Blog Archive

Tuesday, April 02, 2024

முழுமை பெற்ற காதல் எல்லாம்..... part 1

வல்லிசிம்ஹன்

Foreword.
ஏற்கனவே ஆரம்பித்த கதையை சுபமாக 
முடிக்க முடியாமல் கதை நாயகி மன நல மருத்துவரிடம்

ஆலோசனை பெற்று வருகிறாள்.பெரியவன் அடுத்த
வருடம் கல்லூரியில் அடி எடுத்து வைத்ததும்

பிரியலாம் என்ற யோசனையில் இருக்கிறார்கள்.
அவர்களின் சின்ன மகள் இப்போது 8 வயதை  நெருங்கிய நிலையில்
பாட்டி தாத்தாவிடம் ஒப்படைக்கப் படுவாள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நூறு வருடப் பழைய வீடு ''சம்பகா''

எல்லோரும் நிறைவுடன் வாழ வேண்டும்.

சென்னையின் ஹெரிடேஜ் வாக் நடத்தும் திரு ஸ்ரீராம் அவர்களின்
விளம்பரம்  மைலாப்பூர் பேப்பரில் வந்ததும்
முதலில் பார்த்தது  தான் நீலாதான்
உடனே ராணி மேரியில் தன்னுடன் படித்த 
சந்திராவுக்கு அழைப்பு விடுக்க அவளும் தானும் தன் பழைய
கல்லூரித் தோழனும் வருவதாகச் சொல்லி மூவரும் 
பதிவு செய்தார்கள்.

முன்பு நடந்த அடையார் வாக், சென்னை பல்கலைக் கழகம் எல்லாவற்றையும் 
தெரிந்து வைத்துக் கொண்டாள்.

இந்த வருடப் பயணம் மகிழ்ச்சி தருவதாக
இருக்கப் போகிறது என்று புது உணர்வு வந்தது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 முன்பு 12 வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் கதை ஒன்று
எழுதி இருந்தேன். அதே ஜானகிராமன்  நீலா கதை
இங்கே தொடர்கிறது.
அதுவும் நடந்ததுதான். இப்போது எழுதுவதும் நடந்தது தான்.
ஊர் பெயர்கள் கொஞ்சம் மாறி இருக்கும்.
இனி மீண்டும் கதையைச் செதுக்கலாம்:)


ஜானகிராமன்60, இப்போது ரிடயர்ட் பாங்க் மானேஜர்.   தனிமரம்........
நீலா 58 திருமணம்,குழந்தைகள்,கணவன் மறைவு, பேரன் பேத்தி
என்று தொடர்ந்த வாழ்க்கை ,மாற்றம் வேண்டி
சென்னைக்குத் திரும்பிய நிலை.

சந்திராவும் கணவர் சுந்தர்,அவளுடைய பழைய நாள் தோழன்
பாலு மூவரும்  ஞாயிறு காலை எட்டுமணி அளவில்
மயிலை கபாலீஸ்வரர் கோவிலை
வந்து சேர்ந்தனர்.
அங்கே ஏற்கனவே சேர்ந்திருந்த நண்பர்களைச்
சந்திக்க விரைந்தாள். 
 செல்ஃபோன்  பாட ஆரம்பித்தது. நீலா அழைப்பதை உணர்ந்து 
''எங்கே இருக்கப்பா, சீக்கிரம் வா'' என்று வேண்டுகோள் 
விடுத்தாள். மயிலையைச் சுற்றிப் பல இடங்களுக்குப் போவதாக
ஏற்பாடு. லிஸ்ட் படி, மாடவீதி, கச்சாலீஸ்வரர் கோவில்,
கேசவ பெருமாள், முண்டகக் கண்ணி அம்மன், சமஸ்கிருதக் 
கல்லூரி, கலைமகள் அலுவலகம்,சாந்தோம் சர்ஸ், லஸ் சர்ச் சாலை எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்வதாக 
நிகழ்ச்சி நிரல் சொல்கிறது.

எல்லாரும் வந்தாச்சா என்று இன்னோரு வயதானவர் கேட்க
''ஜானியைக் காணோமே'' என்று இன்னோரு நண்பர் சொல்ல
நீலாவுக்கு ஒரு ஏதோ ஒரு நினைவு தட்டியது.

என்ன பெயர், என் கல்லூரித் தோழி பெயர் கூட ஜானிதான்
என்று ஆவலுடன் தலையைத் திருப்பினாள்.
வந்தது அவளுடைய ஜானி இல்லை ஜானி என்கிற ஜானகிராமன்!!!

''எல்லோரும் தங்களை அறிமுகப் படுத்திக்
கொள்ளலாம் என்று குழுத்தலைவர் சொல்ல
அங்கு கூடி இருந்த 30 பேரும் தங்களுக்குக் கொடுத்திருந்த
பெயரட்டையுடன் இருந்த குழு அடையாளச் சங்கிலியை கழுத்தில் அணிந்து

எளிமையாக அறிமுகப் படுத்திக் கொண்டனர்.
ஜானகிராமனைப்  பார்த்ததிலிருந்து நீலாவுக்கு,  இருந்த துளி சந்தேகம்
அவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும்
சட்டென்று விலகியது.
உடம்பில் ஒரு பரபரப்பு வந்தது. 
43 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு சந்திப்பா?

தன் முறை வந்ததும், பிறந்த இடம், இப்போது இருக்கும் இடம்
சொல்லிவிட்டு ஜானகிராமனைப் பார்த்துப்
புன்னகைத்தாள்.
அவர் திகைப்பிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை.

ரொம்ப காலமாச்சு பார்த்து என்றபடி அருகில்
வந்தவர் ''நீங்கள் நிறைய மாறிவிட்டீர்கள்'' என்றார்.


அடுத்த சுவாரஸ்யத்தை இரண்டு நாட்களில் தொடர்கிறேன்.








8 comments:

நெல்லைத்தமிழன் said...

நீங்க பிட்ஸ் அன்ட் பீசஸா கதையைச் சொல்லி மத்ததை வாசகர்களை அஸ்நூம் பண்ண வச்சிடறீங்க. எழுதுவது கஷ்டம்தான்.. இதையாவது எழுதறீங்கள என்று நினைத்துக்கொள்கிறேன்.

ஒவ்வொருவர் வாழ்க்கைப் பாதையும்தான் எவ்வளவு வித்தியாசமானது.

ஸ்ரீராம். said...

என்னவா இருக்கும்? லவ்வர்ஸ்? அல்லது பெண் பார்த்து சென்றவர்? காத்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளி எப்பவும் நன்றாக இருக்கணும்.
மார்ச் முதல் தேதி ஆரம்பித்த எழுத்து
பலப் பலத் தொந்தரவுகளுக்கு இடையில் நேற்று
பதிவிட முடிந்தது.

இந்தக் கதை புனைவு பாதி நிஜம் பாதி.
அதைச் சரியாகக் கலந்து எழுத வேண்டும். எனக்கே இது ஒரு சவால் தான்.
தொழில் முறை எழுத்தாளர் இல்லையே:)
நன்றி மா. இன்னும் தெளிவாக எழுத முயற்சிக்கிறேன்.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. ஸ்ரீராம்:)
லவர்ஸ் என்ற ப்ராக்கெட் வேண்டாம்.

காதல் புனிதமில்லை என்று சொல்ல வரவில்லை.
பதின்ம வயதில் ஏற்பட்ட ஈர்ப்பு.
அதுதான் இந்த நிகழ்வுக்கு அடி நாதம்.
நன்றி மா. எப்போதும் வளமுடன் இருக்கவும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? உடம்பை பத்திரமாக கவனித்துக் கொள்ளுங்கள். பதிவு நன்றாக உள்ளது. ஆரம்பத்தில் பிரியப்போகும் உறவை பற்றி எழுதியுள்ளது வருத்திற்குரிய விஷயம். ஆனால் மனம் ஒன்றி அவர்கள் இதில் ஈடுபட்டு விட்டால் நம்மால் என்ன செய்ய முடியும்?

அடுத்தது கதையா? இல்லை உண்மை நிகழ்வா? எதுவாயினும் தங்கள் அருமையான எழுத்தை பின் தொடர்கிறேன்.உங்களால் முடியும் போது எழுதுங்கள்.படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம். மிக்க நன்றி சகோதரி.

அன்புடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலாமா,
என்றும் வளமுடன் வாழவேண்டும்.
என்னிடம் அக்கறை எடுத்துக் கொள்ள நீங்கள்
எல்லாம் இருக்கையில் என் கவலை குறைகிறது
மிக நன்றி மா
முந்தைய கதையில் குறிப்பிட்டிருந்த
கதை மாந்தர்கள் பிரிந்தால் தான் அவர்களுக்கு நிம்மதி
என்பதில் பாதிக்கப் பட்ட கணவர் உறுதியாக
இருக்கிறார்.
காலங்கள் வெகுவாக மாறி விட்டன. நாமும்
நம் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இது நிகழ்வு தான் மா.
சென்னையில் தெரிந்த வட்டாரத்தில் நிகழ்ந்தது
தான். மகிழ்ச்சியான உறவு. காலத்தை மாற்றி இருக்கிறேன்
தொடர்ந்து படிக்கும் போது விவரமாக எழுத முயற்சிக்கிறேன் மா.
நன்றி.

மாதேவி said...

தொடர்கிறோம் ஆவலுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி என்றும் நலமுடன் வாழ வேண்டும்.
தொடர்ந்து சரியாக எழுதப் பிரயத்தனம் செய்கிறேன். நன்றி மா.