பதிவு அருமை. கே.ஆர் விஜயா அவர்கள் நல்ல நடிகை. நீங்கள் சொல்வது போல், க வரிசை அவருக்கு ராசியாக அமைந்தது உண்மைதான். கற்பகம் அவர் முதல் படம் என்றாலும், அதிலேயே சிறப்பாக நடித்திருப்பார். அதில் அவர் பாடும் அத்தைமடி மெத்தயடி பாடல் என்றுமே மறக்க இயலாத பாடல். நீங்கள் பகிர்ந்த காட்சி, பாடல்கள் அனைத்தும் ரசித்தேன். அவர் அம்மனாக எந்த படத்திலும் வந்தாலும் சோபிப்பார். தெய்வீக களை இயல்பாக அமைந்து விடும். இப்போது வந்த மூக்குத்தி அம்மன் படத்தில், நயன்தாராவுக்கும் அம்மன் வேஷம் நன்றாக பொருந்தியிருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
பகிர்ந்த காட்சி, பாடல்கள் எல்லாம் மிக அருமை. கே.ஆர். விஜயா நல்ல நடிகைதான். சிறு வயதில் அவர் எனக்கு பிடித்த நடிகை. "கற்பகம்" மிக அருமையான படம் அனைவரும் நன்றாக நடித்து இருப்பார்கள். பேபி ஷகீலா நடிப்பும் மிக அருமையாக இருக்கும். "கண்ணே பாப்பா" வில் அந்த குழந்தை ராணியின் நடிப்பு மிக அருமையாக இருக்கும். லாட்டரி சீட்டை வைத்துக் கொண்டு அது படும் பாடு, சொந்தங்கள், சாமியார் முதல் அவளை துரத்தும் காட்சி மிக அருமையாக இருக்கும்.
அன்பின் கமலாமா, கற்பகம் படம் வந்த போது எப்படி ரசித்தேனோ அதே ரசனை தான் இப்போதும்.
K.S.Gopalakrishnan வசனம் என்றுமே சோடை போனதில்லை. இந்தப் படம், வாழையடி வாழை எல்லாமே மிக அற்புதமாகப் பேசப்பட்ட படங்கள். அதுவும் கே ஆர் விஜயா, சாவித்திரி, ஜெமினி ரங்காராவ், நாகையா என்று முத்தான நடிகர்கள்
நடித்து வெளிவரும் அத்தனை படங்களும் ஹிட் தான். விஜயா மாதிரியே நயனதாராவும் மூக்குத்தி அம்மன் படத்தில் மிக சாந்தமான, கம்பீரமான அம்மனாக வந்ததை நானும் கண்டு ரசித்தேன்.
உடனே வந்து பின்னூட்டம் இட்டதற்கு மிக நன்றி மா. நலமுடன் இருங்கள்.
அன்பின் கோமதி மா, வாழ்க வளமுடன். ஆமாம் பின்னைய நாட்களில் அவ்வளவாக ஈடுபட முடியவில்லை. கற்பகம்,சர்வர் சுந்தரம் இது போன்ற படங்கள் நல்ல நடிப்புடன் வந்தன.
கண்ணே பாப்பா படத்தில் கதை நன்றாக இருக்கும். அந்தக் குழந்தையிடம் அவ்வளவு நடிப்பை எதிர்பார்க்கவில்லை. நல்ல இயக்குனர்கள் நல்ல நடிகர்கள். நாமும் சில படங்கள் என்ற கணக்கில் ரசிக்க முடிந்தது. இப்பொழுதும் படங்கள் இருக்கின்றன. பார்ப்பதுதான் குறைந்து விட்டது,. நன்றி மா.
நல்ல காட்சிகளின் பகிர்வு. ஆமாம், அம்மன் என்றால் நினைவுக்கு வருவது கே ஆர் விஜயாதான். கே ஸ் கோபாலகிருஷ்ணனின் அபிமான நடிகையாக இருந்திருப்பார். பின்னாட்களில் திருமலையோ யாரோ ஒருவர் தொடர்ந்து இவரை வைத்து படம் எடுத்தார்.
கற்பகம் பார்க்கவில்லை. ஆனால் அப்போது வந்த கற்பகம் பச்சைக்கலரில் பட்டுப்புடைவையோ/பாவாடையோ அப்பா எடுத்துக் கொடுத்திருந்தார். நினைவு இருக்கு. கண்ணே பாப்பா! பின்னாட்களில் தொலைக்காட்சி உபயத்தில் பார்த்திருக்கேன். இப்போதெல்லாம் படங்கள் பார்ப்பதே இல்லை. "கர்மா" தொடர் தான்! 45 வரை பார்த்திருக்கேன். தினமும் உட்காரமுடியறதில்லை. இன்னிக்குக் கூட உட்கார முடியாமல் இணையத்துக்கே இப்போத் தான் வந்தேன்.
ஆமாம் ஸ்ரீராம், குறத்தி மகன் என்று கூட ஒரு படம் வந்தது. கஸ்தூரி என்று ஒரு படம். சபதம் என்ற படம். பிறகு சிவாஜியோடு, எம் ஜி ஆரோடு ,ஜெய்சங்கர் என்று நீள்கிறது லிஸ்ட். முத்துராமனும் விஜயாவும் நல்ல ஜோடி என்றெல்லாம் படித்த நினைவு.
கற்பகம் பச்சை புடவை ஹாஜி மூசாவில் வாங்கின நினைவு. என்ன அழகான வண்ணம் இல்லையாமா. தலை தீபாவளி புடவை:) உங்களுக்குப் பாவாடை வாங்கிக் கொடுத்திருப்பார் அப்பா.!!!!
இப்போது அந்தப் பழைய படங்கள் பார்த்து ரசிக்க முடியுமா தெரியவில்லை:( அவ்வளவு அழுகையை யார் தாங்குவது!!உடம்பு சீக்கிரம் சரியாக வேண்டும் .மீனாக்ஷி அருள் செய்யட்டும். நன்றி மா.
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அல்லாதன மனதில் தங்குவது அதிகம். நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன்........... பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள் என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள் வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான் வேண்டும்:) பிறகு அவர்களின் திருமணங்கள். இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது. பிறகுதான் நினைவுகள் தடம் மாறுகின்றன. தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான் மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துக...
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,மனைநலம் காத்து நூறாண்டு காலம் செழித்திருக்க வேண்டும்.
Comments
பதிவு அருமை. கே.ஆர் விஜயா அவர்கள் நல்ல நடிகை. நீங்கள் சொல்வது போல், க வரிசை அவருக்கு ராசியாக அமைந்தது உண்மைதான். கற்பகம் அவர் முதல் படம் என்றாலும், அதிலேயே சிறப்பாக நடித்திருப்பார். அதில் அவர் பாடும் அத்தைமடி மெத்தயடி பாடல் என்றுமே மறக்க இயலாத பாடல். நீங்கள் பகிர்ந்த காட்சி, பாடல்கள் அனைத்தும் ரசித்தேன். அவர் அம்மனாக எந்த படத்திலும் வந்தாலும் சோபிப்பார். தெய்வீக களை இயல்பாக அமைந்து விடும். இப்போது வந்த மூக்குத்தி அம்மன் படத்தில், நயன்தாராவுக்கும் அம்மன் வேஷம் நன்றாக பொருந்தியிருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கே.ஆர். விஜயா நல்ல நடிகைதான். சிறு வயதில் அவர் எனக்கு பிடித்த நடிகை. "கற்பகம்" மிக அருமையான படம் அனைவரும் நன்றாக நடித்து இருப்பார்கள். பேபி ஷகீலா நடிப்பும் மிக அருமையாக இருக்கும்.
"கண்ணே பாப்பா" வில் அந்த குழந்தை ராணியின் நடிப்பு மிக அருமையாக இருக்கும். லாட்டரி சீட்டை வைத்துக் கொண்டு அது படும் பாடு, சொந்தங்கள், சாமியார் முதல் அவளை துரத்தும் காட்சி மிக அருமையாக இருக்கும்.
கற்பகம் படம் வந்த போது எப்படி ரசித்தேனோ
அதே ரசனை தான் இப்போதும்.
K.S.Gopalakrishnan வசனம் என்றுமே சோடை
போனதில்லை. இந்தப் படம், வாழையடி வாழை
எல்லாமே மிக அற்புதமாகப் பேசப்பட்ட படங்கள்.
அதுவும் கே ஆர் விஜயா, சாவித்திரி, ஜெமினி
ரங்காராவ், நாகையா என்று முத்தான நடிகர்கள்
நடித்து வெளிவரும் அத்தனை படங்களும் ஹிட் தான்.
விஜயா மாதிரியே நயனதாராவும்
மூக்குத்தி அம்மன் படத்தில் மிக சாந்தமான,
கம்பீரமான அம்மனாக வந்ததை நானும் கண்டு ரசித்தேன்.
உடனே வந்து பின்னூட்டம் இட்டதற்கு மிக நன்றி மா.
நலமுடன் இருங்கள்.
வாழ்க வளமுடன்.
ஆமாம் பின்னைய நாட்களில் அவ்வளவாக
ஈடுபட முடியவில்லை.
கற்பகம்,சர்வர் சுந்தரம் இது போன்ற
படங்கள் நல்ல நடிப்புடன் வந்தன.
கண்ணே பாப்பா படத்தில் கதை நன்றாக இருக்கும். அந்தக் குழந்தையிடம்
அவ்வளவு நடிப்பை
எதிர்பார்க்கவில்லை.
நல்ல இயக்குனர்கள் நல்ல நடிகர்கள்.
நாமும் சில படங்கள் என்ற கணக்கில்
ரசிக்க முடிந்தது.
இப்பொழுதும் படங்கள் இருக்கின்றன.
பார்ப்பதுதான் குறைந்து விட்டது,.
நன்றி மா.
குறத்தி மகன் என்று கூட ஒரு படம் வந்தது.
கஸ்தூரி என்று ஒரு படம்.
சபதம் என்ற படம். பிறகு சிவாஜியோடு,
எம் ஜி ஆரோடு ,ஜெய்சங்கர் என்று நீள்கிறது லிஸ்ட்.
முத்துராமனும் விஜயாவும் நல்ல ஜோடி
என்றெல்லாம் படித்த நினைவு.
இனிய காலை வணக்கம்.
கற்பகம் பச்சை புடவை ஹாஜி மூசாவில்
வாங்கின நினைவு. என்ன அழகான வண்ணம்
இல்லையாமா. தலை தீபாவளி புடவை:)
உங்களுக்குப் பாவாடை வாங்கிக் கொடுத்திருப்பார்
அப்பா.!!!!
இப்போது அந்தப் பழைய படங்கள் பார்த்து
ரசிக்க முடியுமா தெரியவில்லை:(
அவ்வளவு அழுகையை யார் தாங்குவது!!உடம்பு சீக்கிரம் சரியாக வேண்டும் .மீனாக்ஷி
அருள் செய்யட்டும்.
நன்றி மா.