Blog Archive

Saturday, March 26, 2022

மீண்டும் டி எம் எஸ் 100

வல்லிசிம்ஹன்


அனைவரும் என்றும் ஆரோக்கியமாக இருக்க இறைவன் அருள வேண்டும்.

உற்சாகத்துக்கு



ஆனந்தத்துக்கு


  கணவன் மனைவிக்கு


காதலர்க்கு





ஸ்வர வரிசை பாடி அசத்தியிருக்கும் 
நீயே எனக்கு என்ற பலே பாண்டியா படப்பாடல்,
எனக்கு  ஸ்ரீராம் எபியில் பதிந்திருக்கும் கற்பகவல்லி
பாடலை நினைவுக்குக் கொண்டுவரும். 
ராக தாளங்கள் அவ்வளவாகத் தெரியாது.
இருந்தாலும் ரசிப்பதில் தடை இல்லை.:)

10 comments:

Geetha Sambasivam said...

எல்லாமே நினைவை விட்டு நீங்காத பாடல்கள். அருமையான பகிர்வு. ஒரு காலத்தில் திரும்பத் திரும்பக் கேட்டு ஆனந்தித்து இருக்கோம். அதுவும் நம் வீட்டில் வானொலிப் பெட்டி இல்லாமல் அடுத்த வீட்டில் போடும்போது அதைக் கேட்கும் சுகம் இப்போல்லாம் சொந்த வானொலி/காணொளியில் கூடக் கிடைக்காது. ரொம்ப நன்றி ரேவதி, பழசை எல்லாம் நினைவூட்டியதற்கு.

ஸ்ரீராம். said...

நேற்றிரவு ஒரு க்ரூப்பில் பத்து டி எம் எஸ் பாடல்கள் ஆடியோ வந்து விழா, சிலவற்றை கேட்டுவிட்டுப் படுத்தேன்.  உங்களுக்கும் அனுப்பலாமா என்று யோசித்தேன்.  சரி அனாவசியமாக மொபைலில் வெயிட் சேர்க்க வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

கற்பகவல்லி பாடலின் ஆரம்பம் ஆனந்த பைரவி.இந்தப் பாடலின் ஆரம்பமும் ஆனந்த பைரவியாயிருக்கும்!  அதுதான் ஒன்று போல தோன்றி இருக்கும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
இனிய காலை வணக்கம்.

ஆமாம். வானொலியின் முழு மகிமையை அனுபவித்தவர்கள் நாம்.

பக்கத்து வீட்டிற்குப் போய்க் கேட்டதும் சுவை.
அதற்காக அம்மாவிடம் பேச்சு கேட்டதும் சுவைதான்:)

பாடல்களைக் கேட்டு ரசித்ததற்கு மிக நன்றி மா.பழசை ரசிப்பதற்கும் நமக்கு நேரம் இப்போது கிடைக்கிறது.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்
மிக நன்றி மா.
ஆமாம் லோட் ஆகிட்டதுன்னா கஷ்டம்.
வேணும் என்பதை இணையத்தில் கேட்டுக்கலாம்.

நான் என் நினைவுக்காகப் பதிந்தேன் மா.
ஆமாம் ஆனந்த பைரவி என்று
பாட்டிலியே வரும்.
அதாகத்தான் இருக்கும்.
மிக நன்றி மா.
நலமுடன் இருங்கள்.
மாமாவீட்டு சுபத்தில் நேராகக் கலந்து கொண்டிருக்கிறேன்.

கோமதி அரசு said...

அனைத்து பாடல்களும் மிக அருமை.

எந்தனை முறை கேட்டாலும் அலுக்காத இனிமையான பாடல்கள்.

நவராத்திரி பாடல் சாவித்திரியின் குரலும், நடிப்பும் அருமை.

இருவர் உள்ளம், பாலும் பழமும் பாடல்கள் எல்லாம் அருமை.
கேட்டு மகிழ்ந்தேன்.

Thulasidharan V Thillaiakathu said...

நவராத்திரி பாடல் கேட்டதில்லை. மற்றவை எல்லாம் கேட்டிருக்கிறேன் அம்மா

நீயே எனக்கு என்றும் நிகரானவன்...பாட்டு செம காமெடி பாட்டு ரசித்த பாடலும் கூட. பாடுவது கஷ்டம் அதுவும் ஒரே டேக்கில். அப்பொதெல்லாம் இப்போது போல கட் கட் பண்ணிக் கோர்க்க முடியாது இல்லையா. சுசீலா அவர்கள் ஒரு பேட்டியில் சொன்ன நினைவு. ஹேட்ஸ் ஆஃப் டு டி எம் எஸ்.

ஏதோ ஒரு நிகழ்ச்சியில் ஒரு பையன் மற்றொரு பையனுடன் சேர்ந்து குரலை மாற்றி எல்லாம் பாடியிருந்தார்கள். திறமைசாலிகள்!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எம் எஸ் வியையும் சொல்லியே ஆக வேண்டும் என்ன ஒரு இசையமைப்பு. ரொம்ப எளிமையான மனிதர்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடல் அழகான சுத்த தன்யாசி.

என்ன அழகான ராகம். விஸ்வநாதன் ராமமூர்த்தி கோம்போ ம்யூசிக்!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன் மா,

என்றும் நலமுடன் இருங்கள்.
உண்மைதான் மா. எம் எஸ் வியின் சையும்,
கண்ணதாசன் வரிகளும், டி எம் எஸ் குரலும்
என்றும் இனிமைதான்.

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ,

சுத்த தன்யாசியா. சரிம்மா.
நீங்கள் வந்து சொல்வீர்கள் என்று தான் எதிர்பார்த்தேன்.
நன்றி மா.