Blog Archive

Sunday, March 27, 2022

. தயிர் சாதம். 2600. 26/3/2022

   எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
முன்பு ஒரு பதிவில் , எங்கள் வீட்டில் பாட்டி செய்யும் முறையாகத்
தயிர் சாதம் பற்றி எழுதிய நினைவு இருக்கிறது.
   பால் ,வெண்ணெய், தயிர் எல்லாம்
சேர்த்து ஒரு நரசிம்ம ஜயந்திக்கு  சூடான
தயிர் சாதம் பிசைந்த  ஞாபகம்.
இவர்கள் பாலிலேயே  தயிர் உறை குத்தி செய்திருக்கிறார்கள்.

பாட்டிக்குச் சுடச் சுட தயிர் சாதம் சாப்பிட வேண்டும்.
ரஜச குணம் . ஆற வைத்து சாப்பிடுபவர்கள்
அசத்தாக இருப்பார்கள்
என்று வேறு.
மாறாக என் மாமியார் எல்லாமே ஆறி தான் சாப்பிடுவார்.
பாட்டியும் மாமியாரும் வட துருவம் ,தென் துருவம்.

இருவரும் எப்படித் தான் ஒன்றாக இருந்தார்களோ.:)))

அனைவரும் வாழ்க வளமுடன்.

21 comments:

ஸ்ரீராம். said...

என் கணினியில் சத்தமில்லாமல் வைத்துப் பார்த்தேன்.  அதிகாலையில் தயிர் சாதமா என்று நினைத்துப் பார்க்க ஆரம்பித்தவன், பார்க்கப் பார்க்க இப்போது ஒரு கரண்டி தயிர் சாதம் கிடைத்தால் தேவலாம் என்கிற நிலைக்கு வந்து விட்டேன்!!!

ஸ்ரீராம். said...

சூடான சாதத்தில் தயிரோ மோரோ ஊற்றிச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வரும் என்று எங்கள் வீட்டில் சின்ன வயசிலேயே பயமுறுத்தி வைத்திருந்தார்கள்.  எனவே இன்று வரை சூடான சாதத்தில் தயிர்/மோர் ஊற்றியதில்லை!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

நலமுடன் இருங்கள் மா.
ஓ இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லையா,.

திருமதி சௌம்யா அழகாகச் சொல்கிறார்.
நல்ல திறமை தான்.நாம் கமெண்ட்
போட்டால் பதிலும் சொல்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

சூடான சாதத்தில் மோர் விட்டால் நன்றாகத் தான் இருக்கும் பா.
மோர்க்குழம்பு, மோர் ரசம்
சூடாத்தானே சாப்பிடுவோம்:)

பாட்டிக்கு அது வழக்கம். சிங்கத்துக்கு
தயிர்சாதத்தில் ஐஸ் தண்ணீர் விட்டுக் கொடுக்கணும்!!

எனக்கு அது பல் கூசும்.

Geetha Sambasivam said...

தயிர் சாதம், துண்டம் மாங்காய் ஊறுகாய் அல்லது வத்தக்குழம்புடன் ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! இந்தக் காணொளியை மத்தியானமாப் பார்க்கிறேன்.

KILLERGEE Devakottai said...

இனி வெயில் காலம் தயிர் சோறுதான் நன்று

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் அம்மா நம் வீட்டுலும் வெண்ணை, பால், தயிர் உறை குத்தி பேருக்கு...அது போல தயிர் மீது இருக்கும் ஏடையும் போட்டு தயிர்சாதமா வெண்ணையா என்று சொல்லும் அளவு செய்வதுண்டு. என்றேனும் விசேஷங்களுக்கு...

வீடியோ பார்க்கிறேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் ஆமாம் எங்கள் வீட்டிலும் சொல்வதுண்டு...சூடான சாதத்தில் தயிர் சேர்த்தால் மஞ்சள்காமாலை வரும் என்று. அது சூடான சாதத்தில் தயிர் கலந்தால் பிரிந்திவிடும் என்பதால் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிற்து. நானும் இன்று வரை சூடு சாத்த்தில் மோர் தயில் விட்டுக்க் கொள்வதில்லை

ஆனால் சூடான சாதத்தில் பால் சேர்த்து மைய பிசைந்து பேருக்கு தயிர் விட்டுச் செய்யும் தயிர்சாதம் நன்றாக இருக்கும்..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நானும் மத்துதான் பயன்படுத்துவேன் அது போல ஏதாவது ஒன்றுதான் சூடாக கூடியவரை சூடு சாதம் கொஞ்சம் ஆறிய பால்....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வீடியோ கூப்பர்.

கீதா

Geetha Sambasivam said...

பாலைச் சேர்த்தே சாதத்தைக் குழைய வடிப்பேன். அப்படியும் செய்யலாம் இல்லையா? தெரியலை. ஆனால் இதில் சொன்னாப்போல் ஒரு தரம் காலம்பர சாப்பிடப் பண்ணிட்டு அப்புறமாச் சொல்றேன். வீடியோவை இப்போத் தான் பார்த்தேன்.

கோமதி அரசு said...

காலையில் பால் ஊற்றி பிசைந்து வைத்தாலே இந்த நேரத்தில் மதியம் தயிர் சாதம் ரெடியாகி விடும்.
இது மண் பானை என்பதால் இரவு பால், தயிர் விட்டு வைத்தால் காலை ரெடியாகி விடும்.ஊருக்கு எங்காவது கொண்டு போக வேண்டும் என்றால் தயிர் சாதம் இப்படித்தான் பிசைந்து வைப்போம். தாளிதம் ஒரு டப்பாவில் வைத்து கொண்டு மதியம் சாப்பிடும் போது கிளறி கொள்விம். மோர் மிளகாய் , வடுமாங்காய், நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட நன்றாக இருக்கும்.
இங்கு பாதி நேரம் நான் தயிர் சாதம் தான் சாப்பிடுகிறேன். ஒரு துவையலை அரைத்து கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

துண்டம் மாங்காய், மாவடு தயிர் சாதம்
எல்லோருக்கும்
எல்லா நேரத்திலும் பிடித்த உணவு.

பாட்டியும் ,இது போலச் சாதம் ,பிரயாணங்களுக்குக்
கட்டிக்
கொடுப்பார். கூடவே ஒரு பாட்டில் நிறைய
புளி மிளகாய்.:)
அமிர்தமாக ருசித்த நாட்கள்.

என்றும் நலமுடன் இருங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா, நீங்கள் சொன்னது போலப்
பாலில் செய்த சாதம்,
''கறவைகள் பின் சென்று''க்குச்
செய்வதுண்டு.

வித விதமாகவே தயிர்சாதம் நு ஒரு பதிவே
போடலாம் போல இருக்கே:)
திருமதி யூடியூப் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டார்.

அவருக்குக் கொத்தமல்லியும் ,பச்சை மிளகாயும் நிறையப்
பிடிக்கும் போலிருக்கிறது:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
வெய்யில் நிறைந்த காலத்தில்
குளிர்ந்த உணவு நிறைய எடுத்துக்
கொள்ள வேண்டும்.
நலமுடன் இருங்கள் அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.

''நம் வீட்டுலும் வெண்ணை, பால், தயிர் உறை குத்தி பேருக்கு...அது போல தயிர் மீது இருக்கும் ஏடையும் போட்டு தயிர்சாதமா வெண்ணையா என்று சொல்லும் அளவு செய்வதுண்டு''

ஆஹா. இது ஸ்பெஷல் தயாரிப்பு இல்லையா.
நன்றாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,

நீங்கள் சொல்லி இருப்பதை நேற்று இரவு செய்து ,இதோ இப்போது
சாப்பிட்டாச்சு:).
''ஆனால் சூடான சாதத்தில் பால் சேர்த்து மைய பிசைந்து பேருக்கு தயிர் விட்டுச் செய்யும் தயிர்சாதம் நன்றாக இருக்கும்..''

நன்றாகவே இருந்தது.

வல்லிசிம்ஹன் said...


மத்து வைத்து மசித்து தயிர் உறை குத்தி
நன்றாகவே ருசியாக இருந்தது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.

;;காலையில் பால் ஊற்றி பிசைந்து வைத்தாலே இந்த நேரத்தில் மதியம் தயிர் சாதம் ரெடியாகி விடும்.''

அம்மா இப்படித்தான் செய்வார்.
கடுகு ஒரு கரண்டியில் தாளித்து வைத்து
மோர்மிளகாய் வறுத்து வைக்கும் போதே
சாப்பிட ஆசை வந்துவிடும்.

வயிற்று இதமானது தயிர் சாதம்:)
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

தயிர் சாதம் என்றைக்கும் எப்போதும் சாப்பிட ஏதுவானது. செய்முறை காணொளியை பார்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
அங்கே வெய்யில் ஆரம்பித்திருக்குமே.
தயிர்சாதம் எப்பொழுதும் நன்மை.
நன்றி மா.