Blog Archive

Thursday, September 29, 2022

பொன்னியின் செல்வன் வருகிறார்.........2


வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

கல்கியின் 'பொன்னியின் செல்வன் முதலில் 
கல்கியில் வந்த போது தமிழ் எழுத்து
அவ்வளவு பழகவில்லை. 
இரண்டாவது முறையாக வந்த போது 
வரிவிடாமல் படித்த நினைவு. படங்கள்
பொக்கிஷமாகக் காக்கப் பட்டு
வீடு தோறும் இருந்த காலம்.

தொலைத்த பல பழைய செல்வங்களில் இந்தப் புத்தகங்கள்
உண்டு.





பொன்னியின் செல்வன் அறிமுகம் ஆரம்பித்ததிலிருந்து
ஏகப்பட்ட  வீடியோக்கள் வந்துவிட்டன.

பொன்னி நதி பாக்கணுமே '' பாடல் நாளை அதாவது 29ஆம் தேதி
இங்கே உள்ள  தியேட்டர்களில் முழங்கப் போகிறது.

எனக்குத் தெரிந்து  இங்குள்ள இந்தியர்கள் 
அனைவருமே என் மாதிரி நாலைந்து பேர்களைத் தவிர

10 நாட்களுக்கு முன்பதிவாக டிக்கெட்டுகளைப் 
பதிந்து விட்டார்கள்.
வாட்ஸாப்புகளில் நீ வருகிறாயா நாம் எல்லாரும் போகலாமா
இதுதான் பேச்சு.

தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும் ஒரு நூலகத்தில்
பொன்னியின் செல்வனின் எந்தப் பாகமும் கிடைக்கவில்லை.
இரண்டு மாதங்களாக இது செய்தி.

அமரர் கல்கி எங்கிருந்தோ ரசித்துக் கொண்டிருப்பார்.
தான் ஆராய்ச்சி செய்து விவரம் சேகரித்த 
ஒரு நெடுங்கதை இரண்டு பாகங்களாகத் திரையிடப் 
படுகிறது என்று அறிந்து புன்னகைப்பார் என்று நினைக்கிறேன்.

இது மணிரத்தினம் அவர்களின் படமாகத் திரைக்கதையாக
எழுத்தாளர்
ஜெய மோகன் , குமரவேல் அவர்களின் வசனங்களுடன்

40க்கும் மேற்பட்ட திரைப் பிரபலங்களுடன்
சுடர் விடப் போகிறது.

பொன்னியின் செல்வன் தொடரைப் படித்து

முடித்தவர்கள் எதிர்பார்க்கும் பல விஷயங்கள்
இதில் இருக்காது, குறிப்பாக நீண்ட வசனங்களும் காட்சி வர்ணனைகளையும்
பாடல் மூலமாகவும் 
திரைப் பின்னணிகளாகவே படைத்திருக்கிறார்கள் என்றே சொல்கிறார்கள்.

இராமாயணத்தின் ஏழு காண்டம் எப்படி 
மூன்று +அரைமணி நேரமாகச் சுருக்கப்
பட்டதோ, அதையே சம்பூர்ண ராமாயணமா ? அதை யார் உட்கார்ந்து 
பார்ப்பது என்று பின்னாட்களில் சொன்னார்களோ,(இத்தனைக்கும் பாடல்கள் அனைத்தும் 
அவ்வளவு சிறப்பாகப் படமாக்கப் பட்டிருக்கும்)
அதைவிட இந்தக் கதைப் பல வித தொழில் நுட்பத்தில் 
பாடல்களாகவும், யுத்தக் காட்சிகளாகவும் 
பிரம்மாண்டமாக வருகிறது என்றே பேச்சு.

காத்திருக்கலாம். அனைவரும் வாழ்க வளமுடன்.






16 comments:

ஸ்ரீராம். said...

ஆர்வமாகக் காத்திருக்கிறீரஃபில் என்று தெரிகிறது!  எல்லோரும் இதை பாஹுபாலியுடன் ஒப்பிடுவார்கள்.  பாஹுபலி கற்பனைக்கதை.  எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திருப்பலாம்.  இதை அப்படி திருப்ப முடியாது என்று நினைத்துக் கொள்கிறோம்.  பார்ப்போம்!  மாற்று பாரதம் எழுதிய ஜெமோ வேறு இருக்கிறார்...!

ஸ்ரீராம். said...

என் மகன் இன்று காலை நானே வருவேனும் நாளைக் காலை பொன்னியின் செல்வனும் பார்க்கிறான்.  பொ செ அவனுக்கு என்ன புரியுமோ..   அல்லது ஒரிஜினல் கதையைப் படிக்காத அவனுக்கு அது பாண்டஸி வகையாக தோன்றலாம்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆமாம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.
எதிர்பார்ப்பு இல்லாமல் செல்வது நல்லது.

பெயருக்குத் தான் கல்கி என்று சொன்னார்கள்.
ஜெ மோ இண்ட்டர்வியூ பார்த்தீர்களா.
தொடர் மாதிரி எடுக்க முடியாது. மாற்றி தான்
காட்சிகள் அமைக்க வேண்டும் என்றார்.
அடிப்படை மாறாது. வசனங்கள் மாறும்.
புது பொன்னியின் செல்வன்!!!!

வல்லிசிம்ஹன் said...

பாஹுபலியை இது தூக்கி சாப்பிட்டு விடும்.
அவ்வளவு முயற்சி செய்து எடுத்திருக்கிறார்
மணி ரத்னம்.
அதுவும் எவ்வளவு மார்க்கெட்டிங்க் நடக்கிறது பார்த்தீர்களா.

இதுவரை இத்தனை தீவிர பப்ளிசிட்டி
பார்த்த்தைல்லை.
அட இரண்டு படங்களும் பார்க்கப் போகிறாரா
உங்கள் மகன்:)
டிக்கெட் கிடைத்ததோ ?
நாங்கள் சில நாட்கள் சென்றுதான்
பார்க்கப் போகிறோம். மகன் குடும்பம் வரும் சனிக்கிழமை
பார்த்து விடுவார்கள். நன்றி ஸ்ரீராம்.

நெல்லைத்தமிழன் said...

எங்கள் வீட்டில் எல்லோரும் செல்கிறார்கள் என்னைத் தவிர.

மகள் பொ செ ஆடியோ முழுதும் கேட்டுவிட்டு படம் பார்க்கும் ஆவலுடன் இருக்கிறாள். தமிழில் ஆழ்வார்க்கடியான் நாராயணா, ஐயகோ என்று ஆனதை நான் ரசிக்கவில்லை எனக் குற்றம் சொன்னதை அவள் ரசிக்கவில்லை.

KILLERGEE Devakottai said...

பொன்னியின் செல்வன் மீண்டும் உலா வருகிறது பார்க்கலாம்.

கரந்தை ஜெயக்குமார் said...

பொன்னியின் செல்வன் படம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனாலும் கல்வி தன் எழுத்து வலிமையால் நம்மிடையே ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்புகளை இப்படம் நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

திண்டுக்கல் தனபாலன் said...

ஆவலுடன் உள்ளேன்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஏன் பொன்னியின் செல்வன் பார்க்கவில்லை?
ஆழ்வார்க்கடியான் ஐயோ சொல்கிறதை மாற்றி விட்டார்களாமே.
அவன் ஒரு ஒற்றன் தானே.

உங்கள் மகளுக்கு வாழ்த்துகள்.
நல்ல அனுபவத்தை மிஸ் செய்யாதீர்கள்.
இங்க எல்லாம் இன்னும் ஒரு வாரத்த்துக்கு எந்தத்
தியேட்டரிலும் டிக்கட் இல்லை.

நம்ம ஊரில் ரஜினி படம் பார்க்கும்போது இருக்கும் ஆர்ப்பாட்டத்தைவி இங்கே அதிகமாக
இருக்கும் வேடிக்கை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்புதேவகோட்டைஜி.
ஒர்ய்வரின் பிரம்மாண்ட உழைப்பைக்
காண்பதும் ஒரு அனுபவம் தான்.

நன்றி. என்றும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார்,
என்றும் நலமுடன் இருங்கள்.
நீங்கள் அறியாத சரித்திரமா.

கல்கியின் பார்வையும் , மணிரத்னத்தின் பார்வையும் வேறு படலாம்.

படத்தை மட்டும் ,அதன் நேர்த்தியையும், நல்ல நடிப்பையும்
பார்க்க வேண்டும்.

எழுத்தாளை காலச்சக்கிரம் நரசிம்ஹாவின் நாவல்களையும் நான் படித்திருக்கிறேன்.
வெவ்வேறு ஆராய்ச்சிகள் இவர்களின் எழுத்தில் வெளிப்படுகிறது.
எனக்கு கல்கிதான் பிரதானம்.
பார்க்கலாம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன் என்றும் நலமுடன் இருங்கள்.
படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் விமரிசனம் எழுத வேண்டும் அப்பா.
நன்றி.

பிலஹரி:) ) அதிரா said...

வல்லிம்மா நலம்தானே... இந்தியா, கனடா எனத் தொடர் பிரயாணங்களால் கொஞ்சக்காலம் எங்கும் வரவில்லை.

என்னிடமும் பொ செல்வன் ஆறு புத்தகமும் அழகாக புதுசாக இருக்குது:)).. படிக்க முடியவில்லை, எப்போ படிப்பேனோ...:). கதையை அப்படியே படமாக்கி இருப்பார்களோ இல்லைத் தலைப்பு மட்டும்தானோ தெரியாதே.. படம் பார்த்தால்தான் தெரியும்.

ஸ்ரீராம். said...

அதிரா...   பொன்னியின் செல்வன் ஆறாவது புத்தகம் எங்கு வாங்கினீர்கள்?  எனக்கும் வேண்டுமே...  யார் எழுதியது?!!

வல்லிசிம்ஹன் said...

அடடா, நம்ம அதிரா.....
உங்கள் நலம் எப்படி?
என்ன இப்படிக் காணாம போறீங்க. உங்க எழுத்தைப்
பார்த்து எவ்வளவு நாட்களாச்சு பா.


நான் நலமே அம்மா. நீங்களும் குடும்பமும் நலம் நு நம்பறேன்.
இது பொன்னியின் செல்வன் தான்.
மணிரத்தினம் ஸ்டைலில் வந்திருக்கு.
ரொம்ப ஆச்சரியமான பப்ளிசிட்டி.
நேர்காணல். ஏராள நடிகர்கள்.
நன்றாக லாபம் காண வேண்டும். முடிந்தால்
போய்ப் பார்க்கவும்.
சுவாரஸ்யமா இருக்கும் என்று நம்புகிறேன் மா.

கோமதி அரசு said...

ஆவலுடன் எல்லோரும் இருக்கிறார்கள்.எல்லோர் எதிர்பார்ப்பும் வீண் போகாமல் இருக்க வேண்டும்.