எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
சில வருடங்களுக்கு முன் எழுதிருந்த கதையில் ஆரம்பித்தது ஜானகிராமன் மற்றும்
நீலாவின் இளவயது ஈர்ப்பு.
திண்டுக்கல்லில் நடப்பதாக எழுதி இருந்தேன்.
நீலாவுக்கு 14 , ஜானகிராமன் ''ஜானி''க்கு 16.
இருவருக்கும் பக்கத்துப் பக்கத்து வீடு,
ஜானியின் தங்கையும் நீலாவும் பள்ளித் தோழிகள்.
1978இல் ஆரம்பித்த நட்பு, நீலாவின் அப்பாவுக்கு
செங்கல்பட்டுக்கு மாற்றல் ஆனதும்
சில வருட கடிதப் போக்குவரத்துடன் தொடர்ந்தது. 1984கலாவின் அக்கா திருமணத்துக்கு
நீலாவும் பெற்றோர்களும் போயிருந்தார்கள்.
தஞ்சாவூரில் வெண்ணாற்றங்கரையில்
திருமணம் படு உத்சாகமாக நடந்தது. அப்போதுதான் இருவரும்
ப்ளஸ் 2 பரீட்சைத் தேர்வுகள் எழுதி முடித்திருந்த உத்சாகம்.
ஜானி திருச்சி சைண்ட் ஜோசஃபில் பி.காம் இரண்டாவது
ஆண்டில் படித்துக் கொண் டிருந்தான்.....
தஞ்சாவூர் மண்ணில் ஜானி ,நீலா இருவருக்கும் பது உணர்வுகள்
நினைப்புகள் தோன்றின. கல்யாண கோலாஹலங்களில்
நிறைய தருணங்களில் பேசிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது,
கலா, நீலா, ஜானி இன்னும் இரண்டு பொடிசுகள் என்று
மலர்கள், மாலைகள், ஜமக்காளங்கள், மாப்பிள்ளைக்குக் குடை, பாய்
என்று கலாவின் சித்தப்பா வண்டியில்
போய் வந்த வண்ணம் இருந்தார்கள்.கவலையின்றிக் குதூகலமாக அப்போது வந்த திரைப் படப் பாடல்கள்
பின்னணியில் ஒலிக்க நேரம் நிற்காமல் ஓடியது!!!!!
திருமணம் இனிது நடை பெற்றது.
மதிய வேளையில் திருமணத்தில் சேர்த்து வந்திருந்த பாலிகைகளைக்
காவேரியில் கரைக்க மகளிர் திரண்டனர்.
நாயனக்காரர் நையாண்டி வாசிக்கப் பெண்கள் குழாம்
மெதுவாக மணல் திட்டில் ஏறிக் கொண்டிருந்தனர்.
கூடவே காளைகள் குழுவும்.பெண்களுக்குப் பாதுகாவலாம்.:))))))))))
சந்தனம் கதம்பம் பன்னீர் தெளிப்பு என்று
ஒரே மயக்கக் கலவையாக விளங்கியது அந்த மதிய மாலை நேரம்.
ஆற்றில் காவிரி வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள்.
எப்பொழுதும் குறுகலாகக் காணப்படும் வெண்ணாறு
அன்று அகலமாகப் பாய்ந்து கொண்டிருந்தது.
ஜானிக்கு இந்தப் பெண்கள் படை இத்தனை உத்சாகமாகக்
காவிரியை நோக்கிப் பாய்வது நயத்தைக் கொடுத்தது.
கரையோரம் ஆழம் இருக்கும் ஜாக்கிரதை என்றவாறே
பின்தொடர்ந்தான்.
அவர்கள் அவனை லக்ஷியம் செய்யவில்லை.
பாவாடைகள் நனையும் போது அவர்களுக்கு ஆற்றுன் வேகம்
தட்டுப் பட்டது.
அதே சமயம் எதிர்க்கரையில் தம்பட்டம் அடிப்பவர் ஒருவர்
அதிவேகமாகத் தட்டியபடி
''
பிள்ளைகளா ஓடுங்கள்,
வெள்ளம் வருகிறது. அணை திறந்துவிட்டார்கள்''
என்று அலறியபடியே இருந்தான்.
அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தண்ணீர்
கால்களை இழுப்பது தெரிய அலற ஆரம்பித்தனர்.
ஜானியும் உடன் வந்த அவன் வயது பசங்களும்
இந்த 7, 8 சிறுமிகளைப் பத்திரமாகப் பிடித்துக்
கரைக்குக் கொண்டுவந்தனர்.
கண்முன்னால் மரமும் செடிகளும் ஆடுகள் என்று
வெள்ளம் சுழித்துக் கொண்டு ஓடுவதைப்
பார்த்துப் பிரமித்தனர் வந்த பெண்கள்........தொடருவோம்.
5 comments:
பொருத்தமான படங்கள், அதுவும் மாருதி ஓவியங்கள். அவர்களின் காதல் உணர்வுகளை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
பொருத்தமான படங்கள், அதுவும் மாருதி ஓவியங்கள். அவர்களின் காதல் உணர்வுகளை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
மிக மிக நன்றி ஸ்ரீராம் . ரசித்துப் படித்திருக்கிறீர்கள். நிகழ்வதைப் பதிகிறேன். அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.
நன்றாகப் போகிறது அந்தக்காலத்து காதல்,திருமணநிகழ்வு , காவிரி நீர் என. ....படங்கள் கதைக்கு மெருகு தருகின்றது. படங்களை ரசித்தேன்.
அன்பின் மாதேவி மிக நன்றி மா. அந்தத் தம்பதியர் நல்ல படியாக இரூப்பதைக் கண்டு மகிழ்கிறேன். அதை இங்கெ பகிர்கிறேன். 🌺🌺🌺
Post a Comment