Tuesday, April 11, 2023

வாழ்வில் நிறைவு தரும் செயல்கள்..






வல்லிசிம்ஹன்ஒவ்வொரு நாளும் மலரும் போது
அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.
என்ற பிரார்த்தனையுடன் தான் எழுந்திருக்கிறோம்
அப்படியே அமையும் போது மனதுக்கு

நிம்மதி.
எங்கள் செல்வங்கள்  சேர்ந்து என் 75 ஆவது பிறந்த
நாளைத் தங்களுக்குள்
ரசித்துக் கொண்டாடினார்கள்.
அந்த அன்புக்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.

அப்பா,அம்மா, தம்பிகள், சிங்கம் என்று ஒருவரும் இல்லாத
காலத்தில் குழந்தைகளின் பாசமும்
வலை நட்புகளின் அருமை வாழ்த்துகளும் 
இந்த நாளை இனியதாக்கின. அனைவரும் அமோகமாக
இருக்க வேண்டும்.

5 comments:

ஸ்ரீராம். said...

இது மாதிரியான உன்னதமான தருணங்கள் வாழ்வை இனிமையாக்குகின்றன.  அதை அனுபவிப்போம்.  மறுபடியும் ஒரு முறை உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன் அம்மா.  75 என்பது சாதனை எண்.

நெல்லைத்தமிழன் said...

தங்கள் பிறந்த நாளில் உங்களின் ஆசி வேண்டுகிறோம்.

உடல் நலத்துடன் இருக்கப் ப்ரார்த்தனைகள்

கோமதி அரசு said...

உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள்.
குழந்தைகள் உங்கள் 75 வது பிரந்த நாளை ரசித்து கொண்டாடியது மனதுக்கு மகிழ்ச்சி. நிறைவு. வேறு என்ன வேண்டும்! உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அக்கா.
நீங்கள் நலமாக இறைவன் அருளால் இருக்க வேண்டும் பல்லாண்டு.

Gayathri Chandrashekar said...

wish you happy b'day Vallimma!

கோமதி அரசு said...

பாடல்கள் பகிர்வு அருமை.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...