Blog Archive

Monday, July 26, 2021

கற்பகம்,கண்ணே பாப்பா.....



க' எழுத்தில் தொடங்கும் படங்கள்
 கே ஆர் விஜயாவுக்கு  வெற்றி கொடுத்தனவோ?
நல்ல நடிகை.
அம்மன் என்று நினைத்தால் 
சட்டென்று நினைவுக்கு வருபவர்களில் 
இவரும்  ஒருவர்.


10 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. கே.ஆர் விஜயா அவர்கள் நல்ல நடிகை. நீங்கள் சொல்வது போல், க வரிசை அவருக்கு ராசியாக அமைந்தது உண்மைதான். கற்பகம் அவர் முதல் படம் என்றாலும், அதிலேயே சிறப்பாக நடித்திருப்பார். அதில் அவர் பாடும் அத்தைமடி மெத்தயடி பாடல் என்றுமே மறக்க இயலாத பாடல். நீங்கள் பகிர்ந்த காட்சி, பாடல்கள் அனைத்தும் ரசித்தேன். அவர் அம்மனாக எந்த படத்திலும் வந்தாலும் சோபிப்பார். தெய்வீக களை இயல்பாக அமைந்து விடும். இப்போது வந்த மூக்குத்தி அம்மன் படத்தில், நயன்தாராவுக்கும் அம்மன் வேஷம் நன்றாக பொருந்தியிருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

பகிர்ந்த காட்சி, பாடல்கள் எல்லாம் மிக அருமை.
கே.ஆர். விஜயா நல்ல நடிகைதான். சிறு வயதில் அவர் எனக்கு பிடித்த நடிகை. "கற்பகம்" மிக அருமையான படம் அனைவரும் நன்றாக நடித்து இருப்பார்கள். பேபி ஷகீலா நடிப்பும் மிக அருமையாக இருக்கும்.
"கண்ணே பாப்பா" வில் அந்த குழந்தை ராணியின் நடிப்பு மிக அருமையாக இருக்கும். லாட்டரி சீட்டை வைத்துக் கொண்டு அது படும் பாடு, சொந்தங்கள், சாமியார் முதல் அவளை துரத்தும் காட்சி மிக அருமையாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
கற்பகம் படம் வந்த போது எப்படி ரசித்தேனோ
அதே ரசனை தான் இப்போதும்.

K.S.Gopalakrishnan வசனம் என்றுமே சோடை
போனதில்லை. இந்தப் படம், வாழையடி வாழை
எல்லாமே மிக அற்புதமாகப் பேசப்பட்ட படங்கள்.
அதுவும் கே ஆர் விஜயா, சாவித்திரி, ஜெமினி
ரங்காராவ், நாகையா என்று முத்தான நடிகர்கள்

நடித்து வெளிவரும் அத்தனை படங்களும் ஹிட் தான்.
விஜயா மாதிரியே நயனதாராவும்
மூக்குத்தி அம்மன் படத்தில் மிக சாந்தமான,
கம்பீரமான அம்மனாக வந்ததை நானும் கண்டு ரசித்தேன்.

உடனே வந்து பின்னூட்டம் இட்டதற்கு மிக நன்றி மா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
ஆமாம் பின்னைய நாட்களில் அவ்வளவாக
ஈடுபட முடியவில்லை.
கற்பகம்,சர்வர் சுந்தரம் இது போன்ற
படங்கள் நல்ல நடிப்புடன் வந்தன.

கண்ணே பாப்பா படத்தில் கதை நன்றாக இருக்கும். அந்தக் குழந்தையிடம்
அவ்வளவு நடிப்பை
எதிர்பார்க்கவில்லை.
நல்ல இயக்குனர்கள் நல்ல நடிகர்கள்.
நாமும் சில படங்கள் என்ற கணக்கில்
ரசிக்க முடிந்தது.
இப்பொழுதும் படங்கள் இருக்கின்றன.
பார்ப்பதுதான் குறைந்து விட்டது,.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

நல்ல காட்சிகளின் பகிர்வு.  ஆமாம், அம்மன் என்றால் நினைவுக்கு வருவது கே ஆர் விஜயாதான்.  கே ஸ் கோபாலகிருஷ்ணனின் அபிமான நடிகையாக இருந்திருப்பார்.  பின்னாட்களில் திருமலையோ யாரோ ஒருவர் தொடர்ந்து இவரை வைத்து படம் எடுத்தார்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Geetha Sambasivam said...

கற்பகம் பார்க்கவில்லை. ஆனால் அப்போது வந்த கற்பகம் பச்சைக்கலரில் பட்டுப்புடைவையோ/பாவாடையோ அப்பா எடுத்துக் கொடுத்திருந்தார். நினைவு இருக்கு. கண்ணே பாப்பா! பின்னாட்களில் தொலைக்காட்சி உபயத்தில் பார்த்திருக்கேன். இப்போதெல்லாம் படங்கள் பார்ப்பதே இல்லை. "கர்மா" தொடர் தான்! 45 வரை பார்த்திருக்கேன். தினமும் உட்காரமுடியறதில்லை. இன்னிக்குக் கூட உட்கார முடியாமல் இணையத்துக்கே இப்போத் தான் வந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்,
குறத்தி மகன் என்று கூட ஒரு படம் வந்தது.
கஸ்தூரி என்று ஒரு படம்.
சபதம் என்ற படம். பிறகு சிவாஜியோடு,
எம் ஜி ஆரோடு ,ஜெய்சங்கர் என்று நீள்கிறது லிஸ்ட்.
முத்துராமனும் விஜயாவும் நல்ல ஜோடி
என்றெல்லாம் படித்த நினைவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இனிய காலை வணக்கம்.

கற்பகம் பச்சை புடவை ஹாஜி மூசாவில்
வாங்கின நினைவு. என்ன அழகான வண்ணம்
இல்லையாமா. தலை தீபாவளி புடவை:)
உங்களுக்குப் பாவாடை வாங்கிக் கொடுத்திருப்பார்
அப்பா.!!!!

இப்போது அந்தப் பழைய படங்கள் பார்த்து
ரசிக்க முடியுமா தெரியவில்லை:(
அவ்வளவு அழுகையை யார் தாங்குவது!!உடம்பு சீக்கிரம் சரியாக வேண்டும் .மீனாக்ஷி
அருள் செய்யட்டும்.
நன்றி மா.