Wednesday, January 11, 2023

பாவையும் 108 திருப்பதிகளும்

வல்லிசிம்ஹன்

interesting details on Thiruppavai and Divya Desams.
 திருப்பாவையில் திவ்ய தேசங்கள்

1. மார்கழித் திங்கள் - நாராயணனே நமக்கே பறை  தருவான் - பரமபதம்.

2. வையத்து - பாற்கடலில் பையத் துயின்ற - க்ஷீராப்தி.

3. ஓங்கி - ஓங்கி உலகளந்த உத்தமன் - திருக்கோவலூர்.

4. ஆழிமழை  - பாழியம் தோளுடை பத்மநாபன் - திரு அனந்தபுரம் .

5. மாயனை - வடமதுரை மைந்தன் - மதுரா .

6. புள்ளும் - வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து - திருவண் வண்டூர்.

7. கீச்சு கீச்சு - கேசவனைப் பாடவும் - திருவாய்ப்பாடி.

8. கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.

9. தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு - திருக் கடிகை. 

10. நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.

11 கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.

12. கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம். 

13. புள்ளின்வாய் - பள்ளிக் கிடத்தியோ - திருக்குடந்தை.

14. உங்கள் புழக்கடை - நாவுடையாய் - செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர் - தேரழுந்தூர்.

15. எல்லே - மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் - திருவல்லிக்கேணி.

16. நாயகனாய் - மாயன் மணிவண்ணன் - திருக்குறுங்குடி.

17. அம்பரமே - அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் - சீர்காழி.

18. உந்து மத களிறு - பந்தார் விரலி மைத்துனன் - திருநறையூர்.

19. குத்து விளக்கு - மலர்மார்பா - திருவிடவெந்தை.

20. முப்பத்து மூவர் - செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் - திருப்பாடகம்.

21. ஏற்ற கலங்கள் - ஊற்றமுடையாய் பெரியாய் - பெரும்புறக் கடல் - திருக்கண்ண மங்கை.

22. அங்கண்மா ஞாலம் - அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து - திருமாலிருஞ் சோலை.

23. மாரி மலை முழஞ்சில் - பூவை பூ வண்ணா - திருவரங்கம்.

24. அன்றிவ் உலகம் - குன்று குடையாய் - கோவர்த்தனம்.

25. ஒருத்தி - கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் - திருக்கண்ணபுரம்.

26. மாலே மணிவண்ணா - ஆலின் இலையாய் - பூரி ஜெகன்நாதர்.

27 கூடாரை வெல்லும் - சீர் கோவிந்தா - (திருவேங்கடம்).

28 கற்றுக் கறவை - குறை ஒன்றுமில்லாத கோவிந்தா - (விருந்தாவனம்)

29 சிற்றம் சிறுகாலை - பறை கொள்வான் கோவிந்தா - (துவாரகை.)

30 வங்கக் கடல் - அணிபுதுவை - (ஸ்ரீவில்லிபுத்தூர்).  

(P B அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி தொகுத்ததில் எடுத்தது)

4 comments:

ஸ்ரீராம். said...

நல்ல தகவல்கள். சுவாரஸ்யம்.

Thulasidharan thilaiakathu said...

ஓ இப்படியும் இருக்கிறதா...மாயனை மன்னு என்பது ம்துரா வைச் சொல்கிறது என்பது புரிந்ததுண்டு. ஓங்கி உலகளந்த - வேறொரு கோயில் நினைவுக்கு வரும் டக்கென்று நினைவுக்கு வரவில்லை. ஆனால் அது 108ல் வராது என்று நினைக்கிறேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓ இப்படியும் இருக்கிறதா...மாயனை மன்னு என்பது ம்துரா வைச் சொல்கிறது என்பது புரிந்ததுண்டு. ஓங்கி உலகளந்த - வேறொரு கோயில் நினைவுக்கு வரும் டக்கென்று நினைவுக்கு வரவில்லை. ஆனால் அது 108ல் வராது என்று நினைக்கிறேன்

கீதா

மாதேவி said...

நூற்றெட்டு திருப்பதிகளும் கண்டு கொண்டோம்.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...