Blog Archive

Saturday, December 04, 2021

ஈரமுள்ள நெஞ்சம் ஈரம் கொண்ட கண்கள்...


வல்லிசிம்ஹன்

கண்கள் கிடைப்பது கடவுள் கருணை.

பார்க்க படிக்க உணர நோக்க அன்பு செய்ய
எல்லாவற்றுக்கும் இன்றி அமையாத பார்வை.

சர்க்கரை நோய் என்று தெரிந்தவுடன் 
வைத்தியர்கள் சொல்வது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
கண் பரிசோதனை.

யோகம் செய்பவர்களுக்கு எல்லாமே நலம்.
அந்த யோகம் கையில் வருவதற்கும் ஒரு யோகம் வேண்டும்.

வாழ்வே ஒரு தியானம், எட்டு மணிகளுக்கு ஒரு தடவை
உணவு இருந்தால் போதும்.

பசி ஒன்றே நம்மை மதியுடன் இயங்க வைக்கும்.
உண்ட வயிறு மயக்கம் தரும்.
இதெல்லாம்  யோகி ஒருவர் சொல்கிறார்.

கண்களுக்கும்  உணவு கொடுத்தால் மட்டுமே
புத்திக்கும் வேலை,

ஓய்வு கொடுக்கச் சொன்னது கண்களில் வந்த உலர்வு.
இணையமே உலகம் என்றிருந்தால் 
இது போல வரும் என்ற கண்டிப்பான எச்சரிக்கையுடன் விடுவித்தார்
வைத்தியார்.
கண்,திரை, உலர்ந்திருப்பது எல்லாமே 
நான் போகும் வழி சரியில்லை என்று சொன்னார்.
இனி படிப்பதையும்,இணையம் மேய்வதையும்
குறைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி வந்தேன்.

இங்கிருப்பவர்கள் எல்லோரும் , ஏன் உலகம் முச்சூடும்
கணினி மூலம் தான் வாழ்கிறார்கள்.
எனக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு என்று கேட்க
முடியுமா.
அதற்கு  ஒரு லெக்சர் கிடைக்கும்!!!!!





23 comments:

நெல்லைத் தமிழன் said...

எனக்கு தண்ணீர் நிறைய குடிக்கலைனா, செல்போன் அல்லது கம்ப்யூட்டர் பார்க்கும்போது கண் ரொம்பவே எரியும்.

அதனால் ரெகுலரா தண்ணீர் குடிக்கிறேன்.

எலெக்ட்ரானிக் கேட்ஜட் வருவதற்கு முந்தைய ஜெனெரேஷனுக்கு அவை ஒத்துக்கொள்வதில்லையோ என்னவோ

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

கண்களின் அவசியத்தை பக்குவமாக கூறியிருக்கிறீர்கள். மருத்துவர் கூறியபடி கண்களுக்கு ஓய்வு கொடுத்து வாருங்கள்.என்ன செய்வது? நமக்கு மட்டும் விசித்திரமாக மருத்துவர் இப்படி ஏதாவது சொன்னால் வருத்தமாகதானேஇருக்கும். நாம் வேறு ஏதாவது அடிக்கடி வெளியில் செல்வது போன்ற பொழுது போக்குகள் இருந்தாலாவது. இப்படி படிப்பது, கணினி பார்ப்பது கூடாதென்றால், மனசு சமாதானப்படும்.இப்போதுள்ள தொற்றின் காரணமாக எங்கும் போக முடியாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறோம்.இந்த கணினி மூலமாக படித்தல், கேட்டல், பார்த்தல் ஒன்றுதான் நம் மனதுக்கு ஆறுதல் தரும் விஷயம். அதையும் கண்களின் நலம் கருதி குறைக்கச் சொன்னால் கொஞ்சம் மனசுக்கு கஸ்டந்தான். இருப்பினும் நம் ஜீவனின் அம்சமாகிய கண்களுக்காக அதைச் செய்யத்தான் வேண்டும். முடியும் போது பதிவுகள் எழுதி, படித்து என கண்களுக்கு மருத்துவர் சொல்லும் வரை ஓய்வு கொடுங்கள்.

பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

வெகு நேரம் கணினி , தொலைக்காட்சி பார்த்தால் கண் எரிச்சல் ஏற்படுவது உண்மைதான்.
நாம் என்ன செய்வது ? பிள்ளைகள் எல்லாம் வேலைக்கு போனபின்னால் எவ்வளவு நேரம் தனிமையில் இருப்பது, பாட்டு கேட்டுக் கொண்டு, இணையத்தில் படித்து கொண்டு எழுதி கொண்டு தான் இருக்க வேண்டி உள்ளது.

வீட்டுவேலைகள் முடிந்தவரை செய்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம்.

உலர்ந்த விழி உறுத்தல் ஏற்படுத்தும் மருத்துவர்கள் ஆலோசனை கண்களுக்கு ஓய்வு கொடுக்க சொல்கிறது.

சிறிது நேரம் கண்ணை மூடி இருங்கள், மீடி மூடி திரந்து பாருங்கள். வெளியே சிறிது நேரம் வெயில் அடிக்கும் போது வானத்தை பாருங்கள். கண் பொத்தி வைத்து இருங்கள் சிறிது நேரம் உள்ளம் கைகளால்.


பாடல்கள் எல்லாம் நல்ல தேர்வு.எல்லா பாடல்களும் கேட்டேன்.


கோமதி அரசு said...

நமக்கு வயது ஆகி விட்டதால் உலர் கண் வருகிறது, ஆனால் இப்போது முழுக்க முழுக்க கணினியில் வேலை பார்க்கும் சிறு வயதுக்காரர்களுக்கும் கண்ணில் கோளாறுகள், கழுத்து வலி, இடுப்புவலி, முதுகு வலி என்று கஷ்டபடுகிறார்கள் அக்கா.

வீட்டு வேலைகள், மற்றும் அலுவலக வேலை என்று மிகவும் கஷ்டம் படுகிறார்கள்.

நம் ஊரில் மற்ற வீட்டு வேலைகளுக்கு உதவியாக ஆட்கள் கிடைக்கும் இங்கு அதுவும் இல்லை.

இரட்டை பாரம் சுமக்கிறார்கள். பார்த்து கொண்டு கவலை பட்டு கொண்டு இருக்கிறோம்.

நம் உடல் நலத்தை பார்த்து கொள்வதே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி.

உடல் நலத்தை பார்த்து கொள்ளூங்கள், கண்களை பார்த்து கொள்ளுங்கள். நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள்.
விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்.

Geetha Sambasivam said...

கண்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கத்தான் வேண்டும் வல்லி. இப்போதையக் கணினி உலகில் சின்னக் குழந்தைகள் கூட மொபைல் , கணினி மூலம் கார்ட்டூன்களைப் பார்ப்பதே வேலையாக வைத்திருக்கிறார்கள். அதிலும் அம்பேரிக்காவில் குழந்தைகளுக்கு மிகச் சிறிய/குறைந்த வயதிலேயே கார்ட்டூன்களைப் போட்டுப் பார்க்க வைக்கிறார்கள். அதன் மூலம் குழந்தைக்குக் கல்வி புகட்டுவதாகச் சொன்னாலும் இதெல்லாம் தேவையா என்றும் தோன்றுகிறது. இப்போது இங்கேயும் அவை எல்லாம் வந்துவிட்டன. கண்களுக்கு அதிக ஓய்வு கொடுங்கள். நானுமே கண்களில் பிரச்னை வந்ததாலேயே குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் கணினியில் உட்காருவதே இல்லை. மாலை ஐந்தரைக்கு மேல் அநேகமாக அவசியம் நேர்ந்தால் தவிரக் கணினியில் உட்காருவதே இல்லை. கவனமாக இருங்கள்.

Geetha Sambasivam said...

பாடல்கள் அனைத்தும் தெரிந்த பாடல்களே. நன்றாக இருக்கும்/இருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி. கண் பத்திரம்.

Thulasidharan V Thillaiakathu said...

கண்கள் கிடைப்பது கடவுள் கருணை.

பார்க்க படிக்க உணர நோக்க அன்பு செய்ய
எல்லாவற்றுக்கும் இன்றி அமையாத பார்வை.//

ஆமாம் கண்டிப்பாகக் கண்கள் மிக மிக அவசியம் கருணையோடு பார்ப்பதற்காகவும் அன்பை வெளிப்படுத்தவும் கண்களோடு சேர்ந்து ஒரு புன்னகை!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சர்க்கரை நோய் என்று தெரிந்தவுடன்
வைத்தியர்கள் சொல்வது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
கண் பரிசோதனை.//

ஆமாம்.

யோகம் செய்பவர்களுக்கு எல்லாமே நலம்.
அந்த யோகம் கையில் வருவதற்கும் ஒரு யோகம் வேண்டும்.//

இரண்டாவது வரியை டிட்டோ செய்து கன்னாபின்னா வென்று ஆதரிக்கிறேன். அம்மா. இதை உணராமல் பலரும் சொல்லுவது பிறர் மனம் நோகும் என்பது கூட உணராமல், "நீ அப்படிச் செய்திருக்க வேண்டும் இப்படிச் செய்திருக்க வேண்டும், மூச்சுப் பயிற்சி, யோகா செய்ய வேண்டும் நோய்கள் எல்லாம் தீரும் என்றெல்லாம் சொல்லுவார்கள். எத்தனை குருக்கள் நம் தத்துவங்கள் சொல்கின்றன அதை மனிதன் உணர வேண்டும் என்று.

நான் சொல்வேன் அதை உணர்வதற்கும் நேரம் யோகம் என்று ஒன்று இருக்கிறது என்று ஆனால் அவர்களால் அதை ஒத்துக் கொள்ள முடியாது. நம் மனம் தான் காரணம் என்றும் சொல்வார்கள். அது சரியாதான் ஆனால் அந்த மனம் ஒத்துழைக்கவும் நேரம் காலம் யோகம் எல்லாம் வேண்டும். காலம் என்பதுதான் முடிவு செய்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மனம் நோகப் பட்டு பட்டென்று பேசிவிடுகிறார்கள். என்னவோ எல்லாமே நம் கையில் என்ற நினைப்புடன்!!!! குறிப்பாக இந்த மத குருமார்களைப் பின்பற்றுபவர்கள் பேசுவது இப்படி!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்வே ஒரு தியானம், எட்டு மணிகளுக்கு ஒரு தடவை
உணவு இருந்தால் போதும்.

பசி ஒன்றே நம்மை மதியுடன் இயங்க வைக்கும்.
உண்ட வயிறு மயக்கம் தரும்.
இதெல்லாம் யோகி ஒருவர் சொல்கிறார்.//

ஆமாம் அம்மா...அது போல கண்களுக்கும் உணவு தேவைதான் நீங்கள் சொல்லியிருப்பது போல. ஆனால் பாருங்கள் என்று சொல்ல வந்ததை நீங்கள் கீழே சொல்லிட்டீங்க

//இங்கிருப்பவர்கள் எல்லோரும் , ஏன் உலகம் முச்சூடும்
கணினி மூலம் தான் வாழ்கிறார்கள்.
எனக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு என்று கேட்க
முடியுமா.
அதற்கு ஒரு லெக்சர் கிடைக்கும்!!!!!//

ஹைஃபைவ்!!!!!!!!

அம்மா வெள்ளரிக்காய் ரவுண்டாகக் கட் செய்து கண்களை முடிக் கொண்டு சிறிது நேரம் வைத்துப் பாருங்கள் நீங்கள் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தண்ணீர் நிறையக் குடிக்கணும்னும் சொல்லப்படுவதுண்டு. தண்ணீர் குடித்தால் இந்தக் குளிருக்கு அடிக்கடி ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டிவரும்!!!!

கொஞ்சம் ஓய்வு கொடுத்து கவனமாக இருங்கம்மா இப்ப எல்லாம் சின்ன வ்யசுக்காரங்க எல்லாருமே கணினி மொபைல் என்று இயங்குவதால் கண் பிரச்சனை வந்துக் கஷ்டப்படுகிறார்கள் தான். வெளியில் தெரிவதில்லை அவ்வளவுதான்.

ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் கணினி மொபைல் டிவி யிலிருந்து விலகி ஓய்வு கொடுங்கள். விரைவில் சரியாகிவிடும் அம்மா பிரார்த்தனைகள்

கீதா

Bhanumathy Venkateswaran said...

எனக்கும் ட்ரை ஐஸ் பிரச்சனை உண்டு. அடக்கடி கண்களை மூடி திறப்பது,தொலைவை பார்ப்பது போன்றவை சாதாரண கண்கள் உலர்விற்கு தீர்வாக சொல்வார்கள். உங்களுடையது சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்பு இல்லையா? கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா உங்கள் கண்கள் விரைவில் நலம் பெற்றிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கண்களுக்கு இடையிடையே ஓய்வு கொடுத்து மெதுவாக வாசிக்கவும்.

இரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும்.

காணொளிகள் பார்க்கிறேன்.

பிரார்த்தனைகள்

துளசிதரன்

ஸ்ரீராம். said...

எனக்கும் உலர்கண் பிரச்னை இருக்கிறது.  ஆரம்பநிலை என்று சொல்லலாம்.  ஆனால் உங்கள் நிலையில் இணையம் பக்கமும் வரமுடியாது, கூடாது என்பது வருத்தமான செய்தி.  என்ன  செய்வது?  உடல்நலம்தான் முக்கியம்.  கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் அம்மா.  சர்க்கரை வந்தால் கண்களை, சிறுநீரகத்தை, பாதங்களை அடிக்கடி கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாமே கண் பற்றிய கண்ணான பாடல்கள்! ரசித்தேன் அத்தனையும்

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

//எனக்கு தண்ணீர் நிறைய குடிக்கலைனா, செல்போன் அல்லது கம்ப்யூட்டர் பார்க்கும்போது கண் ரொம்பவே எரியும்.

அதனால் ரெகுலரா தண்ணீர் குடிக்கிறேன்.//

ஆமாம் மா. முரளி.
நலமுடன் இருங்கள்.
தண்ணீர் உடலில் வற்றுவது பெரிய காரணம்.

அதுவும் இந்தக் குளிர் காலத்தில்

தாகம் எடுக்காமல் இருக்கிறது.
தண்ணீர் குடிக்கவே தோன்றவில்லை.
இனி கவனமுடன் இருக்கிறேன் மா. நன்றி.


வல்லிசிம்ஹன் said...

." நாம் வேறு ஏதாவது அடிக்கடி வெளியில் செல்வது போன்ற பொழுது போக்குகள் இருந்தாலாவது. இப்படி படிப்பது, கணினி பார்ப்பது கூடாதென்றால், மனசு சமாதானப்படும்.இப்போதுள்ள தொற்றின் காரணமாக எங்கும் போக முடியாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறோம்.இந்த கணினி மூலமாக படித்தல், கேட்டல், பார்த்தல் ஒன்றுதான் நம் மனதுக்கு ஆறுதல் "

அன்பின் கமலாமா அருமையாகச் சொல்லி
இருக்கிறீர்கள்.
இதுவே பெரிய காரணம்.
எந்த திசையிலும் போகவிடாமல் இந்தத் தொற்று
நம்மைச் சுற்றுகிறது.

ஏகத்துக்கு செய்திகள் வந்து அலைக்கழிக்கின்றன.
வயதானவர்கள் என்று வரும்போது
நமக்காக, (எனக்காக)

இவர்கள் செய்யும் கட்டுப்பாடுகள் ,அட்ஜஸ்ட்மெண்ட்கள்
எல்லாமே
சிரமங்கள் ஆகின்றன.
எல்லாவற்றையும் விட்டு ஓடவா முடியும்:)
புரிதலுகு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

"நாம் என்ன செய்வது ? பிள்ளைகள் எல்லாம் வேலைக்கு போனபின்னால் எவ்வளவு நேரம் தனிமையில் இருப்பது, பாட்டு கேட்டுக் கொண்டு, இணையத்தில் படித்து கொண்டு எழுதி கொண்டு தான் இருக்க வேண்டி உள்ளது.

வீட்டுவேலைகள் முடிந்தவரை செய்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம்."

இதுதான் தலையாய பிரச்சினை அன்பு தங்கச்சி கோமதி மா.
வாழ்க வளமுடன்.
எங்கே ஓட முடியும்.

ஆனால் டாக்டர் சொல்லி இருக்காவிட்டால் இத்தனை
கட்டுப்பாடு எனக்கு வந்திருக்காது.
மேலும் மேலும் நம்மை வருத்திக் கொண்டு ,நம்மைக்'
கவனிப்பவர்களையும் கஷ்டப் படுத்துவதில்
என்ன லாபம் இருக்க முடியும்.

இசையைக் காதில் கேட்டுக் கொள்கிறேன்.
நல்ல ஆடியோக்கள் இருக்கின்றன.
கேட்கும் வசதியும் இருக்கிறது.
எல்லாம் கொடுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லி
வாழ்வைத் தொடர வேண்டியதுதான்.
கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் ஆகுமா!!!
ஏன் என்று கேட்டு அன்பு செய்ய
உங்களைப் போன்ற நட்புகளைக் கொடுத்த
இறைவனுக்கும் நன்றி.
என்றும் நலமுடன் இருங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

சிறிது நேரம் கண்ணை மூடி இருங்கள், மீடி மூடி திரந்து பாருங்கள். வெளியே சிறிது நேரம் வெயில் அடிக்கும் போது வானத்தை பாருங்கள். கண் பொத்தி வைத்து இருங்கள் சிறிது நேரம் உள்ளம் கைகளால்.


பாடல்கள் எல்லாம் நல்ல தேர்வு.எல்லா பாடல்களும் கேட்டேன்.////

Thanks pa dear Gomathy.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.
கண்டிப்பாகக் கவனமாக இருக்கிறேன்.
ஒரு மணி நேரத்துக்கு மேலே இணையத்தில் இருப்பதில்லை.

எல்லாமே ஆடியோ தான்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்.

அப்படி ஏதாவது பதிவிட வேண்டும் என்று
நெருக்கடியாக எனக்கே அழுத்தம்
கொடுத்துக் கொள்ள விரும்பவில்லை:)

மற்றவர்களின் பதிவுகளையும் படிக்க வேண்டுமே.
நிதானமாகத் தான் செய்ய வேண்டும்.
மிக மிக நன்றி மா. பாடல்கள் எப்பொழுதும் மனதில் சுற்றிக்
கொண்டே இருக்கும்.
நீங்களும் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி மா.

வல்லிசிம்ஹன் said...

///ஆமாம் கண்டிப்பாகக் கண்கள் மிக மிக அவசியம் கருணையோடு பார்ப்பதற்காகவும் அன்பை வெளிப்படுத்தவும் கண்களோடு சேர்ந்து ஒரு புன்னகை!!!///

////////////////நான் சொல்வேன் அதை உணர்வதற்கும் நேரம் யோகம் என்று ஒன்று இருக்கிறது என்று ஆனால் அவர்களால் அதை ஒத்துக் கொள்ள முடியாது. நம் மனம் தான் காரணம் என்றும் சொல்வார்கள். அது சரியாதான் ஆனால் அந்த மனம் ஒத்துழைக்கவும் நேரம் காலம் யோகம் எல்லாம் வேண்டும். காலம் என்பதுதான் முடிவு செய்கிறது///////


அன்பின் கீதா ரங்கன் மா,

அடி பொளி!!!!
சரியாகச் சொன்னீர்கள். மனம் லயிக்க யோகம் வேண்டும். யோகம்
வசப்பட மனம் வேண்டும். மீண்டும் நம் நேரம் அதற்கு
ஏதுவாக இருக்க வேண்டும்.
எத்தனையோ டும் டும்கள்.

நல்ல புரிதல் உங்களுக்கு.
என்றும் நலமுடன் இருங்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
கண்களுக்குச் சில்லென்று ஐஸ் துணி வைத்துக் கொள்கிறேன்.

முக்கால் வாசி கண்கள் மூடியபடி தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,

மிக நன்றி மா. இன்னும் கீதா ரங்கன் பதிவுகளைப் படிக்கவில்லை.
இதெல்லாம் தான் வருத்தம்.
உங்கள் நலம் விசாரிப்புக்கு மிக நன்றி மா.
கவனமாக இருக்கிறேன்.

பாடல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,
நலமுடன் இருங்கள்.
ஆமாம் மா.
சர்க்கரைக்குத் தேவையான கவனம்
எப்பொழுதும் கொடுக்க வேண்டும்.

அலட்சியப் படுத்தியதால் அவஸ்தைப் பட்டவர்களைக் கண்கூடாகப்
பார்த்திருக்கிறேன் அம்மா.
அன்புடன் விசாரித்ததற்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம் நலமுடன் இருங்கள்.

''எனக்கும் உலர்கண் பிரச்னை இருக்கிறது. ஆரம்பநிலை என்று சொல்லலாம். ஆனால் உங்கள் நிலையில் இணையம் பக்கமும் வரமுடியாது, கூடாது என்பது வருத்தமான செய்தி. என்ன செய்வது? உடல்நலம்தான் முக்கியம்''

உங்களை எல்லாம் பற்றி நினைக்கும் போது
இன்னும் கவலையாக இருக்கிறது.

வேலையே அதிலே செய்ய வேண்டுமே. தவிர வலைத்தளத்தைக்
கவனிக்க வேண்டும்.
இறைவன் தேவையான மன உடல் பலத்தைக்
கொடுக்க வேண்டும் .
நன்றி மா.