மே 31ஆம் தேதியும்.
மே 17 நிகழ்வுகளை முன்பே பதிந்து விட்டேன்.
கீழ நத்தம் கிராமத்தில் 1943 இல் நடந்த அருமையான
சிறப்பான நிகழ்ச்சி. அந்தக் காலத்துக்கே உரிய
சுவையோடு நடந்தேறியது.
சாரட் வண்டி , மாப்பிள்ளை ஊர்வலம்,
சம்பந்தி பந்தாக்கள், பரிவு பாசம் இவற்றோடு
கலகலப்பாக ,நிகழ்ந்த சிறப்பு.
இவற்றை வர்ணித்து சொன்னவர் என் அம்மாவின்
பாசமான தம்பி. இல்லாவிட்டால் இந்த நிகழ்வுகள் எனக்குத்
தெரியாமலே போயிருக்கும்.
மாமாவுக்குக் குறிப்புகள் எழுதும் வழக்கம் இருந்ததால்
அதைப் படித்த எனக்கு இவ்வளவு விவரங்கள் தெரிய வந்தது.
நல்லதொரு ஆய்வுக் கட்டுரைக்கு வேண்டிய
குறிப்புகள். அந்தந்த தேதிகளில் பதிவு செய்திருக்கிறார்
நடந்தபோது அம்மாவின் தம்பிகள் முறையே 13, 11,4,2 என்ற வயதில் இருந்தார்கள்.
அம்மா அவர்களை எவ்வளவு நேசித்தார் என்று அனுமானிக்கவே முடியாது.
அக்காவுக்காக என்ன வேண்டுமானாலும் சேவை செய்ய அவர்கள்
தயார். நான் கண்கூடாகப் பார்த்த பாசம். அவர்கள் இல்லாமல்
எங்கள் அனைவரின் வாழ்வும் சிறந்திருக்குமா
என்று எண்ணிப் பார்க்க முடியாது. வாழ்க வளமுடன்.
நால்வர் ஶ்ரீ அம்பிமாமா, ஶ்ரீராமசாமி மாமா, ஶ்ரீ கோபு மாமா, ஶ்ரீ ஶ்ரீனிவாசன் மாமா. இன்றும்( 85 வயது)என் நலனை விசாரிக்கும் கடைசி மாமா ஶ்ரீனிவாசன். கீழனத்தம் வீரராகவன் பெயரைச் சொல்லும் அருமைப்
புத்திரர்கள்.
முன்பெல்லாம் சித்திரை வைகாசியில் திருமணங்கள் நிச்சயிக்கப்படும்.
பள்ளி விடுமுறை நாட்களில் சங்கடம் இல்லாமல்
பெற்றோர் கலந்து கொள்வதற்காகச் செய்யப்படும் ஏற்பாடு இது.
என் வீட்டுத் திருமணங்கள் எல்லாம் தை மாதத் திருவிழாக்கள்.
அனைவரும் சிறப்புடன் வாழப் பிரார்த்தனைகள்.

1 comment:
மே மாதத் திருமணங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் சாதாரணமாக அக்னிநட்சத்திரத்தில் திருமணங்கள் செய்ய மாட்டார்கள், இல்லை?
Post a Comment