Blog Archive

Thursday, May 27, 2021

வந்து வந்து செல்லுவதேன்......



வல்லிசிம்ஹன்
சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள்!!!
சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் 
இந்த மலர்களைப் போல!
பத்திரிக்கையில் வந்த நிலா எங்கள் கண்களில் சிக்கவில்லை.
நேற்றும் இன்றும் மழையும் குளிரும்!!
நம் சென்னை போல வருமா:(
 இது இங்கிருக்கும் என் தோழி விழித்திருந்து எடுத்த நிலவுப்
படம்.

அன்பின் கோமதி அரசு இருக்கும் ஊரில்
பாலைவன நிலா  பன்மடங்கு 
அழகுடன் தெரியும். அவர்களும் படங்கள் 
பதிவிட்டிருந்தார்கள். வாழ்க வளமுடன்.

நிலா ரசிகர்கள் உலகம் முச்சூடும் இருப்பார்கள்.
எனக்குத் தான் தெரியவில்லை.

பலே பாண்டியா படம் வந்த புதிதிலும் இப்பொழுதும்
பிரபலமான  நிலவுப்பாடல்.மிக ரம்யமானது. வானொலியில் கேட்டு ரசித்தது.
கண்ணதாசன் ஐயாவுக்குத் தான் அத்தனை நன்றியும் சொல்ல வேண்டும்.


பலவித செய்திகள் மனதுக்குப் பிடிக்காத வம்புகள்.
தொற்று நோய் தலை விரித்தாடும் போது

தீர்வு காண முயற்சிக்காமல்
மாற்று செய்திகளைப் பரப்பி, திசை மாற்றும் 
இணையக் காட்சிகள்.
தவறு நடந்த இடத்தில் ,அதை செய்தவரைப்
பிடிப்பதுதான் சிறந்த அணுகு முறை.
அதை விட்டு ஒட்டு மொத்த  சமுதாயத்தையே
குறை சொல்வது ....ஆரம்பித்திருக்கிறது.
இலங்கையில் சீதை சிறையில் இருக்கும் போது,
இடைவிடாமல் ராமனையே நினைத்துத் துதித்துக்
கொண்டிருந்தாளாம்.
அதை சகிக்க முடியாத அரக்கியர் குழாம்,
"வெறும் மனிதனைத் துதிக்கிறாயே.மானுடன் கேவலமானவன்.
எங்கள் அரசன் ராவணனைப் பார்.
அவன் கம்பீரம் உன் ராமன்,வெறும் கனி வகைகளை
உண்டு பிழைப்பவன், அவனுக்கு வருமா""
என்று ஏசுகிறார்கள்.
தன் ராமனையும், மனித வர்க்கத்தையே ஏசும் அவர்களைப்
பரிதாபம் ,கருணையுடன் பார்க்கிறாள் சீதா.
இவர்களே ராமன் கருணையால் ஆட்கொள்ளப்
படுவார்கள் என்று மீண்டும் மௌன தவத்துக்குச் செல்கிறாள்.

அதுதான் இப்பொழுதும் செய்ய வேண்டும்.
அனைவரும் வாழ்க வளமுடன்..





15 comments:

ஸ்ரீராம். said...

நீங்கள் நிலாவைப் பதிவிடும் வழக்கம் உடையவர் என்பது நினைவில் இருக்கிறது.  அது இந்தமுறை முடியாமல் போனது வருத்தம்தான்.  இயற்கையின் சதி!  பள்ளி விவகாரம் விஷயத்தில் நியாயம் கிடைக்கும் என்று தோன்றவில்லை.  அவர்கள் வஞ்சம் தீர்ப்பதில் இருக்கிறார்கள்.  இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள். 

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
இப்போது குறைந்து விட்டது. வான் நிலை ஒரே மாதிரி இருப்பதில்லை.

குளிர்காலத்தில் சற்று நீல வானம் கிடைக்க
வாய்ப்பு உண்டு. இன்று ஒரே குளிர் . 50 டிகிரீ ஃபாரன்ஹைட்:)

நியாயம் கிடைக்க வழியில்லை என்கிறீர்களா.

பழிக்குப் பழி காலமோ.சரிதான்.
காலம் தான் பதில் சொல்ல் வேண்டும்.

Geetha Sambasivam said...

எல்லாவற்றையும் வெகு நாசூக்காகச் சொல்லிச் சென்று விட்டீர்கள். ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தின் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களை எப்படி மாற்ற முடியும்? செய்தி உண்மையோ, பொய்யோ! ஆண்டவனுக்குத் தான் தெரியும்.

Geetha Sambasivam said...

தங்க நிறப்பூக்கள் கொட்டிக்கிடக்கும் அழகை வட மாநிலங்களில் நிறையப் பார்க்கலாம். எங்கே இருந்தாலும் நம் இடம்/நம் வீடு நினைவு மங்காது. மறையாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

என்னவோ மன சங்கடம் ஓயாமல் பதிவெழுதினேன்
அம்மா.
ஒரு அனியாயம் தான் தெரிகிறதா.
நூறு இடங்களில் நடந்திருக்கிறதே அது கண்ணுக்குப் படாமல் போச்சே
என்ற ஆதங்கம்.
அதைவிட ஒரு சாதியைக் குறிப்பிட்டு
யூடியூபில் அலறும் வன்மம் தான் புண்படுத்துகிறது.

இதைக் கூட பதிவிட்டிருக்க வேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

தங்க நிற மலர்கள் சிங்கத்துக்கு மிகவும் பிடிக்கும்.

பலவித கோணங்களில் படம் எடுக்க சொல்வார்.
ஆமாம் எங்கே சென்றால் என்ன
மனம் நிலை கொள்வது வீட்டில் தான்.

KILLERGEE Devakottai said...

நிலவின் படம் அழகோவியமாக இருக்கிறது.

தீநுண்மி விரைவில் உலகை விட்டு செல்லட்டும் இறையே துணை.

Yaathoramani.blogspot.com said...

நிலாவும் அதனைத் தொடர்ந்த சிந்தனைகளும் காணொளியும் அருமை..வாழ்த்துகள்..

வெங்கட் நாகராஜ் said...

நிலவு - உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாயிற்றே.

பலே பாண்டியா - இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரியம்மா, தொலைக்காட்சியில் போட்ட இந்தப் படத்தினை பார்த்துக் கொண்டிருந்தார்கள் - முன் நினைவுகளைச் சொன்ன படியே!

தீநுண்மி - விரைவில் சூழல் சரியாக வேண்டும் என்பதே அனைவருடைய பிரார்த்தனையும்.

கோமதி அரசு said...

நிலவும் , பாடல்களும் அருமை.
என்னையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள், நன்றி.
தோழி விழித்திருந்து எடுத்த நிலவு படம் அருமை.

நிலா ரசிகர்கள் உலகம் முழுவதும் உண்டுதான் மனக்கவலை போக்கும் மாமதி இல்லையா!

தொற்று மறையட்டும் சமூகம் நல்லபடியாக இருக்கட்டும் என்று வாழ்த்தி கொண்டு இருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,

தீ நுண்மிகள், தீய சிந்தனைகள் விடை பெற்றுச் செல்ல வேண்டும். இறைவன் வழி விடுவான்.
பிரார்த்திப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ரமணி சார்,
மிக மிக நன்றி.
நடப்பதை அறியவே கொடுமையாக இருக்கிறது.
எழுதி சாதிக்கப் போவதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் ,
எதையாவது மிக நேசித்தால் விலகிச் சென்று விடுமாம்.
நிலவும் அப்படித்தான் போலிருக்கிறது:)
கண்ணில் படவே இல்லை.

தொற்று விரைவில் மறையும் என்று எதிர் பார்ப்போம்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

பெரியம்மாவுக்கும் பழைய படங்கள் பிடிக்குமா வெங்கட்.!!
நம் சிறு வயது நினைவுகளோடு சினிமாக்களும்
பாடல்களும் ஒன்றித்தான் போகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி.
நிலவு ஒன்றுதான் நம்முடன் விடாமல் வருகிறது.

எத்தனையோ நல்ல நினைவுகள் அதனுடன் தொடர்கின்றன.

நீங்களும் எப்பொழுதும் நிலவைப்
பகிர்கிறீர்கள். சொல்லாமல் விட முடியவில்லை.

நன்மதி தரும் தண்மதி.
வாழ்க வளமுடன்.