Blog Archive

Tuesday, January 05, 2021

தலைவலியும் தனக்கு வந்தால் தான்......

வல்லிசிம்ஹன்

  எல்லோரும் வளமாக வாழவேண்டும்.

கடந்த சில வாரங்களாக எனக்குத் தலைவேதனை
கொடுத்த வந்த சில நடப்புகளில் முக்கியமாகச்
சென்னையில் டிசம்பர் 9 ஆம் தேதி வாங்கின
சர்க்கரை நோய்க்கான மருந்துகள்

இந்த ஊர்வரை வந்து முடக்கப் பட்ட நிலையில்
துறைமுகத்திலேயே இருப்பது.
2020 ஜூலை மாதம் அனுமதிக்கப் பட்ட 
அந்த மருந்துகள் இப்போது ஏன்
வெளியே அனுப்பப் படவில்லை
என்று பல இணைய தளங்களுக்குச் சென்று 
என் கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தேன்.
மருந்துகளுக்கு என்ன மறுப்பு என்று கவனித்த போது
கிடைத்த தகவல் கொஞ்சம் வித்தியாசமாக
இருந்தது.

நம்ம சுதேசி போராட்டம் நடந்தது இல்லையா. அது போல:)
மாறி வரும் சமூக சூழல். உள் நாட்டில் எல்லாம் செழிக்க வேண்டும்.
அவ்வளவுதான்.

சரி அத்தோடு விட்டு விடலாம். நடுவில் உடலை சமாளிக்க உதவிய 
உள்ளூர் வைத்தியருக்கு உளமார்ந்த நன்றி.

முன்பெல்லாம் நம் நாட்டிலிருந்து யாராவது வருவார்கள்.
அவர்களிடம் சொன்னால் சிந்தாமல் சிதறாமல்
அத்தனை மருந்துகளும் வந்துவிடும்.
நாமும் சென்னை போகமுடியாத நிலையில்,
யாரும் அங்கிருந்து வரமுடியாத தருணத்தில்
 எதுவும் செய்ய முடியாத கையறு நிலை.
சென்னையில் இருந்தால் அகிலா ஃபார்மசி,

சென்னை மெடிகல்ஸ்,ஜானகி ஃபார்மசி 
எல்லா இடத்துக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு
போதும்.
அனைத்து மருந்துகளும்  வந்து சேர்ந்துவிடும்.

அது ஒருகாலம். இது ஒரு காலம். அனுசரித்துப்
போக வேண்டியதுதான்.ஒவ்வொரு மாதமும் 
வைத்தியர் பரிசோதனைக்குப் பிறகு 
மருந்து சீட்டைப்  படித்தால் போதும்.

பத்திரமாக அன்று மாலையே வரும். நம் ஊர்
நம் ஊர்தான்.
இனி இங்கே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
யாரை நம்பி நான் பொறந்தேன் என்று பாட முடியாது.
வாழ்க்கை தரும் பாடங்களில் இதுவும் ஒன்று.
வாழ்க வளமுடன்.

12 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

வேதனைதான்.. வழக்கமான மருந்துகள் இன்றி சமாளிப்பது கடினம். வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் மருந்துகள் கைக்கு வந்த சேர மருந்தின் விலையை விட நிறைய ஆகிறது என கேள்விபட்டுள்ளேன். இப்போது தங்கள் மருந்துகள் வீட்டிற்கு வந்து விட்டதா? சீக்கிரமே வந்து விட நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.தற்சமயம் அங்குள்ள மருத்துவரின் தயவில் உங்கள் உடல் நலம் நன்றாக உள்ளதென்ற தகவல் சற்று ஆறுதலாக உள்ளது.

என்ன இருந்தாலும், நம்மூரின் செளகரியங்களை அயல் நாட்டில் சிலசமயங்களில் இழக்க வேண்டித்தான் உள்ளது."சொர்க்கமே என்றாலும், அது நம்மூரு போலாகுமா?" என்ற ராமராஜன் பாடல் நினைவுக்கு வருகிறது.உடம்பை கவனித்து கொள்ளுங்கள். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்

பிலஹரி:) ) அதிரா said...

ஏன் வல்லிம்மா நீங்கள் இப்போ இருக்கும் இடத்தில் மருந்து வாங்குவதில்லையோ.. அதுதான் இனிமேல் காலத்துக்கு நல்லது.. ஏனெனில் இக் கொரொனாப் பிரச்சனை தீர இன்னும் 2,3 வருடங்களாகலாம் எனத்தான் சொல்லப்படுகிறது:(.

ஸ்ரீராம். said...

அந்த மருந்துகள் இன்னமும் வந்து சேரவில்லையா?  வருமாமா?  இனி உள்ளூர் மருத்துவர், உள்ளூரிலேயே மருந்துகள்தானா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
மிக நன்றி மா.
மருந்து வராததற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஏற்கும்படியாக இல்லை. இதே மருந்துகள் ஜூலையிலும் வந்திருக்கின்றன,.

இங்கிருக்கும் டாக்டர் மிக நல்ல பையன். இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்.
முதலில் அவர் கொடுத்த மருந்து
எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை.
இப்போது கொடுத்த மாற்று மருந்து சரியாக இருக்கிறது.

இனி மற்ற மருந்துகள் தீரும்போது இவரிடம் சோதனை செய்து
வாங்கிக் கொள்ளலாம்.
நீங்கள் சொல்வது உண்மைதான். மருந்தைவிட
கொரியர் செலவு அதிகம் தான்.
வந்து விடும் என்று நம்புகிறேன். இறைவன் துணை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
நன்றி ராஜா. கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக
இந்திய மருந்துகளையே எடுத்துக் கொண்டு வருகிறேன்.
ஏதோ பயம். இனி விஷப் பரிட்சை கூடாது.
இவ்வளவு ஆதரவாகக் கேட்டதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் வரவேண்டும் .பேசிக் கொண்டிருக்கிறோம்.

அவர்கள் சொல்லும் ஆதாரங்களை வைத்து அனுப்புகிறோம்.
அடுத்த வாரத்துக்குள் வரலாம்.

இனி இந்த ஊர் மருந்துக்கு மாற வேண்டியதுதான்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் சிரமம் தான்...

Geetha Sambasivam said...

வேதனை தான். இங்கே உள்ளூரிலேயே மருத்துவர் ஒரு மருந்தை மாற்றிக் கொடுத்தாலும் ஒத்துக்கொள்ளுவது சிரமமாக இருக்கு. அந்த ஊரில் உள்ளவர்கள் கொடுக்கும் மருந்துகள் ஒத்துக்கணுமே! கடவுள் தான் துணை. உங்களுக்கு மருந்துகள் இந்தியாவிலிருந்து வந்து சேரலை. எங்களுக்குப் பையர் அனுப்பிய ஒரு முக்கியமான டாகுமென்ட் வந்து சேரலை. தபால் அலுவலகம் மூலம் அதைத் தேடிச் சென்ற போது சிகாகோவிலே இருந்ததும், அங்கிருந்து பதினைந்து நாட்கள் கழித்துக் கலிஃபோர்னியா போய்ப் பின்னர் நியூயார்க் போய் இப்போ அட்லான்டாவில் உட்கார்ந்திருக்கு! ஏனென்று தெரியலை. சமயத்துக்குக் கிடைக்காமல் இனி எப்போக் கிடைச்சா என்னனு விட்டுட்டோம். எல்லாம் இந்தக் கொரோனாவினால் தான் என்று சொல்லி விட்டார்கள். இது சகஜமான சூழ்நிலையாக ஆனால் தான் எல்லாப் போக்குவரவும் ஒழுங்காய் இருக்குமாம். :(

Geetha Sambasivam said...

உங்கள் மருந்துகள் விரைவில் உங்களை வந்தடையப் பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். மென்மேலும் பெருமைகள் அடைந்து
நலமாக வாழவேண்டும். சிரமங்களைக் கடப்போம்.
இறைவன் அருள்வான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இவர்கள் தாமதப் படுத்துவதும் அல்லாமல் நம்மைத் தேட வைக்கிறார்கள்
பாருங்கள்....அதுதான் வருத்தம். இதனால் தாமதம் என்று நாம் தொலைபேசிக் கம்டுகொள்ள வேண்டி இருக்கிறது.
இத்தனை மாப்பிள்ளை எத்தனையோ காலமாகத் தன் அம்மாவுக்கு
அடிக்கடி மருந்துகள் அனுப்பியவர்.
அதற்கெல்லாம் தடை இல்லை.
அங்கிருந்து இங்கு வர அனேக சாக்குபோக்கு.
விலையோ இங்கே எக்கச்சக்கமாக எகிறுகிறது.

சோதனை என்றாலும் என்னால் இவர்களுக்கு வேதனை கூடக் கூடாதே
பகவானே என்று மனதுக்குள் நொந்து போகிறேன்.

உங்கள் டாகுமெண்ட் வராததும் அதிர்ச்சியாக இருக்கிறது.
இதேதான். அங்க இருக்கு, இங்கே

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி கீதாமா.