Blog Archive

Monday, May 03, 2021

என்றும் சுஜாதா சார்.

வல்லிசிம்ஹன்


இன்னும் நினைவில் இருக்கிறது.
அவரை சந்தித்தது.
ஜெமினி ஃப்ளை ஓவர் கீழே  ஒரு சாலையில் 
''அம்பலம்'' அலுவலகம். 

சில வருடங்கள் வேலை செய்த இடத்திலிருந்து ஒரு கிலோ
மீட்டர் தொலைவில் இருந்தது.
என்ன தைரியத்தில் அவரைக் காணச் சென்றேன் என்று 
இன்னும் புரியவில்லை.

வெளியே காத்திருந்த இருவரில் பதிப்பகத்தார் ஒருவர் என்று நினைவு.
சாரின் உதவியாளர் கிட்டே
ஒரு நிமிடம் அவரைச் சந்திக்க வேண்டும்
என்று கேட்க உள்ளே போகலாம் என்று அவர் சொல்ல

நான் தயக்கத்துடன் சென்றேன். சாதாரண மனிதராக
ஒரு நீல வண்ண முழுக்கை சட்டையில் 
சிறு புன்னகையோடு  அவரைப் பார்த்து 
ஹலோ சார், வணக்கம்னு சொல்லி விட்டு

''அம்பலம் மின்னிதழ் அரட்டை நன்றாகச் செல்கிறது.நேரத்தை
நீட்டித்தால் எங்களுக்கெல்லாம் சந்தோஷம்'
என்று சொல்லி வெளியே வந்துவிட்டேன்.

அவ்வளவுதான் தைரியம்:)
அதற்கப்புறம் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்ததெல்லாம்
ஒரு சொப்பனம் போல இருக்கிறது.

இன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்திருக்கலாம் சார் நீங்கள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.!!!!!!

19 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நல்ல மலரும் நினைவுகள் சகோதரி. தைரியத்துடன் சென்று அவரை சந்தித்துப் பேசி விட்டு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு, உங்கள் தைரியத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவர் எழுதிய கதைகள் எனக்கும் ரொம்ப பிடிக்கும். சினிமாவிலும் பல காலம் சாதித்தார். நீங்கள் கூறியபடி இன்னமும் கொஞ்ச நாட்கள் இருந்து அவரின் நல்ல எழுத்துக்களை நம்முடன் பகிர்ந்திருக்கலாம்.. என்ன செய்வது? அவர் மறைந்தாலும் அவர் எழுதிய கதைகள் நம்முடன் வாழ்கின்றன. அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களும்... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Bhanumathy V said...

ஹாஹா! இன்னும் இரண்டு வார்த்தைகள் பேசியிருக்க மாட்டீர்களோ? நானும் என் அத்தைப் பெண்ணும் ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில் இருந்த ஒரு சைக்கிள் கடையை தேடி அலைந்தோம். சுஜாதா வாடகைக்கு சைக்கிள் எடுத்து சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்ட கடையைத் கண்டுபிடிக்கத்தான். கிழக்குச் சித்திரை வீதியில் இருந்த என் தோழியிடம் சுஜாதாவின் வீடு எது? என்று துளைத்து எடுத்திருக்கிறேன். 

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
எங்கள் குடும்பத்தில் சின்னத் தம்பிக்கும் அவரை மிகவும் பிடிக்கும் . நானும் அவனும் தான் போவதாக இருந்தோம்.அவனுக்கு திடீரென வேலை வந்துவிட்டது..
முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா:).அப்பொழுது மின் அம்பலம் இணையத்தில்
நடத்திக் கொண்டு இருந்தார். உலகில் எங்க இருந்தாலும். சனிக் கிழமை காலை 11 மணிக்க நாங்கள்
நெட்டுக்கு வந்து விடுவோம். ஒருமணி நேரம் பொழுது செல்வதே தெரியாது.

எல்லோரிடமும் அந்த அந்த இடத்தைப் பற்றி விசாரிப்பார்.
எளிமையானவர். நேரே பார்க்கும் போது கெண்களிடம் அவ்வளவு பேச மாட்டார். கூச்சப்படுவார்.
கொஞ்சம் எக்ஸென்ட்ரிக்? பாராட்டுக்கு நன்றி மா. அவரின் எழுத்து நம்மை வசீகரித்திருந்தது. அதுதான் காரணம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,
இனிய காலை வணக்கம்.

இணைய சாட்டிங்க் பொழுது அரட்டை அடிப்பார்.
நேரில் கிடையாது. முன்பே எழுதி இருக்கிறேன்.

மெரினாவில் அவரைச் சுற்றி அத்தனை
நபர்கள் கேள்வி கேட்டு சிரித்து
எல்லாம் செய்வார்கள்.
இவர் அதாவது என் சிங்கம்,'என்னம்மா கோபிகைகள் சூழ்கிறார்களே''
என்று கிண்டலடிப்பார்.

நன்றாகப் பழகியவர்களாக இருக்கும்.என்பேன்.
எனக்கு அருகில் செல்லத் தோன்றாது.:))
அவரது காரோட்டி பாண்டியன் , சுஜாதா மனைவி சுஜாதா
வழியாக எனக்குத் தெரியும்.
அவர் சொல்வார். ஐயா முன்னாடி போகிறார்மா. நீங்களும் பேசலாம் என்று!!

நான் சிங்கத்துடன் சென்று விடுவேன். துரத்தக் கூடாது இல்லையா.!!

நீங்கள் ஸ்ரீரங்கத்து தேவதை எஃபெக்ட் சொல்கிறீர்கள். ஹாஹ்ஹ்ஹா,

ஸ்ரீராம். said...

அட...   அவரைச் சந்தித்தீர்களா?  அவர் என்ன என்று கூட கேட்கவில்லையா?  அப்படி என்ன பயம்?!!!  எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் இருந்தது.  என் நண்பன் ஒருவன் அவருக்கும் அந்த ஆசை இருந்தது.  அடிக்கடி பேசிக்கொள்வோம்.  ஒருமுறை சென்று பேசலாமா என்று.  அவர் காலமானதும் ஒரு நொடி...    சென்று பார்க்கலாமா என்று தோன்றி, இருவருமே ஒரே நொடியில் வேண்டாம் என்று முடிவெடுத்தோம்.

ஸ்ரீராம். said...

//அவர் என்ன என்று கூட கேட்கவில்லையா? //


'அவர் என்ன பதில் சொன்னார் என்று கூட கேட்கவில்லையா' என்றிருக்கவேண்டும்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

முன்பு எழுதி இருந்தேன். அவர் வீட்டுக்கும் போயிருந்தேன். அவர் மனைவி, மகளின்
கல்லூரி பேராசிரியரின் நாத்தனார்.
அதாவது சுஜாதா ரங்கராஜனின் தம்பி மனைவி.
டிசில்வா ரோடில் இருந்தார்.

எழுத்தாளர் சுஜாதாவின் அறிமுகம் மின் அம்பலம் வழியே கிடைத்தது. நல்ல அரைட்டை நேரம் அது.

அதில்தான் தன் அலுவலக இந்த இடத்தில் இருப்பதாகச் சொல்லி இருந்தார்.
நானும் ஒரு நாள் போகலாம் என்று
போய்விட்டேன்,

பளிஃஷ் பர்சனாலிட்டி. பெரியவர். என்ன பேசுவது என்று
புரியவில்லை. அசடு வழிந்திருக்கும்.
பிறகு அவர் மனைவி பழகியதும் ஜஸ்டிஸ் இஸ்மாயில் ரோடில் அவர்கள் வீட்டுக்குச் சென்ற போது
புத்தகங்களுக்கு நடுவில் உட்கார்ந்து
எழுதிக் கொண்டிருந்தார். யாரோ தோழி என்று உள்ளே
பார்த்து சொல்லிவிட்டுத் திரும்பக் கூட இல்லை.
அவர் மறைந்த போது கொஞ்சம் தாமதமாகப்
போனேன். டைரக்டர் வசந்த் மட்டும் இருந்தார். மிஸஸ்
சுஜாதாவிடம் சில நாட்கள் கழித்துப் பேசினேன்.
ஃபோன் # கூட 4993636 மாதிரி அல்லது 24993672 வா???
நினைவு இல்லை. நிறைய விஷயங்கள் பேசுவோம்.

Geetha Sambasivam said...

நான் பார்த்தது இல்லை. ஆனால் பிடித்த/கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். அம்பலம் வந்து கொண்டிருந்தது எனக்கும் தெரியும். ஆனால் அப்போதெல்லாம் வீட்டில் கணினி இல்லை. நீங்கள் ஏற்கெனவே சுஜாதாவைச் சந்தித்தது பற்றியும், அம்பலம் நாட்கள் பற்றியும் எழுதி இருக்கீங்கனு நினைக்கிறேன். நல்ல நினைவலைகள். நல்லதொரு அஞ்சலி அவருக்கு.

ஏகாந்தன் ! said...

சுஜாதாவை நீங்கள் நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள், வீட்டுக்கெல்லாம் போயிருக்கிறீர்கள் என்பது உங்களின் அதீத ஆர்வத்தைக் காட்டுகிறது. ஆர்வம் எல்லோருக்கும்தான் இருக்கிறது. முனைப்பையும் காட்டுகிறது.

அவர் மறைந்த சமயத்தில் நான் க்யூபாவின் ஹவானாவில், இந்திய எம்பஸியின் ஓய்வுநேரத்தில் நெட் மேய, சுஜாதா மறைந்த செய்தியில் அதிர்ந்தேன். பிறகு அடுத்தடுத்த நாட்களில் மேலும் விபரங்கள் அறிந்தேன்.

அவரது எழுத்து அபூர்வமானது. இளமையானது. ஆதலால் உயிர்ப்பானது. இன்றும் புத்தக விழாக்களில் அவரது படைப்புகள் பிரதானமாக ஸ்டால்களில். வாசகர்கள் ஆர்வமாகப் புரட்டுகிறார்கள். வாங்குகின்றார்கள். அவரை வேண்டுமென்றே விமரிசித்த பெரிசுகளின் புத்தகங்கள் ஓரத்தில் விழுந்துகிடக்கின்றன...

கரந்தை ஜெயக்குமார் said...

சுஜாதாவின் எழுத்துக்களைத் தேடித் தேடி வாசித்திருக்கிறேன்

கோமதி அரசு said...

சுஜாதா சாருடன் பேசியது பற்றிய என்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை.

அவர் எழுத்துக்கள் படிக்க முன்பு ஆவலாக இருக்கும். நேற்று அவர் எழுதிய சிறுகதை செல்வம் கேட்டேன். நன்றாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

இணையம் கணினி என்று 1996 இல் ஆரம்பித்த பயணத்தில்
எத்தனையோ தெரிந்து கொண்டோம்.
நம் பிள்ளைகளும் கணினி பழகினர். வீட்டுக்குள்ளும் வந்தது.

புத்தகங்கள் ,விகடன்,குமுதம் தொடர்கள்
என்று நம்மை சுவாரஸ்யமாகப் படிக்க வைத்தன.
புத்தகக் கண்காட்சி, தொலைக் காட்சி நேர்காணல்கள்
என்று எழுத்தாளர்கள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தார்கள்.

அப்போது வந்த ஆர்வம் தான் எனக்கு, ஐயா கி.ராஜ நாராயணன்,
சுஜாதா சார், ஜெயகாந்தன் ,இந்துமதி, சிவசங்கரி
என்று உயர்ந்த அறிமுகம் கிடைக்க சந்தர்ப்பங்கள்
கிடைத்தன. ஆமாம் அம்மா முன்பே எழுதி இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏகாந்தன் ஜி,

இது துணிச்சலா,அசட்டுத் தைரியமா, 'அம்பலம்' இணையத்தில்
ஆஃப்ரிக்காவிலிருந்து ,இந்தக் கோடி இந்தோனேசியா வரை அத்தனை
விசிறிகளும் அவருடன் அரட்டை ,அடித்துப் பல விஷயங்களை விவாதித்த
தைரியமா ....என்னவென்று தெரியவில்லை.
குழந்தைகளுக்கான் புத்தகங்களை விற்கும்

நிறுவனத்தில்..... L.B.Publishers,....விற்பனை, மார்கெட்டிங்க் ஆலோசகராக

நிறையப் பள்ளிகள், நூலகங்கள் என்று
பழகிக் கொண்டிருந்தேன்.
அதுதான் எனக்கு இந்த எண்ணத்தை செயல் படுத்த
தைரியம் கொடுத்தது.
நான் அந்தக் குடும்பத்தை அறிந்த சில வருடங்களுக்குள்
அவரின் ஹாஸ்பிடல் அனுபவங்களை எழுத ஆரம்பித்தார்.
கற்றதும் பெற்றதும் வந்த காலம்.
பிறகு திடீரென க்ஷீணம் அடைந்து விட்டது. மிக மிக அதிர்ச்சிதான்.

என்றும் மாறாத எப்பொழுதும் வசீகரிக்கும்
உத்தி அவரது எழுத்துக்கு இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
நாம் எல்லோருமே அவர் எழுத்தை
நிறைய ரசித்திருக்கிறோம் அப்பா.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

அவர் எழுத்தே அலாதியானது.
செல்வம் கதை எனக்கு மறந்து விட்டது.
இங்கே என்னிடம் இருப்பது அவரது சிறுகதைத் தொகுப்பும்,
கொலையுதிர்காலமும்.

முன்பே , சுஜாதா சாருடனும்
பேசின சம்பவம் எழுதி இருக்கிறேன்.
அவர் மனைவி மிக இனிமையாகப்
பழகுவார் மா.
வாழ்க வளமுடன்.

Thulasidharan V Thillaiakathu said...

வாவ் அம்மாஆஆஆஆஆ ஆஹா நீங்கள் நேரில் சந்தித்திருக்கீங்களே!!

பரவாயில்லை உங்களுக்கு அந்த ஒரு வரியாவது பேச தைரியம் வந்ததே. நானும் அதே தயக்கத்தினால்தான் பார்க்க சான்ஸ் கிடைத்தும் போகாமல் இருந்தேன். என் கஸின் வெட்னரி மருத்துவர் அவர் தான் சுஜாதா அவர்களின் செல்லத்துக்கு டாக்டர். அடிக்கடி போவார். என்னிடம் கீதை (அப்படித்தான் என்னை அழைப்பார்) உனக்கு ரொம்பப் பிடிக்கும் இல்லையா வா என்னோடு நான் போறப்ப எல்லாம் உன்னை கூட்டிக் கொண்டு போறேன் என்றார். நான் தான் அவரது கதைகளை ரொம்பக் கொஞ்சம் ஆகத் துளி அதுவும் எதுவும் முழுவதும் வாசித்ததில்லை...எனவே என்ன பேசுவேன் அந்த அறிவாளியிடம்? ரொம்ப பயம் ...உடனே அவர் சொன்னார் சரி அவர் மனைவியிடம் பேசலாமே சாருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு என்று சொன்னார் அப்படியும் போகலை ...இப்போ அதை இப்பவும் பல சமயங்களில் நினைப்பதுண்டு. அவர் இறந்தப்பவும் போக முடியலை...

அவர் மனைவி உங்களுக்குத் தோழி என்பது சந்தோஷம் அம்மா...

இப்பவும் தொடர்பில் இருக்கீங்களா அம்மா? ரொம்ப இனிமையானவர் அவர் இல்லையா? அம்மா..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கசின் அழைத்த போது, அதுவும் நான் ரோபோ கதை ஒன்று மனதில் ஓட்டிய காலம். அதை வைத்து அவரிடம் சும்மா பேசிப் பார்த்தால் என்று நினைத்து அட மண்டு அவர் உன் கதையைக் கேட்டு சிரித்துவிடப் போகிறார்...என்று இப்படிப் பல தயக்கங்கள்...மிஸ்ட் எ சான்ஸ்..

அந்தக் கதை தான் அப்புறம் எபியில் வந்தது ஹிஹிஹி கத்துக்குட்டி நான்...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜூனியர் கீதாமா,

டாஷ் ஹௌண்ட் தானே. அதன் பெயர் மறந்து விட்டது.
ப்ளாக்கியோ ப்ரௌனியோ.
அதன் மேல் ஸ்ரீமதி சுஜாதாவுக்கு உயிர்.
உங்க கசினைக் கேட்டால் சொல்லுவார்.

அவருக்கு எழுத்தாளர்கள் மேல் அத்தனை பிரியம் இருந்ததில்லை.
ஏறக்குறைய ஒரு ஞானி போல ரொம்ப இன்னொசெண்ட் மனுஷி.

மிக மிக அழகாக இருப்பார்.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் அவரைக் காணப் போயிருந்தாலும் அதிகமாகப் பேச மாட்டார்.
அதனால் கவலையே வேண்டாம்.
He had his share of crazy fans. so he was literally afraid of
women:)That's what mrs . Sujatha would say.

நீங்கள் கத்துக்குட்டி யெல்லாம் இல்லை மா.
நன்றாக எழுதுகிறீர்கள்.
இவ்வளவு கற்று வைத்திருக்கிறீர்கள். எங்களுக்கும் பயன்படட்டுமே.