Wednesday, April 22, 2026

திருக்குறுங்குடி பயணம் ,வேரை நோக்கி...........பாகம்3


வல்லிசிம்ஹன்,
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
அப்போதெல்லாம் பயணம் என்பதே ஒரு கொண்டாட்டம் தான். எங்களின் அந்தப் பழைய 1957 மாடல் 'செவர்லே' (Chevrolet) காரில், ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாகப் பயணித்த அந்த நாட்கள் இப்போதும் கண்முன்னே வந்து போகின்றன. மிடுக்கான சீருடை அணிந்த டிரைவர் பக்கம் அமர்ந்திருக்கும் எனது அப்பாவும் பெரியப்பாவும், பின் இருக்கையில் அமர்ந்து கதைகள் பேசும் தாத்தா, பாட்டி, அம்மா மற்றும் அத்தை... எல்லாவற்றிற்கும் மேலாக, காரின் பின்புறம் மெத்தென்ற அந்த 'ட்ரங்க்' பகுதியில் அமர்ந்து கொண்டு, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்த எங்களின் அந்தச் சிறுவயது குதூகலம்!

"காலங்கள் மாறினாலும், பசுமை மாறாத சில நினைவுகள் நம் மனதில் என்றும் தங்கியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு இனிமையான பயணத்தை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.அப்போதெல்லாம் பயணம் என்பதே ஒரு கொண்டாட்டம் தான். எங்களின் அந்தப் பழைய 1957 மாடல் 'செவர்லே' (Chevrolet) காரில், ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாகப் பயணித்த அந்த நாட்கள் இப்போதும் கண்முன்னே வந்து போகின்றன. மிடுக்கான சீருடை அணிந்த டிரைவர் பக்கம் அமர்ந்திருக்கும் எனது அப்பாவும் சித்தப்பாவும், பின் இருக்கையில் அமர்ந்து கதைகள் பேசும் தாத்தா, பாட்டி, அம்மா மற்றும் அத்தை... எல்லாவற்றிற்கும் மேலாக, காரின் பின்புறம் மெத்தென்ற அந்த 'ட்ரங்க்' பகுதியில் அமர்ந்து கொண்டு, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்த எங்களின் அந்தச் சிறுவயது குதூகலம்!

"காலங்கள் மாறினாலும், பசுமை மாறாத சில நினைவுகள் நம் மனதில் என்றும் தங்கியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு இனிமையான பயணத்தை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.





செவர்லே ஸ்டேஷன் வாகன். நாங்கள் மூவரும் குட்டிப் பொண்ணும்
மிக சுகமாகப் பயணம் செய்த வண்டி. இந்த  டிரன்க்(நம்மூர்ல டிக்கி சொல்லலாம். அதுக்கு இங்க வேற அர்த்தம்)  தூங்க , சாப்பிட மிக வசதி.
இரண்டு பகுதிகளாகக் கதவு. கீழ் பாதி மூடி மேல் பாதி திறக்கலாம். ஆனால் தாத்தாவுக்கு அது பிடிக்காது. கார் கிளம்பியதும் முழுசாக மூடச் சொல்லிவிடுவார். எங்கள் சின்ன வடிவங்களுக்கு மிகப் பொருத்தம்:)


ஓ. இப்போது ஶ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறோம் இல்லையா.?

அங்கேயே முகம் கழுவி, பின்னல் ஜடை போட்டு பெரிய செண்டு மல்லி சரம் வாங்கி என் தலையை அலங்கரித்தார் அன்பு அம்மா.

பாட்டி, சித்தி,அம்மா எல்லோரும் ஆளுக்கு கொஞ்சம்  பூவைச் சூடிக்கொண்டார்கள். அங்கெல்லாம்  50, 100 என்றுதான் பூக்கணக்கு
சொல்வார்கள்.


திருக்குறுங்குடி காட்சி 1957

அக்ரஹாரம்.

இந்த மல்லிகைப்பூ வாசம் எப்பொழுதும் என்னைத் தொடரும்.

ஶ்ரீவில்லிபுத்தூரை விட்டுக் கிளம்பும்போது மதியம் மணி மூன்று ஆகிவிட்டது.
 வழிக்கு உணவாகப் பாட்டி  கொண்டுவந்திருந்த  முறுக்கு, வடை, ஶ்ரீவில்லிபுத்தூர் மடைப்பள்ளியில் கிடைத்த அழகர்கோவில் தோசை
எல்லாம்   எங்களுக்கு  விருந்தாகின.  நடுவில் சித்தப்பாவுக்குத் தலைவலி.அந்த தோசையின் மிளகு சுக்கு மணம் காருக்குள் சுற்றி வந்தது:)

தாத்தாவிடம் எப்பொழுதும் ஜெ அண்ட் ஜெ  டிசேன் மருந்துகள் இருக்கும்.
வழியில் நிறுத்தி ஒரு கோலி சோடாவும் வாங்கிக்
குடித்தபின்னர் சித்தப்பா கண்ணயர்ந்தார்.

இப்பொழுது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. வெறும் 120 மைலுக்கா
இத்தனை நேரம் எடுத்தது என்று. தாத்தா பாட்டிக்கு ரயிலில் சென்றே வழக்கம்.

இப்பொழுது காரில் செல்வது கொஞ்சம் களைப்பாகத்தான் இருந்தது.
வண்டி மிக சௌகரியம். இருந்தாலும்  மதியத் தூக்கம் விட்டுப் போன களைப்பில் தென்காசியில்  ஒரு  நிறுத்தம்.

குற்றாலம் செல்ல ஆசை இருந்தாலும் ,முடியாத காரணத்தால்
அங்கு நுங்கு, கடலை மிட்டாய் ,அந்த ஊர் அரிசி முறுக்கு என்று
அப்பா வாங்கினார்.  எப்பவுமே சீரியசாக இருக்கும் அப்பா
இந்தப் பயணத்தின் போது சித்தப்பாவுடன் சிரித்துப்  பேசி
மகிழ்வதைப் பார்க்க எங்களுக்கு மிக சந்தோஷம்.




No comments:

திருக்குறுங்குடி பயணம் ,வேரை நோக்கி...........பாகம்3

வல்லிசிம்ஹன், எல்லோரும் வளமாக வாழ வேண்டும். அப்போதெல்லாம் பயணம் என்பதே ஒரு கொண்டாட்டம் தான். எங்களின் அந்தப் பழைய 1957 மாடல் 'செவர்லே...