Blog Archive

Friday, September 18, 2020

வண்ணக்கிளி படமும் பாடலும்

வல்லிசிம்ஹன்வண்ணக்கிளி படப் பாடல்கள்
அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
இங்கே கொடுத்திருக்கும் பாடல்களைத் தவிர
''அடிக்கிற கைதான் அணைக்கும்"

''வண்டி உருண்டோட அச்சாணி தேவை''
''சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா''

எல்லாமே மிகப் பேசப்பட்டவை பாடப்
பட்டவை.
மனோஹர் அவர்களின் நடிப்பு மிகச் சிறப்பு.
அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கும்
பி எஸ்.சரோஜா, மற்றும் அந்தக் குட்டிப்
பெண் உமா, மைனாவதி ,ப்ரேம் நசீர் என்று
நல்ல நடிகர்கள். பண்ணையார், வண்டிக்காரன், 
கொள்ளைக்காரன் என்று நடக்கும் கதை.
நான் அப்போது விரும்பிப் பார்த்த படம்.


9 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நீங்கள் சொல்கிற பாட்டெல்லாம் கேட்டிருக்கிறேன். இனிமையான பாடல்கள். உண்மைதான்.. பாடல்கள் அன்று நல்ல பிரபலமானவை. இப்போதும் அடிக்கடி கேட்டு மகிழ்வேன். இந்தப்படம் இதுவரை நான் பார்த்ததில்லை. அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
இனிய காலை வணக்கம். வண்ணக்கிளி கிட்டத்தட்ட
60 வருடங்களுக்கு முன்னால் வந்த படம்.
நல்ல இசை. நல்ல நடிப்பு. ரசிக்கக் கூடிய கதை.

கறுப்பு வெள்ளைக் காலம். துல்லியமாகப்
பார்க்கக் கூடிய விரசம் இல்லாத காட்சிகள்.
யூ டியூபில் காணக் கிடைக்கும்.
முடிந்தால் கொஞ்சம் கொஞ்சமாகப் பாருங்கள்.
மிக நன்றி மா.

Yarlpavanan said...

காதுக்கினிய சிறப்பான பாடல்கள்

Yarlpavanan said...

காதுக்கினிய சிறப்பான பாடல்கள்

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி யாழ் பாவாணன்.

வெங்கட் நாகராஜ் said...

மூன்றுமே இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்தேன் மா.

கோமதி அரசு said...

இந்த படம், பாடல் எல்லாம் நன்றாக இருக்கும்.

பாடல்கள் முன்பு வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்கள்.

சின்னப்பாப்பா பாடல் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு வெங்கட்.
என் நினைவுக்காகப் பாடல்களைப் பதிகிறேன்.
வந்து கேட்டு ரசித்ததற்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா. வானொலி நம் தோழியாகவே இருந்து வருகிறாள்.
காதுக்குத் தான் எத்தனை இனிமை தேவைப் படுகிறது.
நன்றி மா.