வல்லிசிம்ஹன்
அனைவருக்கும் இனிய நாட்களே தொடர
இறைவன் அருள வேண்டும்.
அன்பின் நண்பர்களையும் அவர்களது அருகாமையை
மீண்டும் சந்திப்பது இனிமை.
பல பல நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள
சந்தர்ப்பம் இருந்தும்,
மனமும் உடல் நலமும் ஒத்துழைக்காத நிலைமை.
மீறி வருவதற்கே எழுதுகிறேன்.
நம் ஸ்ரீராம் சொன்னது போல மீண்டு வர முதல்
படி இந்தப் பதிவு.
நட்புகள் அனைவரும் உடல் நலத்துடனும்
மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
பல நிகழ்ச்சிகளை மெதுவாக அனுபவிக்க முடியாமல்
அவசரமாகக் கழிந்த சென்னை நாட்கள்.
30 நாட்களுக்குத் தமிழை சுவாசித்து,
உறவு நட்புகளோடு மனம் நிறையப்
பேசி வந்தாலும் , இன்னும் பலரைக் காண முடியாமல் வந்து தடுத்தது
தொற்று பயம்.
வீட்டிலேயே பாதிப்பு வந்ததால்,
நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு அது செல்ல
வேண்டாம் என்பதில் முதல் மூன்று வாரங்கள்
சென்று விட்டன.
அதுசரி நாம் செல்ல வேண்டாம். தொலைபேசியில்
நலம் விசாரித்துக் கொள்ளலாம் என்றால் ஒரு நெருங்கிய
உறவு அதில் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார்!!
அந்த பேச்சு வழியே தொற்று வரும் என்று நினைத்தாரோ
என்னவோ. மனம் மிகக் கலங்கியது. இறைவன்
பற்று அறுப்பது பற்றிப்
பாடம் நடத்துகிறான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை தங்கும் விடுதியில் சௌகரியங்களுக்குக் குறைவில்லை. பேரன்கள்,
பேத்திகள் சகிதம் கோவில்கம் சென்று வந்தேன்.
ஏதோ ஒரு உணவு ஒத்துக் கொள்ளாமல்
வயிற்று வலி ஆரம்பிக்க,
மீண்டுவர ஒரு வாரம்.
அது இன்னும் என்னுடன் ஒட்டி இருக்கிறது.
பாசலில் ( Switzerland) பல்லுக்கு சிகித்சை:)
இதோ இங்கே வந்தாச்சு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடைசியாக விடுதியில் நடந்த ஒரு சின்ன டிராமாவைக் கொசுறாக
வைக்கிறேன்.
எங்கள் எட்டாவது மாடி அறைக்கு அடுத்த அறையில் காலையிலிருந்தே
சந்தோஷக் கொண்டாட்டம்.
மாலையில் சுருதி சேர ஆட்டமும் ஆரம்பித்தது.
தொலைக்காட்சியில் சோகப் பாடல்கள் ,காதல் தோல்வி
என்று ட்ரம்ஸ் வெளுத்துவாங்க
அந்த சத்தம் பால்கனி வழியே தடித்த சுவர்களையும் மீறி வந்து என் தூக்கத்தைக் கலைத்தது.
மகனோ ஒரு நாள் கடின உழைப்புக்குப் பின் தூங்குகிறான்.
படுக்கையிலிருந்து எழுந்து அந்த அறைக் கதவை மூடி ஹாலில் வந்து உட்கார்ந்தால்
தூக்கம் போயே போய்விட்டது.
'பொய் சொல்ல இந்த இதயத்துக்குத் தெரியவில்லை''
எப்று சோகம் வழியும் பாடலை தொ கா ஒளிபரப்பக் கூடவெ
இரண்டு இளைஞர்கள் அலறுகிறார்கள்.
சரி இரண்டு மணியாகிறது தூங்குவார்கள் என்று காத்திருந்தேன்.
ம்ஹூம்.
https://youtu.be/uhI8jbV-wGU
''என் காதல் சொல்லத் தேவையில்லை''
என்று தொடர்கிறது.
நிலைமை கட்டு மீறுகிறது என்ற கோவம் தலைக்கேறியது.
உடனே கீழே மானேஜருக்குத் தொலைபேசினேன். ஐந்து
மணி நேரமாக இந்தத் தொல்லை. தயவு செய்து
கட்டுப் படுத்தவும் ' என்று சொன்னேன்.
அவர்கள் தயங்கினார்கள்.
மேலிடத்துக்குச் சொல்வேன் என்றதும்
உடனே பலன்.
அங்கே செக்யூரிட்டியாக இரண்டு பௌன்சர்களைப்
பார்த்திருக்கிறேன்.
அந்த பூட்ஸ் சத்தம் கேட்டது.
அறையின் கதவைத் திறந்து அவர்கள் தானா
என்று உறுதி செய்து கொண்டு கதவை சாத்தினேன்.
அப்போது மணி 3.
4 மணிக்கு ஓய்ந்தது இசை.
நம் தூக்கமும் போனது.
காலையில் எழுந்த மகனிடம் (காப்பி சாப்பிட்ட பிறகு)
நடந்ததைச் சொன்னேன்.
அவனுக்கு நான் செய்தது கொஞ்சம் மனத்தாங்கல் தான்.
ஏம்மா உனக்கு மட்டும் சத்தம் க்ட்டது.
இங்கெல்லாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். பணக்காரப்
பசங்க. நீ ஏன் தலையிடறே என்று வருத்தப் பட்டான்.
ரூம் கதவை வேற திறந்தியா என்று அதிசயப்
பட்டான்.
அந்த அறைப் பசங்கள் வெளியேற்றப் பட்டார்கள் என்று அடுத்த செய்தி:)
மீண்டும் பார்க்கலாம்.