Thursday, October 03, 2024

2890நவராத்திரி நிலவரம்









வல்லிசிம்ஹன்





 எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
அனைவருக்கும் இனிய நவராத்திரி நாட்களுக்கான வாழ்த்துகள். மக்கள் இன்பமும் இனிமையும் நிறை வாழ்வு வாழ
அம்பிகை அருள  வேண்டும்.

73 வருஷங்

களுக்கான  கொலு நினைவுகளை அசை போட வைத்தது எனது பழைய பதிவு. 
நல்ல வேளை எழுதி வைத்தேனே என்று என்னை நானே பாராட்டிக் கொண்டேன்:}))))))


அம்மா ,அப்பா,தம்பிகள் அவர்களின் மனைவி குழந்தைகள்

அப்பாவழி தாத்தா பாட்டி,சித்தப்பா சித்திகள் குழந்தைகள் கொலு நாள் கொண்டாட்டங்கள்,

அம்மா வழி பாட்டி, மாமாக்கள் மாமிகள், அவர்கள் பெற்ற செல்வங்கள் என்று சேகரித்த நினைவுகள்,பரிசுகள்,புத்தாடைகள்,

வாங்கிய பொம்மைகள், புக்ககம், முதல் கொலு மகளுடன் சேகரித்த துர்கா, கிருஷ்ணா, ரங்க நாதர்.  இன்ன பிற நினைவுகள். சுண்டல் சேகரிப்பு, உறவினர் அக்கம்பக்கத்தார் கலகலப்பு, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள். நிறை பண்டிகைகள் அத்தனையையும் அளித்த இறைவனுக்கு 
நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

8 comments:

ஸ்ரீராம். said...

நினைவுகள் வாழ்க... இனிய நினைவுகள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? எப்படியிருக்கிறீர்கள்.? உங்கள் வீட்டில் அனைவரும் நலமா? தங்கள் வரவும், பதிவும் மகிழ்ச்சியை தருகிறது.

பதிவும், படங்களும் நன்றாக உள்ளது. கொலு பொம்மைகள் அழகு. தங்கள் கணவர் அவராகவே செய்த பொம்மையும் அழகாகவே உள்ளது. உங்கள் நினைவுகள் இனிமை. பழைய நினைவுகள்தான் நமக்கு என்றும் ஒரு பக்கபலம். தொடர்ந்து பதிவுலகம் வாருங்கள். நானும் உங்களை நினைத்த வண்ணம் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Anonymous said...

ஆமாம் அம்மா இனிய நினைவுகள். எனக்கும் இப்படியான நினைவுகள் நான் முன்பு வைத்த கொலு என் மாமியார் வீட்டுக் கொலு என்று பல நினைவுகள், இப்ப வைக்க முடிவதில்லை

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம் நன்றி மா. என்றும் வளமுடன் இருங்கள். எப்பொழுதும்
நலம் வளம் சேர்ந்து இருக்கப் பிரார்த்தனைகள்.நல்ல நினைவுகள் தானே அமையும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலா ஹரிஹரன், நானும் யாரையும் மறக்கவில்லை.
இனிமேலாவது எழுத வேண்டும். இன்னும் கொஞ்ச நாட்களில் மகள் வீட்டுக்குச் செல்வேன்.

வரும் நாட்களில் இன்னும் பகிர்ந்து கொள்கிறேன். தாங்களும் மகளும்
குழந்தைகளும் நலமா.
உங்கள் அனைவரின் அன்பும் எனக்கு நங்கூரம்.
எப்பொழுதும் வளமுடன் இருங்கள்.
மீண்டும் சந்திப்போம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அம்மா இனிய நினைவுகள். எனக்கும் இப்படியான நினைவுகள் நான் முன்பு வைத்த கொலு என் மாமியார் வீட்டுக் கொலு என்று பல நினைவுகள், இப்ப வைக்க முடிவதில்லை//
அன்பின் கீதாமா,

முடிந்ததை செய்வோம்.. இருப்பதை மகிழ்சியோடு ஏற்றுக் கொள்வோம்.

உங்களையும் பானுவையும் வாட்ஸ் ஆப்பில் பார்த்துப் பேசியதில் மிக சந்தோஷம் மா..
மீண்டும் பார்க்கலாம்.

மாதேவி said...

நவராத்திரி இனிய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள். அழகிய படங்களூம் கண்டுமகிழ்ந்தோம்.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்.

மாதேவி said...

நவராத்திரி கொலுவும் பொம்மைகளும் நினைவுகளும் அருமை.

இனிய நினைவுகள்தானே மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

என்றும் இனிய நினைவுகள் மலரட்டும்.

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். [20:34, 9/9/2026] Revathi Narasimhan: Good Morning dear. [23:03, 9/9/2026] Subha.: இன்று ஒரு தக...