Blog Archive

Wednesday, October 19, 2022

அன்னமும்+பாலும்

வல்லிசிம்ஹன்

[1:01 AM, 10/14/2022] Muguntan Rajagopal: அன்னமும்+பாலும்

அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம். 

ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், 

அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
  
நான் சில மிருகக் காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். 

அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார்.
  
எனக்கு ஒரு குழப்பம். 
நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. 

சில நாட்கள் இதைப் பற்றியே சிந்தித்தேன்.

ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது அடடா, அன்னம் என்பதற்கு அரிசிசாதம் என்றும் ஒரு பொருள் உண்டே. இதை நாம் 
சிந்திக்கவில்லையே என்று யோசித்தேன்.

பிறகு கொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி, 

அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன். 

அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது, 

என்ன ஆச்சரியம்..!! 
 பால் முழுவதையும் சாதம் உறிஞ்சிக் கொண்டிருந்தது. 

தெளிந்த நீர் மட்டும் சாதத்தைச் சுற்றியிருந்த இடத்தில் வடிந்திருந்தது.

 உண்மையில் நான் கலந்த நீரை விட அதிகமாகவே வடிந்திருந்தது. 

சரி நாம் உபயோகித்த பாலில் ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் இருந்ததோ என்று நினைத்தேன்.
  
இதுதான் அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் கதை. 

நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.
  
மறுபடி சிந்தித்தபோது தான் அடடா, அன்னம் என்று தான் சொன்னார்களே தவிர, அன்னப்பறவை என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை.
அது நாமாக செய்து கொண்ட கற்பனைதான் என்று புலனாயிற்று.

அன்னம் பாலையும் தண்ணீரையும் இப்படித்தான் பிரிக்கும் என தெரிந்து கொண்டேன்.
[1:01 AM, 10/14/2022] Muguntan Rajagopal: ஆந்தைக்கு பகலில் கண் தெரியுமா?

உண்மையில், ஆந்தைகளால் பகலில் பார்க்க முடியும். அவைகளுக்கு பகலில் பார்க்கக்கூடிய திறன் உண்டு!
ஆந்தைகள் பகலில் குருடர்களாக இருக்கின்றன என்ற பொதுவான தவறான கருத்து உள்ளது.
ஆந்தைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூர்மையான பார்வை கொண்டவை.

ஆனால், இரவில் பார்வை மிகவும் கூர்மையானது. முழு இருளில் கூட தங்களின் இரையை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை.
ஆந்தைகளின் கூர்மையான பார்வைக்கான காரணங்கள் என்ன?

ஆந்தைகளின் கண்களிலுள்ள சிறப்பம்சங்கள் அவைகளின் பார்வையை பெரிதும் மேம்படுத்துகின்றன.
ஆந்தைகள் பெரிய குழாய் வடிவ கண்களைக் கொண்டுள்ளன, அவை கண்களைச் சுழற்றுவதைத் தடுக்கின்றன.

ஆந்தைகளின் கண்களின் பெரிய பகுதி கண்ணுக்குள் அதிக ஒளி பெற அனுமதிக்கிறது.
இதன் விளைவாக, அதனோடைய கண் பாவை இரவில் பெரிதும் விரிவடைகிறது, இரவில் பார்க்கும் அவர்களின் சிறந்த திறனுக்க…
[1:01 AM, 10/14/2022] Muguntan Rajagopal: அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்களின் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்..!!

(மிக முக்கிய குறிப்பு. குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.)

எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது.

🔻 தேன் குளவி கொட்டியதற்கு,

தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.

முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்.

🔻 பூரான் கடிக்கு,

பூரான் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்.

சுண்ணாம்பு மஞ்சள், உப்பு 3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்.

🔻 பூனை கடித்து விட்டால்,

பூனை கடித்து விட்டால் மஞ்சள், சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்.

10 comments:

ஸ்ரீராம். said...

சுவையான குறிப்புகள். குறிப்பாக அன்னம் பால் விளக்கம். நிஜமாகவே நானும் இப்படி யோசித்துப் பார்த்ததே இல்லை!

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கம் அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Thulasidharan V Thillaiakathu said...

அன்னம், ஆந்தை விஷயம் தெரிந்த விஷயங்கள், அம்மா...

விஷக்கடி பூரான் கடி, குளவிக் கடிக்கும் நம் வீட்டில் மஞ்சள் சுண்ணாம்பு கலந்து தேய்ப்பதுண்டு.

பூனைனா உடனே ரேபிஸ் ஊசிதான். என்றாலும் தெரிந்துகொண்டேன்.

குளவி கொட்டியதுக்கு இது வ்ரை மண்ணெண்ணை பயன்படுத்தியது இல்லை. புது விஷ்யம் இது

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான விளக்கங்கள். லாஜிக்கல்!

விஷக்கடி மருந்து டிப்ஸும் பயனுள்ளவை.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வல்லிசிம்ஹன் அம்மா

துளசிதரன்

Geetha Sambasivam said...

மிக அருமை. உண்மையும் இது தான். அன்னம்/பால் கதையை இன்னமும் சொல்லக் கூடாது.

கோமதி அரசு said...

உபயோகமான தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

உண்மையில் மிக அருமையான தகவல்கள் வல்லிம்மா, தெரிந்துகொண்டேன்.. புரிஞ்சுகொண்டேன்ன்.. ஆச்சரியம்!!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
அன்பின் திண்டுக்கல் தனபாலன்,
அன்பின் கோமதிமா,
அன்பின் கீதா சாம்பசிவம்,
அன்பின் துளசிதரன்,
அன்பின் கீதா ரங்கன்,
அன்பின் கரந்தை ஜயக்குமார்,
அன்பின் அதிரா

அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
என் தம்பி முகுந்தன் நிறைய நல்ல செய்திகளை
அனுப்புகிறான்.
அவனுக்கு என் நன்றியும் ஆசிகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

என்றும் நலமுடன் இருங்கள்..
மதுரையில் தம்பி தங்கச் சுரங்கமாக செய்திகள் அனுப்புகிறான்.

இருக்கும் இடத்தில் வந்து சேரும்
கருத்துள்ள செய்திகள்.
அவனுக்குத் தான் நன்றி சொல்லணும்.