Blog Archive

Sunday, October 30, 2022

உன்னை நான் சந்தித்தேன்....



October 31st  1965

வருடா வருடம் நினைக்காமல் விட்டால்
ஏதோ தவறு செய்த மாதிரி இருக்கிறது.


நமக்கென்று காத்திருந்த ஒருவர் அவர்தான்.
சிங்கத்துக்கு முன் ,சிங்கத்துக்குப் பின்
இதுதான் வாழ்க்கை.

அழகான புன்னகையுடன் கம்பீரமாக அவர் உட்கார்ந்து இருந்தது,
ஒரே நோக்கிலேயே இவர்தான்
என்று தீர்மானித்தது
பூர்வ ஜன்ம புண்ணியம்.

என்றும் அவர் நினைவில் .
ஏன் அவர் சட்டென்று கிளம்பி இறைவனை அடைந்தார்?
இன்னும் புரியாத மர்மம். ஒன்பது வருடங்களும் கடந்தாச்சு.






எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.




Friday, October 28, 2022

துளியூண்டு பெருங்காயம்....

வல்லிசிம்ஹன்



பெருங்காயம்... கடவுளின் அமிர்தம்! நலம் நல்லது-56 #DailyHealthDose
பாலு சத்யா



விளையாட்டில் ஆகட்டும்... வாழ்க்கையில் ஆகட்டும்... தோற்றுப்போனவர்களை,


விளையாட்டில் ஆகட்டும்... வாழ்க்கையில் ஆகட்டும்... தோற்றுப்போனவர்களை, `காலிப் பெருங்காய டப்பா’ என சிலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம். பெருங்காயம் அப்படி குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல. பன்றிக் காய்ச்சல் முதற்கொண்டு புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல்கொண்டது. 

பெருங்காயத்தின் மணத்தை முகர்ந்து முகம் சுளித்த அமெரிக்கர்கள், ஒரு காலத்தில் அதை, `பிசாசு மலம்’ என்று ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. சமீப காலத்தில் நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப்போல, 1910-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ (Spanish Flu) பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்தது. பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டு, அதை தங்கள் கழுத்தில் தாயத்து மாதிரி அமெரிக்கர்கள் கட்டித் திரிந்தார்கள்; அதற்கு `கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டார்கள்; இது வரலாறு. 

பெருங்காயம் தரும் பெரிய பலன்கள்... 

* தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள். தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச்சுருட்டிக்கொண்டு ஓடும். 

* நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம். 

* பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. 

* குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டால் மாதவிடாய் வந்து, அந்த சூதகக் கட்டும் அகலும். 

* குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து ஒருவகையான திரவம் (லோசியா - Lochia) வெளிப்படும். அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது. 

* அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது. 

* சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தை எடுத்துச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண் (Gastric Oesophagal Reflex Disease-GERD) முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும். 

* நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொள்ளவும். இதை காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டால் வாயுக்குத்து முழுமையாக நீங்கும். ஆனால், அதற்கு முன்னர் வந்திருப்பது ஜீரணம் தொடர்பான வலியா அல்லது ஒருவகையான நெஞ்சு வலியா (Unstable Angina) என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். 

* இர்ரிடபுள் பௌல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாகப் போகும் குடல் அழற்சி நோய்களுக்கும் பெருங்காயம் பலன் தரக்கூடியது. 

* குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், துளியூண்டு பெருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும். 

* புற்றுநோயிலும்கூட வெந்தயத்தின் தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல்புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பகட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

ஆக, இது `கடவுளின் அமிர்தம்’ என்றே சொல்லாம்...


 21 ஆம் தேதியிலிருந்து  இன்று வரை 
வீட்டில்  நலமில்லாத சூழல்.

மீண்டு வருவோம்.  இறைவன் முருகன்,
அவன் மாமன் அருள் புரிவார்கள்.

துணை இருப்பார்கள்.





Sunday, October 23, 2022

தீபாவளி நல் வாழ்த்துகள்!!!!!!

வல்லிசிம்ஹன்

சாஸ்திரத்தில் பட்டாசு கொளுத்தச் சொல்லப் பட்டுள்ளதா? தீபாவளிக்கு மத்தாப்பு அவசியம் கொளுத்த வேணடும். அதன் வெளிச்சம் நமது முன்னோர்களை சொர்க்கம் செல்ல உதவுகிறது. (ஆதாரம்)
 
தீபாவளிக்கு ஏன் பட்டாசு வெடிக்க வேண்டும்  என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.  மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.

"ஸ்மிருதி கௌஸ்" என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. ...

"துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ:
உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்"
என்ற இந்த ஸ்லோகத்தில் "துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, "உல்கா' எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். இதில் வரும் "பூத' என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும். 
அதாவது, நரக சதுர்த்தசி.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....#தீபாவளிஸ்பெஷல்

💥🔥🌟🌟🌟💫💫💥💥💥💥💥💥💥✨
தீபாவளி_பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் என சாஸ்த்திரம் சொல்கிறது.
பொதுவாக  தீபாவளி எனும் வட மொழி சொல்லுக்கு தீப ஆவளி என்று பொருள் ஆவளி என்றால் வரிசை என கொள்ளவும்.ஆக தீபங்களை வரிசையில் வைப்பது தீபாவளி.
அந்த வகையில் வருகிற
22-10-2022 சனிக்கிழமை. இன்றய தினம் மாலை நேரத்தில் பிரதோஷ காலத்தில் கன்றுடன் கூடிய பசுவை பூஜிக்க வேண்டும். இதற்கு #கோவத்ஸ_துவாதசி என்று பெயர்.வத்சலா என்றால் குழந்தை என்று பொருள்.பொதுவாக எந்த ஒரு பெரிய அளவிலான பண்டிகை கொண்டாட வேண்டும் என்றாலும் முதலில் கோ பூஜை செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகை என்பது நரகாசுரன் எனும் தன் மகனை பூமா தேவியின் அம்சமான சத்யபாமா ஸ்ரீ கிருஷ்ணர் முன்னிலையில் கொன்ற தினமாகும். எனவே கன்றுடன் கூடிய பசுவை இன்று வழிபடுவதால் நம் குழந்தைகள் சொல்படி கேட்டு நடக்கும் நல்ல பிள்ளைகளாக வளருவார்கள்.இன்று ஒரு நாளாவது பசும்பால்,தயிர் உணவில் தவிர்க்க வேண்டும். பால் முழுவதும் அல்லது போதுமான அளவு கன்றுக்குட்டி குடிக்க செய்ய வேண்டும். இதன் மூலம் நம் குழந்தைகள் நல்ல வழியிலும் சொல் பேச்சு கேட்டு நல்லவர்களாக வளருவார்கள்.

23-10-2022 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலையில் யம திரயோதசி.
#யமதீபம்.
கடந்த ஒரு மாதம் முன்பு மஹாளய பக்ஷ காலம் இருந்திருக்கும்.
அப்போது எம லோகத்திலிருந்து வந்திருந்த நம் முன்னோர் நினைவாக நாம் தர்ப்பணம் செய்திருப்போம்.
அவர்கள் மீண்டும் யம லோகம் செல்ல அவர்களுக்கு செல்லும் பாதையில் வெளிச்சம் காட்ட தென் திசை நோக்கி வீட்டிற்கு வெளியே, வாசலில் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒரு தீபம் வீதம் மாலை நேரத்தில் தெற்கு நோக்கி வீட்டிற்கு வெளியே வாசலில் வைக்க வேண்டும். இதனால் அந்த வருடம் முழுதும் முன்னோர் ஆசியினால் வீட்டில் உள்ளோருக்கு பெரிய அளவில் நோய் உண்டாகாது.அறிவியல் படி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சூரியனின் வெளிச்சம் குறைவாக பகல் பொழுது குறைந்து இருக்கும்.ஜோதிட ரீதியாக சூரியன் நீசம் பெறும் போது கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் கொசு வைரஸ் போன்ற நுண்கிருமிகள் அதிகம் உற்பத்தி ஆகி அதனால் மக்களுக்கு நோய் ஏற்படும். இதனை தவிர்க்க தினசரி மாலையில் தீபம் வைக்க வேண்டும். மேலும் பண்டிகை காலங்களில் அதிக இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நோய் விலக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் அடுத்த 5 நாட்களும் தீபம் வைக்க வேண்டும். அடுத்து தன திரயோதசி
,#தன்வந்திரிஜெயந்தி தினம்.இன்று பண்டிகைக்கான பொன் ஆபரணங்கள் வாங்க கொள்ள சிறந்த நாள்.பொதுவாக அக்ஷய திருதியை விட இன்று நகைகள் வாங்குவது உத்தமம். இன்று மருத்துவ கடவுளான தன்வந்திரி பகவானை வழிபட நெடிய நோய்கள் குணமாகும். ஆரோக்கியம் மேம்படும்.அடுத்து அன்று இரவு மறுநாள் அதிகாலை (24-10-2022 திங்கட்கிழமை)
#நரகசதுர்தசியமசதுர்தசி_ஸ்நானம். யம தர்ப்பணம்.
இன்று அதிகாலை சூர்ய உதயத்திற்கு முன்பே எழுந்து நல்ல எண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணையில் உடல் முழுதும் தேய்த்து அதில் வாசனை திரவியங்கள் அக்தர் ஜவ்வாது,புஷ்பங்கள் போன்றவை கூட சேர்த்து கொள்ளலாம். வெந்நீரில் குளிக்க வேண்டும். அதில் நாயுருவி இலை, சுரைக்காய் கொடி இலை போன்றவை கொண்டு தலையை சுற்றி போட்டு விட்டு, குளிக்க வேண்டும். வெந்நீரில் சேர்த்து கொள்ளலாம். இதனால் லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும்.இதன் பொருள் என்ன என்றால் பொதுவாக சூர்ய உதயத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்து வர கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்த நரக சதுர்தசியில் மட்டும் செய்யலாம்.இதனால் ஆரோக்கியம் உண்டாகும்.உடல் சூடு குறையும்.அதனால் வியாதிகள் நீங்கும்.மருத்துவ செலவுகள் குறையும், சேமிப்பு உண்டாகும் அது தான் லக்ஷ்மீ கடாக்ஷம்.இவ்வாறு குளித்து விட்டு சூரிய உதயத்தில் கிழக்கு நோக்கி இருந்து கொண்டு யமனுக்கும் சித்ர குப்தனுக்கும் யம தீர்த்தம் என தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனை தாய் தந்தை உள்ளவர் இல்லாதவர் என அனைவரும் செய்யலாம். ஜோதிட ரீதியாக இந்த தீபாவளி பண்டிகை திதியை அடிப்படையாக கொண்டு உள்ளது.திதிக்கு சூர்ய சந்திரர்கள் மட்டுமே முக்கியம்.சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி தொலைவை திதி என்கிறோம்.இவ்வாறு சதுர்தசியில் குளித்து விட்டு #யமதர்ப்பணம் செய்து விட்டு பின்னர் குடும்பத்தோடு தெய்வ பூஜைகள் செய்து பின்னர் மாலையில் தீபம் வைக்க வேண்டும். மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை சந்தோஷமாக வைக்க வேண்டும். இவ்வாறு 24-10-2022 திங்கட்கிழமை #_தீபாவளி
அன்று கொண்டாட வேண்டும்.அடுத்து அன்று மாலையில் அமாவாசை வருகிறது. அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து  சுக்கிரனின் ராசியான வீடான துலாம் ராசியில் உள்ள நாள் . அதனால் அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் #லக்ஷ்மீகுபேரபூஜை செய்ய வேண்டும். லக்ஷ்மீ குபேர படம் அல்லது கலசம் வைத்து 21 எண்ணிக்கையில் அரளி மொட்டு அரளி இலை அப்பம் பக்ஷணம் வைத்து முந்தைய நாள் வாங்கிய ஆபரணங்கள் கொண்டு தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு வீட்டில் உள்ள நகைகளை பூஜையில் வைத்து அலங்காரம் செய்து வழிபட வேண்டும். மேலும் இன்று 25-10-2022 செவ்வாய்க்கிழமை *#கேதாரகௌரிவிரதம்* பூஜை செய்ய வேண்டும்,சிவனுக்கு கேதாரேஸ்வரர் என்கிற திருநாமம் உண்டு.அன்னை பார்வதி தேவி இருந்த விரதம் ஆகையால் கேதார கௌரி விரதம் என்பார்கள். இன்று வீட்டில் கலசம் வைத்து 21 முடிச்சு உள்ள மஞ்சள் சரட்டை வைத்து கலசத்துக்கு அலங்காரம் செய்து 21 எண்ணிக்கையில் பழம், வெற்றிலை பாக்கு, அப்பம் போன்றவை வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் சுமங்கலி பெண்கள் தன் வலது கையில் சரடை கட்டி கொள்ளவும்,21 சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்யவும். இதனால் குடும்பத்தில் எப்போதும் இடர்கள் வராது,ஒற்றுமை சந்தோஷம் நிலைத்து நிற்கும்.
இன்று மாலை நேரத்தில் உல்காதனம் செய்ய வேண்டும். உல்கா என்றால் எரியும் நெருப்பு கட்டை .பொதுவாக கம்பளி ஆடைகளை ஏழை எளியோர்க்கு தானம் செய்ய வேண்டும். ஏனென்றால் துலா ராசியில் தான் சனி உச்சம் பெறுகிறது.மேலும் அறிவியல் படி அடுத்து பனிக்காலம் ஆரம்பிக்கிறது.எந்த ஒரு பண்டிகையும் நாம் மட்டும் சந்தோஷபடுவதற்காக உண்டாக்க வில்லை. நம்மை சுற்றி உள்ளோரை சந்தோஷப்படுத்த உண்டாகி உள்ளது.
இன்று கிரஹணம் ஏற்படுவது பற்றி இன்னொரு பதிவில் கொடுக்கிறேன்.
அடுத்து 26-10-2022 புதன்கிழமை.
அன்று கார்த்திக சுத்த பிரதமை.இன்றய தினம்  முதல் அடுத்த மாதம் துவங்குகிறது.இது சந்திரமான கணக்கு .பொதுவாக அன்று கார்திக மாதம் முதல் நாள்.பொதுவாக ஜோதிட ரீதியாக கால புருஷனுக்கு மறைவு ராசியான விருச்சிக மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வருவது நல்லது.எந்த பாவத்தின் பலனும் அதன் ஏழாம் பாவம் குறிகாட்டும்.அதன் படி விருசிகத்திற்கு 7ம் பாவத்தில் தான் கார்த்திகை நக்ஷத்திர மண்டலம் உள்ளது.அதன் உருவம் ஜோதி சுடர் வடிவம்.எனவே அன்றிலிருந்து 30  நாட்கள் #அகண்டதீப_பூஜை என தினமும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் கடன் தீரும்.மேலும் கடந்த 3 நாட்களாக நமக்காக  இருந்த பண்டிகை இன்று பசு கன்றுக்குட்டி ஆடு போன்ற வாயில்லா ஜீவ ராசிகளுக்கும் நன்மை உண்டாக அவற்றை பூஜிக்க வேண்டும். நம்மை நம்பி உள்ளதாக நாம் நம்பி கொண்டிருக்கும் பசு ஆடு நாய் பூனை கோழி போன்ற பிராணிகளுக்கு இன்று உணவு அளிக்க வேண்டும்.அதனை இன்று துன்புறுத்த கூடாது.அடுத்து கடைசி நாள் பண்டிகை.இன்று கோ க்ரீடின பிரதிபட் என்று பெயர், நமக்கு உதவும் பசுக்களை இன்று பூஜை செய்ய வேண்டும்.
26-10-2022 புதன்கிழமை
#யமதுவிதியை இன்று சகோதரர்கள் அவர்தம் சகோதரிகள் அழைப்பை ஏற்று சகோதரிகள் இல்லம் சென்று சகோதரர்களுக்கு சகோதரிகள்  கையாலே தலை வாழை இலையில் விருந்து உணவு கொடுக்க வேண்டும். இதற்கு ஒரு புராண கதை சொல்ல படுகிறது.அதன் படி எமனின் சகோதரி யமுனா தன் அண்ணனான யமனை ஒரு நாள்  உணவு அளிக்க  பரிமாற அழைத்தார்.ஆனால் யம லோகத்தில் சதா நேரமும் உயிரினங்களின் இறந்த பின்பு அதன் ஆத்மாக்கள் வந்த வண்ணம் இருந்ததால் அதனை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.இதனால் சகோதரி யமுனைவின் அழைப்பை ஏற்று வர இயலாது போனது.இந்த சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த பின்னர் யம லோகத்தில் வரும் ஆத்மா எண்ணிக்கை குறையவே யமனுக்கும் வேலை குறைந்தது. அப்போது தான் தன் சகோதரியின் அழைப்பு ஞாபகம் வந்தது. உடனே யமுனையிடம் சென்று படையல் உண்டு விட்டு ,இது போல் யார் ஒருவர் தன் சகோதரி கையால் இன்று உணவு உண்ணுகிறானோ அவர்க்கு நரக பயம் இல்லை என யமுனாவிற்கு வரமளித்தார்.இவ்வாறு இன்று சகோதரர்கள் தன் வீட்டில் உணவு உண்ணாமல் தன் சகோதரி வீட்டில் உணவு உண்டு ஒருவருக்கு ஒருவர் பரிசு பொருட்களை பரிமாறி கொண்டு சந்தோஷமாக இந்த தீபாவளி கொண்டாட வேண்டும்..

அனைவரும் இன்புற்று வாழ இறைவன் அருளவேண்டும்.




Thursday, October 20, 2022

வல்லிசிம்ஹன்Radhe Krishna 🙏 
23ஆம் புலிகேசி படம் பார்த்தீர்களா 🤔

 23ம் புலிகேசி படத்தில் மன்னனாக வரும் நடிகர் *வடிவேலு* தன்னிடம் பணி செய்யும் படை வீரனிடம் இரண்டு கேள்வி கேட்பார். முதல் கேள்வி...

*தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்...*
அவன் யார்?

இந்த விடுகதையானது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ நகைச்சுவையோ அல்ல.

இது ஒரு  
தெய்வீக விடுகதை...

இதற்கு புராணத்தை வைத்தே விளக்கி விடலாம்.

தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான்.  
( தட்டான் - *மஹாபலிச் சக்கரவர்த்தி* )

தட்டானுக்கு  
சட்டை போடுவது என்றால்,  
தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள்.

நம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்து விட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும் போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்கிறார்...

( குட்டை  
பையன் - வாமன அவதாரத்தை குறிக்கிறது. )

ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தானத்தை தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்  
கொள்கிறார்...

அப்பொழுது  
நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்கிறார் ?

ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார்.

பின் சுக்ராச்சாரியார் தன் தவறை உணர்ந்தார்.

அவரை மன்னித்து, கொடுப்பதில் வள்ளலான  
மஹா பலிச் சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்தவர் பெருமாள்.

இது தான் தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…” என்பதற்கான விளக்கம்…!!

அடுத்து ... சரி அதை விடு. அடுத்த கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். சரியா? என்று கேட்பார். பணியாளன் கேளுங்கள் மன்னா என்று பயம் கலந்த பதற்றத்தில் அவரை நோக்குவான்.

 அடுத்த கேள்வி இதுதான்👇

*பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை* இதற்கு என்ன பதில் என்பார். இரண்டாவது கேள்விக்கும் பதில் தெரியாத பயத்தில் மன்னா என்று மன்னரின் காலை பிடித்து கதறுவான். படம் பார்த்த நமக்கு அது ஒரு நகைச்சுவை காட்சியாக மட்டும் தான் தெரியும். அதன் பொருள் நமக்கு தெரியாது. இதோ அதற்கான விடை 👇

*குலசேகரன் என்றால் குபேரன் என்று பொருள்*

*ஸ்ரீ* என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம் *குபேரன்.*

ஆக  
பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன்.

குபேரனுக்கு EMI கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப் பட்டது.

அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர்  
ஸ்ரீ வராகப் பெருமாள்...

அதனால்  
(வராகம் - பன்றி முகம்  
உடையவர் )  
ஸ்ரீ வராகப்  
பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின் (திருப்பதி )மீது நின்ற கோலத்தில் மக்களுக்கு அருள் புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேர வேண்டிய பணத்தை கொடுத்து,  
கடனை வென்றாராம் பெருமாள்.

இது தான் பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை… என்ற விளக்கம்...

படித்ததில் பிடித்தது🙏
*குருவே சரணம்*

Radhe Krishna 🙏

Wednesday, October 19, 2022

அன்னமும்+பாலும்

வல்லிசிம்ஹன்

[1:01 AM, 10/14/2022] Muguntan Rajagopal: அன்னமும்+பாலும்

அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம். 

ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், 

அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
  
நான் சில மிருகக் காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். 

அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார்.
  
எனக்கு ஒரு குழப்பம். 
நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. 

சில நாட்கள் இதைப் பற்றியே சிந்தித்தேன்.

ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது அடடா, அன்னம் என்பதற்கு அரிசிசாதம் என்றும் ஒரு பொருள் உண்டே. இதை நாம் 
சிந்திக்கவில்லையே என்று யோசித்தேன்.

பிறகு கொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி, 

அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன். 

அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது, 

என்ன ஆச்சரியம்..!! 
 பால் முழுவதையும் சாதம் உறிஞ்சிக் கொண்டிருந்தது. 

தெளிந்த நீர் மட்டும் சாதத்தைச் சுற்றியிருந்த இடத்தில் வடிந்திருந்தது.

 உண்மையில் நான் கலந்த நீரை விட அதிகமாகவே வடிந்திருந்தது. 

சரி நாம் உபயோகித்த பாலில் ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் இருந்ததோ என்று நினைத்தேன்.
  
இதுதான் அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் கதை. 

நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.
  
மறுபடி சிந்தித்தபோது தான் அடடா, அன்னம் என்று தான் சொன்னார்களே தவிர, அன்னப்பறவை என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை.
அது நாமாக செய்து கொண்ட கற்பனைதான் என்று புலனாயிற்று.

அன்னம் பாலையும் தண்ணீரையும் இப்படித்தான் பிரிக்கும் என தெரிந்து கொண்டேன்.
[1:01 AM, 10/14/2022] Muguntan Rajagopal: ஆந்தைக்கு பகலில் கண் தெரியுமா?

உண்மையில், ஆந்தைகளால் பகலில் பார்க்க முடியும். அவைகளுக்கு பகலில் பார்க்கக்கூடிய திறன் உண்டு!
ஆந்தைகள் பகலில் குருடர்களாக இருக்கின்றன என்ற பொதுவான தவறான கருத்து உள்ளது.
ஆந்தைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூர்மையான பார்வை கொண்டவை.

ஆனால், இரவில் பார்வை மிகவும் கூர்மையானது. முழு இருளில் கூட தங்களின் இரையை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை.
ஆந்தைகளின் கூர்மையான பார்வைக்கான காரணங்கள் என்ன?

ஆந்தைகளின் கண்களிலுள்ள சிறப்பம்சங்கள் அவைகளின் பார்வையை பெரிதும் மேம்படுத்துகின்றன.
ஆந்தைகள் பெரிய குழாய் வடிவ கண்களைக் கொண்டுள்ளன, அவை கண்களைச் சுழற்றுவதைத் தடுக்கின்றன.

ஆந்தைகளின் கண்களின் பெரிய பகுதி கண்ணுக்குள் அதிக ஒளி பெற அனுமதிக்கிறது.
இதன் விளைவாக, அதனோடைய கண் பாவை இரவில் பெரிதும் விரிவடைகிறது, இரவில் பார்க்கும் அவர்களின் சிறந்த திறனுக்க…
[1:01 AM, 10/14/2022] Muguntan Rajagopal: அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்களின் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்..!!

(மிக முக்கிய குறிப்பு. குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.)

எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது.

🔻 தேன் குளவி கொட்டியதற்கு,

தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.

முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்.

🔻 பூரான் கடிக்கு,

பூரான் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்.

சுண்ணாம்பு மஞ்சள், உப்பு 3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்.

🔻 பூனை கடித்து விட்டால்,

பூனை கடித்து விட்டால் மஞ்சள், சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்.

Saturday, October 15, 2022

புரட்டாசி கடைசி சனிக்கிழமை,மாவிளக்கு

வல்லிசிம்ஹன்




இறைவன் அருளால் அனைவருக்கும் உடல் நலம், மன சந்தோஷம்
அமைதி எல்லாம் பெருக வேண்டும்.

இன்னோரு புரட்டாசி பூர்த்தியாகிறது.
துலா மாதம், ஐப்பசி மாதம் பிறக்கப் 
போகிறது.
பூர்வ ஜன்ம புண்ணியம் செய்தவர்கள்
காவிரியில் நீராடி ,இறைவனை இடையறாது சிந்தித்து
உய்யப் போகிறார்கள்.

அப்படி பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு 
இருக்கும் இடமே கங்கை ,காவிரி,சரயூ 
எல்லா நதிகள் வடிவாகக் கிடைக்கும் நீரை
மதித்துத் துதிக்க வேண்டும்.
இறைவன் நாமமே நமக்கு சகல மருந்து.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இங்கே கடின குளிர் ஆரம்பித்து விட்டது.
சற்றே கழுத்துக்கு அரணாக ஒரு கம்பளியைச் சுற்றிக் 
கொள்ளாமல் வெளியில் தலை காட்டிவிட்டால்,
பனி தொண்டையைக் கவ்வி விடுகிறது.
நமக்கும் சிரமம். கவனித்துக் கொள்கிறவர்களுக்கும் சிரமம்.

என்னை  விட வயதான தம்பதியினர்
மிக உற்சாகமாகக் கோவிலில் நாம சங்கீர்த்தனம் செய்வதைப் பார்க்கிறேன்.
வெகு காலமாக  இங்கே இருப்பவர்கள்.
உடல் உழைப்பும், உற்சாக மனதும் 
கொண்டு பெருமாளைப் பாடும் அழகு
அதிசயிக்க வைக்கிறது.
வாழ்க அவர்கள் நலம்.




🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஸ்ரீ ஸ்ரீனிவாசம் ஸ்ரீ வெங்கடேசம் நம்மைக் காப்பான்.


Friday, October 14, 2022

Wednesday, October 12, 2022

.......சில பாடல்கள் மற்றும் பொன்னியின் செல்வன் பார்வை

  காதுகளுக்கு இனிமை கொடுத்த பழைய பாடல்கள்.

சோகம் இருப்பது போலத் தோன்றும். ஆனால் 
அழகான இலக்கியமும் 
ஒளிந்திருக்கும்.
பொன்னியின் செல்வன் கண்டு வந்தாச்சு.
படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை.

முடிந்ததும் தெரியவில்லை.
அசையாமல் மூன்று மணி நேரம் 
பார்த்திருக்கிறோம் 
இடைவேளையும் இந்த ஊரில் கிடையாது.

பொன்னியின்  செல்வனில் கல்கியை அடித்தளத்தில் மட்டுமே
காண முடிந்தது.
இயக்குனர் மணி ரத்தினத்தின் பிரம்மாண்டம்.


ரசித்த நேரத்தில் சட சடவென விழும் கொலைகளைத் தான்
சகிக்க முடியவில்லை.
பார்த்தவர்களின் விமரிசனங்களையும்
படித்து வருகிறேன். 

அத்தனை தீர்க்கமாகச் சொல்ல முடியவில்லை.
ஏதோ கொஞ்சம் ஏமாற்றம் கூடவே வந்தது.
மணி மேகலை இல்லை. 
பூங்குழலிக்கு இத்தனை மாறுபட்ட உடை வேண்டாம். அதைத் தவிர
வந்தவர்களும் ஐந்து நிமிடங்கள் ஜொலித்துவிட்டுக் கிளம்பிவிடுகிறார்கள்.

அடுத்தடுத்துக் காட்சிகள் மாறிய வேகம் பிடிபடவில்லை.   எல்லாப் பாடல்களும் நல்ல துடிப்பான பாடல்கள்.
படத்தில் பார்க்க முடியவில்லை:(
கேட்ட பாடல்கள் அடுத்த பாகத்தில் வருகிறதோ 
என்னவோ!!!!!
இசைப்புயலின் இசை வேகம் அபரிமிதம். அருமை. பாடலாசிரியர்கள்
கபிலன். இளங்கோ கிருஷ்ணன் இவர்களுடைய
தமிழ் மனதை நிறைக்கிறது.

 ஒரு  நடிகரும் சோடை போகவில்லை.
அனைவரும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் படமாக வந்தது பெரிய முயற்சி. எழுப்பின கட்டிடத்துக்குப்
பழுது சொல்லி பயன் இல்லை.
அடுத்த பாகம் எப்படி வருகிறது என்று பார்ப்போம்.
அழைத்துச் சென்ற மகளுக்கு நன்றி.
அனைவரும் வாழ்க வளமுடன்.


Thursday, October 06, 2022

அம்பாள் வெற்றிவிழா............1

வல்லிசிம்ஹன்

 எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

அம்பாள் வெற்றி அடைந்து அசுரர்களை 
அழித்து விழாவும் கொண்டாடி விட்டோம்.

மங்கையர் கூடி மகிழும் நவராத்திரி நாட்கள், அதுவும் மூன்று 
வருடங்களாக அடை பட்டுக் கிடந்தவர்கள்
இப்பொழுது மீண்டு வந்து நேரே பார்த்து பேசிக் கொள்வது
பெரிய நிகழ்வாக நடந்தது.
இத்தனை நாட்களாக நடந்த கோவிட் யுத்தத்தை
அதன் மன அழுத்தத்தை விடுவித்து

இந்த ஊர் அம்மாக்களும் பெண்களும், கணவர்களும்
வந்தார்கள்.
தோழியின் அம்மா என்று கொலு முதல் படியில் என்னை
வைத்து அவர்கள் அன்பு காட்டியது மறக்க முடியவில்லை.

பல கொலுக்களின் படங்களைப் பதிய வேண்டும்.

அட்டகாச கொலுப் பொம்மைகள்.
அதை ஆக்கிப் படைத்த அழகு.
மனமார்ந்த உபசரிப்பு. தாம்பூலம் அளித்த அருமை.

எல்லாவற்றையும் முடிந்த வரையில் பகிர்ந்து
கொள்கிறேன்.


 Friend's  Golu  beginning.
Golu Chennai 2013


 சிரிப்பும் களிப்பும்