







அநேகமாக எல்லா இயற்கை வளங்களுக்கும் பொதுவானதுதான்.
இருந்தாலும் ஒன்றிலிருந்து அடுத்த காட்சிக்கு வரும்போது இது இன்னும் அழகாக இருக்கிறதே என்றுதான் தோன்றுகிறது.
அடுத்த நாள் காலையில் அருவிகளுக்கு நடுவே போகும் படகுப் பயணம்.
படகைச் செலுத்துபவர் விவரித்துக் கொண்டே வந்தார். பெரிய அருவியின் அருகில் வந்துவிட்டோம். கண் கொண்ட மட்டும் அந்த அழகை விழுங்கும்போதே படகுகுகு அடியில் ஓடும் தண்ணீர் படகை உயர்த்துவதை உணர முடிந்தது.
கண் முன்னே அருவி தாழ்ந்தது.நாங்கள் உயர்ந்தோம்.
படகு தாழும்போது மனதும் உடலும் படபடவென்று இறங்கியது. அது உயரும்போது அப்படியே நாம் வானத்தில மிதப்பதுபோல ஒரு உணர்ச்சி.
பெண்ணைக் கேட்டால் உனக்கு அதீதமாகக் கற்பனைம்மா என்கிறாள்.:)
சின்னப் பேரனுக்கு ஸ்ட்ரோலரில் இருப்பே கொள்ளவில்லை.''சிலிச் சிலி சில்'' என்று அனுபவித்தான். பெரியவனுக்கு ஏற்கனவே வந்து பயணம் செய்திருப்பதால் பெரிய மனுஷத்தனமாக நடந்து கொண்டான்.
ஓரமா நிக்காதே பாட்டி. தாத்தாவைப் பிடிச்சுக்கோன்னதும் தாத்தா இரண்டடி தள்ளிப் போய்விட்டார்.:))
பையா படகு ஆடற ஆட்டத்தில பாட்டி இன்னும் ஆடுவா.என்னையே
தள்ளினாலும் அதிசயமில்லை என்று சிரித்தார். இதென்ன வளையாபதி,மந்திரிகுமாரி கதையாச் சொல்றாரே என்று பக்கத்தில இருக்கிற லைஃப்போட்டைப் பிடித்துக் கொண்டேன்:)
வாழ்க்கைப் படகுன்னு வச்சுக்கலாமா.:)
வெளியே வந்து நீலக்கலர் உறைகளைக் களைந்துவிட்டு அங்கயே இருந்த சூவனீர் ஷாப்பில் குட்டி குட்டி சமாசாரங்கள் வாங்கிக் கொண்டோம்.
வெளியில் அமிர்தமான இசை. மேடை போட்டு ஒரு பாடகர் பழைய காலப் பாட்டெல்லாம் பாடிக்கொண்டிருந்தார்.
அங்கேயே பீட்சாவும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு விடுதிக்குத் திரும்பினோம்.
இரவு அருவிக்குப் பின்னால் போகும் பயணத்துக்குத் தயார் செய்து கொண்டு வந்தால் வெளியே நல்ல மழை.!
18 comments:
முதலிரண்டு படங்கள் அட்டகாசமாக இருக்கிறதே!! :)) வர வர எங்க ரீச்சர் மாதிரி கணக்கு வழக்கு இல்லாம தொடர் போடறீங்க. ஒரு நயாகரா ட்ரிப் எம்புட்டுப் பகுதி? :))
//பெண்ணைக் கேட்டால் உனக்கு அதீதமாகக் கற்பனைம்மா என்கிறாள்.:)
சின்னப் பேரனுக்கு ஸ்ட்ரோலரில் இருப்பே கொள்ளவில்லை.''சிலிச் சிலி சில்'' என்று அனுபவித்தான். பெரியவனுக்கு ஏற்கனவே வந்து பயணம் செய்திருப்பதால் பெரிய மனுஷத்தனமாக நடந்து கொண்டான்.//
:))))
இதை பார்த்தாங்கன்னா அவுங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னும் அடுத்த பதிவுல சொல்லணும் ஆமாம்!
முதலிரண்டு படமும் ஃப்ளிக்கரிலிருந்து எடுத்தது.
அதனால் அதுக்கு நான் பெருமைப் பட ஒண்ணும் இல்லை:)
ரீச்சர் கிட்ட எம்மாம் பெரிய நினைவுப் பெட்டகமே இருக்கு.அந்தக் கணக்கெல்லாம் பார்த்தா இதெல்லாம் ஜுஜுபி இல்ல கொத்ஸ்.
ஒரு வாரம் ட்ரிப் மா. அதுல நடந்ததென்னவோ ஏகத்துக்கு.
அடுத்த பதிவோடு நயகராவுக்கு பை பை சொல்லிடலாம்.சரியா:0)
பெரியவன் படித்தால் , ''பாட்டி யூ ரோட் அபௌட் மீ??'' அப்படீனு ஆச்சரியப் படுவான்.
ஏற்கனவே அவனுக்குப் பதிவுகள் பற்றிச் சொன்னதற்கு ஒரு நாள் அவனும் எழுதப் போவதாகச் சொல்லி இருக்கிறான்.:)
பொண்ணுக்கு என் பேரில நம்பிக்கையே கிடையாது.சரியான கதையடிக்கிறம்மா நீ''ன்னு ஒதுக்கிவிடுவாள். உள்ளூரச் சந்தோஷமே...
சின்னதுக்கு 20 மாதங்கள் தான் ஆகிறது.இப்ப சத்திக்கு காக்கா கதைதான் அவனுக்குப் பிடிக்கும்.:)
ஹைய்யோ .......
வல்லி,
கொத்ஸ் கதை கேக்காதீங்க.
அனுபவத்தை அப்படியே எழுதணும்ப்பா.
மூடுமந்திரமா எழுத நாமெல்லாம் 'பெரிய' எழுத்தாளர்களா என்ன?
எதுக்கும் நாலு ஸ்மைலி போட்டுவச்சுக்கறேன் :-))))))))))))))
கொத்ஸ் கதை கேக்காம யாரு கதை கேக்கறது துளசி.:)
இந்த அம்பிப்பையனைக் காணவே இல்லை.
கொஞ்சமாவது லைவ்லியா கமெண்ட் செய்யறதுக்கு அம்பி,அபி அப்பா,ஆயில்யன்னு போனால்,அடுத்தபக்கத்தைச் சொல்ல இவர் ஒருத்தர்தான்:)நாம் மந்திரத்தை மூடி வச்சிட்டாலும்:))))))
good pictures.
reminded me of my several trips to niagara.
வல்லிம்மா எங்கு சென்றாலும் வணக்கம் சொல்ல வானவில் வளைந்த வண்ணமாக இருக்கிறதே:)! அருமையான க்ளிக்.
mmm...
தாத்தா தலை தப்பிச்சது!
:-)))))))
ஹெல்லொ சர்வேசன்.
எத்தனை ந்நாளாச்சு உங்களைப் படித்து!!
நயகரா ஒரோரு தடவையும் வேறு வேறு காட்சிகளைக் கொடுக்கிறதோ என்று நினைக்கிறேன்.
போன தடவை போன போது அக்டோபர் முடிந்துவிட்டது. அங்கே ஸ்னோ விழ ஆரம்பித்துவிட்டது.
இந்த டிரிப்பில்கோடைமுடியும் தருணம்.
இயற்கையின் கொடை.
ராமலக்ஷ்மி இங்கே வானவில் வந்தவண்ணம் இருக்கிறது.
எங்களாலேயும் பார்க்க முடிந்தது
இனிமை. நன்றிம்மா.
வரணும் வாசுதேவன்.
தாத்தாவை யாரு விட்டா.
விடறதுக்கா கழுத்தை நீட்டினது:)
தாத்தாவை நான் கண்டுக்கலை என்றால்
அவருக்குப் போரடித்துவிடும்:)
//ஓரமா நிக்காதே பாட்டி. தாத்தாவைப் பிடிச்சுக்கோன்னதும் தாத்தா இரண்டடி தள்ளிப் போய்விட்டார்.:))//
nalla irukku valli, thatha kite ithai padichu katiyacha? :P
ஓ. படிச்சுக் காட்டியாச்சு.
நீ எப்பவுமே கட்டுரை நல்லா எழுதறெ.
இவ்வளவு ஜனங்க இருக்கிற இடத்தில ,''ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து'' செய்ய வேண்டாமேன்னுதான் அப்படிச் சொன்னேன் னுட்டார்:0)
நீங்களே சொல்லுங்க ஆயில்யன். அவர் சொல்றதில ஏதோ நியாயம் இருக்கு..
ஆனாலும் அந்த படகு ஆடும்போதூ எனக்குக் கொஞ்சம்
சப்போர்ட் கொடுத்திருக்கலாம்:)
Post a Comment