வல்லிசிம்ஹன்
குமுட்டி அடுப்பு
50 வருடங்களுக்கு அப்புறம் இந்தப் புத்தகம் கிடைத்தது.
கோவையில் வாங்கின புத்தகங்கள் இன்னும் பெரிதாக இருக்கும்.
அச்சும் தெளிவாக இருக்கும்.
மகள் வைத்திருக்கும் இந்தப்
புத்தகம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.
அதில் தான் கரி அடுப்பு ஏற்றும் முறையும் , விறகடுப்பு பற்ற வைக்கும் முறையையும்
படித்தேன்.
அம்மாவிடம் ஏற்கனவே கற்ற முறைதான்.
ஆனால் இவர் ,அந்தக் காட்சிகளைக் கண்முன்
கொண்டு வந்துவிட்டார்.
நான் இன்னும் அப்பொழுது படித்த முறையில் தான் சமைக்கிறேன்.
புது விதமாக தளிகை என்று சொல்லி வழக்கத்திலிருந்து மாற
இன்னும் தயக்கம்.
கும்ட்டி அடுப்பு ஏற்ற, முதலில் பொடிக்கரியை அடுப்பின் மேல் பாகத்தில் தூவி
தேங்காய் நாரை வைத்து விட்டு
அடுப்பு வாயிலில் காகிதத்தைக் கிழித்துபோட்டு
அதில் நெருப்பு காட்டி
அடுப்பு பயன்படுத்த ஆரம்பிக்கச் சொல்லும் அழகு
மனம் நிறைகிறது.
இப்போது பொடிக்கரி பற்றிக் கொள்ளும்.
அதன் மேல அன்றைக்குத் தேவையான
கரியைப் பரப்பி
லேசாக விசிற ஆரம்பித்து தண்ணீர் கொதிக்க வைத்து
காப்பி ஃபில்டரில் கொட்டி,
பிறகு பாலைக் காய்ச்சி,
காப்பி கலக்க வேண்டியதுதான்.
அரைமணி நேர மாவது ஆகும்.
5 comments:
என்னோட குமுட்டி வீணாகிப் போன வருஷம் தான் தூக்கிப் போட்டோம். சென்னையில்/அம்பத்தூரி இருந்தவரை வாரம் ஒரு நாளாவது குமுட்டி அடுப்பை மூட்டித் தணலில் அப்பளம் வாட்டுவேன்/சாம்பிராணி போடத் தணல் எடுத்துப்பேன். பால் காய்ச்சித் தேநீர் போட்டிருக்கேன். ஒரு மழை நாளில் மின்சாரமும் இல்லாமல் சமையலே இதில் தான் பண்ணி இருக்கேன். எரிவாயு அடுப்பில் அப்போக் கசிவு இருந்தது. வந்து பார்க்கும் மெகானிக் மழை காரணமாக வரலை. குமுட்டிச் சமையல் தான்.
நானும் விறகு அடுப்பில், கரி அடுப்பில் எல்லாம் சமைத்திருக்கிறேன். சுவாரஸ்யமான காலங்கள்.
மீனாக்ஷி அம்மாள் புத்தகம் எங்க பெண்ணுக்கும் ஆங்கிலத்தில் வாங்கிக் கொடுத்தேன். என்னோடது தனித்தனிப் பேப்பர் பேப்பராக வருகிறது.
அந்தக் காலம் இனிமை...
அருமை
Post a Comment