Blog Archive

Saturday, July 10, 2021

சில இன்னிசை நினைவுகள்.





வல்லிசிம்ஹன்

12 comments:

கோமதி அரசு said...

அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையான பாடல்கள். தேர்வு அருமை. கேட்டு மகிழ்ந்தேன் அக்கா. எத்தனை காலங்கள் சென்றாலும் நிலைத்து நிற்கும் இசை.

ஸ்ரீராம். said...

மயக்கும் மாலை...  என்ன இனிமையான பாடல்.  மதுரை வீட்டு வசதிக்குடியிருப்பில் இருந்தோம் அப்போது.  பொது இடத்தில் திரை கட்டி மாதா மாதம் ஓரிரு படங்கள் போடுவார்கள் அங்கு.  இந்தப் படம் போட்டிருந்தார்கள்.  வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் புறப்படும் சமயம்.  அதில் மீரா டீச்சரும் இருந்தார்.  அத்தை முறை எனக்கு.  கொள்ளையில் நின்றால் இங்கிருந்து படம் போடும் இடம் தெரியும்.  வசனங்களும், பாடலும் கேட்கும்.  இந்தப் பாடல் தொடங்கியது.  கிளம்புவதற்காக செருப்பைக் காலில் மாட்டியவர், அவிழ்த்து விட்டு கொல்லைப்பக்கம் வந்து விட்டார்.  பாட்டு முடிந்ததும்தான் கிளம்பினார்கள்!

Geetha Sambasivam said...

மயக்கும் மாலை பிடித்த பாடல். அநேகமாய் எல்லாப் பாடல்களுமே கேட்டிருக்கேன், அந்த நாட்களின் வானொலி தயவில்.

மனோ சாமிநாதன் said...

அனைத்துமே மிகச் சிறந்த இனிமையான பாடல்கள்!
அதிலும் ' மயக்கும் மாலை ' மிகவும் இனிமையான பாடல். காட்சியமைப்பும் அத்தனை இனிமையாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறு வயதிலிருந்தே பலமுறை ரசித்த பாடல்கள்...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இன்று பகிர்ந்த எல்லா பாடல்களுமே மிக இனிமையானவை. அடிக்கடி சிலோன் வானொலி நிலையம் மூலமாக கேட்டு ரசித்துள்ளேன். இப்போதும் கேட்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

இசைதான் நமக்கு உயிர்த் துடிப்பு கொடுக்கிறது.
அதுவும் பழைய பாடல்களின் வரிகளும்,
காட்சி அமைப்பும் முகச் சுளிப்பைத் தருவதில்லை.
வந்து ரசித்துக் கேட்டதற்கு நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
ஏ எம் ராஜா, ஜிக்கி குரலில் ,
நல்ல காட்சி அமைப்போடு வந்த பாடல்.

குலேபகாவலி வந்து 70 வருடங்கள்
இருக்குமா?
மீரா டீச்சர் நம்ம ஃப்ரண்ட்!!!
.

வல்லிசிம்ஹன் said...

இந்த அளவு அந்தப் பாடல் அவரை ஈர்த்திருக்கிறதா.
கேட்கவே நன்றாக இருக்கிறதுமா.

மதுரை பழங்கானத்தத்தில் ,தாத்தா வீட்டை அடுத்து கீத்துக் கொட்டாய்
வந்து அதில் அந்தக் காலப் படங்களும் வந்தன.

வந்த படங்களின் வசனங்கள் எனக்கு மனப் பாடமாகத் தெரியும்.:)
அங்கே தான் பாகப் பிரிவினை பாடல்களையும்
ஒலிபரப்புவார்கள்.:)

1960. இனிமையான காலம் அது.
உங்கள் ரசனைக்கு நன்றி. மீரா டீச்சரை மிகப் பிடிக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நமக்கு அப்போது வானொலி மட்டுமே இருந்தது.
அதனால் சுவாரஸ்யமும் இருந்தது. அடுத்தாற்போல
என்ன பாட்டு வரும் என்று தெரியாது.
இப்போது எல்லாமே இணையத்தில் கிடைக்கிறது. இதுவும் ஒரு காலம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ,
ராஜா,ஜிக்கி பாடல்கள் இன்னும் இருக்கின்றனவே. ஆனால்
இந்தப் பாடல் பிரசித்தி அடைந்தாற்போல்
மற்றது இல்லை.
வந்து கருத்திட்டதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்
நாம் எல்லோருமே முன்னே பின்னே கேட்டுதான்
வளர்ந்திருப்போம்.

உங்களுக்கும் பிடித்ததுதான் மகிழ்ச்சி. நலமுடன் இருங்கள் மா.