ஊரைச் சுற்றி வம்பு பிடித்து.............
இன்னொமொரு வீகெண்ட் முடிந்தது. 14/7/2008
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெள்ளி காலை, வீட்டுக்கு வெளியே இருக்கும் /////corridor
வராந்தா,வழிப்பாதையில் இருந்த(நான்கு ஐந்து ஃபயர் அலார்ம் இருக்கு)
மணி விடாமல் ஒலித்தது. நான் வந்த பிறகு இவ்வாறு ஒலிப்பது இது நாலாவது தடவை. நாந்தான் அவசர அவசரமாக வெளியே வருவேன். காரிடார் நிசப்தமாக இருக்கும்.
இந்த அமைப்பு எனக்குப் புரியவில்லை. ஏன் ஒருத்தருக்கும் பயம் கிடையாதா என்று இங்கே கேட்டால், அது அலார்ம் சரியில்லைம்மா என்கிறார்கள்.
அப்புறம் தெரிந்தது,யாரோ ஒருத்தர் , வெளி ஆள் புகைபிடித்திருக்கிறார் என்று.
அப்ப உண்மையாவே ஏதாவது நெருக்கடி வந்தால்(வராம இருக்கணும் சாமி)
மெத்தனமாகவே இருந்து விடுவார்களா:(
இந்த பில்டிங்கில் தமிழ்க்காரர்கள் 4 பேர் இருப்பார்கள் . மற்றவரெல்லாம் ஐரோப்பியர்கள்,மற்றும் அண்டை நாட்டவர்கள்.
பகல் இரவென்று வேலைக்குப் போய் வருபவர்கள், பூட்ஸ் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
மத்தபடி அமைதியான இடம்தான். பக்கத்து வீட்டுகாரர் கூட ராத்திரி 11 மணிக்கு ட்ரில்லிங் செய்வதை நிறுத்தி விட்டார்:)
அவர் பைலட்டாக வேலை செய்பவர். அவருக்கு விமானம் ஓட்டும் போது விதவித உத்திகள் தோன்றுமாம்:).அப்படியே நினைவில் பதிந்து கொண்டு வருகிற வழியில் ரெண்டு கட்டை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.
சரியாக என் தலைப் பக்கம் ,
அவங்க வீட்டுச் சுவற்றின் பக்கத்தில் 10 மணிக்கு நான் தூங்கும் நேரம்,சரியாகப் பார்த்து அந்த வண்டு செய்யும்ரீங்காரம் மாதிரி சவுண்டு ஆரம்பிக்கும்.
எனக்குக் ( கனவில்) பெருச்சாளி பக்கத்தில் உட்கார்ந்து பிராண்டுவது போல
கற்பனை தோன்றும்.
அப்புறம் கட்டிடக் காவலுக்கு இருப்பவரிடம் சொல்லி ஒரு மாதிரி அதைச் சமாளித்தோம்.
இப்படியாகத் தானே ஊரை விட்டுக் கிளம்ப இன்னும் இரண்டே வாரம் இருக்கும் இந்த சமயத்தில் திடீரென நாலாவது அபார்ட்மெண்டில் இருக்கும்
ஒரு எகிப்து நாட்டுப் பெண் வந்து கதவைத் தட்டினாள். அவளையும் அவள் குழந்தையையும் மாடியில் நீச்சல் குளத்தருகே பார்த்த ஞாபகம்.
மொழி தெரியாததால் புன்னகையோடு நிறுத்திக் கொள்வேன்.
இந்த மதிய வேளையில் என்ன பிரச்சினையோ தெரியலையே என்று எனக்கு யோசனை.
குழந்தையும் கூட இருந்தது. அவள் சொன்ன அரை குறை இந்தியின் விஷயம் இதுதான்.
அவர்கள் வீட்டில் வேலை செய்யும் குணா திடீரென்று தன் கையில்
வைத்து இருந்த பாத்திரத்தை விட்டெறிந்து விட்டாளாம்.
பெருக்கும் துடப்பத்தையும் தூக்கிப் போட்டு விட்டாளாம். கத்த வேறு செய்கிறாளாம்.
என்னவென்று விசாரிக்க எங்க மருமகளைக் கூப்பிட வந்திருக்கிறாள்.
நான் பாப்பாவைப் பார்த்துக்கிறேன் ,நீ என்னவென்று விசாரித்துவிட்டு வா,
எதுக்கும் தள்ளி நின்னே பேசும்மான்னு சொல்லி அனுப்பினேன்.
நிறைய இடங்களில் வீட்டு வேலை செய்பவள் அந்த குணா என்கிற பெண்.
நல்ல சம்பளம். நாலைந்து பெண்களோடு வில்லா எனப்படும் குடி இருப்பில் இருப்பவள்.ஆனால் கொஞ்சம் முரடு.
கறார் ஆசாமி.
மருமகள் போய்விட்டு வந்து சொன்ன கதை இதுதான்.
நாலாம் வீட்டுக்கு ப் பெற்றோர்கள் வந்திருப்பதால் வேலை அதிகரித்து விட்டது.
அதற்காகப் பணம் கூடுதலாகத் தரச் சொல்லி கேட்டிருக்கிறாள் குணா.
''சரோஜா பாத்திரம் நிக்காலோ'' அப்டீன்னு சொல்கிறதாக நினைத்துக் கொண்டு மாமியார்க்காரி இன்னும் நிறைய பாத்திரங்களை, அலமாரியில் இருந்து எடுத்துப் போட்டு இருக்கிறாள்:)
''இத்னா பஹுத் காம்!!, ஹம்
'அவுர் குச் பைசா ,800 டிர்ஹம் ''னு அவள் சொன்னதை
அந்த அம்மா புரிந்து கொள்ளாமல் இன்னும் வேலை கொடுக்க இவளுக்குக் கோபம் வந்து கையிலிருந்ததை விட்டெறிந்ததும்.
மாமியாரும்,மாமனாரும் வெளியே வந்துவிட்டார்கள்:)
குணாவின் ஹிந்தி என் ஹிந்தியைவிட மோசம். அவள் அரபி, இந்தி கலந்து பேசுவாள்.
அவர்கள் புரிதலோ அதைவிட மோசம்.
நாளைக்குத்தான் தெரியும் குணா மறுபடி வேலைக்கு வருவாளா என்று 30ஆம் தேதியாச்சே. சம்பள நாள்.
தற்போது மெயிட்ஸ் மாநாடு லிஃப்ட் பக்கத்தில் நடக்கிறது. என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.!!
பயணக் களைப்பில் இருந்து வெளியே வர பழைய பதிவு 2008 இல் எழுதியதைப் பகிர்கிறேன்:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
8 comments:
கஷ்டம் தெரியாமல், பாஷை புரியாமல் மேலும் மேலும் பாத்திரங்கள்.. பாவம்தான் குணா... புன்னகைக்க வைத்த அனுபவம்.
2008-இல் ஒரு அனுபவம்... அனுபவங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் ஒரு செய்தி, ஒரு வித பாடம். தொடரட்டும் அனுபவங்கள், அவை தரும் பாடங்களும்.
வேலை ஜாஸ்தி... ஹா ஹா ஹா.. பெரும்பாலும் நேரத்தைப் பொறுத்துதான் சம்பளம், மிடில் ஈஸ்டில். அதாவது தினைம் ஒரு மணி நேரம். நேரம் அதிகமானால் சம்பளம் ஜாஸ்தி தரணும். 80 தினார் நார்மல் சம்பளம்தான் இரண்டு மணி நேர வேலைக்கு
அன்பின் ஶ்ரீராம், இதில வருத்தம் என்ன வென்றால் எனக்கும் குணாவுடன் பிரச்சினை வந்தது. ஏன் இவ்வளவு சமைக்கிறாய். எனக்கு தான் சிரமம் என்று பொரியத் தொடங்கினாள். உடனே சிங்கத்திடம் கேட்டு 25 டிர்ஹம் கொடுத்துவிட்டேன். அவள் வராவிட்டால் வீட்டில் எல்லா வேலையும் நின்றுவிடும். துணி உலர்த்தி, அயர்ன் செய்து , குளியலறை சுத்தம் செய்து என்று நீளும் வேலை. துபாய் விட்டு வரும்போது டிவி முதற்கொண்டு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வந்தோம்.
அன்பின் வெங்கட், உண்மைதான். வீட்டைவிட்டு வெளியே வந்தால் பலவித பாடங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. நாட்டை விட்டே வெளியே வரும் குணா போன்றவர்கள் பாடு மிக சிரமம். அவள் குடும்பம் நமது கீழை நாட்டில் இருந்தது. மகன் தினம் தொலைபேசி தொல்லை கொடுப்பான். பாவம். நன்றி மா.
ஆமாம். குணா, நாள் முழுவதும் வேலை செய்து ஊருக்குப் பணம் அனுப்புவாள். மகனுக்கு அவளிடம் இரக்கம். நம்ம முனியம்மா மாதிரி இருக்காம்மா என்று அனுதாபப் படுவான். நன்றி முரளி மா.
வேலைக்கார பெண் சொன்னதை புரிந்து கொள்லாமல் மேலும் பாத்திரங்களை போட நல்ல கதைதான்.
மொழி புரியவில்லை என்றால் கஷ்டம் தான்.
அன்பின் கோமதி வாழ்க வளமுடன். குணா நல்ல உழைப்பாளி. எங்கிருந்தாலும் நலமாக இருக்கட்டும். நன்றி மா.
Post a Comment