பசங்க படம் அருமையான பாடல்கள் நிறைந்தது.
இந்தப் பாடலில் வரும் இருவரும்
இளமை, நேர்மை எல்லாம் சேர்ந்து
துடிப்புடன் வரும் அழகு மனதை அப்போதே
கவர்ந்தது.
சூரியா லைலா
ஜோடியின் இயல்பான அழகான பாடல்.
எல்லாப்பாடல்களையும் எத்தனை தடவை கேட்டாலும்
அலுக்க வில்லை. இவைதான், இதற்கும் மேலும் இன்னும் நிறைய
இசையும்
பேச்சுகளும் நாட்களைத் தள்ளிச் செல்கின்றன.
சில கவலைகளைக் களைய முடியாது.
இந்த வயதில் அவைகளை யோசிப்பதால்
என் உடலும் பாதிப்படைகிறது. யாருக்கு லாபம்?
கவலைப் படுவதால் துன்பங்கள் மறையும் என்றால்
அதில் அர்த்தம் உண்டு. அது நடப்பதில்லை.
பாரங்களைக் கடவுளிடம் , ஷிர்டி பாபாவிடம்
ஒப்படைக்கிறேன்.
பிரார்த்திக்கிறேன்.
விடுதலை வேண்டுகிறேன்.
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.
நல்ல அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு
நன்றி சொல்லி,
தெய்வங்களை வீட்டுக்கு வரவழைத்து நிறைவு
அடைய பிரார்த்திப்போம்.
நவராத்திரி நல் வாழ்த்துகள்.
15 comments:
கவலைகளை சமாளிக்கக் கற்றுக் கொள்வோம். அதைதான் களைய முடியாதே.. இறைவனிடம் பிரச்னைகளைக் கொடுக்காதே என்று வேண்டாமல் அந்தப் பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளிக்கும் வழியை எனக்கு கற்றுக்கொடு, தைரியத்தைக் கொடு என்று வேண்டச் சொல்வார் எங்கள் ஆசிரியர். அது நினைவுக்கு வருகிறது.
இனிமையான பாடல்கள். சமீபத்து பாடல்கள் சிலவும் நன்றாகவே இருக்கின்றன. ஹ்ருதயம் பாடல்கள் கேளுங்கள் அம்மா.
வணக்கம் சகோதரி
நல்ல பாடல்களுடன் பதிவு அருமையாக உள்ளது. இன்றைய தினத்தில் வரும் அமாவாசையில் மறைந்த முன்னோர்களின் அருளாசிகளுடன் தெய்வங்களின் துணையும் சேர்ந்து நம் வாழ்வை கலக்கமில்லாது ஆக்கட்டும். தங்களது அருமையான நிறைவான எண்ணங்களுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகள.நன்றிகள்.நவராத்திரி நாட்கள் மகிழ்வாக நம் மனதை வைத்திருக்க என் பிரார்த்தனைகளும்.பகிர்ந்த நல்ல பாடல்கள் ஒவ்வொன்றையும் பிறகு நிதானமாக கேட்டு ரசிக்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையானப் பாடல்கள்.
நல்ல பாடல்கள்.
நலமுடன் இருக்க எமது பிரார்த்தனைகள் அம்மா
கவலைப்படுவதால் கவலை தீருமா? உண்மை... ஆனால் மனது கவலைப்படுவதை எப்படி நிறுத்துவது?
பாடல்கள் மனதுக்கு ஆறுதல்தான்.
கவலை பட்டால் உடல் நலம் பாதிக்கபடும்தான்.
கவலைபடுவதால் துன்பங்கள் மறையுமா மறையவில்லை அதிகமாகிறது.
கடவுளிடம் விட்டு விடுகிறேன் நானும்.
நினைவுகள் கொடுக்கும் வேதனையிலிருந்து விடுபட விடுதலை வேண்டி விட்டு விட்டு சென்றவரிடம் அழைக்க வேண்டுகிறேன்.
முன்னோர்களுக்கு நன்றி சொல்லி வணங்கி குழந்தைகளை நல்லபடியாக காத்து அருள வேண்டும். என்று வேண்டி கொள்கிறேன். என் கோரிக்கையை நினைவு படுத்துகிறேன்.
நவராத்திரி நல் வாழ்த்துகள்!
அன்பின் ஸ்ரீராம் என்றும் நலமுடன் இருங்கள்.
உண்மைதான். கவலைகளிலியே அலை
இருக்கிறதே.
ஓயாமல் வருபவை அவைகள் தான்.
கவலைப்படுவதன் எண்ட் ரிசல்ட் உடல் நலம் கெடுவது.
யாருக்கு லாபம்?
இருந்தாலும் எல்லோரும் விவேகானந்தராகவோ,புத்தராகவோ
வேறு சன்யாசியாகவோ ஆக முடியுமா.
இறைவன் தான் சிக்கல்களிலிருந்து விடுவிக்க வேண்டும்.
நீங்கள் சொன்ன பாடல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்.
மிக நன்றி மா.
அன்பின் கமலாஹரிஹரன் மா,
என்றும் வளமுடன் இருக்க
இறைவன் அருளட்டும்.
நல் அமாவாசையான இன்று, நம்மை
வாழ்த்த வரும் முன்னோர்கள்
அனைவருக்கும் நல் ஆசிகள் வழங்கிக்
கவலை இன்றி வாழ வாழ்த்த வேண்டும். நன்றி மா. தங்கள் ரசனையும் அன்பும் அளவில்லாதது.
அன்பின் ஜெயக்குமார்,
பதிவைப் படித்துப் பாடல்களையும் ரசித்ததற்கு மிக நன்றி மா.
அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் வாழ்க வளமுடன்.
இசை எப்பொழுதும் மனதை இளக வைக்கும்.
அந்த அமைதியைக் கொடுப்பவர்களுக்கு
நம் வணக்கங்கள்.
நீங்களும் நலமுடன் இருங்கள் .நன்றி மா.
அன்பின் முரளி மா,
எத்தனையோ உபன்யாசங்கள் அறிவுரைகள் ,ராம நாம ஜபங்கள்
எல்லாம் அது பாட்டுக்கு ஒரு பக்கம். கூடவே மனத்தை மிரட்டும்
கவலைகள்.
வழி தெரியாதததால் அரற்றுகிறோம்.
வேற என்ன செய்ய முடியும். முதிர் வயது வந்தால்
ஓரளவு ஓயும் என்று நினைத்தேன்.
சம்சாரம் இருக்கும் வரை சஞ்சலமும் இருக்கும்.
பார்க்கலாம்.
அமாவசை நல் நாள், நவ ராத்திரி நல் வாழ்த்துகள் மா.
''பயக்ருத் பய நாசனன் ''அருள் கிடைக்க வேண்டும்.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
உண்மைதான் அம்மா.
''பாடல்கள் மனதுக்கு ஆறுதல்தான்.
கவலை பட்டால் உடல் நலம் பாதிக்கபடும்தான்.
கவலைபடுவதால் துன்பங்கள் மறையுமா மறையவில்லை அதிகமாகிறது.
கடவுளிடம் விட்டு விடுகிறேன் நானும்.
நினைவுகள் கொடுக்கும் வேதனையிலிருந்து விடுபட விடுதலை வேண்டி விட்டு விட்டு சென்றவரிடம் அழைக்க வேண்டுகிறேன்.''
நினைவுகள் மட்டும் இல்லை. நடப்புகள் கூட
அமைதியைக் கெடுக்கின்றன.
மொத்தத்தில்
பழைய பாடல் ''கவலையே அலை. அதில் ஆடும் ஓடம் நாம்''
அவ்வப்போது வரும் தென்றலுக்காகக் காத்திருக்கிறோம்.
என்றும் நலமுடன் இருங்கள் அன்பு தங்கச்சி.
https://killergee.blogspot.com/2022/09/blog-post_19.html?m=1
Post a Comment