எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
2007 செப்டம்பர்.
இரண்டாவது பேரன் பிறப்பை ஒட்டி, அமெரிக்க விஜயம் முடிந்து
ஸ்விஸ், துபாய் டேரா போட்டு ,
சென்னை வர 10 மாதங்கள் ஆகிவிட்டது. அந்த இடைக்காலத்தில்
எங்க வீட்டில ஒரு எலியார் மழை நாள் ஒன்றில் குடி வந்து இருக்கிறார்.
இது ஒரு மே மாத அக்னி நட்சத்திர மழைக்காலம் வருமே(?:))அப்போது...தான் இவர் உள்ள வந்து இருக்கிறார்.அவர் வந்தது தெரிந்து அதுவரை வெளியில் மிடுக்கு நடைபோட்ட பூனையார்,இப்போது வீட்டுக்குள் சகஜமாக உலவ ஆரம்பித்து இருக்கிறார். இது கறுப்புக்கும் சற்றே குறைந்த ,வெள்ளை வரிகள் போட்டுக்கொண்ட சாம்பல் பூனை.
இப்போது வீட்டுக்குள் சகஜமாக உலவ ஆரம்பித்து இருக்கிறார். இது கறுப்புக்கும் சற்றே குறைந்த ,வெள்ளை வரிகள் போட்டுக்கொண்ட சாம்பல் பூனை.
சரியான சம்பல் பூனை:))
பத்து மாதங்கள் கழித்து வீட்டுக்குள் நுழையும் போது
இருக்கும் பிரச்சினைகளில் இந்த மின்சாரப் பிரச்சினையும் உண்டு
ஊரிலிருந்து
வந்தது முதல் ஒவ்வொரு மின் சாதனத்தையும்
சரி செய்துவிட்டுத் தான் இயக்க வேண்டி இருக்கிறது.
எனக்கும் மின்சாரத்துக்கும் அத்தனை ஒத்துப் போகாது.எல்லா வசதிகளும் கொடுக்கும் பஜாஜ்,விஜய்,இன்னும் எத்தனையோ விளம்பரங்கள்
பத்திரிகையில் பார்க்கும்போது கூட, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்ப்பேன்:))
தொட்டால் ஷாக் அடிக்குமோ என்கிற பயம்தான்.
மேலே மொட்டை மாடியில் தேங்கின தண்ணீர் கசிந்து
கீழே உள்ள சாப்பாட்டு அறை விளக்கைச் சுற்றிச் சொட்ட ஆரம்பித்தது.
இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இவ்வளவு
மோசமாக வீட்டை வைத்து இருக்கிறீர்களா என்று கேட்காதீர்கள் . அது அப்படித்தான்:)
இப்போது எல்லாவற்றையும் சரி செய்தாச்சு..
இப்போ பூனை எலி சமாச்சாரத்துக்கு வரலாம்.
நாங்க வந்து இறங்கி அடுத்த நாள் மழை வந்தது.
நம்ம வனாந்திரம் போயி வருஷக்கணக்கு ஆச்சா.??
அதில வீட்டு விஷயங்கள் மறந்து போச்சு.
அதிலயும்இந்த மழை சுகமான மழை.சத்தமில்லாத அழகான மழை...
அதனால் ரசிப்பதில் இருந்து விட்டேன்.
திடீரென்று பூனை சீறும் சத்தம், எலி சார் தாவி அப்பள டப்பா
உருண்டூ கீழே விழுந்து கடகட..
சாம்பனும் செல்லியும்(அவங்க பேரு) சண்டையில் சுற்றி வர,(அந்தத் தண்ணீரசொட்டி இருந்த இடத்தை மட்டும் தொடாமல் தாவினார்கள். அவர்கள் போட்ட
சத்தத்தைவிட
இவர்களை விரட்ட சிங்கம், போட்ட சத்தம் இன்னும் பெரிதாக இருந்தது.:)
அதுவரை ஜாக்கிரதையாக இருந்த சாம்பன் திடீரென ஒரே தாவலில்
கிறீச்னு சத்தம் போட்டு ஓடி விட்டான்.
என்னடா இது திகில் சண்டையா இருக்கேனு, விளக்கை அணைக்க வந்த போது
ஸ்விட்ச் போர்ட் கர்ர் என்று கர்ணகடூரமாக கத்தியது.
ஆளைவிடு!! இது ஏதோ மின் இணைப்பு வேலை. தப்பு கனெக்ன், ஷார்ட் சர்க்யூட் எல்லாம் புரிந்து,
வெளியில் ,மழையில் (வழுக்காமல்), மெல்ல போயி மெயின் போர்டின் (தடித்த) ஸ்விட்சை
அணைத்தோம்.
(இப்போது இருக்கும் புது அறை அப்போது இல்லை)
பிறகு எப்போதும் செய்வது போல குழல்விளக்கைக் கழட்டி வைத்துவிட்டு,
ட்ரிப் ஸ்விட்ச் ஆன் செய்து,
எலெக்டீரிஷியனைக் கூப்பிட்டு சரி செய்தாச்சு.
அதிலிருந்து, இப்ப இன்னிக்கு கம்யூட்டர் (எலி) மௌஸைக் கூட நான் திட்டுவதில்லை. அது பாட்டுக்கு திரை பூராவும் பயணம் செய்கிறது. போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன்:))
இந்த மின் விளையாட்டில் எலி பெரிய பயில்வான் தான்!!!! வின்னர்.
12 comments:
சுவாரஸ்யமான அனுபவங்கள். சொந்தமாக கட்டிய வீட்டிலேயே தண்ணீர் ஒழுகியதா? நாங்கள் அரசுக் குடியிருப்பில் இருந்தோம். அதெல்லாம் அங்கு சகஜம்! சமயங்களில் ஈர சுவரைத் தொட்டாலே கிர்ர்ங்கும்!
இப்போதெல்லாம் பூனை எலிகளை பிடிக்கிறதா என்ன... பல இடங்களில் எலிகளைக் கண்டு பூனைகள் ஓடி விடுகின்றன. சில இடங்களில் மதிப்பதே இல்லை. சில இடங்களில் நட்பாகவே இருக்க ஆரம்பித்து விடுகின்றன!
மின் கோளாறு வந்தால் ஒரு பயம்தான். உடனே சரி செய்யா விட்டால் நிம்மதியே இருக்காது. சிறு வயதிலிருந்தே எலெக்ட்ரிஷியன் வந்து பார்ப்பதை கூட இருந்து கவனித்து சில சிறு வேலைகள் நானே செய்வேன்.
மின் சாதனங்களில் நான் ரொம்ப பயப்படுவது இம்மெர்ஷன் ஹீட்டர். சிவசங்கரி அதை வைத்து ஒரு கதை கூட எழுதி இருந்தார்.
வேறு வழியில்லாமல் 90 களில் இரண்டு வருடங்கள் அதை உபயோகிக்க நேர்ந்தபோது பயத்துடன் பன்மடங்கு எச்சரிக்கையுடன் இருப்போம்.
ஹாஹா..... எலித் தொல்லையை இவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கீங்கம்மா...... ரசித்தேன்.
பூனையாரும் எலியாரும் சேர்ந்து வீடு முழுக்க ஓடிப்பிடித்து விளையாடி இருக்கினம் போல.:)
பெரிய பயில்வானின் வேலையால் வந்த வினை :( உங்களை சிரமப் படுத்தி விட்டது.
அன்பு ஶ்ரீராம், நலமுடன் இருங்கள். எங்க வீட்டுக்கு 55 வயசாச்சுமா. 1972 ல கட்டினது. அதுவும் தாத்தா பாட்டி , பார்த்து பார்த்து கட்டினது. அவர்களின் 80வயதுக்குப் பிறகு வாழ இந்த வீட்டைக் கட்டினார்கள். நாங்கள் வாரிசு மட்டுமே:) வீட்டில் மின்சார வேலை பார்த்தவர் காண்டிராக்டில் கோட்டை விட்டார்.
ஆமாம் மா. எலிகளின் சைஸ் பெரிதாகிப் பூனைகள் சிறுத்துவிட்டன.''சில இடங்களில் மதிப்பதே இல்லை. சில இடங்களில் நட்பாகவே இருக்க ஆரம்பித்து விடுகின்றன!""""""
ஹாஹாஹா. சமாதானக் கொடிகள் பறக்கும் காலமா.:))) மாறித்தான் விட்டது!
அச்சோ அதை ஏன் கேட்கிறீர்கள். இப்போது கூட நாங்கள் விமானத்தை விட்டு இறங்கியதும் செல்வது ஒரு விடுதியை நாடித்தான். சர்வ செக்கப் முடிந்தபின் தான் வீடு வருவோம். நீங்கள் மின் வேலை கற்றுக் கொண்டது மிக உன்னதமான விஷயம். சர்வ ஜாக்கிரதையாக இருங்கள். நன்றி மா.
ஆஹா. சரியான இடத்தில் இந்தக் கதையை நினைவு படுத்தினீர்கள். ரொம்பப் பரிதாபம் அந்தக் கதை. நீங்கள் சொல்வது உண்மைதான். விவேக் கம்பெனியில் தான் புது வருட விற்பனையில் வாங்கினோம். நல்ல வேளை வீட்டுப் பெரியவர்கள் மறைந்த பிறகு இந்த மின் தொல்லை ஆரம்பித்தது. நினைத்தாலே நடுங்குகிறது.
வரணும் அன்பு வெங்கட். எல்லாத் தொல்லைகளையும் சமாளிக்கும் தெம்பு அப்போது இருந்தது. இப்போது முடியாது. நன்றி மா.
அன்பின் மாதேவி, நன்றி மா. இப்பொழுது நல்ல முறையில் சீர் செய்து எல்லாம் நலம். என்னால் தான் அங்கே இருக்கக் கொடுப்பினை இல்லை.நலமாக இருங்கள்.
Post a Comment