு சர்ச், ரெண்டு மரம்,ஒரு பார்க்,நாலு மனிதர்கள் இவர்களை வரைந்தால் ஒரு ஸ்விஸ் ஊர்த்தெரு வந்துவிடும் என்பார்.
}பிறந்த நாளைக்கு ஒன்றும் ஸ்பெஷல் கிடையாதா சார் என்றால் நான் பாயாசம் சாப்பிடுவது கிடையாது. மற்ற ஸ்வீட் ,கேக் உடலுக்கு ஆகாது.
இதுதான் பிறந்தநாள் என்று ''' matter of fact'' நினைவுக்கு வருகிறது.}
அம்பலமும் இல்லை, அரட்டையும் இல்லை,அவரும் இல்லை.
அவர் எழுத்துகள் இருக்கின்றன.


யாருக்காவது இந்த அரட்டை நினைவிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இனிய நினைவுகளுக்கு நன்றி  சார்.

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, February 26, 2015

குரு வார எண்ணங்கள்

இறைவனுக்கான மலர்கள் 
Add caption
கண்கண்ட   தெய்வம் 
வடிவேலும் மயிலும் துணை 
உன்னுள் நான் 
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
திருப்பரங்குன்றம்   மண க்காட்சி. தெய்வத் திருமணம்

நவராத்திரிபதிவு 5

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். ஶ்ரீ பட்டீஸ்வரம்  துர்கா. 1956   திருமங்கலம் கொலு நான் சிறப்பாக நினைப்பது பிறந்த வீட்டுக் கொலுவைத...