Blog Archive

Wednesday, January 06, 2021

ஆன ஆனை.ஆண்டாள் ஆனை.

11 comments:

வெங்கட் நாகராஜ் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறேன். பணிச் சுமை காரணமாக பல பதிவுகளை படிக்க இயலவில்லை. முடிந்தபோது வந்து படித்து விடுவேன்.

புத்தாண்டு வாழ்த்துகள் மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

யானைப் பதிவு அமர்க்களமாக உள்ளது. ஸ்ரீ ரங்கத்து ஆண்டாள் யானையை பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் இந்த யானையை பற்றி வர்ணிக்கும் போதெல்லாம் மானசீகமாக கண்டுகந்த ஆண்டாளை இன்று கண்ணெதிரே நெடுநேரம் தரிசிக்க வைத்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.

அவரும் அந்த யானையைப்பற்றி அழகாக கூறியுள்ளார். அவர் ஆண்டாளின் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த அன்புக்கு பாராட்டுக்கள்.. பதிவு மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Angel said...

வாவ் !!! என்னே ஒரு அன்பு ராஜேஷுக்கும் ஆண்டாளுக்கும் . .அத்தை பாட்டி குடும்ப உறவுகள் யானைகளுக்கும் உண்டு என்பது மிக ஆச்சர்யம் .ஆண்டாள் ஹாப்பியா இருக்கான்னு பார்க்கவே நல்லா தெரியுது .காதை  விசிறிகிட்டே ராஜேஷ் பேசுவதை கேப்பது அழகு 

நல்லா இருக்கணும் எல்லாரும் எல்லா ஜீவராசிகளும் .

ஸ்ரீராம். said...

ராஜேஷுடன் ஆண்டாள் பழகி விட்டது போலும்.  முன்னால் இருந்த பாகன் பிரிந்ததும் ரொம்ப அப்செட் ஆகி இருந்தது.

யானைகளை பற்றி மிக சுவாரஸ்யமான தகவல்கள்.

Geetha Sambasivam said...

ஆண்டாளம்மா முன்னர் இருந்த பாகன் மறுபடி வந்து சமாதானம் செய்ததுமே புதுப் பாகனுடன் பழக சம்மதித்தது. ஆனாலும் சமத்துத் தான்! இந்த வீடியோ பலர் மூலம் எனக்கு வந்து கொண்டே இருக்கு! இஃகி,இஃகி,இஃகி,இஃகி!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தத்தெடுக்கும் மனோபாவம்..சிறப்பு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட் .
அதனால என்னமா. எப்ப வேணா வரலாம்.
அவரவர்க்கு என்று எத்தனையோ

பிரச்சினைகள் இந்தத் தொற்றுக் காலத்தில்.
அதிகம். எல்லோரும் பாதுகாப்புடன் க்ஷேமமாக
இருப்பதே பெரிய விஷயமாகிவிட்டது.

அங்கே குளிரும் அதிகமாக இருக்குமே.
பத்திரமால இருங்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல் நலமாப்பா. இப்போ லாக்ட்வுன் காலமாகி விட்டதே.
இன்னும் பத்திரமாக இருக்கணும்.
ஆமாம் நம் ஆண்டாளுக்குத் தான் எத்தனை
நண்பர்கள்.
அவரும் எத்தனை நட்புடன் விஸ்வாசமாக இருக்கிறார்.
இணையத்தில் எல்லா யானை வீடியோக்களும் இருந்தாலும் இவர்கள் இருவரும் ஸ்பெஷல்.
அது ஒரு குழந்தை போலவே அவருடன் பேசுகிறது.

ஸ்ரீரங்கம் 7 வருடங்களுக்கு முன் சென்றபோது ஆண்டாள் அருகேயே
உட்கார்ந்திருந்தேன்.

கண்ணாலயே பேசுவது போல இருந்தது.நீங்களும் யூ டியூப் சென்று
பாருங்கள். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலா மா. நலமுடன் இருக்க வாழ்த்துகள்.
பெரியவா சொல்கிறா மாதிரி, யானையும், கடலும், குழந்தை யும் பார்க்கப்
பார்க்க அலுக்காது.
எத்தனை பெரிய உருவம் அதற்கு!!!
எப்படிக் கட்டுப் படுகிறது.
நடைக்குப் போய்விட்டு திரும்ப மாட்டேன் என்று
இந்த ராஜேஷுடன் அடம் பிடிக்கிறது ஒரு வீடியோவில்:)

கொள்ளை அழகு.
ஆமாம் கீதாமாவுக்கு மிகப் பழக்கம் இந்த யானை.
அவர்கள் வீட்டு வழியே தினம்
சென்று வருகிறதே.
கீதாமா ப்ரொஃபைலே யானை.
நம் துளசி கோபால் ப்ரொஃபைலும் யானை தான்.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். முன்பு படித்திருக்கிறேன்.
எப்படியோ இப்போது சந்தோஷமாக இருக்கட்டும்.
நல்ல பாகன் கிடைத்திருக்கிறார்.
இருவரும் சுகமாக இருக்க அந்த ரங்கனே அருள வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ. கீதாமா.
இப்படித்தான் அது சமாதானம் ஆச்சா.

பாவம் இந்த மாதிரி சமத்துக் குழந்தை பார்க்க முடியுமா...
உங்களுக்குத் தான் இது போல ஃபார்வர்ட் வரும். நீங்கள் தான்
ப்ரொஃபைலிலே யானை வைத்து இருக்கிறீர்களே:)
ரொம்ப அழகு இந்த குட்டி.