Thursday, October 22, 2026

ஐப்பசி மாத நினைவலைகள். 3

வல்லிசிம்ஹன்

எல்லாரும் வளமாக வாழ வேண்டும்.
வண்ணம் சேர்க்கப்பட்ட படம்.


பார்த்த முதல் படம்


அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.
தம்பியுடன் டவுனு பக்கம் கிளம்புவதாக  எழுதி இருந்தேன். என்னை  சித்தப்பாவின் வீட்டில் சேர்த்துவிட்டு ஓடி விட்டான்.

யாரும் கட்டி அணைத்தால் அவனுக்குப் பிடிக்காது.
சித்தப்பா அந்த மாதிரி மனுஷர்தான்:))

தங்கை(மூன்று மாதம் இளையவள்)   அரட்டை அடித்தபடி
என் பாட்டியின் தங்கைகள் (சின்ன பாட்டிகள் இருவர். அம்மு, ரங்கம்) இருக்கும் வீட்டிற்கு வந்தோம்.

 இருவரும் எங்கள் மேல் கேள்விக்கணைகளைத் தொடுக்க
சாமர்த்தியமாகப் பதில் சொல்லித் தப்பித்தோம்.

'' என்ன பாப்பா,, உனக்கு சிம்முவைப் பிடித்ததா? என்று ரங்கப் 
பாட்டி கேட்க  ''ஒரே கோத்திரம் பாட்டி.  அப்பா அவரை ஏன்
சாப்பாட்டுக்கு அழைத்தார் என்று தெரியவில்லை. எனக்கு அவரைப் பிடிக்கவும் இல்லை. அவர் கிராப்பும் அவரும் ! என்று முகம் சுளித்தாள்  தங்கை:)

எனக்கோ ஒரே ஆர்வம் இந்த வம்பைக் கேட்க.
''என்னாச்சு  பா.  கல்யாணம் செய்துக்கப் போறியா ''என்று அதிசயித்தேன்.

ஆமாம் உன்னைப் போல் படிப்பு மேல ஆசையில்லை.
இங்க போரடிக்கிறது. இன்னோரு வீட்டுக்குப் போக வேண்டியவர்கள் தானே. அப்பா மும்முரமாக இருக்கிறார்.

நல்ல  இடம்(???) கிடைத்தால் சரிதான் என்றாள்.

அம்மு சித்தியின் பாணம் என்னை நோக்கிப் பாய்ந்தது.
என்னடி ஆண்டாள் நீ என்ன செய்யப் போறே என்றார்.

வாசலில் போஸ்ட் என்று சத்தம் கேட்டதும் நான் வாசலுக்கு
விரைந்து அதை வாங்கி  சின்னப் பாட்டியிடம் கொடுத்தேன்.

அவரது  அக்கா மகள் கமலா என்பவரிடம் இருந்து வந்த கடிதம்.
( இந்தக் குடும்பத்தில் என் பாட்டி திருவேங்கடம் தான் மூத்தவர். பிறகு கிருஷ்ணா பாட்டி, அம்முப் பாட்டி, ரங்கா பாட்டி)

இப்போது கடிதம் எழுதி இருப்பது கிருஷ்ணா என்கிற கிச்சம்மா பாட்டி மகள். எனக்கு அத்தை முறை என்று தெரிந்து கொண்டேன்)

ரங்கா பாட்டி என்னைப் படிக்க சொன்னார்.

''க்ஷேமம். க்ஷேமத்துக்குப் பதில்.

எங்க சிம்மு, சேச்சாவின் அழைப்பில் அவன் அகம் போய் வந்தான்.

அதுதான் ஒரே கோத்திரம் ஆகிவிட்டது.
அவனுக்கும் இஷ்டம் இல்லை.
அவனுக்கு சிவப்பா, உயரமாக, ஒல்லியாக, பியூசி
படித்த பெண் வேண்டுமாம்!!!
உனக்கு யாராவது  தெரிந்தால் சொல்லு. அவனுக்கு
குரு பலன் வந்து விட்டது. இப்போது கல்யாணம் செய்யாவிட்டால்
இன்னும் ஏழு வருஷம் காத்திருக்கணுமாம்.""

இதை உரக்கப் படித்தேன். எனக்கு உச்சி வரை கோபம் ஏறியது.

என்ன பாட்டி, இப்படியெல்லாம் எதிர்பார்க்கிறவர்கள்
இங்கிலாந்து போய் மணம் முடிக்கலாமே.:(((((

பாட்டி என் கோபத்தை ரசித்தார். ''உன் அப்பா அம்மா ரொம்ப சாதுவாச்சே. நீ  உன் சின்னத் தாத்தாவைக் கொண்டிருக்கே
''    என்று சிரித்தார். அது யார் என்று நான் கேட்க. இப்போ
 இந்தக் கடிதம் வந்திருக்குப் பாரு. அந்த அத்தையோட  அப்பா.
உன் தாத்தாவின்  தம்பி  என்றார்.

எனக்குத்  தலை சுற்றியது.  என் பாட்டிக்கு இந்த அத்தையோட அம்மா தங்கை.  அப்பா என் தாத்தாவுக்குத் தம்பியா!!!!!!

ஸாமீ:)என்று அதிசயித்தேன்.
  அப்படித்தான் உறவுக்குள்ள உறவு கல்யாணம் செய்வார்கள் என்றதும் ஓஹோ என்று கேட்டுக் கொண்டேன்.

சரி இப்ப இந்தக் கடிதத்துக்கு நீ பதில் எழுது என்றார்.
உடனே உத்சாகம் பொங்கி வர'' ஆல்ரைட். ஒரு கை பாத்துடலாம்னு.
சொல்லு  எழுதறேன் என்றேன்.:)))))) என் தலை

எழுத்தை
நானே நிர்ணயம்    செய்த அந்தக் கடிதம்.. என் முதல் கேள்வியே சிம்மு என்று யாராவது பெயர் வைப்பார்களா பாட்டி என்பதுதான்.
நரசிம்ஹன் தான் மா சிம்மு ஆகிறது என்று சமாதானம் சொன்னார் பாட்டி.


:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

 சரி என்று அங்கிருந்த ஒரு இன்லாண்ட் லெட்டரில் எழுத ஆரம்பித்தேன். இளங்கன்று என்பதற்கு இதுதான் அர்த்தம். என் தங்கை சற்று நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

இதோ அந்தக் கடிதம்.
அன்புள்ள கமலா, உன் கடிதம் கிடைத்தது.
இந்தக் கடிதத்தை எழுதுபவள் நம் நாராயணனின் பெண்.

திருவேங்கடத்தின் பேத்தி.

(என் சரக்கை இங்கேதான் சேர்த்தேன்). ''இவள் உயரத்திலும் உயரம் சிவப்பிலும் சிவப்பு. மதராசில் படித்தாள்.''
சிம்முவுக்கு ஏதுவாக இருப்பாள்.

உன் அபிப்பிராயத்தை எழுது. கடிதாசி கண்டதும் பதில் போடு.

ஆசீர்வாதங்கள்.  உன் மாமியார் மாமனார், ஆத்துக்காரர் எல்லாவர்க்கும் என்  விசாரிப்புகளைச் சொல்லவும்.

அன்புடன் அம்முச் சித்தி.
++++++++++++++++++++++++++++++++++
கடிதத்தை ஒட்டியாச்சு.  அப்படியே    வெளியே இருந்த தபால் பட்டியில் போட்டாச்சு. கவனமாக   எஸ்.நாராயணன், போஸ்ட்மாஸ்டர், பசுமலை போஸ்ட் ஆபீஸ், பசுமலை,  மதுரை 4
எழுதியாச்சு.

பத்மாவுக்கு ஒரே கவலை. பெரியப்பா கோவிச்சுக்கப் போறா பாரு என்றாள்.

எனக்கும் பயம் பற்றிக் கொண்டது.
கிளம்பிடலாம்பா. ரங்கன் வந்துடுவான் என்று அவசரப்
படுத்தினாள்.
ஒரு வேளை இந்தத் தபால் போய்ச் சேராதோ என்னவோ. ஒண்ணும் நடக்காது பாரு என்றேன்.

உனக்கு எங்கேடி புத்தி போச்சு? கிழங்கள் ஏதாவது சொன்னா
உடனே  கேக்கணுமா என்று உலுக்கினாள்.
தன் தந்தை கோபிப்பாரோ என்ற பயம்  அவளுக்கு.:(

சித்தப்பா வீட்டில் ரங்கன் காத்திருந்தான்.
ஹோம் ஒர்க் இருக்கு வா போலாம் என்று நச்சரித்தான்.

கேள்வி ஏதும் கேட்காமல் பஸ் ஏறி பசுமலை வந்து சேர்ந்தோம்.



அம்மாகொடுத்த   டிபனை சாப்பிட்டு விட்டு, அப்போது படித்துக் கொண்டிருந்த  வெள்ளிமலை புத்தகத்தில் மூழ்கி விட்டேன்.

அம்மா கேள்விகளுக்கு சந்தோஷமாகவே  பதில் சொல்லிக் கடித விஷயத்தைச் சொல்லாமல்  விட்டேன்:))





6 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இந்தப் பதிவும் அருமை. உங்களின் அருமையான எழுத்தை ரசிப்புடன் படித்தேன். மலர்ந்த நினைவுகள் நன்றாக உள்ளது.

ஆம். அந்த காலத்தில் நம்மை எழுதச் சொன்னால், "இன்னார் சொற்படி" என்பதை சேர்த்துக் கொள்வோம். உங்கள் பாட்டி தந்த ஊக்கத்தில், நீங்களும் தைரியமாக கடிதத்தில் கலக்கி விட்டீர்கள். பதில் என்னவாக வந்தது என்பதை தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல் பெருகுகிறது. தந்திருக்கும் பாடலும் பொருத்தமாக இருக்கவே கேட்டு மகிழ்ந்தேன்.

இன்னாருக்கு இன்னாரென்று "அவன்" தானே ஆரம்பத்திலேயே எழுதியும் விடுகிறான். அடுத்தப் பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

ஆச்சர்யம்தான் அம்மா.  அதெப்படி யாரென்று பார்க்காமலேயே தெரியாமலேயே நீங்கலாக அப்படி வரிகள் சேர்த்தீர்கள்?  பின்னால் அவருக்குத் தெரிவித்திருப்பீர்கள்.  என்ன சொன்னார்?

ஸ்ரீராம். said...

என்னுடைய அண்ணனின் பேரன்.  நான்கு வயதாகிறது.  அழகாக இருப்பான்.  துறுதுறு என்று விஷமக்கார பையன்..  அவனுக்கும் அவனைத் தூக்கிக் கொஞ்சினால், அணைத்தால் பிடிக்காது!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு சகோதரி கமலா. நீங்கள் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. பாட்டி சொன்னபடி ரேவதி என்று தான் எழுதி இருந்தேன். மறந்து விட்டது:( மிக நன்றிமா. அடுத்த பகுதி நாளை எழுதி விடுவேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம். இதை விளையாட்டாகத்தான் செய்தேன். வெறும் வீம்பு.பொதுவாகவே அந்த வயதுக்கான குறும்பு.என்னதான் நடக்கும் பார்க்கலாம் என்ற அசட்டுத் தைரியம்:( அவரிடம் சொல்லி இருக்கலாம். மறந்து போய்விட்டது.

வல்லிசிம்ஹன் said...

:))))))). சில குழந்தைகள் இப்படித்தான். எங்கள் பெரியவனுக்கும் யார் தொட்டாலும் பிடிக்காது. நானு அவரும் மாமாக்களும் தூக்கலாம். நன்றி மா.

ஐப்பசி 24 ஆம் தேதி நிகழ்வுகள்.

வல்லிசிம்ஹன் கொசுறுப் பதிவு எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.                  முன்பகுதியில் வீட்டுக்கு வந்து சேர்ந்த செய்தியைச் சொல்லி இருந்தேன...