திருமங்கலத்தில் இருக்கும் போது
கோவில்,பஜனைமடம் எல்லாமே
அந்த இளவயதுக்கு மிக இனிமையான நினைவுகளில்.
ஹரே ராம ஹரே கிருஷ்ண பாடல்களும் அங்கே கற்றதுதான்.
நெருக்கமான வீடுகள்,
நெருக்கமான மனிதர்கள். ஆன்மீகம்,நற்செயல்
என்று பேதங்கள் இல்லாத ஒரு சமூக வாழ்வு.
இப்போது மாறி விட்டதாகச் சொல்கிறார்கள்.
இரு வழி,நால்வழிப்பாதைகள்
திரு நெல்வேலி வரை செல்கிறது.
பலவித மனிதர்களும்,வியாபாரங்களும்
கலக்கும் போது வேறு வேறு ஊர்கள் கலந்து விடுகின்றன.
கிராமங்கள் நகரமாகிப் பழைய அடையாள்ங்கள்
மறைகின்றன்.
ஆனால் பக்தி மாறாது என்றே நினைக்கிறேன்.
கண்ணன் கழலே காக்கும்.
9 comments:
கண்ணன் அனைவரையும் காக்கட்டும். அங்கே புயல் புயல் என்று பயமுறுத்தி துரத்திக் கொண்டே இருக்கிறார்களே... இதற்கு சீசன் உண்டா?
பாண்டு ரங்கன் கோயிலை வலம் வந்த மகிழ்ச்சி.காணொளி அருமை.
பாண்டு ரங்க விட்டல் பாடல் கேட்டேன்.
எல்லோரையும் காக்க வேண்டும் பாண்டு ரங்கன்.
அன்பு ஸ்ரீராம்,
இனிய நாளுக்கான வணக்கம்.
கண்ணன் பாதங்களே தஞ்சம். வேறு வழி?
இந்த ஊருக்குக் குளிர் , சூடு என்று இரன்டே சீசன் தான்.
இரண்டு நேரங்களிலும் சூறாவளி
மழையாகவோ ,பனிப்புயலாகவோ வரும் மா.
நல்ல நாட்களும் இடையே வரும். நீலவானம் கண்கொள்ளாத
காட்சியாக இருக்கும்.
பூரண நிலா மயக்கும்.
நம் அப்பாதுரையே இதிலிருந்து விடுபட்டு
டெக்ஸாஸ் சென்று விட்டாரே:)
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
முன்பு ராஜ் தொலைக்காட்சியில் ஒரு குரு விட்டல ரங்கனின் கதைகளைச் சொல்லிக்
கேட்டிருக்கிறேன் மா.
நம் கண் முன் நடமாடும் தெய்வங்கள் கந்தனும் கண்ணனும்.
'ஜெய்ஜெய் விட்டலா பாண்டுரங்க விட்டலா...
பாண்டு ரங்கனை வணங்குவோம்.
நன்றி அன்பு மாதேவி.
2400 ஆவது பதிவுக்கு பாண்டு ரங்கனை அழைத்து விட்டேன்.
அவன் அருளால் தானே நாம் இயங்குகிறோம்.
நன்றி மா.
Bhajan கேட்பது மனதுக்கு அமைதி தரும். மாலை நேரங்களில் இப்படியான பாடல்களை கேட்டபடியே ஓய்வு எடுப்பது வழக்கமாக இருக்கிறது.
2400-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.
வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல், நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் https://www.techhelpertamil.xyz
அன்பு வெங்கட்,
மிக நன்றி மா.
நினைத்தை எல்லாம் எழுதி இந்தப் பயணம்
பிடித்தபடி போய்க் கொண்டிருக்கிறது.
மிகப் பெரிய ஜாம்பவாங்களுக்கு எதிரே நான் ஒன்றுமே இல்லை.
நீங்கள் எல்லாம்
கரிசனத்துடன் படித்துக் கருத்தும் சொல்கிறீர்கள்.
நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
ஆமாம். கடவுள் வந்தனம் பாடல்கள்
வழி சொல்வது மனதுக்கும் இனிமை.
Post a Comment