Sunday, May 24, 2026

தாத்தா பாட்டி எக்ஸ்பிரஸ். 2008ஆம் வருடம்.

வல்லிசிம்ஹன்

293,பயணமா ..மீண்டுமா... 2008 தை மாதம்

உருண்டோடும் நாளில்,கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா? என்று பத்மினி கேட்பார் 

 சம்சாரம் ஒரு சாகரம்னு தெரியும்.
நம்ம சம்சாரம் எல்லாம் சாகரத்தைத் தாண்டி இருக்கிறதுனால் ஒவ்வொரு சாகரத்தையும் தாண்டிப் போய்த்தான் சம்சாரத்தைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

எங்க சம்சார சாகரத்தில லேட்டஸ்ட் ஆகப் படகில் குடியேறிய குட்டிப்பாப்பா
 ஒருவர் துபாயில் இருக்கிறார்:)

அவரைப் பார்க்கவும் கொஞ்ச நாட்கள் கொஞ்சவும் ,
சென்னையிலிருந்து கிளம்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.


இப்பத்தான் திரும்பி வந்தோம். என்ன, ஒரு எட்டு மாதம் ஆகிறது.
மறுபடி வீட்டுக்காவல்,மின்சார,தொலைபேசி கட்டண ஏற்பாடு என்று ஒரு சுத்து போக வேண்டும். ஏன் உங்களுக்கு இந்த ஈசிஎஸ் இதைப் பற்றித் தெரியாதான்னு நீங்க கேக்கலாம்.
இன்னும் அவ்வளவு முன்னேறவில்லை நாங்க.:) (2013க்குப் பிறகு எல்லாம் மாறிவிட்டது)


உண்மையான ரிடையர்டு வாழ்க்கை நடத்துவது நான். 
சுறுசுறுப்புக்கு இன்னோரு பெயர் சிங்கம். ஒரு இடத்தில உட்காருவேனா என்பது போல் பார்வை.

'சும்மா இரு'ன்னு யாரோ எப்பவோ அதட்டுப் போட்டதில் உட்கார்ந்தவள் 
தான். இப்ப எல்லாம் நகருவதற்கு நாலாயிரம் கேட்கிறேன்.!

இதெல்லாம் சரிவருமா?. இயங்கினாத்ததானே உலகம்.
நானென்ன தக்ஷிணா மூர்த்தியா.!

கண்ணை மூடித் தியானம் செய்துகொண்டால் எல்லாம் நடந்துவிடுமா.
அவர் சங்கல்பம் அவருக்கு எல்லாம் ஓடும்,ஆடும்.:)

நமக்கு நாமதான் ஓடணும்,
வேலை செய்யணும்.இப்படியாகத்தானே நாம் சும்மா 
கணினில ,இணையத்தில,வலைப் பதிவில
மொக்கை போடுவது,
இதைப்
பிடிக்காதவர்கள் செய்த ஏற்பாட்டினால் மீண்டும் புறப்படுகிறது க்ராண்ட்பேரன்ட்ஸ் எக்ஸ்பிரஸ்.:):)))))))))))))))))))))))))))))))))))))))))))))))


எல்லாம் சந்தோஷம்தான். ஆனா இந்த வலைகள் பக்கம் வர முடியுமா என்றுதான் தெரியவில்லை.
நமக்கோ இது புதிதாகத் திருமணம் செய்த தம்பதிகள் மாதிரி இணையத்தோடு
உறவாடும் பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது!
 காலங்கார்த்தாலேனு ஆவர்த்தனம் ஆரம்பித்தால்,குளியல், உணவு,
குட்டித்தூக்கம், வங்கி,கோவில் இத்யாதிகளுக்கு நடுவில் யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று படிக்காவிட்டால், பதில் போடாவிட்டால்.......
என்னவோ சாப்பிடாவிட்டால் யாருக்கோ கைகாலெல்லாம் பறக்குமாமே:)
அப்படி ஆகிப் போகிறது.!!

ஏதோ தமிழ்மணத்தில சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலேயும் ஆகிவிட்டது.
தத்தித் தத்தி 300 பதிவுகளாவது போட்டு விடலாம், அப்புறம் மீண்டும்
ஆட்டம் ஆரம்பிக்கலாம்னு பார்த்தால், நடுவில உனக்காச்சு எனக்காச்சுனு பேத்தி பிடித்து இழுக்கிறார்.

நாம் நம் தனித்துவத்தை எப்பவும் விடக்கூடாது இல்லையா.
மீண்டும் பார்க்கலாம்.




8 comments:

ஸ்ரீராம். said...

ஓ..  அப்பவே இந்த அல்லாட்டம் இருந்திருக்கிறதா?  ஆரம்பத்திலேயே அலைச்சல், அலுப்பு தாமதம்..   நாங்கள் எல்லாம் 2009 ல்தான் வந்தோம்.

ஸ்ரீராம். said...

தமிழ்மணம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? அதே போல வலைச்சரம்.. அதுவும் ஒரு பெருமைமிகு பக்கம்.

கோமதி அரசு said...

அருமையான எழுத்து. முன்பு படித்த நினைவுகள் வந்து போகிறது.


//நமக்கோ இது புதிதாகத் திருமணம் செய்த தம்பதிகள் மாதிரி இணையத்தோடு
உறவாடும் பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது!//

ஆரம்பத்தில் அப்படித்தான் இணையத்தோடு உறவாடும் பழக்கம் அதிகம் இருந்தது. உடனுக்கு உடன் பதில் தந்து அரட்டை அடிக்கும் பழக்கம் பிடித்து இருந்தது.

'//சும்மா இரு'ன்னு யாரோ எப்பவோ அதட்டுப் போட்டதில் உட்கார்ந்தவள்
தான். இப்ப எல்லாம் நகருவதற்கு நாலாயிரம் கேட்கிறேன்.!//

எனக்கு இப்போது இப்படித்தான் இருக்கிறது வீட்டை நகரவே பிடிக்கவில்லை . அப்படியே பல யோசனைகளுடன் நாட்கள் நகருகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பா. நாங்க எல்லாம் 2004 இல் ஆரம்பித்தோம். முதலில் மரத்தடி இருந்தது. பிறகு தமிழ்மணம்.தமிழ் எழுதி, இ கலப்பை தரவிறக்கி எழுதணும்.:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஶ்ரீராம். எல்லாப் பெரியவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். வலைச்சரத்தில் எழுதுவது பெரிய பெருமை.தமிழ்மணம் 2004இல் ஆரம்பிக்கப் பட்டது.அதுக்கு முன்னால் இணையம் இருந்தாலும் ஒருங்கிணைத்தது தமிழ்மணம் தான்.பெரிய வரலாறுமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதி, வாழ்க வளமுடன். அருமையான பழைய நினைவுகள். நமக்கு அப்போது வீட்டில் துணை இருந்தது. அதனால் வெளிவேலை சுலபமாக இருந்தது. இப்போது எனக்கும் ரொம்பத் தொந்தரவு செய்தால் தான் வெளியே வரத் தோன்றுகிறது. மீண்டும் வெளியே வருவோம்.

நெல்லைத் தமிழன் said...

இணைய தளத்திற்கு அப்போது பொற்காலம். நிறையபேர் நிறைய எழுதினார்கள். தமிழ்மணம் எல்லோர் பதிவுகளுக்கும் போக வைத்தது.

இப்போ அந்த ஆர்வம் குறைந்துவிட்டது என்று தோன்றுகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பா முரளி. குறைந்துதான் விட்டது. நம் எங்கள்ப்ளாக் எல்லோரையும் இணைக்கிறது இல்லையா பா. ஶ்ரீராமுக்குத் தான் நன்றி சொல்லணும்.

மீட்கப் படும் புகைப்படங்கள்

வல்லிசிம்ஹன் 15.5/1996 எல்லோரும் வளமாக வாழ வேண்டும் மகளின் திருமணத்தின் போது எடுத்த படம். அருமையான  தருணங்கள் 30 வருடங்களுக்கு முன். 1965 வா...