தோழி வீட்டில் எங்கள் குமுதத்தைக் கொடுத்துவிட்டு
கல்கி வாங்கி வருவேன்.
பள்ளி, விளையாட்டு, கதை படிப்பது இதுவே எங்களுக்கு
பொதுவானது. அந்த அருமையான சுதந்திர நாட்களில்
பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம்
என்று படித்துத் தள்ளினோம் விடுமுறை நாட்களை.
பொன்னியின் செல்வன் இன்றே இங்கே
வெளியாகிறது.
இதே போல சிவகமியின் சபதத்தையும் யாராவது எடுத்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்!!
10 comments:
சிவகாமியின் சபதம் ஒரளவு பார்த்திபன் கனவு படத்தில் இடம்பெற்றும் விட்டது.முழு படமும் வந்தால் நன்றாக இருக்கும் தான்.
தங்களது எண்ணம் நனவாகட்டும் அம்மா
பொன்னியின் செல்வன் பார்ட்1 பார்த்தேன். பிரம்மாண்டம். நல்ல நடிகர்கள் செலெக்ஷன். கிராபிக்ஸ், ஆர்ட் என்று மிரட்டியிருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் நாவலை டக் டக் என்று திருப்பிப் பார்ப்பதுபோல இருந்தது. இது வரலையே, இந்த இடம் காணோமே..ஓ வேகவேகமாகத் திருப்பும்போது விட்டுப்போயிருக்கும் என்று தோன்றியது.
ஒரு க்ளைமாக்ஸில் படம் முடியவில்லை. கடைசி அரை மணி நேரம், பொ.செ. கதை தெரியவில்லை என்றால் சரியாக ஃபாலோ பண்ணமுடியாது
முதலில், வந்திருப்பதே பொன்னியின் செல்வன்தானா என்று பார்ப்போம் அம்மா... பொறுத்திருங்கள்!!!!
முதலில், வந்திருப்பதே பொன்னியின் செல்வன்தானா என்று பார்ப்போம் அம்மா... பொறுத்திருங்கள்!!!!
aahaa. mudhalukke mosamaa:)
அன்பின் கோமதி மா வாழ்க வளமுடன்.
சிவகாமியின் சபதம்
உண்மைதான். உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை.
பொன்னியின் செல்வன் எடுப்பது மிக சிரமம்.
நன்றி மா.
அன்பின் தேவகோட்டைஜி,
எனக்கும் படம் எடுத்தவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை:)
இருந்தாலும் நல்ல உழைப்பு வெற்றி பெறட்டுமே என்ற நினைப்பு தான்.
என்றும் நலமுடன் இருங்கள் அப்பா.
அன்பின் முரளிமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
''ஒரு க்ளைமாக்ஸில் படம் முடியவில்லை. கடைசி அரை மணி நேரம், பொ.செ. கதை தெரியவில்லை என்றால் சரியாக ஃபாலோ பண்ணமுடியாது''
கதை சொல்லிப் படம் எடுத்திருக்க வேண்டுமோ?
இளைஞர்கள் சிலர் படித்திருக்க வாய்ப்பில்லை.
புரியவில்லை என்றால் மீண்டும் பார்ப்பார்களோ
என்னவோ.
ஆங்கில சினிமாக்களைப் புரிந்தா பார்க்கிறார்கள்!!!
தமிழ் என்பதால் இன்னும் ஆர்வம் இருக்கும்.
சரியாகக் கணித்திருக்கிறீர்கள். நன்றி மா.
நானும் பார்க்கும் போது புரிய வேண்டும்.
வணக்கம் சகோதரி
பதிவு அருமை.படம் இங்கு அருகிலிருக்கும் மாலில் ஓரிரு நாட்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. டிக்கெட் விலை அதிகம். என்றாலும் செல்ல விருப்பம் உள்ளது. தியேட்டர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வெகு தூரம் என நினைக்கிறேன்.எங்கள் இளைய மகன் இருக்கும் வெளிநாட்டிலும் நேற்று படத்தைப் பார்க்கப் போவதாகச் சொன்னார். பார்த்திருப்பார்கள். இன்று போஃனில் அதுப் பற்றி விபரம் சொல்வார்.நீங்கள் அங்கு இந்தப் படத்தை பார்த்து விட்டீர்களா?
நீங்கள் சொல்வது போல் சிவகாமியின் சபதத்தையும் ஒருநாள் திரைப்படமாக எடுப்பார்கள். உங்கள் நல்லவிதமான ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.ஆம். நீங்கள் சொல்வது போல் முன்பே கதை படித்து கதை புரிந்தால் படத்தோடு ஒன்றிப் போக சௌகரியமாக இருக்கும். உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
நவராத்திரி நாட்கள் நேரத்தை ஆக்கிரமித்து விட்டன.
பதில் எழுத மீண்டும் தாமதம்.
நெடு நாட்கள் கழித்து சரித்திரப் படம் வெளியாகி இருப்பதால்,
அதை முன்னிறுத்தி எழுத வேண்டும் என்று நினைத்தேன் அம்மா.
தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தால்
நல்ல அனுபவமாக இருந்ததாகச் சொன்னார்கள்.
மகளுக்கும் அலுவலக வேலைகள்
இருப்பதால் நிதானித்தே செல்ல வேண்டும்.
மிக நன்றி மா. நாம் ரசிக்கலாம்.
Post a Comment