வாயுக்கு எதிரிகள்!
மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பூண்டு, வெங்காயம், இஞ்சி சேர்த்தகலவை
பெரும்பாலார்க்குப் பிடிப்பதில்லை.
எல்லாமே அளவோடு இருந்தால் அதிக பாதிப்பு
இருக்காது.1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்தனர். இது எந்த விதமான நோய் என்றும், இதற்கு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றியும் யோசித்து வந்தனர். அந்த சூழ்நிலையில் ஒரு விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த ஆரோக்கிய சீர் கேடுகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது. எப்படி இருந்தாலும் இவரது குடும்பத்தினக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் எப்படி இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியம் என்று மருத்துவர்கள் சிந்தித்தனர்.
மற்ற குடும்பத்தினரை விட இவர்கள் எந்த விதத்தில், வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு முறை அந்த விவசாயின் வீட்டிற்கு சென்று, நீங்கள் மற்றவர்களை விட எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் அந்த விவசாய குடும்பத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. பின்னர் மருத்துவ ஆய்வாளர்கள் அவர்களது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகளை கண்டனர். இது எதற்கு என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் நீண்ட நாட்களாக நாங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் வெங்காயத்தை இரண்டு தூண்டுகளாக அரிந்து வைத்து, காலையில் அதனை எடுத்து வெளியே எடுத்து எரிந்து விடுவோம். என்று கூறினர்.
பெருங்காயத்துக்கும் அதே வார்த்தைதான். அளவுக்கு மீற வேண்டாம்.
தேடியதில் கிடைத்தைப் பகிர்கிறேன்.
பெருங்காயம் நல்லதா கெட்டதா
* தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள். தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச்சுருட்டிக்கொண்டு ஓடும்.
* நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம்.
* அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது.
11 comments:
வாயு தொந்திரவு பரம்பரை சொத்தாகி விட்டது எனக்கு.
சீரகம் , உப்பு சேர்த்து மென்று விழுங்கி விட்டு சூடாய் வெந்நீர் குடிப்பேன். அப்படியும் கேட்கவில்லை என்றால் சீரகத்தை கறுக வறுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கால் டம்ளராக குறுகிய பிறகு எடுத்து துளி வெண்ணய், பனகற்கண்டு போட்டு குடித்து விடுவேன்.
வாய் தொந்திரவு போகும்.
உணவில் சீரகம், வெள்ளைபூண்டு, பெருங்காயம் எல்லாம் அளவாக சேர்த்து வந்தால் நல்லதுதான்.
அன்பு கோமதி மா,
மிக நல்ல மருந்து சொல்லி இருக்கிறீர்கள். நான் பெருஞ்சீரகம் வாயில் அடக்கிக் கொள்வேன்.
வாயு தானாகப் போனால் தான் நிம்மதி.
இன்று கூட வாழைக்கய் கறிதான்.
பயந்து கொண்டே கொஞ்சமாக எடுத்துக் கொண்டேன்.
சாப்பிட்டுத் தொந்தரவு வரவழைத்துக் கொள்வதை விட,சாப்பிடாமல் இருக்கலாம் '
என்று தோன்றிவிடும்மா,.
நம் கீதா ரங்கன் கூட ஒரு தடவை சொல்லி இருக்கிறார்.
உப்பும் சீரகமும் மெல்லச் சொல்லி.
நெடு நாட்கள் ஆயிற்று.
அவரைப் பற்றி ஒரு விஷயமும் தெரியவில்லை.
சமையலில் பெருங்காயம், மிளகு, சீரகம் என்று எலலவற்றையும் கலந்து சமைப்பதுதான் நம் வழக்கம் என்பதே இதை எல்லாம் சரி செய்யத்தானே.. நாம்தான் முறைகளை மாற்றி விட்டோம்!
வாயுப் பிரச்னை இல்லாதவர்களே இல்லை. நான் ஜீரகம், பெருஞ்சீரகம், லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், சுக்கு, மிளகு போன்றவற்றை ஒன்றிரண்டாகப் பொடித்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அவ்வப்போது குடிப்பேன். இது கொஞ்சம் பலன் அளித்து வருகிறது. வெங்காயத்தை இப்போது குறைத்துவிட்டோம். பூண்டு சேர்ப்பதே இல்லை. நெஞ்செரிச்சல் வந்துவிடுகிறது. பெருங்காயம் நல்ல பால் பெருங்காயமாகப் பயன்படுத்துகிறேன்.
நம்ம பாரம்பர்ய உணவை எப்படி எல்லாவற்றையும் கலந்து நிர்ணயித்திருக்கிறார்கள் என்று எண்ணி பெருமிதமடைகிறேன். உணவில் பெருங்காயம், சீரகம், புரோட்டீன், கார்போ கூடவே இஞ்சி என்று எல்லாம் கலந்த உணவு நம்முடையது.
வணக்கம் சகோதரி
இந்த வாயு தொந்தரவுதான் எல்லா தொந்தரவுகளுக்கும் முன்னாடி வந்து நிற்பது. இது உடம்பின் எல்லா பாகங்களிலும் அதன் இஷ்டப்படி ஆக்கிரமித்து கொண்டு பாடாய் படுத்தும் ஆற்றல் மிக்கது. நானும் இதனுடன் தினமும் அவஸ்தைகளை பட்டபடிதான் இருக்கிறேன்.இஞ்சி, பூண்டு முதலியவை சமயத்தில் வாயு உபாதைகளுக்கு கை கொடுக்கும். சில சமயத்தில் அதுவே காலையும் வாரும்.
நீங்கள் முதலில் தந்த பட்டியல்படி பார்த்தால், அதையெல்லாம் எதுவுமே சாப்பிடவே கூடாது. எதையும் சாப்பிடாமல் இருந்தால் அதுவும் வாய்வுதான். கஞ்சி பித்தம். சோறு காமாலை கதைதான்.
சில பேர்கள் எப்போதும் என்னை "அதை தின்றால் வாய்வு, இதை எடுத்துக் கொண்டால் வாய்வு வந்து விடும் என்று சொல்லி பயப்படுகிறீர்களே? இந்த வாய்வு என்றால் என்ன?" என கிண்டலாக கேட்கிறார்கள். அவர்களுக்கு வாய்வு இன்னமும் ஒரு "வாய்ப்பை" கூடத் தரவில்லை போலும் என நினைத்துக் கொள்வேன். அவர்களாவது நன்றாக இருக்கட்டுமெனவும் பிரார்த்தித்துக் கொள்வேன்.:) வேறு என்ன பதில் சொல்வது? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மைதான் ஸ்ரீராம்.
இந்த வீட்டில் பூண்டு மருந்துக்குதான் உபயோகம்.
அது இல்லாமல் இருக்கலாம் என்பதே மகளுடைய
கட்சி.
அவளுக்கு வெங்காயம் நெஞ்செரிச்சல் தரும். சின்னவனுக்கும் அதே.
வாழைக்காய் எனக்கு ஒத்துக் கொள்ளாது.
ஆனால் சிராத்த காலங்களில் அது எப்படி ஒத்துக் கொள்கிறது
என்பது இன்னும் அதிசயம்.
மிளகு,சீரகம்,சுக்கு ,இஞ்சி எல்லாம் நலத்தைக் கொடுக்கிறன. எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டும்.நன்றி மா.
அன்பு கீதாமா,
உணமை. நம் உடல் நல்ல விஷயங்களுக்குப் பழகி விட்டது.
இப்போது வரும் பெரும்பாலான பொருட்களில்
என்ன வெல்லாமோ கலந்து விடுகிறார்கள்.
எல்லாவற்றையும் பார்த்து மிக ஜாக்கிரதையாக
உணவெடுக்க வேண்டி இருக்கிறது.
நீங்கள் சொல்லி இருக்கும் கஷாயம் நன்றாக இருக்கிறது.
இங்கே மகள் தினம் மஞ்சள்,இஞ்சி,தேன் சேர்த்த குடி நீர்
எல்லோருக்கும் எடுத்து வைப்பாள்.
நான் அதை எடுத்துக் கொள்வதில்லை.
இஞ்சி போய் என்ன தொந்தரவு செய்யுமோ
என்ற பயம் தான்.
இந்தக் குறிப்புக்கு மிக நன்றி மா.
ஆமாம் முரளிமா,
நம் வழக்கப்படி சாப்பிட்டால் உணவே மருந்தாகும்.
மிக நன்றி மா.
இஞ்சி, பூண்டு முதலியவை சமயத்தில் வாயு உபாதைகளுக்கு கை கொடுக்கும். சில சமயத்தில் அதுவே காலையும் வாரும்.////////////////////////////////////////////////////////////
ஹாஹாஹா. இதுதான் உண்மை.
எத்தை தின்றால் பித்துத் தெளியும் கதையில்
எனக்கு நிறைய பயம் உண்டு!!!
வாயு உடம்பின் எல்லா பாகங்களிலும் போகிறது என்பது
அப்படியே உண்மை. எப்போ முதுகு பிடிச்சுக்கும், எப்போ மூட்டு வலிக்கும் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
முன்னே ஓட்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
இப்போது இரண்டு மாதங்களாகப் பழைய சாதத்தில்
காலை உணவை முடித்துக் கொள்கிறேன்.
வெறும் வயதும் பித்ததைக் கிளப்பும் இல்லையாமா.
தங்கள் பதில் பின்னூட்டம் நிறைய அனுபவத்தைக் காண்பிக்கிறது.
வாயு பகவானே சரணம். வலி கொடுக்காதேப்பா
என்று பிரார்த்திக்கிறேன்.
உணவே மருந்து என்ற வகையில் தான் நம் உணவுப் பழக்கம் இருந்தது. மாற்றங்கள் வர வர பிரச்சனைகளும் அதிகரித்திருக்கிறது.
சிறப்பான தகவல்களைச் சொன்ன பதிவு. நன்றிம்மா.
Post a Comment