Blog Archive

Thursday, September 17, 2020

கதவுகள் சொல்லும் கதைகள் 2

அந்த நாள்.
2010


2008

பழைய Gate
வல்லிசிம்ஹன்

எங்கள் வீட்டு 56" மின் விசிறி

பழைய கூடம் 2007
புதிய கதவும், நிலைப் படியும் மார்கழி காலை





புதிய அறை.
 பெண்ணும், பசங்களும் கல்லூரி  சேர்ந்தவுடன்,
அவரவர்க்கு வீட்டு சாவி கொடுக்கப்பட்டது. 
ஆட்டோமாடிக் பூட்டு என்பதால் 
அவ்வளவு பயம் இல்லை.

பிறகு பெண் திருமணம், சில நாட்கள் கழித்து எங்கள் அமெரிக்கப்
பயணம் என்று கிளம்பும் நாட்களில்
பையர்களும் வெளி நாடு களுக்குச் சென்று விட்டார்கள்.

புது அறை கட்டும் திட்டம் எனக்கு வெகு நாட்களாக இருந்த ஆசை.

வெளிக்கதவுக்கு இரும்புக் கிராதிகள் போட்டும்
மனம் சமாதானம் அடையவில்லை.

வெளியே பேருந்துகளில் போகிறவர்கள்
உள்ளே நடப்பதை அறிவதை என் உறவினர்கள்
சொல்வதைக் கேட்டு தெரிந்து கொண்டோம்.
இப்போது வாசலில் வண்டிகள் நிறுத்தி ரிப்பேர் பார்ப்பதெல்லாம் நிறுத்தி
ஆகிவிட்டது.
ஷஷ்டி அப்த பூர்த்தி நடந்ததும்
போட்ட திட்டம்,2008இல் தான் நடந்தது.
வாசல் வராந்தாவையும் ,பக்கத்தில் இருந்த
வண்டிகள் நிறுத்தும் இடத்தையும் சேர்த்து ''ட'' வடிவத்தில்
சுற்றுச் சுவர் அமைத்த போது 
வரவேற்பறை அமைந்தது.
கூடத்தை மூன்று பக்கமும் கண்ணாடிக் கதவுகளை அமைத்து
மூன்று மாதங்கள் ஆயிற்று மொத்த வேலையும் முடிய.
முன்பு கதவு இருந்த இடத்தில் ஜன்னல் வந்தது.

அங்கிருந்த கதவைப் புது நிலை ஏற்படுத்தி அங்கே இந்தக் கதவையும்
க்ரில் Gate ஐயும்  போட்டாகி விட்டது.
புதுப் பேரக் குழந்தைகள் வந்து விளையாட நல்ல இடம்
கிடைத்தது. வீடியோ  ஒன்று இருக்கிறது. குழந்தைகள் இருப்பதால் 
அதை இங்கே பதிய முடியவில்லை.
புதிய அறையில்  நவராத்திரி நாட்கள் நிறைவாக நடந்தன.

புத்தகங்களை அடுக்கி வைக்க ஒரு நல்ல இரும்பு அலமாரி
அமைந்தது. அருள்மிகு ஸ்ரீ ராகவேந்த்ரர் படமும்
அழகாக மாட்ட முடிந்தது.
இன்வர்ட்டர், மற்றும் இவர் செய்த மரத்தால் யானை நீர் ஊற்று.
ஒரிரு இருக்கைகள் போட்டதும்
அமைப்பாக இருந்தது.
பல நினைவுகளை வரவழைத்த பதிவு, கொஞ்சம்
வருத்தங்களையும் கொடுப்பதால்
நல்ல நினைவுடன் பூர்த்தி செய்கிறேன்.
நெடு நாள் ஆசையாக இருந்த கூடை ஊஞ்சலையும் அங்கே
போட்டிருக்கிறோம்:)

21 comments:

நெல்லைத்தமிழன் said...

நினைவுகள் அருமை. வீட்டு கதவின் வெளியே லஸ் சர்ச் ரோடு மாதிரி தெரியுது.

வருடத்தில் எப்போதாவது அங்க போய் இருக்கீங்களா? இல்லை ஓரிரு வருடங்களுக்கு ஒருமுறைதானா?

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள்...

Geetha Sambasivam said...

அருமையான நினைவலைகள். ஒவ்வொன்றாக நினைவு வைத்துக் கொண்டு சொல்லி இருக்கிறீர்கள். மறக்க முடியுமா? முதலில் இடம் எப்பேர்ப்பட்ட இடம்! விட்டுட்டு நினைவுகளோடு வாழ்வது சிரமம் தான்! ஆனாலும் என்ன செய்ய முடியும்! விதி விட்ட வழி!

KILLERGEE Devakottai said...

நினைவோட்டங்கள் ஓடட்டும் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
ஆமாம் லஸ் சர்ச் ரோடு தான்.
அந்த கேட் இப்போது இல்லை.
இன்னும் பெரிய முழுவதும் அடைத்த கேட் போட்டாச்சு.
எதிர்த்தாற்போல் டீக்கடைக்கு வருபவர்களின்
பார்வை,வம்புகளிலிருந்து தப்பிக்க:)

போன ஐப்பசி சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு இருந்தேன்.
ஸ்ரீராம், அவரோட பாஸ், பானுமதி வெங்கடேஸ்வரன்,
ரமா மற்றும் ஸ்ரீனிவாசன், இன்னும் இரு தோழிகள் அனைவரையும்

சந்திக்க முடிந்தது.
இந்த வருடம் படிதாண்டாப் பத்தினி!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

பகவான் பல வழிகளில் நம்மைப் புடம் போடுகிறார்.
மனம் என்னவோ மேய்ச்சல் திரும்பி வரும் பசு போல அந்த வாசலையே
பார்க்கிறது.
நினைக்கிறது.

எல்லாமே நல்லதுக்குத் தான்:)
நன்றி கீதா. நீங்களும் இடம் பெயர்ந்து
வந்தாச்சு. புது நினைவுகளை வாழ்வு நமக்குக் கொடுக்கிறது.
ஒட்டினால் லாபம்.

வல்லிசிம்ஹன் said...

நினைவுகள் எப்பொழுதும் அசை போட வைக்கின்றன.
மனதுக்கு நல்ல பயிற்சி அன்பு தேவகோட்டைஜி.

Bhanumathy Venkateswaran said...

உங்கள் வீடு இருக்கும் இடம் மிகவும் பரிச்சயமாக இருக்கிறது. உங்களுடைய நிறைய பதிவுகளை மிஸ் பண்ணியிருக்கிறேன்.  

Bhanumathy Venkateswaran said...

நேற்றுதான் போன வருடம் நவம்பரில் உங்களை சந்தித்ததை  நினைத்துக் கொண்டேன். 

கோமதி அரசு said...

இனிய நினைவுகளை மனம் அசை போட்ட வண்ணம் இருக்கும் அருமையான நினைவுகள். அழகான வீடு,அது தரும அருமையான நினைவுகளின் பகிர்வு.


படங்கள் மிக அழகு.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

கதவு வழியாக எட்டிப்பார்த்த தங்கள் நினைவுகள் அருமை. படங்கள் அனைத்தும் அருமை. பழகிய வீட்டை விட்டு, அதன் நினைவுகளோடு பிரிந்திருப்பது சிரமந்தான்.! என்ன செய்வது? மாறும் காலங்களோடு ஒட்டியபடியே இருப்பதே நம் வாடிக்கையாகி விட்டது. நாங்களும் சென்னையிலிருந்த போது இறுதியில் லஸ்ஸில்தான் பத்து வருடங்களாக இருந்தோம்.(வாடகை வீடு) பிறகுதான் மதுரைக்கு மாற்றலாகி வந்தோம். நினைவுகள் என்றும் பசுமையானவை மட்டுமல்ல.. மறக்க முடியாதவையும்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா.
அதனால் என்னப்பா. எல்லோருக்கும் வேலைகள் இருக்கு.
நேரம் இருக்கும் போது பார்க்கிறேன்.
இன்று அமாவாசை வேறு என்பதால்,
நம்மால் முடிந்த சுத்த பத்தம் செய்ய வேண்டி இருக்கிறது.
நானே இன்னும் ஒரு பதிவுக்கும் போகவில்லை.

அனைவர் எழுத்தும் மிக மிக அருமையாக இருக்கிறது.
தவற விட ஆசை இல்லைதான்.
நீங்கள் முடிந்த போது வரவும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா.
அத்தனை அன்பையும் பெற்ற ஒரு நாள். ரமா அறிமுகம்.
ரஜினி பேச்சு!!!
எல்லாம் நினைவில்:)

வல்லிசிம்ஹன் said...

அந்த வீடு எனக்கு அடைக்கலம் கொடுத்த இடம்.
எத்தனையோ நிகழ்வுகளைக் கடவுள் அருளால் தாண்டி வந்தோம்.
என் கணவர் தன்னுரிமை என்று பாராட்டியதில்லை.

அன்பு நிறைந்த வீடு. நன்றி அன்பு கோமதி மா.

வல்லிசிம்ஹன் said...

மாறும் காலங்களோடு ஒட்டியபடியே இருப்பதே நம் வாடிக்கையாகி விட்டது."""""""""".......அன்பு கமலாமா நீங்கள் சொல்வதே யதார்த்தம். மிச்சம் இருக்கும் காலமும் அமைதியாகக் கழித்து விடவேண்டும்.
நீங்கள் லஸ்ஸில் இருந்தீர்களா??
எப்போது மா. இப்போது மதுரையில் இருக்கிறீர்களா.
ஒன்றுமே தெரிந்து கொள்ளவில்லை நான்.

நினைவுகளில் மூழ்கும் போது நிஜத்தை மறந்துவிடுகிறேன்.
அது எல்லா நேரமும் சரியாவதில்லை.
இப்போது இருக்கும் வாழ்வை
நலமாக வாழ வேண்டும்.

மற்றவர்களின் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
இப்படி நினைத்து மீள்கிறேன். இந்த அழகான புரிதல்
நம் சகோதரிகள் அனைவரிடமும் இருக்கிறது.
வாழ்க வளமுடன் அம்மா.

Yaathoramani.blogspot.com said...

வீடு என்பதற்கும் கட்டிடம் என்பதற்குமான பெரிய வித்தியாசமே இது போல் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு அங்குலத்திலும் நம் நினைவுகள் நிறைந்திருப்பதுதானே..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமணி சார்,

உண்மையே , சின்ன ஓலைக்குடிசையும் பெற்றோர்
அன்பில் மாளிகை ஆகிறது.
கருணையோ,பாதுகாப்போ இல்லாத
பெரிய பங்களா, வெறும் கட்டிடம் தான்.
பெரியவர்கள் துணையில் நாங்கள் இருந்தோம்
இப்போது நம் குழந்தைகளே வளர்ந்தவர்கள்
ஆகிவிட்டனர். எதிர்காலம் சிறக்க வேண்டும்.
நன்றி மா.

Yaathoramani.blogspot.com said...

நீங்கள் சொன்னதே சரி...ஜி.எம்.பி சார்தான். வேறு யாராவது சரியாகச் சொல்கிறார்களா பார்ப்போம் என்பதற்காக உங்கள் பதிலுக்கு நாளைவரை பதில் சொல்லாதிருக்கலாம் என நினைக்கிறேன்..வாழ்த்துகளுடன்..

வல்லிசிம்ஹன் said...

அட!! நன்றி ரமணி சார். நாளை பார்க்கலாம்.

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள் நன்று.

சின்னச் சின்னதாய் மாற்றங்கள் எப்போதும் நல்லதே! தொடரட்டும் உங்கள் நினைவுகள்.