Monday, September 15, 2008

குழலினிது யாழினிது என்பர்

வாகுள மீன்
வல் யூ
வாமூன்
நாஷானா
அல்லிகா புத்தர்
லாக்கெட்


இவையெல்லாம் சின்ன கிருஷ்ணனின் மொழியில் வார்த்தைகள்.
இன்னும் இருக்கிறது.
நினைவுக்கு வரவில்லை:)

அர்த்தங்கள்.
வாகுளமீன்.......................................வாக்குவம் க்ளீனர்

வல் யூ......................லவ் யூ

வாமூன்........................லாண்மோவர்(lawn mower)

நாஷானா.........நாராயணா.
அல்லிக்கா புத்தர்...........ஹெலிகாப்டர்
லாக்கெட்...........ராக்கெட்.
இதிலென்ன கஷ்டமென்றால் அவன் சொல்லும்போது
நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால்
அவனுக்கு வருகிற கோபம்.!!!!

எங்கே நின்றாலும் ஓடி வந்து கார்ப்பெட்டில் விழுந்து புரளுவான்.
அதுவும் மரத்தரையில் இல்லை. கார்ப்பெட் போட்ட இடத்தில் மட்டும்தான்:)
இதில பச்சமொளகய்,
வடு மாங்கா, ஊறுகாய்,போற்ற்றும் (போதும்) இதல்லாம் க்ளிப்தமாக வாயில்

வருகிறது.

Sunday, September 14, 2008

இங்கு இன்று ,இப்போது

பேரனுக்குப் பத்து வயது பூர்த்தி:)






வாண வேடிக்கை நேவிபியர்




பறவைகளுக்கான தானியக் கூடு.அணிலார் வந்துவிட்டார்.






காடை கவுதாரி இனமோ







கண்ணன் வந்தார் இன்று









அரோரா பாலாஜி கோவில் வெளிப்புறம்










நேவி பியர் சிகாகோ தொழிலாளர் தினமா,தொழில் தினமா செப்டம்பர் 1ஆம் தேதி.























Posted by Picasaஒரு கட்டிடம்:)
அன்று சீனிம்மா எங்களைப் பராமரித்ததற்கும், இப்போது இங்கே நாங்கள் வந்து இங்ஊ இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.
பாட்டிகள் மாறுவதில்லை.
அநுபவங்கள் மாறுகின்றன. அவ்வளவுதான்.

அன்றைய பாட்டிக்கு வேலை செய்ய ஆள் கிடையாது.
இங்கே பேத்திக்கும் அதே நிலைமை.

அவளும் பாத்திரம் தேய்த்து,துணி உலர்த்தி,
வீடு பெருக்கித் துடைத்து எல்லாம் செய்தாள்.
இங்கு பேத்தியும் அதையே இன்னும் கொஞ்சம் நாகரீக லெவலில் செய்கிறாள்.
அப்பளம் வடகம் வத்தல் எல்லாம் செய்ய நேரம் இருந்தது.
இன்றைய பாட்டியான எனக்கு இங்கே வந்தால்தான் அந்த வேலை.
நம்ம ஊரில்தான்
க்ராண்ட் ஸ்நாக்ஸ் எனக்காகவே திறந்திருக்கிறார்களே;)
மேலும் எங்க வீட்டு மொட்டை மாடிக்கு தூசிதும்பு அதிகம் வரும்.
ரோட்டு மேல வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ''ஐக் புயல்'' சூறாவளி வருவதற்கு முன்பே கொஞ்சம் ஊறுகாய் வடாம் எல்லாம் போட்டாச்சு.
இரண்டு நாட்களாக சூரியனைக் கண்ணால் பார்க்கவில்லை.
நடுநடுவே பேஸ்மெண்ட் செக்கிங் வேற. அங்க தண்ணீர் சரியாக
வெளியேற்றப் படுகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.
சரி இந்த தற்கால நிகழ்வுகளுக்கும் சீனிம்மாவுக்கும் என்ன சம்பந்தம்.
அவருக்கு இந்த அமெரிக்க மனிதர்கள் பற்றிய நாவல்கள் ரொம்பவும் பிடிக்கும்.
எல்லா
எழுத்தாளர்கள்,ஆர்தர் ஹெய்லி,டானியல் ஸ்டீல்,ஜெஃப்ரி ஆர்ச்சர் இவர்களுடைய ஆக்கங்களைத் தமிழ்ப் படுத்தி ராகி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்தில் எழுதும்போது ஒரு வரி விடாமல் படிப்பார்.
எதைப் பற்றியுமோ யாரைப் பற்றியுமோ அவசரமாகக் கணித்து விடமாட்டார்.
எல்லோருடைய செய்கைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்,
என்று நிதானமாக அதர்சைட் ஆஃப் மிட்னைட் கதாநாயகியை அலசுவார்.
என்னுடைய திருமணத்தின் போது இருந்த சீனிம்மாவுக்கும்,இப்போது
30 வருடங்கள் கழிந்த நிலையில் புத்தம் புதிதான சீனிம்மாவைப் பார்ப்பதற்கும்
ஏகப்பட்ட வித்தியாசம்.
சந்தோஷமாக இருந்தார். நான் முதல்தடவை டெட்ராய்ட்டுக்கு வந்த போது நிறைய விவரங்கள் எனக்குக்
கொடுத்தார்.அவரையும் அழைத்து வந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரோ.
வருவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்;)பிள்ளைகளை விட்டு வரவேண்டுமே!!
காரணங்கள் இவ்வளவுதான் இந்தக் கொசுவத்திக்கு.

Monday, September 08, 2008

மீண்டும் பார்க்கலாம், NIAGARA !

வாணவேடிக்கை.....தினம் இரவு ஒன்பதுக்கு என்று நினைக்கிறேன்.

வேடிக்கையில் பிடிக்க முடிந்தது சிலவற்றைத்தான்.....


அருவிக்குப் பின்னால் கட்டப்பட்ட பாதை.குகை வழி. கூகிள் உதவி.



அருவியின் பின் இருக்கும் பாதையின் வரைபடம்




மிஸ்ட்,மிஸ்ட்,மிஸ்ட். இந்தத் திரை எழும்பும் வேகம்ம்ம்ம்.ஒரு பெரிய கோபுரம் மாதிரி வளர்ந்து மேலே மேகங்களாக அலைய ஆரம்பிக்கும்.





SKYLON TOWER .இங்கே மேலே ஏறவில்லை.நேரமின்மை தான் காரணம்.






இந்தப் பயணத்தை என்னால் என்றும் மறக்க முடியாது. அப்படி ஒரு சந்தோஷம் ,அந்த சாரல் மேலே தெறித்து உள்ளம் குளிர வைத்தது.
ஏதோ ஒரு சுதந்திரம் இங்கே கிடைத்தது என்றே நம்புகிறேன்.







இந்த பொம்மைப் பெண் மீண்டும் பதிவுக்கு வந்துவிட்டாள்.








விடுதியிலிருந்த புகைப்படம்.









அந்திவேளை விளக்கு அலங்காரம்.இருகரைகளிலும் மினுக்குகின்றன. விடுதி ஜன்னலிலிருந்து எடுத்த படம். பறவைப் பார்வையா இது:)











மாலை எட்டு மணிக்கு அருவியின் மேல் வண்ணவிளக்கு ஒளி பாய்ச்ச ஆரம்பிக்கிறது. முதல் வண்ணம் வெள்ளை.












அருவியும் பச்சை.கரைகளும் பச்சை.நடுவே இந்தப் பனிச்சாரல் மட்டும் வெள்ளையும் கருப்புமாக ஆவியாகிறது.













ஒண்டேரியோ ஏரிக்கரையோரம்.














இரவு படுக்கப் போவதற்கு முன்னால் க்ளிக்கியது.
















மழையில் அருவிக்குப் பின்னால் போவது தடைப்படுமோ என்று சந்தேகம் வந்தது.
நான் நினைத்தபடி அது ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல. அருவிக்கு மிக அருகில் போகலாம். ஆனால்
ஒரு மேடையில் நின்றுதான் சாரலை அனுபவிக்க முடியும் என்று தெரிந்தது.
நான் என்னவோ குற்றாலம் அருவிக்குப் பின்னால் போவது போல இங்கேயும் போகலாம்
என்று கனவு கண்டு இருந்தேன்.
நாம என்ன ஆண்டாளா:))
கனடா நாட்டில் இது ஒரு பிரமாதனமான ஏற்பாடு.
மலையைக் குடைந்து,அருவிக்குப் பின்னால் சுரங்கம் அமைத்து
நாலைந்து இடங்களில் அருவி விழும் இடம் வரை போக வழி வகுத்து இருக்கிறார்கள்.
போகும் வழியெல்லாம் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது.
மேலே படபடக்கும் நதியின் ஓசை.
மஞ்சள் ப்ளாஸ்டிக் உடை எல்லோருக்கும் கொடுத்திருந்தார்கள்.
ஒரே ஒரு இடத்தில் கீழே இறங்கப் படிகள்.
வெளியே வந்தால் இடியோசையுடன் அருவி விழும் ஓசை.
இந்த அனுபவத்தை எழுத வார்த்தைகள் எனக்குக் கிடைக்க மறுக்கின்றன.ஒரு அரை மணி நேரம்
இங்கே செலவழித்தோம்.
சின்னவன் அருவி சத்தத்துக்குப் பயப்படவில்லை.அம்மாவோடு ஒண்டிக்கொண்டு அண்ணாந்து பார்த்த வண்ணம் இருந்தான். பெரியவனுக்கும் எனக்கும் கண்ணில் இருக்கும் கண்ணாடி நன்றாகப் பார்ப்பதைத் தடை செய்தது.!!
கண்ணாடி லென்ஸெல்லாம் தண்ணீர் தெறித்து பார்க்க முடியவில்லை.
நானும் அவனும் ஜோடி சேர்ந்து கொண்டோம். அருவியின் மிக அருகில் நின்று கண்ணாடிகளைக் கழற்றி விட்டோம்.
இப்போது நாங்களும் நயகராவும் மட்டுமே:)
எப்பவுமே வராத கோபம் என்மேலேயே வந்தது.
கண்களை நன்றாகப் பராமரித்திருந்தால் இப்போது
வாழ்க்கையில் எப்போதாவது ஒரு தடவை கிடைக்கும் இந்த மாதிரி அழகான
அற்புதமான அனுபவத்தை இன்னும் கூர்மையாகக் கவனித்திருக்கலாம். இல்லையா!!
கண் பழுதுபட்ட பிறகு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை:)
ஒரு நிமிடம் தான்!!!.
நயகரா மேலே சிந்திக்க விடவில்லை.குழந்தைகளாய் அங்கே இருந்துவிட்டு,மீண்டும்
பெரியவர்களாய் மேலே ஏறிச் சாப்பாட்டுக்கு விரைந்தோம்.
அடுத்த நாள் பயணம் டெட்ராய்ட்டுக்கு.
அங்கிருந்து மீண்டும் சிகாகோ வந்தாச்சு.வண்டியும் பழைய பொலிவோடு காத்திருந்தது.
நல்லநினைவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு,
நயகராவை நினைவுகளில் மீண்டும் சுவைத்தபடி இதோ பதிவும் இட்டுவிட்டேன்.
நன்றி எல்லோருக்கும்.


















Friday, September 05, 2008

அமெரிக்க பயணம் 3,பகுதி 7

கசீனோ ,கார் நிறுத்தும் இடமே ஆறு தளங்கள் இருந்ததாக நினைக்கிறேன்.



கசினோ முகப்பு. உள்ளே சிலர் விளையாட அவர்களுக்காகக் காத்திருக்கும் நண்பர்கள் மனைவிகள்,குழந்தைகள்.




நீண்ட லக்ஸுரி பஸ்,எங்க எல்லாம் போகிறதோ!!!






மெயிட் ஆஃப் த மிஸ்ட்..தமிழில் என்ன சொல்லலாம்? பனித்திரை ..கன்னி???







அருவிக்குப் பின்னால் ஒரு பயணம்.அதற்கான வரைபடம்.








இன்னுமொரு வானவில். கனவுலகக் காட்சி.










வானத்திலிருந்து எடுத்த போட்டோ. உபயம் கூகிள்.











இதற்கு வெறும் ''சோ சத்தம்'' போதாது. காது பிளக்கும்,மனது தடதடக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் முகம் எல்லாம் மகிழ்ச்சி. இதுதான் நயகராவின் அடையாளம்.
அநேகமாக எல்லா இயற்கை வளங்களுக்கும் பொதுவானதுதான்.
இருந்தாலும் ஒன்றிலிருந்து அடுத்த காட்சிக்கு வரும்போது இது இன்னும் அழகாக இருக்கிறதே என்றுதான் தோன்றுகிறது.
அடுத்த நாள் காலையில் அருவிகளுக்கு நடுவே போகும் படகுப் பயணம்.
படகைச் செலுத்துபவர் விவரித்துக் கொண்டே வந்தார். பெரிய அருவியின் அருகில் வந்துவிட்டோம். கண் கொண்ட மட்டும் அந்த அழகை விழுங்கும்போதே படகுகுகு அடியில் ஓடும் தண்ணீர் படகை உயர்த்துவதை உணர முடிந்தது.
கண் முன்னே அருவி தாழ்ந்தது.நாங்கள் உயர்ந்தோம்.
படகு தாழும்போது மனதும் உடலும் படபடவென்று இறங்கியது. அது உயரும்போது அப்படியே நாம் வானத்தில மிதப்பதுபோல ஒரு உணர்ச்சி.
பெண்ணைக் கேட்டால் உனக்கு அதீதமாகக் கற்பனைம்மா என்கிறாள்.:)
சின்னப் பேரனுக்கு ஸ்ட்ரோலரில் இருப்பே கொள்ளவில்லை.''சிலிச் சிலி சில்'' என்று அனுபவித்தான். பெரியவனுக்கு ஏற்கனவே வந்து பயணம் செய்திருப்பதால் பெரிய மனுஷத்தனமாக நடந்து கொண்டான்.
ஓரமா நிக்காதே பாட்டி. தாத்தாவைப் பிடிச்சுக்கோன்னதும் தாத்தா இரண்டடி தள்ளிப் போய்விட்டார்.:))
பையா படகு ஆடற ஆட்டத்தில பாட்டி இன்னும் ஆடுவா.என்னையே
தள்ளினாலும் அதிசயமில்லை என்று சிரித்தார். இதென்ன வளையாபதி,மந்திரிகுமாரி கதையாச் சொல்றாரே என்று பக்கத்தில இருக்கிற லைஃப்போட்டைப் பிடித்துக் கொண்டேன்:)
வாழ்க்கைப் படகுன்னு வச்சுக்கலாமா.:)
வெளியே வந்து நீலக்கலர் உறைகளைக் களைந்துவிட்டு அங்கயே இருந்த சூவனீர் ஷாப்பில் குட்டி குட்டி சமாசாரங்கள் வாங்கிக் கொண்டோம்.
வெளியில் அமிர்தமான இசை. மேடை போட்டு ஒரு பாடகர் பழைய காலப் பாட்டெல்லாம் பாடிக்கொண்டிருந்தார்.
அங்கேயே பீட்சாவும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு விடுதிக்குத் திரும்பினோம்.
இரவு அருவிக்குப் பின்னால் போகும் பயணத்துக்குத் தயார் செய்து கொண்டு வந்தால் வெளியே நல்ல மழை.!













வியாபார ரீதியாகப் பொருள் ஈட்ட என்னவெல்லாம் தெரிய வேண்டும்.எல்லாம் இந்த விடுதிக்கு வந்தால் கற்றுக்கொள்ளலாம்.













ஒரு வேளையில் நீலம், ஒருவேளையில் பச்சை. பல ஆடைகள் புனையும் நயகரா மங்கை.














Thursday, September 04, 2008

மந்தையில் தனியாய்

கூட்டத்தில் தனியாய்(alone in a crowd)  9/4/2008

தனியாகப் பிறந்தாய்
தனியாக அலைந்தாய்...இன்று
தனியாக இருக்கப் பயமேன்

இளமையில் கூட்டம் போடும்  மனிதம்
முதுமையில் கலையும்
நினைக்காத உறவுகளை
நினைக்கும் நாள்
நீயும் இளமையும் பிரியும் நாள்.

நினைக்காத இறைவன் அருகில் வரும் நாள்
நீயும் முதுமையும்  கூடும்  நாள்.

Tuesday, September 02, 2008

கணபதியின் பாதங்கள் சரணம்.

உச்சிப் பிள்ளையார் கோவில்

ஈச்சநாரி பிள்ளையார்.
ஆதிமூலமாய்,அனைவருக்கும் தலையான கணமாய்,
கூப்பிட்டதும் ஓடி வந்து அருள் புரிபவன்,
அழகான் குழந்தை
அம்பிகையின் மூத்த புதல்வன்
கணநாயகனைத் தொழுது பணிகிறேன்.
அனைவருக்கும் பிள்ளையார் அருள் எப்போதும் இருக்கட்டும்.




அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...