Blog Archive

Friday, July 31, 2020

Kanchipuram Kovil Idly #World Biggest Shocking Size Idly Making

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழப் பிரார்த்தனைகள்.

9 comments:

நெல்லைத் தமிழன் said...

வல்லிம்மா... காலையிலேயே இப்படி பசியைக் கிளப்பலாமா?

பகிர்வுக்கு நன்றி. இதையே வீட்டில் செய்து அதை எபிக்கு அனுப்பணும் என்று நினைத்திருக்கிறேன்.

இவர் எங்க இதைத் தயார் செய்யறார்னு பார்த்து, அங்க போய் வாங்கிச் சாப்பிடணும் (வேற எங்க...காஞ்சீபுரம்தான்)

நாங்க யாத்திரை போகும்போது இரயில் பயணங்களில் இரண்டாம் நாள் மாலைக்கு காஞ்சீபுரம் இட்லியும் (அந்த வட்டத்தை பாதியா கட் பண்ணி இரண்டாக ஆக்குவாங்க, எவ்வளவு கேட்டாலும் தருவாங்க. எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால் 4-5 வாங்கிக்கொள்வேன்) நல்லெண்ணெய் மிளகாய்ப்பொடி கலவையும் தருவாங்க. யம்மி யம்மி (ஆனா மிளகாய்ப்பொடி எனக்கு இப்போல்லாம் ஒத்துக்கொள்வதில்லை. நெஞ்சு கரிக்கும்... அதுக்காக நாக்கு ருசியை விட்டுடமுடியுமா?)

இந்த காணொளி போட்டதற்கு நன்றி

இன்னொண்ணும் சொல்லிக்கறேன். நீங்க.. அனுபவம், கதை போன்றவற்றையும் எழுதணும். அதை நீங்க விட்டுட்டீங்க.

ஸ்ரீராம். said...

சத்தமே கேட்கவில்லை என்றாலும் மௌனப்படம் போல செய்முறை பார்த்தேன்.  இதற்கு என்ன தொட்டுக்கொள்வார்கள்?

கோமதி அரசு said...

காஞ்சிபுரம் குடலை இட்லி சூப்பர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இனிய மாலை வணக்கம். எங்கள் குடும்பத்தில்
70 களில் காஞ்சீபுரத்திலிருந்தே கோவில் பிரசாதமாகக்
குடலையோடு வரும்.

பாட்டி இருக்கும் போது. கூடவே அம்மியில்
அரைத்த புளி மிளகாய்ப் பெருங்காயச் சட்டினி.

ஒரு டம்ப்ளர் நிறைய கெட்டி மோர். இது பகல் 2
மணிக்கு:)
இதே முறைப்படி செய்தால் நன்றாக வரும்.
காலையில் அரைத்து செய்யும் போது
புளிப்புத்தயிர், இரண்டு கை வெண்ணெய்
கலந்து செய்வார்.
இன்னும் பிரமாதமாக இருக்கும்.
சுக்கும் இவர் சொன்ன அளவுக்கு மேல்
போடுவார்.

மனம் எழுதுவதில் இறங்கவில்லை.
ஏதோ கசப்பும்,வருத்தமும் .அதை எழுத்தில் வடிக்க
ஆசையில்லை.
சலனம் ஓயும் .மீண்டும் எழுதலாம். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
சத்தம் கேட்கவில்லையா. ஏன். எனக்குக் கேட்கிறதே.

இட்லிக்குத் தொட்டுக்க காரமும் இனிப்புமாகப்
பாட்டி அரைக்கச் சொல்லுவார்.
புளி,உப்பு,சி.மிளகாய் ,ப.மிளகாய்,சிறிது வெல்லம்
அரைத்து ஒன்றிரண்டாக ஓட்டி
வழித்துக் கொடுக்க வேண்டியது தான்.
ருசித்து சாப்பிடுவார்.:)
88 வயது வரை காரம் எடுத்துக் கொண்டவர்தான்.!!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
முடிந்த போது செய்து பாருங்கள்.
வெகு ருசி.
குடலைக்கு எங்கே போவது இப்போது.
முன்பெல்லாம் பூக்காரத்தாத்தா
குடலையில் தான் பூக்கள் கொண்டு வருவார்.
எல்லாம் கனவாக இருக்கிறது,

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா வாவ் இட்லி. நம் வீட்டில் செய்வதுண்டு. நான் இந்தக் குடலை எங்கு கிடைக்கும் என்று தேடியதுண்டு. அப்புறம் கடுபு இட்லி போல தொன்னையில் செய்ததுண்டு. இப்போ டம்ளரில் செய்கிறேன். படம் எடுத்து வைத்திருக்கிறேன். கடுபு, காஞ்சிபுரம் இட்லி இரண்டும்...இன்னும் எழுதவில்லை ஹிஹிஹி வழக்கம் போல டிலே.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இதையே வீட்டில் செய்து அதை எபிக்கு அனுப்பணும் என்று நினைத்திருக்கிறேன்.//

ஓ நெல்லை அனுப்பறீங்களா..ரொம்ப நல்லாதாச்சு எனக்கொரு வேலை மிச்சம் ஹா ஹா ஹா ஹா பின்னே எழுதும் வேலை மிச்சம்!! ஹா ஹா ஹா ஹா.. நான் இன்னும் எழுதலை..படம் மட்டும் இருக்கு. நன்றி நன்றி நெல்லை....

எங்க வீட்டில் இது அடிக்கடி செய்யும் ஒன்று.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா.,எழது ராஜா. அப்பதானே முறை. தெரியும். . கண்டிப்பா படம் போட்டுப் பதியவும் நல்ல பொண்ணு.!