Blog Archive

Wednesday, March 03, 2021

கொஞ்சம் வேலை நிறைய வேடிக்கை


ஸ்ரீதேவி பற்றி நிறைய செய்திகள், இணையத்தில் கடந்த 
சில தினங்களாக உலவுகின்றன.

ஒன்றும் கேட்கும்படி இல்லை. பாவம்.
எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம்
அம்மாவின் அரவணைப்பு இல்லாமல் போனதால். இன்னோரு பக்கம் அம்மாவின் ஆதிக்கத்திலிருந்து வெளியே வந்ததும் இன்னோருவர்
துணையை  நாடுவதாலும் இருக்கும். 

எங்கேயோ கேட்ட நினைவு வருகிறதா.? நானும் அதையே நினைத்தேன்.

10 comments:

நெல்லைத் தமிழன் said...

இன்றைக்கு குட்டி பத்மினி ஸ்ரீதேவியைப் பற்றிப் பேசியதைக் கேட்க நேர்ந்தது. அம்மாவே, பெண், இரவு வெளியில் சுற்றக்கூடாது என்று நினைத்து அவளுக்கு குடியைப் பழக்கிவிடுவாரா? ஆச்சர்யம்தான். 240 கோடி இன்ஷூரன்ஸ், அளவுக்கு அதீதமான செலவு செய்யும் ஸ்ரீதேவி மற்றும் அவருடைய இரு குழந்தைகள் (வாரத்துக்கு 3 லட்சம் டிரெஸ்ஸில் மட்டும்)... ரொம்பப் பாவமாக இருந்தது கேட்பதற்கு.

ஸ்ரீராம். said...

பாவம் ஸ்ரீதேவி.  அவ்வளவுதான் நம்மால் சொல்ல முடிகிறது.  சில பிரபல மரணங்களின் விளக்கங்கள் நமக்கு கிடைப்பதே இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
அவரிடம் நிறைய தப்புகள் இருந்தன.
இன்ஷுரன்ஸ் மட்டுமே அவர் இறந்ததற்குக்
காரணம் இல்லை.

கூடா நட்பு, அதீத ஆசை, ஆடம்பரம்,
பெற்ற குழந்தைகளிடம் கண்மூடிப் பாசம்,
இதற்கு மேல் வேறென்ன காரணம் வேண்டும்.
எத்தனையோ நபர்களின் கையில் திரைப்படத்துறை.
இருப்பதாக சொல்கிறார்கள்.

நமக்குத் தெரிந்தது வெளியே காணப்படும் காட்சிதானே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நீங்கள் சொல்வது உண்மை.
செய்திகளில் படிப்பது தானே.
இது தெரிந்து நடந்த இழப்பு.
இன்னும் தெரியாமல் சிரமப்படுபவர்கள் எத்தனையோ?


கரந்தை ஜெயக்குமார் said...

எங்கேயோ கேட்ட நினைவு வரத்தான் செய்கிறது சகோதரி

கோமதி அரசு said...

ஸ்ரீதேவி நல்ல நடிகை.

ஸ்ரீதேவி மரணம் , ஸ்ரீ வித்யா மரணம் எல்லாம் மனதை கலங்க வைத்த மரணங்கள்.

அவர்கள் வாழ்க்கையை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

இவர்கள் பாடல்கள், படங்கள் பார்க்கும் போது மனது வேதனைபடும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
சில இழப்புகள் திகில் கொடுக்கின்றன.
ஒரு உயிரை இத்தனை சீக்கிரம்
தாண்டி வந்துவிடமுடியுமா என்று வியக்கிறேன்.
நாம் பேசும் இன்னோரு நினைவும் அதைப் போலத்தான்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
அத்தனை திறமையுள்ள நடிகை, நொடிக்கொரு முக பாவனை காட்டுபவர். வாழ்வில்
ஏற்பட்ட ஏமாற்றத்தை நிவர்த்தி செய்ய முயன்றிருக்கிறார்.
அதுவே அவருக்கு எமனாகி விட்டது.

பெண்களுக்குப் பாதுகாப்பு மறுக்கப்படும் தேசமாகிவிட்டது.
உககம் முழுவதும் இந்தக் கதை தானோ என்று நினைக்க
வைக்கிறது.

மிக நன்றி மா. வாழ்க வளமுடன்.

Angel said...

பாவம் மயில் .ஒருவகையில் பப்பிம்மா அவர்கள்  பேட்டியில் சொன்னது நல்லதே .நம் நாட்டில் இன்னமும் சினி நட்சத்திரங்களை கடவுள் போல்  நடத்தறாங்க .அவர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தான் எவ்வளவோ இழந்து அந்த நிலைக்கு வந்திருப்பாங்க அவ்ளோதான் வித்யாசம் நமக்கும் அவர்களுக்கும் .தன உடல் முகம் இதைபற்றிலாம் கவலைப்பட்டு அதை சீராக்க அதீத முயற்சி எடுப்பது ஒருவகை மனோவியாதி .அடுத்தது எப்பவும் பிறர் பொருள் மீது ஆசைப்படக்கூடாது இது பெண்களுக்கும் சக நடிகைகளுக்கும் ஒரு பாடம் .எவ்வளவோ செய்தும் என்ன பயன் . கவலையின்றி இனியாவது நிம்மதியாக உறங்கட்டும் அவ்வளவுதான் சொல்லமுடியும்  .

வெங்கட் நாகராஜ் said...

பல நடிகைகளின் வேதனையான வாழ்க்கை. ஸ்ரீதேவியின் கதையும் வேதனையான ஒன்றே. காணொளிகளை பார்க்கிறேன்.