Monday, May 18, 2026

2012 இல் கூடிய தமிழ்ப் பதிவர்கள் மக்கள் சந்தை. (14 வருடப் பழையப் பதிவு)

வல்லிசிம்ஹன்




Monday, August 27, 2012

வெற்றிகரமாக நடந்த பதிவர் மாநாடு..நன்றி

வந்துவிட்டோம்
தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா.
விருது வாங்கிய திருமதி ரஞ்சனி
சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற  பெரியவர்கள்
திரு  செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும்
விழா மேடை
வீடுதிரும்பல் மோகன்குமார்


 காத்திருந்து நிகழ்ந்தேறிய  பதிவர் திருவிழாவின்  படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே  என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு  ஒரு     மகிழ்ச்சி.

பதிவர்கள்  அனைவரையும்   சந்தித்த   சந்தோஷம்.

பெரியவர்களை வணங்க முடிந்தது    இன்னோரு ஆநந்தம்.

நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம்.

கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா,  சுபாஷினி
தூயாக் குட்டி,அவள் தம்பி
எல்.கே,
பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி  ,
சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார்  என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம்

அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந்த நன்றி 
மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது நேற்று.
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்.
வாழிய பாரத மணித் திரு நாடு.
வந்தே மாதரம்.




 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

9 comments:

ஸ்ரீராம். said...

அது ஒரு இனிய பொற்காலம்!  என்ன ஒரு விழா..  இரண்டாவது விழாவில் கே ஜி ஜி கலந்து கொண்டார் என்று நினைவு.

ஸ்ரீராம். said...

அதில் உள்ள பல பதிவர்கள் இன்று பதிவுலகில் இல்லை.  புலவர் ராமானுஜம் போன்றவர்கள் இந்த உலகிலேயே இல்லை.

ஸ்ரீராம். said...

இந்த சந்திப்புக்கு அப்புறமோ அடுத்த சந்திப்புக்கு அப்புறமோ நீங்கள் கே ஜி ஜி இடம் நம்பர் வாங்கி என்னிடம் பேசினீர்கள்!  அது ஒரு நவராத்திரி நேரம்.  என்னையும் பாஸையும் கொலுவுக்கு அழைத்தீர்கள்.

கோமதி அரசு said...

பதிவர் சந்திப்பு விழா படங்கள் மகிழ்வை தருகிறது.
லட்சுமி அக்கா எப்படி இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. முன்பு அமைதி சாரல் அவர்களை பற்றி சொன்னார்கள், அப்புறம் விவரம் தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம், ஆமாம். உங்களால் வரமுடியவில்லையே உங்களுக்கு ரொம்ப வருத்தம். கொலுவில் உங்கள் இருவரையும் சந்தித்தது மிக மிக மகிழ்ச்சி. நல்ல மழை என்று நினைவு.சிங்கம் இருந்தார்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் மா. தமிழ்மணம் இருந்த போது எல்லோரும் பேசிக்கொண்டோம். பிறகு தனித்தனி. எங்கள் ப்ளாக் சிறப்பாக நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஶ்ரீராம். பாசுக்குப் பிறந்த நாளோ? ஏதோ கனவு போல நினைவு., க்ரோம்பேட்டையில் இருந்தீர்கள் இல்லையா.எல்லோரும் நலமாக இருக்கணும் பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதிமா, வாழ்க வளமுடன். தமிழ்மணம் எல்லோரையும் அணைத்துக் கொண்டிருந்தது. லக்‌ஷ்மி மா பற்றிய விவரம் தெரியவில்லை. சாந்தி மாரியப்பன் இன்னும் எல்லோருடனும் தொடர்பில் இருக்கார் என்று முக நூல் வழியே தெரிந்து கொண்டேன். கயல் கூட பதிவு எழுதிக் கொண்டிருந்தார். எல்லோரும் நலமாக இருக்கட்டும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

திண்டுக்கல் தனபாலன் கூட ஒரு படத்தில் இருக்கிறார்.

நயாகரா 2

வல்லிசிம்ஹன் நயாகராப் பயணம்  முடிவானதும் வண்டியையும்  தயார் செய்தார்கள்.  முதல் பார்வை  பக்கத்தில் போனால்.....     பொங்கும் பிரவாகம் நீல உறை...